இந்தப் புகைப்படத்தை ஒருமுறை பாருங்கள். இதிலுள்ளவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். ஆனால் இவர்கள் எவ்விதம் முகமூடி (Face Mask) அணிந்திருக்கின்றார்கள் என்பதை. எத்தனைபேர் 'முகமூடி'கள் அணிந்திருக்கின்றார்கள் என்பதையும் கவனியுங்கள். அருகருகில் நெருங்கி நின்று எவ்விதம் சமூக இடைவெளியைப் பேணுகின்றார்கள் என்பதையும் அவதானியுங்கள். நான் நினைக்கின்றேன் இவர்கள் 'ட்ரம்பின்' ஆதரவாளர்களென்று.. :-)
தற்கொலை - தடுப்பதற்கான முயற்சி
தப்பித்தலுடன் தொடர்பான ஒரு செயற்பாடே தற்கொலை எனலாம்.
தற்கொலை என்பது அந்த நேரத்திலான ஒரு முடிவாக இருப்பது மிகவும் அரிதாகும். பத்துப் பேரில் எட்டு பேர் தற்கொலை செய்துகொள்வதற்கான எண்ணம் இருக்கிறது என்பதைக் காட்டும் அறிகுறிகளைச் சிலருக்கோ அல்லது பலருக்கோ காட்டியிருப்பார்கள் என்கிறது ஆய்வு. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், தற்கொலை என்பது மனக்கிளர்ச்சியிலான ஒரு செயலாகத் தோன்றலாம், ஆனால் அது எழுந்தமானமானதொரு நிகழ்வல்ல, அது ஒரு செயல்முறை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தற்கொலையைப் பற்றிப் பேசுவதற்குப் பொதுவில் நாங்கள் எவருமே விரும்புவதில்லை. அத்துடன், எங்களுக்குத் தெரிந்தவர்கள் ஒருவரும் அந்த முடிவுக்கு ஒருபோதும் வரமாட்டார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம். ஆனால், எங்களுக்குத் தெரிந்தவர்களும் தற்கொலையைத் தெரிவு செய்துகொண்டுதான் இருக்கின்றனர். இருப்பினும், தற்கொலை ஒரு களங்கம் என்ற உணர்வு அல்லது அது அவமானம் தரும் ஒரு செயல் என்ற கருத்துப்பாடு எங்களைச் சங்கடப்படுத்துவதால் அதைப் பற்றி நாங்கள் அதிகம் கலந்துரையாடுவதில்லை. அதனால், ஒருவர் உணரும் வலி பற்றியோ அல்லது அவருக்குத் தேவையான உதவி பற்றியோ வெளிப்படையாகப் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை நாங்கள் இழந்துவிடுகின்றோம்.
தனது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென ஒருவர் முடிவெடுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உண்மையில், அந்தக் காரணங்கள் பற்றிய ஒருவரின் உணர்வுகள்தான், அந்தக் காரணங்களைவிட மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. குறித்த வலியைத் தொடர்ந்து தாங்கமுடியாது அல்லது நிச்சயமற்ற வாழ்வைத் தொடரமுடியாது என்பதின் அடிப்படையில் எழும் நம்பிக்கையின்மை, கையலாகதன்மை மற்றும் விரக்தி போன்ற தீவிரமான உணர்வுகளால் தற்கொலைதான் தீர்வென முடிவெடுப்பவர்கள் ஆட்கொள்ளப்படுகிறார்கள். வேறு சிலருக்கு சில வகையான மனநோய்களின் தாக்கம் தற்கொலை செய்வதற்கான தூண்டல்களைக் கொடுக்கக்கூடும். அப்படியான தூண்டல்களை குரல்களாக அவர்கள் கேட்கக்கூடும், அல்லது விம்பங்களாகப் பார்க்கக்கூடும்.
தீயில் பூத்த மலர்
- தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கட்டடக்கலைஞர் மோகன் அருளானந்தம் (இவர் மட்டுநகரைச் சேர்ந்தவர். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் என்னுடன் கட்டடக்கலை பயின்ற சக மாணவர்களிலொருவர். அவர் தன்னுடைய 83 ஜூலைக் கலவர நினைவுகளை அவரது வலைப்பதிவான 'Closetoheartweb'இல் ஆங்கிலத்தில் The Journey Begins என்னும் தலைப்பில் பதிவு செய்துள்ளார். அதனை எனக்கும் அனுப்பியிருந்தார். அதன் தமிழ் வடிவமிது. 'தீயில் பூத்த மலர்' என்னும் தலைப்பில் வெளிவருகின்றது. தமிழில் பதிவு செய்வதன் மூலம் பலர் அறிய வாய்ப்புள்ளதால் தமிழாக்கம் செய்துள்ளேன். இதற்கான ஓவியத்தினை வரைந்திருப்பவர் கிறிஸ்ரி நல்லரட்ணம். - வ,ந.கி -
அது ஒரு சனிக்கிழமை. 23 ஜூலை 1983. பத்திரிகைகள் பின்வரும் செய்தியினை வெளியிட்டிருந்தன: "வட மாகாணத்தில் 13 இராணுவத்தினர் மறைந்திருந்து தாக்கப்பட்டதில் கொல்லப்பட்டனர். உடல்கள் திங்கட்கிழமை கொழும்புக்குக்கொண்டு வரப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. "
இந்தத் தலைப்புச் செய்தி முப்பது வருடங்கள் நீடிக்கப்போகின்ற சமூக யுத்தமொன்றை உருவாக்கும் விதையொன்றினை விதைத்துள்ளது என்பது பற்றி நாங்கள் எவ்விதம் கருத்தையும் அச்சமயம் கொண்டிருக்கவில்லை. இந்தத் தனிச் சம்பவம் எங்கள் அனைவரின் வாழ்க்கையையும் கடுமையாக மாற்றப்போகின்றது என்பதை நாம் உணர்ந்திருக்கவில்லை.
வழக்கமாக உயிர்த்துடிப்புடன் விளங்கும் எம் அயலில் கனத்த அமைதி குடிகொண்டிருந்தது. என்னாலும், மனைவியாலும் நித்திரைகொள்ளக்கூட முடியவில்லை. நாங்கள் அனைவரும் விளிம்பில் இருப்பதுபோன்ற நிலையற்ற சக்தி அல்லது உணர்வு காற்றில் பரவிக்கிடந்தது. ஏதோவொன்று சரியில்லையென்பதை எங்களால் உணரமுடிந்தது. ஆனால் அடுத்த நாள் நாங்கள் விழித்தெழுந்தபோது வழக்கமான ஆரவாரம் எங்கள் வீதியில் மீண்டிருந்தது. எல்லாமே வழமைக்குத் திரும்பியதைப்போல் தெரிந்தது. வழக்கம்போல் நானும் வேலைக்குச் செல்வதற்கு ஆயத்தமாகிப் புறப்பட்டேன். ஆனால் என் மனைவி முதல் நாள் செய்தி ஏற்படுத்திய பாதிப்பு நீங்காத நிலையில் வேலைக்கு விடுமுறையெடுத்திருந்தார்.
இன்று நவம்பர் 19 - சர்வதேச ஆண்கள் தினம்
நவம்பர் 19 , சர்வதேச ஆண்கள் தினமாக வருடாவருடம் கொண்டாடப்படுகின்றது. சமூகத்தினதும் குடும்பத்தினதும் மேம்பாட்டுக்குச் சிறுவர்களும் ஆண்களும் வழங்கிய பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக சர்வதேச ஆண்கள் தினம் உள்ளது.
எதிர்மறையான விடயங்களில் கவனம்செலுத்துவதன் மூலம், வேண்டத்தகாத அந்த விடயங்களின் அதிகரிப்புக்கு வழிகோலுவதை விடுத்து, நேர்மறையான பண்புகளில் கவனம்செலுத்துவதன் மூலம் நல்ல விடயங்களை ஊக்குவிப்பது எப்போதுமே சிறப்பானது. அவ்வகையில் முன்மாதிரிகள் மூலம் ஆண்கள் மற்றும் சிறுவர்களில் மாற்றமொன்றை உருவாக்குதல், சென்ற வருட ஆண்கள் தினத்தின் கருப்பொருளாக இருந்தது. இவ்வருடக் கருப்பொருளாக ஆண்களின் நல்வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துதல் அமைந்திருக்கிறது.
ஆண்களின் ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் கவனம் செலுத்துவதன் மூலம், அவர்களிடையே அதிகரித்திருக்கும் தற்கொலைகளையும், அவர்களின் வேலையிடங்களில் நிகழும் இறப்புக்களையும் தடுப்பதற்குமான வழிவகைகளைக் கண்டறியலாம். மற்றும் அவை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தலாம் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கிறது.
'தமிழர்களின் சிறு தெய்வ வழிபாடு'
அழகப்பா பல்கலைக்கழகம்'காரைக்குடி-.9.10.20
என்னை,அழகப்பா பல்கலைக்கழகம்,தமிழ் பண்பாட்டு மையம் நடாத்தும்,'சிறு தெய்வ வழிபாடுகள்' பற்றிப் பேச அழைத்த மதிப்புக்குரிய முனைவர் திரு.மா.சிதம்பரம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.அத்துடன்,கல்லூரி துணைவேந்தர் பேராசிரியர்,திரு, நா.இராஜேந்திரன் அவர்களுக்கும்,பல்கலைக்கழக இணைப் புரவலர் பேராசிரியா,திரு.;ஹா.குருமல்லேஷ் அவர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர், முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை அவர்களுக்கும், வந்திருக்கும் முனைவர்கள், ஆசிரியர்கள்,மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த ஆய்வுக்குப் பல பதிவுகளின் துணை மட்டுமல்லாமல், ஒரு சில நல்ல மனங்களின் உதவியும் கிடைத்தது மிகவும் அதிர்ஷ்டமே. இலங்கையின் மேற்கு, வடக்கு பகுதிகளின் சிறு வழிபாடு பற்றிய ஆய்வுக்கு, எனது இலக்கிய நண்பர் திரு. பத்மநாப ஐயர் அவர்கள்,இலங்கை நூலகத்திலுள்ள பதிவுகளை எடுத்துத் தந்துதவியதற்கு மனமார்ந்த நன்றிகள். அத்துடன் இலங்கையின் கிழக்கில் உள்ள சிறு தெய்வ வழிபாடு பற்றி தகவல்களைத் தந்த,திரு.கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ்,நீலாவணை இந்திரா என்போருக்கும் ,எனது நன்றிகள்.
இக்கட்டுரையில்,'சிறுவழிபாடுகள்' பற்றி,வட தமிழகம், தென் தமிழகம், இலங்கையில் மேற்கு.வடக்கு. கிழக்கு. மலையகம் உட்பட்ட பகுதிகளிலுள்ள சிறு தெய்வ வழிபாடுகள், நம்பிக்கைகள் என்பன சொல்லப் படுகின்றன.அத்துடன், இங்கிலாந்தில் ஒருகாலத்திலிருந்த சிறு தெய்வ வழிபாடுகள் பற்றியும் ஒரு சில சிறு தகவல்களும் பதிவாகியிருக்கின்றன.
மானுடவியல் பார்வையில்,சிறுதெய்வ வழிபாடுகள் என்பது,அந்தத் தெய்வங்களை வழிபடும் மக்களின் நம்பிக்கைகளின் பிரதி பலிப்புகளாகும் என்று சொல்லப் படுகிறது.அவை,மக்கள் வாழும் இடங்கள்,மிருகங்கள்,குன்றுகள்,நதிகள்,காலநிலை,மனித கைவேலைகள்,போன்றவற்றில,தங்களைப் பாதுகாக்கும்,'கடவுள்த்'தன்மை இருக்கின்றன என்பதை அவர்கள் நம்புவதாகும். இவை அவர்களுக்குப் புரியாத இயல்நிலை அதாவது சுப்பர் நட்சுரல்,அல்லது கடவுள்த் தன்மையிருப்பதாக நம்பி வழிபடுகிறார்கள்.இதை' மானுடவியலாய்வாளர்கள்' அனிமிசம்' என்றழைப்பார்கள்.
'கோவிட்-19 தாக்கமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்'.
- சென்னை எதிராஜ் பெண்கள் கல்லூரிக்கு அர்ப்பணித்த, ஆங்கிலச் சொற்பொழிவின் தமிழ்ப் பதிவு.13.7.20 -
என்னை இந்த அமைவுக்கு அழைத்து எதிராஜ் கல்லூரி பேராசிரியை திருமதி அரங்க மல்லிகா அவர்களுக்கும்,இங்கு என்னை அழைப்பதற்கு முன்னோடியாகவிருந்த முன்னாள் முனைவர் திருமதி பிரேமா ரத்தினவேல் அவர்களுக்கும் நிகழ்வுக்கு வந்திருக்கும் மாணவிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள். இன்று,கோவிட் 19 கிருமியின் கொடிய தாக்கத்திலிருந்து தப்புவதற்கு, உலகத்தின் 200க்கும் மேலான தொகையுள்ள நாடுகளின்,உலக மக்களின் சனத் தொகையான 7.8 பில்லியன் மக்களில் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வீடுகளில் அடைபட்டுக் கிடக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மனிதர்கள், காட்டுவாசிகளாக இருக்கும்போது கூட இப்படி வாழ்ந்திருக்க மாட்டார்கள்.அவர்கள் பாதுகாப்பு காரணமாகக் கூட்டமாகக் குகைகளில் வாழ்ந்திருப்பார்கள்.மிருகங்களிடமிருந்து தப்பி வாழவும் மனித இனத்தின் பாதுகாப்புக்காவும் அவர்கள் ஒருத்தரை ஒருத்தர் பாதுகாக்கவேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் அளவிடமுடியாத விஞ்ஞான அறிவு பல துறைகளிலும் வளர்ச்சி பெற்றிருக்கும் இக்கால கட்டத்தில்,கண்களுக்குத் தெரியாத எதிரியான கொரோணா வைரசால், மனிதர்கள் மந்தைகளாகப் பூட்டப்பட்ட வீடுகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களிற் சில ஆண்கள் நாகரீகமற்ற காட்டுவாசிகளைவிடக் கேவலமாகப் பெண்களிடம் நடந்து கொள்வது பல மனித உரிமை ஸ்தானங்களின் கவனித்திற்கு எடுக்கப் பட்டிருக்கிறது.
கோவிட்-19 தாக்கத்தில் முதலாவது நோயாளி, சீனா நாட்டின் வூஹான் மகாணத்தில் 2019 மார்கழி மாதத்தில் அடையாளம் காணப்பட்டார்.அன்றிலிருந்து,இன்றுவரை இந்த உலகம் இதுவரை காணாத, அனுபவிக்காத ஒரு கொடிய நோயின் பல்விதமான தாக்கங்களால்; மக்கள் துயர்படுகிறார்கள்.
அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் (1945 – 2019) நினைவுகள்!
நினைவு தினம் இம்மாதம் 11 ஆம் திகதி
இலங்கையில் வடக்கே உடுவில் – மானிப்பாய் பங்குகளில் சமயப்பணிகளில் ஈடுபட்டுவந்த தம்பதியர் சாமிநாதர் குருசாமி பத்திநாதன் - செலின் அன்னரத்தினம் பத்திநாதன் ஆகியோரின் புதல்வனாகப் பிறந்த ஜேம்ஸ் அவர்கள் பிறந்த கதையும் பின்னாளில் அவர் வணக்கத்திற்குரிய மதகுருவாக வளர்ந்த கதையும் சுவாரசியமும் ஆன்மீகமும் உணர்ச்சியும் கலந்திருப்பது.
1945 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் அருட் தந்தை ஜேம்ஸ் அவர்கள் தனது முதல் திருப்பலியையும் பிரசங்கத்தையும் மானிப்பாய் பங்கிலுள்ள மல்வம் தேவாலயத்திலேயே நிகழ்த்தினார். இந்த புனித நிகழ்வு 1970 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 06 ஆம் திகதி நடந்தது. சுமார் அரைநூற்றாண்டு காலத்தின் பின்னர், கடந்த 2019 ஆண்டு ஜூலை மாதம் இதே காலப்பகுதியில், யாழ்ப்பாணம் பெருந்தேவாலயத்தில் (Cathedral) அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் பூதவுடல், அவரது குடும்ப அங்கத்தவர்கள், ஊர்பொதுமக்கள், வணக்கத்துக்குரிய பிதாக்கள் புடைசூழ கண்ணீர் அஞ்சலியைப்பெற்றது. அவரது குடும்பத்திலிருந்து எதிர்பாராத சூழ்நிலையில் குருத்துவம் கற்கச்சென்று, தங்கு தடையின்றி இறைபணியைத் தொடர்ந்து, மக்களுடனேயே வாழ்ந்து, அவர்கள் பணியே மகேசன் பணியென அன்புருவாக வாழ்ந்தவரின் வாழ்வும் பணிகளும் முன்மாதிரியானவை.சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தமது முதலாவது பிரசங்கத்தை நடத்தியது முதல், கடந்த ஆண்டு, மக்களிடமிருந்து நிரந்தர ஓய்வுபெற்று இறையிடம் தன்னை ஒப்படைக்கச்சென்ற காலம் வரையில் நிகழ்ந்த சம்பவங்கள், சமயப்பணிகளுடன் மாத்திரமல்லாமல், நாட்டு நிலைமையுடனும் விடுதலைப்போராட்டங்களுடனும் இரண்டறக்கலந்தவை. இவற்றைப்பிரித்துப்பார்க்க இயலாது.
லண்டனில் தமிழ் மொழிக் கல்வி'
ஒரு மனிதனின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஆரம்ப சக்தியாயிருப்பது அவனுடைய மொழியாகும். இந்த மாபெரும் அடிப்படையில் அவனுடைய அடையாளம்,அறிவு, கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம்,இசை நாடகம் போன்ற விழுமியங்கள் கட்டமைக்கப் படுகின்றன,வளர்கின்றன.காலக் கிரைமத்தில் அவனுடைய மொழி சார்ந்த ஆக்கங்கள் அவனுடைய பாரம்பரியத்தின் சரித்திமாகின்றன.
அது மட்டுமல்லாமல்,ஒரு மனிதனின்,உடல்,உள.அறிவியல்,சமூக,ஆத்மீக வளர்ச்சியுடன் மொழி வளர்ச்சியும் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஒரு குழந்தையின் மொழிவளர்ச்சியின் ஆரம்பம் அந்தக்குழந்தை தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஆரம்பிக்கிறது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். தனக்குப் பரிச்சயமான ஒலிகளை, குழந்தை தனது தாயின் வயிற்றிலிருக்கும்போதே அடையாளம் காண்கிறது. குழந்தை தனது தாயின் வயிற்றில் உண்டாக்கும் முதல் அசைவைக் கொண்டாட வளைக் காப்பு வைபம் மூலம் குழந்தைக்குத் தாயின் அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தும் நல்லொலியை ஆரம்பித்தவர்கள் எங்கள் மூதாதையர்.
குழந்தை பிறந்ததும் அதன் மொழி வளர்ச்சி மொழியற்ற வித்தியாசமான ஒலிகளால் வெளிப்படுத்தப்படுகிறது.பின்னர் குழந்தை சார்ந்த நெருங்கிய சூழ்நிலையில் உள்ள குடும்பத்தினரிடமிருந்து பல்வகையான ஒலிகளின் படிமம் சார்ந்த மொழியைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறது.
அதன் நீட்சி குழந்தை மிகச் சிறுவயதில் மற்றக் குழந்தைகளுடன் விளையாடிப் பழகும்போதும், அன்னியர்களுடன் பழகும்போதும் தொடர்கிறது.அதன் பின்னர் குழந்தையின் கல்வி பாடசாலையில் ஆரம்பிக்கும்போது,அந்தக் கல்வி குடும்பம், சமுகம், தாண்டி, ஒரு நாட்டின் கல்வியற் கோட்பாடுகளின் கட்டுமானங்களுடன் நீட்சிபெறுகிறது.
படகர்களின் வாய்மொழி வழக்காறுகளில் சூழலியல் சிந்தனைகள் – 1 (பாவம் போக்கும் (கருஹரசோது) இறப்புச் சடங்கில் சூழலியல் சிந்தனைகள்)
வாய்மொழி வழக்காறுகள் மானுட வாழ்வின் அறிவின் சேகரமாகும். அவை பெரும் தலைமுறை தொடர்ச்சியினைக் கொண்டவை. வாழ்வியல் சூழலோடு பிணைந்து நிற்கின்ற இந்த வழக்காறுகள் அவர்தம் வாழ்வியல் விழுமியங்களையும் பறைசாற்றுபவை. அர்த்தப்பட்ட வாழ்வினை அர்த்தப்பட வேண்டிய வாழ்விற்குக் காட்டாகக்கூறி நெறிப்படுத்துபவை. அந்நிலையில் நீலகிரி படகர் இன மக்களின் இறப்புச் சடங்கு சார்ந்த “கரு ஹரசோது” எனும் பாவம் போக்கும் சடங்கில் இடம்பெறும் வாய்மொழி வழக்காறுகளில் நிலவும் சூழலியல் சிந்தனைகள் இம்மக்களின் சூழலியல் அறிவினையும், பாதுகாப்பினையும் புலப்படுத்துபவையாக அமைகின்றன.
படகர்களின் வாழ்வியல், வழிபாட்டு நிலையைவிட இறப்புச்சடங்கியலுக்கே அதிகமான முக்கியத்துவம் அளிக்கின்றது. மறுபிறப்பு மற்றும் பேய்களின் மீதும் நம்பிக்கையில்லாத இம்மக்கள் இம்மையுலகிலிருந்து பிரிந்துச் செல்கின்ற ஆன்மா மறுமையுலகத்தில் தம் முன்னோர்களுடன் உறைவதாக நம்புகின்றனர். இந்நிலையில் இம்மையுலகில் பிரியும் ஆன்மாவினையும், அவ் ஆன்மா உற்ற உடலையும் புனிதப்படுத்துவது இவர்களின் முக்கியமான இறப்பியல் சடங்காகும். அதனுள்ளும் இறந்த உடலினைக் கிழக்குநோக்கி கிடத்தி பாவம்போக்கும் ‘கரு ஹரசோது’ எனும் சடங்கு மிகவும் இன்றியமையானதாகும்.
சர்வதேச ஆண்கள் தினம்
குறிப்பாகச் சமூகத்தினதும் குடும்பத்தினதும் மேம்பாட்டுக்குச் சிறுவர்களும் ஆண்களும் வழங்கிய பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக சர்வதேச ஆண்கள் தினம் உள்ளது. எதிர்மறையான விடயங்களில் கவனம்செலுத்துவதன் மூலம் அவற்றின் அதிகரிப்புக்கு வழிகோலுவதை விடுத்து, நேர்மறையான பண்புகளில் கவனம்செலுத்துவதன் மூலம் அவற்றை ஊக்குவிப்பது எப்போதுமே சிறப்பானது. அவ்வகையில் முன்மாதிரிகள் மூலம் ஆண்கள் மற்றும் சிறுவர்களில் மாற்றமொன்றை உருவாக்குதல், இந்த வருட ஆண்கள் தினத்தின் கருப்பொருளாக இருக்கிறது.
ஆணாதிக்கத்தால் உருவாகும் பல்வகையான பிரச்சினைகளுக்கெல்லாம் சமூகமே அடிப்படைக் காரணமாக இருக்கிறது என்பதை எப்போது நாங்கள் அனைவரும் உணர்கிறோமோ, அப்போதே இதற்கான தீர்வும் உருவாகும் என்பதே யதார்த்தமாகும்.
அவதானிப்பு, பிரதிபண்ணல், மற்றும் முன்மாதிரி ஒன்றைப் பின்பற்றல் என்பனவே சமூகத்தில் நிகழும் கற்றலின் தோற்றுவாய்களாக அமைகின்றன என்கிறார் உளவியலாளர் Albert Bandura. குழந்தைப் பருவம் முதல் அவரவர் பாலினத்தின்படி, அவர்களது சகாக்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து அவர்கள் செயல்படவேண்டிய வழிவகைகளைப் பற்றிச் சிறுவர்கள் அறிந்துகொள்கிறார்கள். அடிப்படையில் ஆண் ஒருவன் தைரியசாலியாக இருக்கவேண்டும் எனவும், பெண்கள் எப்போதும் அழகாகவும் பொறுமையாகவும் இருக்கவேண்டும் எனவும் சமூகம் அவர்களுக்குக் கற்பிக்கிறது.
பெண் கொலை – ஆணாதிக்கத்தின் உச்சம்
பல்வேறு கனவுகளுடன் திருமணபந்தத்தில் இணைபவர்கள் தங்களின் கனவுகளுக்கேற்ற வாழ்க்கை ஒன்று அமையாதபோது அதைச் சகித்துவாழக் கற்றுக்கொள்கிறார்கள் அல்லது ஒருவரை ஒருவர் இம்சிக்காமல் பிரிந்துகொள்கிறார்கள். இதுதான் சகமனித நேசிப்பு இருப்பவர்களின் செயலாக இருக்கிறது. ஆனால், சுயநலமிக்கவர்களோ தாம் அழிந்தாலும் பரவாயில்லை, கூடவாழவந்தவர் அழியவேண்டுமென்ற தன்முனைப்புடன் செயற்படுகிறார்கள். உலகளவில், கொலைசெய்யப்பட்ட பெண்களில் சுமார் 40 சதவீதமானோர் அவர்களது முன்னாள் அல்லது தற்போதைய துணைவரினாலேயே கொல்லப்படுகிறார்கள் என்கிறது ஆய்வு. இப்படி நிகழ்த்தப்படும் இந்தப் படுகொலைகளில் பெரும்பாலானவை அந்தப் பந்தத்தைப் பெண் உடைக்கும்போது அல்லது அவ்வாறு செய்வதற்கான தனது விருப்பத்தை அறிவிக்கும்போதே நிகழ்கின்றன, என்கிறார் Aaron Ben-Zeév Ph.D.
பெண்களின் கொலைகளுக்கு பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் அவை இரண்டு பொதுவான அனுமானங்களைப் பகிர்ந்து கொள்கின்றன:
(1) பெண் தன்னுடைய உடைமையென கருதும் ஆணின் மனப்பாங்கு. அதனால் பெண் மீது பாலியல்ரீதியான பொறாமையும் கோபமும் அந்த ஆணுக்கு உருவாகிறது.
(2) பெண்ணின் மீது ஏற்கனவே ஆண் நடாத்திய வன்முறைகளின் உச்சக்கட்டமாக கொலை நிகழ்கிறது
மீண்டும் சேர்தலுக்கான வழி இல்லையென்று உணரும்போது அந்தப் பெண் மீதான ஆணின் கோபமும் பொறாமையும் மிகவும் தீவிரமடைகின்றன, கொலைசெய்யும் திட்டம் உருவாகிறது. தெளிவாகத் திட்டமிட்டே அந்த ஆண்கள் இந்தக் கொலைகளைச் செய்கின்றார்கள். இப்படியான கொலைகளுக்கு முன்பாக அத்தனை பெண்களும் அந்த ஆண்களால் பின் தொடரப்பட்டிருக்கிறார்கள், விரும்பத்தகாத செய்திகளை அவர்களிடமிருந்து பெற்றிருக்கிறார்கள், உடமைகளை இழந்திருக்கிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்தக் கொலைகளை எதிர்பாராத செயல்கள் எனக் கூறமுடியாது. ஆண் கட்டுப்பாட்டை இழப்பதால் அல்லது ஆணின் மனநிலை பாதிக்கப்படுவதால்தான் இவை நடக்கின்றன என்றும் கூறமுடியாது. இந்தக் கொலைகளில் பெரும்பாலானவை நன்கு திட்டமிடப்பட்டு, வேண்டுமென்றே செய்யப்படுகின்றன. தன்னை அழித்தாலும் பரவாயில்லை மற்றவரை அழிக்கவேண்டுமென்ற மனநிலையையின் உக்கிரமே இங்கு காணப்படுகிறது என்ற ஆய்வை நிரூபிக்கும் ஒரு கொலையாளியின் வாக்குமூலத்தை நான் நேரடியாகவே கேட்டிருக்கிறேன்.
வாழ்வாதாரக்கல்வியும்......வாழ்வியல் திறன்களும்.....
அறிமுகம்
"கல்லா மாந்தர் இல்லா நிலையை
காலம் தான் தந்திடுமா!
பெற்றவர் உற்றவர் மற்றவர் போற்றிடும்
மாற்றம் தான் வந்திடுமா!
கற்றவர் பெற்றிடும் கற்பனைப் பெட்டகத்தை
திறன்கள் தான் வளர்த்திடுமா!
கற்றவை பெற்றவை காகிதமாகிவிடுமா!
காலத்தால் கலை நயக் காவியமாகிவிடுமா!"
மனித வாழ்வில் உடல், உள்ளம், உணர்வு ஆகியவற்றை நலமாக வைத்துக்கொள்ளுத்ல் வேண்டும். நம்மை நாமே பரிசோதனை செய்து கொள்ளுதல் தற்காலத்திற்கு இன்றியமையானதாகும். பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து வருகின்ற மாணவர்களிடத்தில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான குணங்கள் இரண்டறக் கலந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எதிர்மறையான குணங்களை நேர்மறையாக மாற்றிடத் தன்னம்பிக்கை, முயற்சி, உழைப்பு, திட்டமிடுதல் போன்றவை தேவையானதாகும். சுயக் கட்டுப்பாடு, தன்னை அறிதல் மற்றும் நுண்ணறிவுடன் கூடிய சிந்தனை மூலம் ஆரோக்கியமான குணநலன்கள் உருவாகிடும். மாணவர்களின் நிறைகளையும் குறைகளையும் அடையாளம் கண்டு, ஆசிரியர் அவற்றை எடுத்துரைக்கும் போது அவர்களுடைய குறைகள் யாவும், நிறைகளாக மாற்றிட இயலும். என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம், எவ்வாறு ஊக்கப்படுத்தலாம் என்பதனை ஆசிரியர் வகுப்பறைச் சூழலில் மாணவர்களின் நலனை உற்று நோக்கி, அதன் பின்பு அறவுரைப் பகர்தல் அவசியமாகின்றது.இதன் மூலம் மாணவர்கள் தம் கருத்தையும் எண்ணங்களையும் தைரியமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் பண்பை வளர்க்க உதவிடும். இதனை செயல்படுத்திடவும், மாணவர்களிடத்து நடைமுறைப் படுத்திடவும் ஒவ்வொரு ஆசிரியர்களும் வாழ்வியல் திறன்களைக் குறித்து அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது.
வாழ்வியல் திறன்கள்
கல்வியானது உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர்வதாகும். மனித வாழ்வில் கல்விக் கற்கும் காலமே வசந்தமானது. இதனை கற்பவர் உணர்வதில்லை என்பதே நிதர்சனம். திறன்கள் வெளிப்படாதவரை வாழ்வில் வெளிச்சமில்லை எனலாம்.அறியப்பட்டத் திறன்கள் அறிவினை வலுப்படுத்திட உதவும் என்பதில் ஐயமில்லை. ‘வாழ்க்கைத் திறன்கள்’ என்னும் கல்வி ஏற்பாட்டினை ,நான்கு முக்கியக் காரணிகள் நிர்ணயம் செய்பவையாக உள்ளன. அவையாவன,
1. தன்னை அறிதல்.
2. துணிந்து உரைத்தல் மற்றும் மறுக்கும் திறன்.
3. பகுத்தறியும் திறன்.
4. தொடர்புகொள்ளும் திறன்.
இத்தகைய வாழ்வியல் திறன்கள் எதிர்காலத்தினை வளப்படுத்துவதற்கு வலிகோலுகின்றன. ஆனல் இன்றைய கல்வி இத்தகைய திறன்களை நிறைவேற்றிடுமா என்பது இமாலயக் கேள்வியாக உள்ளது. நல்லாசிரியர் இத்தகையத் திறன்களை மாணவர்களிடையே அளவிட்டு, மதிப்பீடு செய்வதும், சிறப்பாக மாணவர்களிடையே வளர்ப்பதும் ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும்.
பெண்ணின் முதன்மைக் கடமை
இந்தியச் சமூகத்தில் பெண் கடமைகளின் உருவம். சுயநலமில்லாமல் அன்போடு அனைவரையும் பாதுகாப்பது அவள் இயல்பு. அதுவே அவளது கடமையும் கூட. பெண் என்பவள் தனக்காக வாழ்பவள் அல்ல. திடீர் உறவினர் வருகையால் உணவு பற்றவில்லையா? பெண் தனக்கான உணவைத் தியாகம் செய்வாள். அவளுக்கு உடல் நலம் இல்லாவிட்டாலும் மற்றவர்களைக் கவனித்து சேவை புரியும் ‘தியாகி’ அவள். அவ்வாறு நீளும் சேவையின் பொருட்டு, தான் காலம் தவறி உண்ணும் இயல்பும் உடலையோ மனத்தையோ பராமரிக்க முடியாமல் வேலைகளின் அழுத்தத்தில் தன்னை மறந்தே போவதும் பெண்ணின் குணம். சிறந்த பெண்மணி மேற்கண்ட இயல்புகள் கொண்டிருப்பாள். அதாவது மேற்கண்ட இயல்புகளைக் கொண்டிருந்தால்தான் ‘சிறந்த பெண்மணி’ என்ற பட்டம் கிடைக்கும். தன்னைப் பற்றியும் தனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் பற்றியும் சிந்திக்கும் பெண்ணை நம் சமூகம் அவ்வளவு மரியாதையுடன் பார்ப்பதே இல்லை. அவள் பொறுப்பற்ற, சுயநலமான, அன்பின் உருவம் அல்லாத, சமயங்களில் குடும்பத்திற்குத் தகுந்தவள் கிடையாது என்று கூட முத்திரை குத்தப்படுகிறாள். உண்மையில் பெண்ணின் உடல்நலம் அதிமுக்கியமானது. அவள் நலமாக இருக்கும் வரைதான் மற்றவர்களைப் பேணிப்பாதுகாக்க முடியும்.
ஒவ்வொரு பெண்ணையும் அவளுடைய பெரிய சொத்து எது என்று பட்டியல் இடச் சொன்னால் அவளது குடும்பம், குழந்தைகள், உறவுகள், விலை கொடுத்து வாங்கக் கூடிய உயிரற்ற பொருட்கள் என்று நீளுகின்ற பட்டியலில் அவள் உடல் என்ற ஒன்று இருக்கக் கூடுமா என்பது சந்தேகமே. ஆனால் பெண்ணுக்கு அவளது உடல்நலம் தான் ஆகப் பெரிய உடைமை. பெண்களுக்கு இந்த அறிவையும் உணர்வையும் தருவதில், புரிய வைப்பதில் நம் மொத்த சமூகமும் தவறிவிட்டது என்பதுதான் உண்மை. அதற்குப் பல விதமான சமூக, பொருளாதாரக் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அதை விடக் கொடுமை, தன் உடல் பற்றி எந்த வித அக்கறையும் காட்டாமல், தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் கவனித்துக் கொள்வதே சிறந்த பெண்ணின் இயல்பு என்றும் பாடம் சொல்லி மனத்தில் பதித்தும் இருக்கிறது.
சரிவிகித உணவும் உடற்பயிற்சியும் மேல்தட்டு மக்களுக்கே உரியவை என்ற தவறான புரிதலும் நிச்சயம் மாற்றப்பட வேண்டும்.
சர்வதேச மகளிர் தினம் ‘இதுதான் நேரம்’
தொனிப்பொருள்
2018 ஆம் ஆண்டின் மார்ச் எட்டாம் திகதியில் நடைபெறும் சர்வதேசப் பெண்கள் தினத்திற்கான தொனிப்பொருளாக ‘இதுதான் நேரம்’ (வுiஅந ளை ழெற) அமைகின்றது. கிராமிய நகர்ப்புறச் செயற்பாட்டாளர்கள் பெண்களின் வாழ்வில் மாறுதல்களைக் கொண்டுவருகிறார்கள். இந்த ஆண்டின் சர்வதேச பெண்கள் தினமானது முன்னர் என்றும் இல்லாத வகையில் உலகெங்கிலும் பெண்களின் உரிமைகள், சமத்துவம், பெண்களுக்கான சமூகநீதி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்களின் பின்னணியில் இடம்பெறுகின்றது.
பாலியல் தொந்தரவுகள், பெண்களின் மீதான வன்முறைகள், பெண்களுக்கெதிரான பாகுபாடு என்பன பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகாக இடம்பெற்று வருகின்றன. உலகெங்கிலும் பொது அரங்குகளில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றிப் பேசப்பட்டு வருகின்றன. இந்த அநீதியான நிலை மாற வேண்டும் என்ற உணர்வு முன் என்றுமில்லாத வகையில் வெடித்துக் கிளம்பியவண்ணம் உள்ளது. ஆண்களும் பெண்களும் சமத்துவமாக நடாத்தப்படும் ஒரு ஒளி நிறைந்த எதிர்காலத்தை நோக்கி மக்கள் அணிதிரண்டு வருகின்றனர். உலகின் மிகப் பெரும் தலைநகரங்களில் எல்லாம் பெண்களின் ஆர்ப்பாட்டங்கள் உணர்வு பூர்வமாக நடைபெற்று வருகின்றன. பாலியல் வன்முறைகளுக்கெதிராக இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து சாதாரண கிராமங்கள் வரை பெண்கள் உரிமைக்குரல் எழுப்பி வருகின்றனர்.
இலங்கையில் பெண்களின் போராட்டம்
மன்னாரைத் தளமாகக்கொண்டு செயற்பட்டு சமூக நீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், பாலியல் சமத்துவத்துக்காவும், பெண்களுக்காகவும் அயராது போராடி வரும் திருமதி ஷெரீன் அப்துல் சறூர் அவர்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவருக்கு லண்டனில் இலங்கை மனித உரிமைச் செயற்பாட்டாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதையும் பெருமையோடு இத்தினத்தில் பாராட்டுகின்றேன்.
இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களில் தங்களின் வாழ்விடங்களிலிருந்து இராணுவத்தை வெளியேறக் கூறி இடம்பெற்று வரும் நீண்ட எதிர்ப்புப் போராட்டங்களின் முன்னணியில் பெண்களே அணிதிரண்டுள்ளனர். காணாமல் போன தங்களின் கணவர்களுக்காகவும், புதல்வர்களுக்காகவும் வீதிகளில் நின்று காணாமல் போனோரின் புகைப்படங்களை ஏந்திக் கொண்டும், சுலோகங்களைக் கோசித்துக் கொண்டும் பெண்களே நீதி கேட்டுப் போராடி வருகின்றனர். கணவன்மாரை இழந்த நிலையிலும் அவர்கள் அங்கவீனர்களாகிப்போன நிலையிலும் பெண்களே குடும்பச் சுமைகளைத் தங்கள் தோளில் சுமந்து வருகின்றனர்.
கிராமிய விளையாட்டு “கிளித்தட்டு”
“ஆலையிலே சோலையிலே ஆலம் பாடிய சந்தையிலே கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுக்கியடிக்கப் பாலாறு “என்பது கிராமத்து நாட்டார் பாடல் . கிராமிய விளையாட்டுக்கள் மிகவும் மகிழ்வூட்டுவன. உடல் நலத்தைப் பேண மிகவும் உகந்தன. கிளித்தட்டு கிராமிய விளையாட்டுக்களில் மிகவும் புகழ்வாய்ந்தது. தமிழ் மக்களிடையே எல்லாக் கிராமங்களிலும் கிளத்தட்டு விளையாடப் பட்டுவந்துள்ளது. கிட்டி புள்ளு, வாரோட்டும், எல்லைக் கோடு, மல்யுத்தம், குடோரி, நாயும் புலியும், ஆடும் புலியும் போன்ற விளையாட்டுக்கள் சிறார்களால் விளையாடப்பட்டு வந்துள்ளன. கிறிக்கற், எல்லே, ஆதாரப்பந்து, வலைப்பந்து, கூடைப்பந்து, உதைபந்து போன்றன அறிமுகப் படுத்த்பபட்ட பின்னர் கிராமிய விளையாட்டுக்கள் அருகிப்போகத் தொடங்கியுள்ளன. முன்னர் கிராமங்களில் விடுமுறையைக் கழிக்கச் செல்லும் நகர் புறத்துப் பிள்ளைகள் இத்தகைய பண்டைய விளையாட்டுக்களை ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்வர் இப்போது இப்படிப் பார்ப்பதற்குக் கூட பாரம்பரிய விளையாட்டுக்கள் கிடைப்பது அரிதாகிப் போய்விட்டன. இவ்வாறான பாரம்பரிய வியையாட்டுக்களில், கிளித்தட்டு அல்லது தாச்சி மிகவும் பிரபலமான, சுவாரஸ்யமான ஒரு விளையாட்டு. அருகிவரும் இந்த விளையாட்டைப் பற்றி அறிந்து கொண்டு நாமும் விளையாடி மகிழ்வதற்குஇந்த விளையாட்டுப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம.
எங்கள் மண்ணுக்கே சிறப்பான விளையாட்டுக்களில் ஒன்றான “கிளித்தட்டை” சிறுவர் முதல் பெரியோர் வரை வயது, பால் வேறுபாடின்றி எல்லோருமே விளையாடி மகிழலாம் .சில கிராமங்களில் இதனை “யாட்டு ”அல்லது ‘தாச்சி ‘ என்றும் அழைப்பார்கள். தாச்சி என்பது நடுவரைக்குறிக்கும் சொல்லாகும். கிளித்தட்டுக்கு நடுவர் மிக முக்கியமானவர். இரண்டு குழுக்களுக்கிடையே இந்த விளையாட்டு இடம்பெறும்.
பண்டைய காலத்தில் கிராமத்துப் ;சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிளித்தட்டை விரும்;பிப் பார்ப்பார்கள். இது ஆண்களுக்கு உரிய ஒரு விளையாட்டாகக் கொள்ளப்பட்டு வந்தது. இன்று இந்த விளையாட்டு பலருக்கும் தெரியாத ஒன்றாகக் காணப்படுகின்றது. தென்பது ஆச்சரியம்தான். கிளித் தட்டு விவசாயிகளின் கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஒன்றாகும் .நெல் விதைத்த காலங்களில் வயலில் நெல் மணிகளைப் பொறுக்க வரும் கிளிகளை, கமக்காரன் வரம்புகளில் ஓடிக்கலைத்து வயலைக் காப்பதையே இந்த விளையாட்டுக் காட்டி நிற்கிறது. காப்பவர்- கமக்காரனாகவும்,புகுவோர்-கிளிகளாகவும் தட்டுக்கள் (பெட்டிகள்)- வயல் நிலங்களாகவும் கோடுகள்- வரம்புகளாகவும் பாவனை செய்யப்படுகின்றது.
குளோபல் தமிழ்ச் செய்தி (மீள்பிரசுரம்) : பெண்களுக்கு என்ன என்ஜினியரிங் என கேள்வி எழுப்பிய காலத்தில் இலங்கையில் உருவான முதலாவது பெண் பொறியியிலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரம்.
அதி வணக்கத்திற்குரிய வல்பொல ராஹூல தேரர் பல ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கையில் பௌத்த மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கு ஆயத்தமானார். இந்த கட்டடம் அமைக்கப்படும் மண் மற்றும் கட்டட நிர்மான தொழில்நுட்பம் தொடர்பில், இளம் பெண் பொறியியலாளரிடம் இது குறித்து ஆலோசனை வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
‘நாயக்கத் தேரரே இந்த இடத்தில் மரத்திலான பயில்கள் கீழ் இறக்காமல் கட்டிட நிர்மானம் செய்யக் கூடாது. அது கட்டடத்தின் ஆயுட்காலத்தை பாதிக்கும்’ என தனக்கு கிடைக்கப் பெற்ற மண் மாதிரியை பரிசோனை செய்த பெண் பொறியியலாளர் கூறினார். ‘அத்தனை பெரிய செலவினை செய்ய முடியாது. எனினும் இந்த கட்டடத்தை நிர்மானிக்க வேண்டும் அல்லவா’ என ராஹூல தேரர் கூறினார். இந்த சம்பாசனை நடைபெற்ற போது ராஹூல தேரரின் உறவினரான சித்தாலபே நிறுவனத்தின் தலைவர் விக்டர் ஹெட்டிகொடவும் பிரசன்னமாகியிருந்தார். ‘எனினும் மற்றுமொரு முறை காணப்படுகின்றது எனினும் இந்த முறை இலங்கையில் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை’ என அந்த இளம் பெண் பொறியியலாளர், நாயக்க தேரரிடம் கூறினார்.
‘அம் சொல்லுங்கள் பார்க்கலாம் என்னவென்று’ என விக்டர் ஹெட்டிகொட இந்த சம்பாசனையில் இணைந்து கொண்டு கூறினார்.
‘ ஒட்டு மொத்த கட்டடத்தின் அத்திவாரத்தையும் ஒன்றாக நிர்மானிக்காது பகுதி அளவிலான அத்திவாரங்களின் ஊடாக நிர்மானிக்க முடியும். இவ்வாறு செய்தால் ஓர் இடத்தில் தாழிறங்கினாலும் ஒட்டு மொத்த கட்டடத்தையும் பாதிக்காது, புனர்நிர்மானப் பணிகளும் இலகுவில் செய்ய முடியும் என தனது புதிய தொழில்நுட்பத்தை பெண் பொறியியியலாளர் விபரித்தார்.
அதி வணக்கத்திற்குரிய ராஹூல தேரர் இந்த புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கட்டடத்தை நிர்மானிக்க இணங்கியிருந்தார். சகதி மிக்க மண்ணில் கட்டிட அத்திவாரத்தை போட்டால் பாரியளவில் செலவாகும். எனினும் இளம் பெண் பொறியியலாளரின் யோசனைக்கு அமைய நிர்மானம் செய்ததனால் பாரியளவு செலவு குறைக்கப்பட்டது.
பாரதியாரின் பெண் விடுதலைச்சிந்தனைகள்
- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய அனைத்துலக பெண்கள் தினவிழாவில் செல்வி மதுபாஷினி பாலசண்முகன் நிகழ்த்திய உரை. இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சையில் தமிழ்ப்பாடத்தில் சிறந்த புள்ளிகளைப்பெற்றவர். மொனாஷ் பல்கலைக்கழகத்தில் தற்பொழுது பயிலும் இவர், மெல்பனில் நடைபெற்ற இளம் எழுத்தாளர் விழாவில் நடைபெற்ற போட்டியில் சிறந்த இளம் எழுத்தாளருக்கான விருதையும் பெற்றவர். ஆங்கில இலக்கியத்திலும் ஈடுபாடும் ஆர்வமும் மிக்க மதுபாஷினி பாலசண்முகன், தமிழ் இலக்கியத்திலும் தமது ஆர்வத்தை வெளிப்படுத்திவருபவர். -முருகபூபதி -
"நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்"
பாரதியார் எழுதிய புதுமைப்பெண் பாடலில் இருந்து சில வரிகள் இவை. சுப்ரமணிய பாரதி 19 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் புரட்சிக் கவிதை எழுதிய கவிஞர் மற்றும் சுதந்திர வீரர் ஆவார். பண்டைத் தமிழ் வரலாற்றையும் பாரதப் பண்பாட்டினையும் நன்கு அறிந்திருந்த பாரதி, நாட்டின் ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களின் நிலையைக் கண்டு மனம் வெதும்பினார், வேதனைப் பட்டார். பெண் விடுதலைக்காக எழுச்சி மிகுந்த பாடல்களை பாடினார்.
பாரதியார் தமது கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பெண்ணுரிமைக் கருத்துகளை அவருக்கே உரித்தான கவியழகோடும், அழுத்தத்தோடும், வீராவேசத்தோடும், படிப்போரின் மற்றும் கேட்போரின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் கனல் தெறிக்க எழுதினார்.
நான் உங்களுடன் உரையாடவிருப்பது பாரதியாரின் பெண் விடுதலைக் கருத்துகளைப் பற்றி. உப தலைப்புகளாக, பாரதியார் சமூக சீர்திருத்த வாதத்தை, முக்கியமாக பெண் விடுதலையை ஆதரித்த காரணம், அவரது பெண் விடுதலை வாதம் சார்ந்த கருத்துக்கள் மற்றும் அவற்றுக்கு உதாரணமான பாடல்கள் என்பன பற்றிக் கலந்துரையாட உள்ளேன்.
பெண்ணியல் இலக்கியம்: பெண்ணுரிமைகளும் வெல்வழி வரலாறும்
மார்ச் மாதம்; 8-ம் திகதி. சர்வதேச மகளிர் தினம் எங்கும் சம்பிரதாயமாகக் கொண்டாடப் படுகின்றது. ஆனால் இன்றுகூட உலக நாடுகள் எவற்றிலும் பெண்களையும் ஆண்களையும் எம் சமுதாயங்களும் அரசாங்கங்களும் வேலை செய்யும் இடங்களிலோ இல்லங்களிலோ பொதுஇடங்களிலும் நிகழ்ச்சிகளிலுமோ சரிசமமாகக் கருதுவதும் இல்லை> நடத்துவதும் இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம் என்னவெனில் இன்றும் எஞ்சியுள்ள ஆணாதிக்கமே. பெண்களின் உதாசீனப் பிரயாசைக் குறைவும் இன்னொரு காரணமாக இருக்கலாம் என்பதையும் நாம் மறுக்க முடியாது.
கீழைத் தேசங்களாகிய ஆசிய நாடுகளில் ஆண் பெண் வேற்றுமை மிகக் கூடுதலாக இன்னும் நிலைக்கிறது. ஒரு கொடூரமான உதாரணம்: இந்திய இந்துப் பெண்கள் கணவன்மார் இறந்து அவர்களுடைய சடலம் எரியும் பொழுது மனைவிமாரையும் நெருப்பில் வீழ்ந்து மாளச் செய்கிற வழக்கம் இன்னமும் உண்டு. இதைச் சில காலமாக அரசாங்கம் சட்ட முறையாக நிறுத்தி வந்தாலும் ஒருசில கிராமங்களில் இப்பொழுதும் இந்த அநியாயம் குறைந்த அளவில் எனினும் நடக்கவே செய்கிறது. மேலும் அங்கு பலர் தம் மனைவிமாரை அடிமைகளாகக் கருதி மனிதப் பிறவிகளைப் போல் நடத்துவதே இல்லை. எனினும் மேல் நாட்டாரின் வாழ்க்கை முறைகளையும் அவர்கள் பெண்களை நடத்தும் வகையையும் அறிந்து மேலும் கல்வி மேம்பாட்டாலும் அரசாங்கக் கட்டுப் பாட்டினாலும் இவ்விதமான அநீதிகள் குறைந்து கொண்டு வருவது ஒரு நற்செய்தியே.
2008இல் ஒக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 1.3 பில்லியன் தொகை வறுமையில் வாழும் உலகமக்களில் நூற்றுக்கு 70-வீதம் பெண்களே எனக் குறிப்பிட்டுள்ளது. இதற்குக் காரணம் பெண்களுக்கு இன்றும் மனிதஉரிமைகள் முழுமையாகக் கொடுக்கப்படவில்லை என்பதே. அத்துடன் ஆண்கள் பெண்களைக் கீழ்த் தரமாகக் கருதி வேலை வீடு பணம் முதலியவற்றில் பூரண சமத்துவம் மறுக்கப்படுகிறது. மேலும் உலகில் தொழில் செய்பவர்களில் பெண்ணினம் மூன்றில் இரு பங்காக இருந்தாலும் உலகின் வருமானத் தொகையில் நூற்றுக்கு 10-வீதமான வருமானத்தையே பெறுகிறார்கள். அரை மில்லியனுக்குக் கூடிய பெண்கள் கர்ப்பத்திலும் பிள்ளைப் பேற்றிலும் மரணம் அடைகிறார்கள். உலகின் அரசாங்க சபைகளில் பெண்கள் நூற்றுக்கு சராசரி 14-வீதம் இடத்தைத் தான் கைப்பற்றி இருக்கிறார்கள்.
உலகில் குடும்பங்களில் மிகக்கூடியதாக முக்கியமாக ஆண்களின் தாக்குதலால் காயப்படுவதும் மரணமடைவதும் பெண்களே. இவை ஆராய்ச்சிப் புள்ளிவிவரங்கள்.
வயோதிபத்திலும் இலட்சிய வாழ்க்கை
முன்னுரை
வயோதிப காலம் என்பதை, நாம் எம் நடைமுறை வாழ்வின் ஊதிய-நோக்கு வேலைகள், தொழில்கள், உத்தியோகங்களிலிருந்து விடைபெறும் 65-வயதின் பின்னர் நடத்தும் வாழ்க்கை எனக் கருதலாம். இந்தியாவிலும் இலங்கை யிலும் இருந்து வெளிவரும் புதினப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் 50-வயதுக்கு மேற்பட்டோரை எல்லாம் வயோதிபர் எனக் குறிப்பதை 2011இலும் பலதடவை கண்டிருக்கிறோம். சென்ற நூற்றாண்டுகளில் ஆசிய நாடுகளில் மலேரியா, நீரிழிவு, தொற்று நோய்கள், பிள்ளைப் பேற்றினில் குழந்தைகளும் தாய்மாரும் இறத்தல், போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் போரினாலும் மனிதரின் சராசரி வாழ்க்கை 40-வயதுக்குக் கிட்டியே இருந்ததை அவர்கள் இன்றைய புதிய சூழ்நிலையிலும் மறக்க மறுக்கின்றனர். உலகின் மேற்குப் பாதியில் வசிக்கும் எம்மவரின் கோணத்திலிருந்து, ஆனால் உலக மக்கள் எல்லோருக்குமே பலன்படும் பாணியிலேயே இக்கட்டுரை எழுதப் பட்டிருக்கிறது.
மனித வாழ்வின் முக்கிய குறிக்கோள் என்ன?
இது ஒரு முக்கியமான அடிப்படைக் கேள்வி. இந்தக் கேள்விக்கு மனச் சுத்தியுடன் தம் சொந்தச் சூழ்நிலைக்கு ஏற்பச் சிந்தித்துத் தெளிந்த பதில் பெறுவோர் எந்த வயதிலும் வாழ்க்கையில் இன்பமும் அமைதியும் காணலாம். ஆனால் வயோதிபரின் கோணத்திலிருந்தே இன்று இப் பொருளை ஆராய் கிறோம். என் சிந்தனையின் படி, வயோதிபரின் இலட்சியக் குறிக்கோளாவது: இயற்கை அன்னை எமக்குத் தந்துள்ள உயிரையும் உடம்பையும் அவளே திரும்ப எடுக்கும் நிமிடம் வரை கவனமாகப் பாதுகாத்து, முடியுமான வரை இன்பமாக வாழ்ந்து கொண்டே எமது குடும்பத்தினர், அயலார், சமூகத்தினர் போன்றோருக்கு இயலுமானவரை உதவிக் கொண்டு இன விருத்தியுடன் உலக அபிவிருத்தியையும் ஊக்கி, இயற்கைமாதாவையும் எம்மெம் ஆண்டவரையும் துதித்துப் பேணிக் கொண்டு ஆறுதலாக வாழ்வதே, என்பதாகும்!
திருக்கோணேஸ்வரத்தில் தொல்பொருள் துறையினரின் தடைகள்!
‘தொன்மைமிகு தெட்சண கைலாய திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெறும் கட்டுமானப் பணிகளுக்கு தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தினால் தடை’ எனப் பொருள்படும் செய்திகள் 18.12.2015ஆம் திகதியன்றும் அதன் பின்னரும் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, தங்கள் கவலையை வெளிப்படுத்திய எண்ணற்ற மக்களுக்கு, கோணேஸ்வரம் கட்டுமானப் பணிகள் சார்ந்த உண்மைகளைக் கூறவேண்டிய கடப்பாடு காரணமாக இந்த அறிக்கையை ஊடகங்கள் வாயிலாக சமர்ப்பிக்கிறோம்.
கோணேசர் ஆலயத்தின் நிர்வாகத்தை சீராக்க வேண்டி திருகோணமலை மக்கள் சட்ட ரீதியாக எடுத்துக்கொண்ட அயராத முயற்சியினால், உயர்நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிபதி ஆகியோரால் நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில், நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக நாம் தெரிவு செய்யப்பட்டு, 17.01.2010ஆம் திகதியன்று ஆலய நிர்வாகத்தினை பொறுப்பேற்றுக் கொண்டோம்.
ஆன்மீகத் தேடலுக்குரிய அதிர்வு பூரணமாய் அமையப்பெற்றது இப்புனிதத் தலம். இந்துக்களின் புண்ணிய பூமி. பல்லின மக்களும் பயபக்தியுடன் சேவிக்கிற சேத்திரம். எம்மை நம்பி தெரிவு செய்த மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளுக்கு உண்மையாய் இருப்பதும், நன்நெறியும் தூய்மையும் நேர்மையுமிக்க நிர்வாகக் கட்டமைப்பினை உருவாக்கி தொன்மைமிகு ஆலயத்தின் இருப்பினைக் கட்டிக்காத்து அடுத்த தலைமுறையினரிடம் முறையாகக் கையளிப்பதும் எமது தலையாய கடமை என்பதை உணர்ந்து செயலாற்றத் தொடங்கினோம்.
நாம் பொறுப்பேற்றுக் கொண்ட போது “நாட்டில் நிலவிய அரசியல் சூழ்நிலை, 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஆலய பிரதேசத்தை புனித நகராக்கக் கோரிய எமது மக்களின் வேண்டுகோளை அரசு நிராகரித்த வரலாறு, பிரட்றிக் கோட்டையில் பாதுகாப்புப் படையினரின் பிரசன்னம், ஆலயத்தின் தூய்மையை பாதிக்கும் வகையில் அண்மித்த வழித்தடத்தில் அமைக்கப்பட்ட ஐம்பதிற்கும் அதிகமான தற்காலிக் கடைகள்” போன்ற நிதர்சனங்களை கருத்தில் வைத்துக் கொண்டு, எமது ஆலய திருப்பணிகளை மிக நிதானமாக, அதே நேரத்தில் தளராத தொலைநோக்கோடு மேற்கொண்டோம்.
பிரித்தானியாவில் தமிழ் கற்றலும் கற்பித்தலும் - ஓர் அவதானிப்புக் குறிப்பு!
மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பாடலைப் பேணுவதற்கு மொழி அவசியமாகின்றது. அவர்கள் தங்களது உணர்வுகளையும் தேவைகளையும் மற்றவர்களுக்குப் புரிய வைக்க மொழியைப் பயன்படுத்துகின்றனர். எனவே மொழி ஆளுமையென்பது ஒருவரது இருப்பைத் தக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு குழந்தை வயிற்றில் உள்ள போது கேட்கும் மொழி தாயினது உரையாடல்களேயாகும். பின்னர் அக்குழந்தை தவழ்ந்தும் நடந்தும் வளர்ந்தும் வரும் போது, கேட்டும் பேசியும் படித்தும் தனக்கான ஒரு மொழியில் ஆளுமை பெறுகின்றது.
இவ்வகையில் புலம்பெயர் சூழலில் எமது தாய்மொழிக் கல்வியென நாம் கொள்ளும் தமிழ்மொழி, தாயகத்தில் கற்கப்படுவதற்கும் கற்பிக்கப்படுவதற்கும் உள்ள முறையில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றது. ஏனெனில் சுற்றுச் சூழலும் அதன் அமைவியலும், சுற்றமும் உறவுகளும் தருகின்ற அனுபவங்களும் குடும்ப உரையாடல்களும் தமிழ் மொழியாக இருக்கும் சூழலில் உள்ள குழந்தை தான் பேசிப் பழகிய மொழியில் எழுத வாசிக்க தொடங்குவது அதனது சிந்தனையைப் பல்வேறு வழிகளில் தூண்டுவதாக அமையும். ஆனால் புலம் பெயர் சூழலில் வாழ்கின்ற பிள்ளைகள் வீட்டில் தாய் தந்தையுடன் தமிழ் மொழியைப் பேசிக்கொண்டும் தொலைக்காட்சியிலும் வீட்டிற்கு வெளியேயும் வேறொரு மொழியோடு ஊடாடிக் கொண்டும் தமிழ் மொழியை கற்கத் தொடங்குவது சிரமமேயெனினும் பெரும்பாலான பிள்ளைகள் விருப்புடனேயே தமிழைக் கற்கத் தமிழ்ப்பாடசாலகளுக்கு வருகின்றனர்.
பிரித்தானியாவைப் பொறுத்தவரை ஈழத்தமிழர்களின் வருகையும் தொடர்பாடலும் கீழைத்தேச நாடுகளில் ஆங்கிலேய ஆட்சி இருந்த காலத்தில் இருந்தே இடம்பெற்றுள்ளது. இலங்கையில் பணியாற்றச் செல்பவர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கும் வண்ணம் தனியார் வகுப்புகள் இடம் பெற்றுள்ளதாக Aberdeen Press and Journal பத்திரிகை தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளதாக மு.நித்தியானந்தன் தனது கூலித் தமிழ் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். ( தமிழ் போதிக்கப்படும்! கிழக்கு நாடுகளை நோக்கிச் செல்பவர்களுக்கான பயிற்சி! அபர்டீன் வகுப்பு தயார்!)
ஆனால் அக்காலத்தில் ஈழத்தில் இருந்து பிரித்தானையாவிற்கு வந்த தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்பித்துக் கொடுப்பதைக் காட்டிலும் ஆங்கில மொழிக் கல்வியைப் போதித்து ஆங்கிலச்சமுகத்திலும் தம் உறவுகளுடனும் தமக்கான மதிப்பைப் பெறுவதிலேயே குறியாக இருந்தனர்.
பாடசாலை செல்லும் மாணவருக்கான பாலியற் கல்வி (ஒன்ராறியோ பாடத்திட்டத்தில் பாலியற் கல்வி)
“மிக ஆரோக்கியமான தொடர்புறுதல் விளக்கம் மிகுந்த உள்நோக்கத்தோடு உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்தப் பரப்பினுள் கற்பவை அவர்களது எல்லாவித தொடர்புகொள்ளலுக்கும் பொருந்துவதாகும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் (மற்றும் அவர்கள் வளர்ந்தவர்களாக குறிப்பிடத்தக்க காதல் விருப்புக்கள்) அல்லது பங்காளர், துணைவர், துணைவி அல்லது மனைவி என்பவர்களோடு எதிர்காலத்தில் அன்புவைக்கவும் பயன்படுத்தக்கூடியதாக அமையும்.” என பாலியற் கல்விபற்றி ஒன்ராறியோ கல்வி அமைச்சு ஒரு எழுத்துமூல அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பாலியற் கல்வி என்றவுடன் பலபெற்றோர்கள் ஏதோ தேவையற்ற அல்லது பிள்ளைகளைத் தவறான வழிகளுக்கு இட்டுச் செல்லும் கல்விமுறை என எண்ணுகின்றார்கள். பாலியற் கல்வி என்பது உடலுறவை மட்டும் அடிப்படையாகக் கொண்டது என்ற எண்ணக் கரு பெரும்பாலான பெற்றோர்கள் மத்தியில் காணப்படுகின்றது. அல்லது அப்படியான கருத்து பரப்பப்படுகின்றது. பேசாப்பொருளைப் பிள்ளைகளிடம் பேசக் கல்வி அமைச்சும் பாடாசாலைகளும் முற்படுவதாக கருதப்படுகின்றது. பாலியல் கல்வியைப் பாடசாலைகளில் புகட்டுவதற்குப் பல பெற்றோர்கள் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் உள்ளனர். சமய அடிப்படை வாதிகள் பாலியற் கல்விக்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று …
“உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”, என்றார், வள்ளலார். எமது உறவுகள், எம்முடன் உண்மையாகவிருக்க வேண்டுமென எதிர்பார்க்கும் நாம், அந்த உறவுகளுடன் உண்மையாக இருக்கின்றோமா? நேர்மை என்ற சீரிய வாழ்க்கைப் பெறுமானத்தை எமக்குள் விதைப்பதற்காக சீராளனும் பூபாலனும் முலாம்பழம் விற்ற கதை எமது கீழ் வகுப்புப் பாடத்திட்டத்தில் (இலங்கையில்) சேர்க்கப்பட்டிருந்தது, அது வெற்றி பெற்றிருக்கின்றதா? இவை பற்றிய சிந்தனைகளைத் தூண்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
“காதலர்கள், துணைவர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் அல்லது மேலதிகாரிகளுக்கு நாங்கள் உணர்வதை, நினைப்பதை அல்லது செய்வதைச் சொல்லாமலிருக்கும்போது, ஒருவகையான மனச் சிறையில் நாங்கள் அடைபட்டுப் போகின்றோம்”, என்கிறார், உளவழி மருத்துவர் (psychotherapist) Dr. Brad Blanton. மேலும், பொய் சொல்வதே, மனிதர்களின் மனத்தகைப்புக்கு முக்கியகாரணமாக இருக்கிறது எனக் குறிப்பிடும் இவர், இந்த மனத்தகைப்பிலிருந்து விடுபடுவதற்கு, ‘முற்றாக உண்மையாயிருத்தல்’ ( Radical-Honesty) cஎனும் செயல்முறையைப் பின்பற்றுதல் சிறந்ததொரு வழியாக அமையும் எனப் பரிந்துரைக்கின்றார்.
திருகோணமலையில் ‘நாங்கள்’ இயக்கத்தின் மக்கள் நலப்பணி!
- பேரன்புடையோர்க்கும், ஊடக நண்பர்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும், இனமான செயல்பாட்டாளர்களுக்கும்! நீங்கள் பணியாற்றும் - நீங்கள் அறிந்த தெரிந்த ஊடகங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும், பரிச்சயமானவர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்துகொள்ளுமாறு வினயமாக கேட்டுக்கொள்கின்றோம். -நன்றி- நாங்கள் இயக்கம் -
திருகோணமலை மாவட்டத்தில் போரின் பாதிப்புகளிலிருந்து இன்னும் மீளமுடியாமல், குடும்ப பொருளாதார ரீதியாக நலிவுற்றுள்ள பாடசாலை செல்லும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கற்றல் உபகரணங்களும், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சிறுகைத்தொழில் முயற்சிக்கான வாழ்வாதாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மூதூர் கிழக்கில், கடற்கரைச்சேனை மற்றும் சேனையூர் கிராமங்களைச்சேர்ந்த பத்து மாணவர்களுக்கு பாடசாலைக்கற்றல் உபகரணங்களும், பெண்களை தலைமைத்துவமாகக்கொண்டுள்ள ஐந்து குடும்பங்களுக்கு சிறுகைத்தொழில் முயற்சிக்கான நிதி ஆதாரமும், மூதூர் தெற்கில், வன்செயல்களால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பெருவெளி கிராமத்தைச்சேர்ந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களிலிருந்து பாடசாலை செல்லும் பத்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அபலைப் பெண்ணுக்கு விடுதலை !
இலங்கையில் சீகிரியா சுவரின் மீது அறியாமையின் காரணமாக தமிழ்ப் பெயரைக் கிறுக்கிய இளம் ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறித்து, கண்டனத்தைத் தெரிவித்து முன்னர் பதிவிட்டிருந்தேன். அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அப் பெண்ணை விடுதலை செய்யக் கோரி மனு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
தற்பொழுது அந்த இளம் பெண்ணுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பொது மன்னிப்பு அளிக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நேற்று கைச்சாத்திட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விரைவில் விடுதலையாகப் போகும் அவருக்காகப் பாடுபட்ட, எனது பதிவினைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும், இணையத் தளங்கள் எல்லாவற்றுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
02.04.2015
இந்த அபலைப் பெண்ணைக் காப்பாற்றப் போகின்றவர் யார்?
இலங்கையின் தேசிய சொத்தாகக் கருதப்படும் சீகிரியா சுவரின் மீது அறியாமையின் காரணமாக, தனது கூந்தல் பின்னால் தமிழ்ப் பெயரைக் கிறுக்கிய இளம் ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, மட்டக்களப்பைச் சேர்ந்த உதேனி சின்னத்தம்பி எனப் பெயர் கொண்ட 23 வயது இளம்பெண்ணுக்கே இந் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தத் தண்டனையானது கடந்த 02.03.2015 அன்று தம்புள்ளை நீதவான் திரு.சஞ்சீவ ரம்யகுமாரால் வழங்கப்பட்டுள்ளது.
வறுமையின் காரணமாக தொழிற்சாலை ஊழியராகப் பணியாற்றி வரும் இவர், தனது தொழிற்சாலை ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாப் பயணத்தில் கலந்துகொண்டு, சீகிரியா பிரதேசத்துக்கு வந்திருந்தபோதே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கிருந்த சுவரில் 'நன்றி உதயா' எனக் கிறுக்கியதோடு, நேர்மையாக தான் செய்த தவறினை ஒப்புக்கொண்டதால் இவர் உடனே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
என் ஆதர்ஸம்! என் ஆசான்! என் நண்பன்!
[ மகாஜனாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் பொ.கனகசபாபதி அவர்கள் டிசம்பர் 24.12.2014 அன்று , கனடாவில் காலமானார். அவரது மறைவினையொட்டி, 'பதிவுகள்' இணைய இதழின் நவம்பர் 2010 இதழ் 131 இதழில் வெளியான இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. இதனை எழுதியவர் எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தி. அதிபர் கனகசபாபதி அவர்கள் கடந்த காலத்தில் தீரம் மிக்க செயல்வீரர்களிலொருவராகவும் இருந்து வந்துள்ளாரென்பதை அவரது முன்னாள் மாணவர்களில் ஒருவரான எழுத்தாளர் கருணாகரமூர்த்தியின் இக்கட்டுரையானது எமக்கு எடுத்துரைக்கின்றது. - பதிவுகள் ]
நீ வாழுங்காலத்தில் கண்டுபிரமித்த இன்னொரு மனிதனைச் சொல்லு என்றால் எனது கைகள் உடனடியாக என் அதிபர். திரு பொ.கனகசபாபதி அவர்கள் இருக்கும் திசையைத்தான் சுட்டும். என் ஆசானிடம் மூன்றே ஆண்டுகள்தான் மாணவனாகப் பயிலும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தாலும் நம் ஆயுள் முழுவதுக்கும் நண்பர்களாக வாழும் பாக்கியதை கொண்டோம். அவர் மானிடசமூகத்துக்கு ஆற்றிய பணிகள் எண்ணற்றவையாயினும் ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக எமது புத்தூர் ஸ்ரீசோமஸ்கந்தா கல்லூரியில் அதிபராகப் பணியாற்றிய காலத்தில் ஆற்றிய தலையாய, வீரம் செறிந்த ஒரு மகத்தான பணியை நினைவுகூர்ந்து போற்றுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
புத்தூர் என்பது கோப்பாய்தொகுதியில் வாதரவத்தை, ஆவரங்கால், நவற்கீரி, ஈவினை, ஏரந்தனை, சிறுப்பிட்டி, அம்போடை, புத்தர்கலட்டி, சொக்கதிடல், அந்திரானை, ஆகிய 10 சிற்றூர்களின் தொகுதியாகும். பத்தூர் என்பதுதான் மருவி புத்தூர் ஆனது என்போரும் உண்டு. அது 1970 களில் 80,000 குடும்பங்கள் வாழ்ந்த ஒரு பெருங்கிராமம். சதுர மைல் ஒன்றுக்கு 6000 குடிகள் என்றவகையில் இலங்கையிலேயே மக்கள் செறிவான கிராமங்களில் அதுவும் ஒன்று. ஒரு ’வகை’யான நிலவுடமை – மேட்டுக்குடி- ஆண்டான் அடிமை சமூக அமைப்பின் பெருந்தொட்டிலும், மாதிரியும் எமது கிராமம். புத்தூரில் எப்போது எந்த தேவதை மண்ணிறங்கிவந்து மேட்டுக்குடியினருக்குப் பட்டயம் எழுதிக்கொடுத்தாளோ தெரியவில்லை. அவ்வூரின் வளமான மண்ணின் பெரும்பகுதி அங்கேயுள்ள மேட்டுக்குடியினருக்கே சொந்தமாக இருந்தது; இருக்கிறது. இதனால் அம்மண்ணில் பிறக்க நேர்ந்த பஞ்சமர்கள் அந்நிலச் சுவாந்தர்களுக்குச் சொந்தமான நிலங்களில் வாழ்ந்து, அவர்களுடைய புலத்தில் அவர்களுக்கே உழைத்துத் தம் வாழ்க்கையை ஓட்டியதால் அவர்களை மீறி எதனையும் செய்யமாட்டாத ஒரு கையறுநிலையில் வாழ்க்கையை ஓட்டினார்கள். தீண்டப்படாதவர்களாக மேட்டுச்சமூகத்தால் கருதப்பட்ட அம்மக்கள் இதனால் கல்வியறிவின்றி வாழ நேரிட்டது. கல்வி அறிவில் குன்றிய அச்சமூகம் தாம் சுரண்டப்படுகிறோம் என்கிற பிரக்ஞை இன்றியே வாழ்வைத் தொடர்ந்ததும் பரிதாபம்.
ஒரே இலக்கில் இரண்டு பறவைகள்
திரு. தங்கவடிவேல் ஆசிரியர் அவர்கள் எனது தந்தை அகஸ்தியரின் ‘லெனின் பாதச் சுவடுகளில்...’ என்ற நூல் வெளியீட்டிற்கு சிறப்புச் சொற்பொழிவாற்ற வருகை தந்து சிறப்புரை ஆற்றியமை எங்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கௌரவமாக நான் கருதுகிறேன். திரு.தங்கவடிவேல் அவர்கள் எனது தந்தையின் சம காலத்தவர். முற்போக்கு அரசியல் இலக்கிய பாரம்பரியத்தைச் சுவீகரித்தவர்கள். திரு. தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் தன் சமகாலத்தில் முற்போக்கு இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்து எழுத்தாளர்களுடனும் நல்லுறவைப் பேணி வந்தவர் ஆவார். \யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதி ஒடுக்குமுறை தமிழ் சமுதாயத்தின் கோரமான முகம் என்பதை நன்குணர்ந்த என் தந்தை அகஸ்தியர் அவர்கள் இந்த சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக ‘எரிநெருப்பில் இடைபாதை இல்லை’ என்ற நாவலை எழுதினார். எழுத்து வெறும் கலைக்காக மட்டுமல்ல அது சமுதாய மாற்றத்தைக் கோரி நிற்கும் புரட்சிகரப் பணியாகும் என்பது என் தந்தையின் இலக்கியக் கோட்பாடாக இருந்தது.
பிரான்சில் இம்மாதம் 25-ம் திகதி தாய்த் திருநாள்: தாயைப் போற்றுவோம்..!
'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே.."
உலக சுகங்கள் யாவற்றையும் மிஞ்சிய, வானுலகச் சொர்க்கமெனச் சொல்லப்படுவதையும்விட உயர்ந்தது தாயன்பு. எம் கண் முன்னே நடமாடும் சுயநலமற்ற ஓர் ஆத்மா தான் தாய். ஒழுக்கத்திலும் அறிவிலும் சிறந்த நம் முன்னோர், தாயைத் தெய்வமாகப் போற்றினர். தெய்வம் பூமிக்கு இறங்கி வருவது தாயில் வடிவில் என்று நம்பினார்கள்.
'தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" -
அலைகள்.காம்: டென்மார்க் பொருளியலாளர் அலன் தர்மன் புதிய பதவிக்கு தேர்வு..
டென்மார்க்கின் அதிக வருமானம் தரும் நோவா நோடியாவில் NNIT ல் ஒரு தமிழ் நிர்வாகி... நோவா நோடியா குழுமத்தில் உள்ள என்.என்.ஐ.ரி நிறுவனத்தின் நிர்வாகியாக பதவியேற்பது நோவா நோடியாவுடன் தொடர்புபட்ட பணியாகவே உள்ளது. காலில் ஒரு முள் குத்தினால் அதை இன்னொரு முள்ளினால்தான் எடுக்க முடியும் இது இயற்கையின் நியதி.. இந்த உதாரணம் ஈழத்தமிழினத்திற்கு மிகவும் பொருந்தும்.. அதை இப்படி வடிவப்படுத்தலாம்.. கல்வியில் ஏற்பட்ட தரப்படுத்தலால் ஆயுதம் தூக்கி போராடப் புறப்பட்ட ஈழத் தமிழினம் அறத்துக்கு புறம்பாக உலக நாடுகளால் அழிவைச்சந்தித்தது முடிந்த கதை. ஆனால் அந்த அழிவுகளால் ஏற்பட்ட இழப்பை மறுபடியும் வென்று இலக்கைத் தொட வேண்டுமானால் அதற்கும் தற்போதய நிலையில் ஏற்ற வழி கல்வியாகத்தானிருக்கும். பிரச்சனையும் கல்வி அதற்கான தீர்வும் கல்வி… இதுதான் ஈழத்தமிழினத்தின் வரலாறாகப் போகிறது.. கல்வியால் உயர்ந்து சர்வதேச அளவில் முக்கிய பதவிகளில் அமரும்போது அந்தப்பலம் ஒரு சர்வதேச பலமாக உருவெடுக்கும், ஒரு நாள் ஈழத்தமிழினம் தனக்கான சுயமரியாதையை நிலைநிறுத்திக்கொள்ள அந்தச் சக்தியே அதி சிறந்த ஆயுதமாக மாறும். இது ஒரு சிந்தனை.. ஆனால்.. ஈழத் தமிழினத்தின் விடிவுக்கு வைக்கப்படும் பல்வேறு தரப்பட்ட யோசனைகளில் இதுவும் ஒரு யோசனையாகும். இது கடினமான வழி ஆனால் சேதம் குறைந்த வழி.. இந்த யோசனையை ஓர் அழகான பின்னணியாகத் தீட்டி அதன் முன்னால் நிறுத்திப் பார்க்க வேண்டிய இளைஞரே டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்து தற்போது தலைநகரில் முக்கிய பதவி பெற்றுள்ள அலன் தர்மனாகும்.
தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை!
இலங்கையில் கடந்த (05.02.2014) அன்று Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தி Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா என்பதனை, உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள். 10 ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த வெனுஷா இமந்தியின் Facebook கணக்கின் Wall இல், அவரது நண்பனாக இணைந்துகொண்ட ஒருவன், காதல் ஜோடியொன்றின் புகைப்படத்தை Tag செய்துவிடுகிறான். அதனை வெனுஷாவின் பாடசாலை ஆசிரியை ஒருவர் கண்டு, அதிபரிடம் போய் முறையிடுகிறார். அதிபர், 5000 மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அந்தச் சிறுமியை மேடைக்கு அழைத்து 'வேசி' எனத் திட்டுகிறார். மறுதினம் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துவரும்படி கட்டளையிடுகிறார். தான் செய்யாத ஒரு தவறுக்காக அவப் பெயர் கேட்க நேர்ந்ததையிட்டு பெரும் மன உளைச்சலுக்குள்ளான சிறுமி, தனது தந்தைக்கு 3 பக்கங்களில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, தாயின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். கீழேயுள்ளதுதான் சிறுமி தற்கொலை செய்துகொள்ள முன்பு எழுதி வைத்த கடிதம் - மரண வாக்குமூலம்
எதிர்வினை: மனித நேயம்
வாயில்லா உயிர்களிடம் காட்டும் நேசம் பற்றிய லதா ராமகிருஷ்ணனின் ‘அன்புக்கு அஸ்வினி’ என்ற பதிவுகள் இணைய இதழில் வெளிவந்த கட்டுரை அருமையாக இருந்தது. அஸ்வினி அனாதரவாக இருக்கும் அத்தகைய உயிர்களிடம் காட்டும் அன்பு நிச்சயம் போற்றப்பட வேண்டியது. இது போன்று வாயில்லா உயிர்களிடம் அன்பு காட்டும் பலர் பல்வேறு நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். சமீபத்தில் கூட அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் கொழும்பிலே ஓய்வு பெற்ற ஒருவர் தெரு நாய்களுக்குத் தினமும் உணவு ஊட்டுவதாகவும், அவரைத் தான் சந்தித்து உரையாடியதாகவும் ஜேர்மனியில் இருந்து வெளிவரும் வெற்றிமணி என்ற இதழில் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். தாயின் பாசத்திற்கு அடுத்தபடியாக, வாயில்லா உயிர்களிடம் வைக்கும் அன்பு தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு என நான் நினைக்கின்றேன்.
அன்புக்கு அஸ்வினி: அஸ்வினியிடம் ஒரு அடர்செறிவான நேர்காணல் இதோ!
அஸ்வினி
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிநின்றார் வள்ளலார். காக்கை குருவி எங்கள் ஜாதி என்றார் பாரதியார். தெருநாய்களையும் பூனைகளையும் புரந்து காக்க அயராது பாடுபட்டுவருகிறார் அஸ்வினி. இளம்பெண். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. இருந்தும் தெருநாய்களையும் பூனைகளையும் பாதுகாத்து அவற்றின் பசியாற்றி பிணிதீர்க்கும் பரிவும் பிரியமும் கரிசனமும் அஸ்வினியிடம் கடலெனப் பரந்துகிடக்கின்றன! மெல்லிய குரலில் நிதானமாக பிராணிகள் மீதான தன் பிரியத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தி இந்த உலகம் அவற்றிற்குமானதுதான் என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறார் ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளை என்ற தொண்டுநிறுவனத்தின் சார்பில் சென்னை மயிலையிலுள்ள மாநகராட்சி மழலையர் பள்ளியில் மாண்டிசோரி ஆசிரியையாக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் அஸ்வினியின் வீட்டில் எப்பொழுதுமே தெருநாய்களுக்கும், பூனைகளுக்கும் தாற்காலிகத் தங்குமிடங்களுண்டு! நாயும் பூனையும் அங்கே தோழர்களாக நட்புறவாடிக் கொண்டிருக்கும். தெருவில் அடிபட்டுக் கிடக்கும் நாய்கள், வருவோர் போவோரின் கல்லடிக்காளாகின்றவை, நோய்வாய்ப்பட்டிருப்பவை, கருத்தரித்திருப்பவை, பிரசவித்திருப்பவை என உதவியும் சிகிச்சையும், ‘’ஸ்ட்ரெரிலைஸேஷனு’ம் தேவைப்படும் தெருநாய்களுக்கு உணவளிப்பதோடு அவற்றைத் தன் செலவில் உரிய மருத்துவமனைகளுக்குக் கூட்டிச்சென்றுவருவதையும் தொடர்ந்து செய்துவருகிறார். செல்லப்பிராணிகள், குறிப்பாக தெருநாய்கள் பூனைகளின் பாதுகாப்புக்கு நம்மிடையே போதுமான அமைப்புகளோ விழிப்புணர்வோ இல்லை. அப்படியிருக்கும் அமைப்புகளும் இந்த வாயில்லா உயிர்களை அலட்சியமாக நடத்தும் அவலநிலையையே பரவலாகக் காணமுடிகிறது என்று வருத்தத்தோடு சுட்டிக்காட்டுகிறார் அஸ்வினி. மழலையர்களின் ஆசிரியையாக அவருடைய சிறந்த பணியைப் பாராட்டி சமீபத்தில் அவருக்கு ‘இன்னர் வீல்’ என்ற அமைப்பு விருது வழங்கி கௌரவித்தது.
மலேசியா: இந்நாட்டின் விளையாட்டுத்துறையில் இந்தியர்களின் பங்கு
பல்வேறு துறைகளில் மலேசியா முத்திரைப் பதிப்பது போல் விளையாட்டுத்துறையிலும் அது தனிச் சிறப்பினை அடைந்து வருவதைக் கண்கூடாகக் காணலாம். உலக அளவில் “தாமஸ் கிண்ண” பூப்பந்துப்போட்டியில் பல முறை வெற்றி வாகைச்சூடி உலக ஜாம்பவான் பட்டியலில் இடம்பெற்றுள்ள மலேசியா வெற்றிகரமாக தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியையும் காமன்வெல்த் போட்டியையும் மிகச் சிறப்பாக நடத்தி இத்துறையில் மலேசியாவுக்கு இருக்கும் தனித்திறமையை உலகுக்குக் காட்டியுள்ளது.தொடர்ந்து உலகக்கிண்ண ஹாக்கிப் போட்டியையும் நடத்தி மலேசியா புகழ் உச்சியில் நிற்பது தெளிவு. குவாஷ் விளையாட்டுப்போட்டியில் நிக்கல் டேவிட் மூலம் உலக முதல் நிலை விளையாட்டாளரை உருவாக்கிய பெருமையை நமது நாடு பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. நாடு விளையாட்டுத் துறையில் வெற்றி நடை போட்டாலும் நமது இந்திய இளைஞர்களின் பங்களிப்பு இத்துறையில் அதர்ச்சி அடையும் நிலையில் இருப்பது எதிர் காலத்தில் நமது இளைஞர்களின் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகிவிடும் என்பதில் ஐயமில்லை! இந்நிலை ஏற்படுவதற்குக் காரணம் என்ன? இந்திய இளைஞர்களின் பால் இந்திய சமூகம் அக்கறைக்கொள்ளாமல் இருந்துவிட்டதா? அல்லது திட்டமிட்டு இந்திய இளைஞர்களை விளையாட்டுத் துறையில் நுழைய விடாமல் மலேசிய அரசாங்கமே தடுத்து விட்டதா? இதற்கு முறையான விடையைக் காண்பது அவசியமும் அவசரமும் ஆகும்.
தள்ளாத வயதிலும் தமிழ்த்தொண்டு
காதறுந்த ஊசி கூடக் கால் முள்ளகற்ற உதவும். எதுவும் வீணில்லை இந்த வாழ்க்கையில்.நகர்ந்து போகிற இந்த மனிதப் பிரவாகத்தில் நாம் நீண்ட தொடர்ச்சியின் கனிவான கண்ணிகள்.ரேசன் கடையில் மண்ணெண்ணை டின்னை நகர்த்துகிற மாதிரி காலம் நம்மை நகர்த்தி நகர்த்தி முன்னெடுக்கிறது.இனம் தெரியாத மனிதர்களோடு சங்கமிக்க வைக்கிறது.மானிட சமுத்திரம் நானெனக் கூவக் கற்றுக் கொடுக்கிறது.உரிமம் பெற்று வருகிற உறவுகளை விட உயிர்மம் பெற்று வரும் உறவுகள் உன்னதமனவையாய் அமையும் ரகசியம் அதுதான்.அயல்நாடுகளுடன் நட்புறவு ஒப்பந்தம் போட அரசுப் பணத்தில் பறக்கிற அதிகாரிகளை விட சாலை நடுவில் ரத்தச் சகதியாய் செத்துக் கிடக்கும் நாயை அகற்றுபவன் அருமையானவன். மாதம்தோறும் குயில் நண்பர்களோடு ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் செல்லும்போது கண்ட அந்த மனிதர்கள் உன்னதமானவர்கள்.
Exemplary Educational Service by Sri Ram Charan Charitable Trust
“As I was watching the children my whole heart went out to those children, ‘Is it possible for me to give them these lessons and the training that are being given under your system, to those children? “I hope that it will be possible not only for the children of the wealthy and well to do, but also for children of pampers to receive training of this nature."
_Mahatma Gandhi on Montessori System of Education
Big or small, each of us have a dream. Thus, it was the dream of Smt.Padmini Gopalan, a kind-hearted individual endowed with social consciousness, to enable the children from underprivileged sections of the society to have access to ‘quality’ education, which would help them in their personality development; a dream that she had cherished and nourished over the years. As a result, Sri Ramacharan Charitable Trust came into being in 1999. It was the brain child of Smt.Padmini Gopalan. She wanted to help the economically backward people around her by providing interest free micro loans. True, when we make an unselfish resolve, help comes from somewhere. She tried to receive donations for the cause, at the rate of $100 per person from her NRI nephews and their friends. B.Sridhar , her nephew , was involved with an organization called Child Vikas International. So,Child Vikas International came forward to provide the initial capital to start the scheme. The scheme proved was a great boon for poor people having school going children. Most people repaid the loans while some did not. Those who failed to repay loans were not necessarily the poorest. Ms. Padmini does not say much about the defaulters, but she is all admiration for those who did pay back in spite of adverse circumstances.
மேலாடைப் போராட்டம்
புதுமையான பல செய்கைகளை அறிமுகப்படுத்துவதில் வட அமெரிக்கா மிகவும் பிரபலமானது. வருடப்பிறப்பு, தீபாவளி, தைப்பொங்கல் வந்தால் ஊரிலே நாங்கள் புத்தாடை வேண்டும் என்று வீட்டிலே பெற்றோரிடம் அடம் பிடிப்பதுண்டு. ஆனால் கனடாவில் அதற்கு மாறுபாடாகத் தங்களுக்கு மேலாடை வேண்டவே வேண்டாம் என்று அடம் பிடிக்கும் ஒரு சாராரும் உண்டு. இப்படி அடம் பிடிப்பவர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து 2007ஆம் ஆண்டு தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கின்றார்கள். ஆண்களும் பெண்களும் அந்த அமைப்பில் அங்கத்தவர்களாக இருக்கின்றார்கள். இந்த அமைப்பினர் கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையை மேலாடையின்றிச் சுதந்திரமாய் திரியும் நாளாக ஏற்கனவே பிரகடனப் படுத்தியிருந்தார்கள். பிரகடனப் படுத்தியது மட்டுமல்ல தாங்களும் முன் உதாரணமாய் சென்ற ஞாயிற்றுக்கிழமை பொது இடங்களிலும் வீதிகளிலும் மேலாடையின்றி நடமாடினார்கள்.
இளவாலைத் திருக்குடும்பக்கன்னியர் மடத்தின் தோற்றமும் சிறப்பும்
‘கிறிஸ்தவ மதத்தின் பிடியிலிருந்து மக்களை மீட்டு எடுத்தால் மட்டும்தான் புரட்சியின் வெற்றி சாத்தியமென்று’ பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கரவாத ஆட்சியின்போது கருதப்பட்ட நிலையில் Bordeaux என்னுமிடத்தில் அதி.வண.பேராயர் Pierre Bienvenu Noailles அவர்களால் உருவாக்கிய திருக்குடும்பக் கன்னியர் மடத்தின் வரலாற்றோடு இளவாலைக் கன்னியர் மடத்தின் வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது. 1858 இல் யாழ்ப்பாணத்துக் கத்தோலிக்க சமய அதி வணக்கத்திற்குரிய ஆயராக இருந்த Semeria (OMI) அவர்களால் அதி வண. பேராயர் Noailles அடிகளார்க்கு யாழ்ப்பாணத்தில் பெண்கள் மத்தியில் கல்வி ஊட்டும் முகமாகää கன்னியாஸ்திரிகைகளை அனுப்பி வைக்குமாறு கடிதம் எழுதி வேண்டிக் கொண்டதிற்கிணங்க உருவானதே இளவாலைக் கன்னியர் மடமாகும்.
வெற்றி மனப்பான்மை!
வாழ்வின் எந்தவொரு கணத்திலும் நாம் தோல்வியடைய விரும்புவதில்லை. எந்தவொரு போட்டியிலும் வெற்றியைப் பெறுவதற்கும், எந்தவொரு இடத்திலும் முதலாவதாக, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கும், முன்னேறுவதற்கும் நாம் விரும்புகிறோம். இது தவறான எண்ணமல்ல. தான் ஒரு திறமை மிகுந்தவனாக ஆகவேண்டும், தன்னால் முடிந்த அளவு வாழ்வில் உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும் என்ற இலட்சியத்தோடு முயற்சி செய்வது மிகவும் நல்ல விடயம். இவ்வாறாக முன்னேற வேண்டுமென்ற மனப்பான்மையே மனதில் வெற்றிக்கான விதைகளைத் தூவி விடுகிறது. பதவிகளில் உயர்ந்த அந்தஸ்தினை நோக்கி, போட்டிகளில் வெற்றிகளை நோக்கி எனப்பல எதிர்பார்ப்புக்கள் மனதில் வேர்விடத் தொடங்குகின்றன. இதில் தவறேதுமில்லை. வாழ்க்கையினை முன்னேற்றகரமான பாதையில் திருப்புவதற்கான ஒரு உந்து சக்தியாக இவ் எதிர்பார்ப்புக்கள் ஆகிவிடுகின்றன. அது போல எப்பொழுதும் சோர்ந்திருக்கும் மனங்களுக்கு 'வெற்றி பெற வேண்டும்' என்ற எண்ணம் மகிழ்வையும், வாழ்க்கை குறித்தான திருப்தியையும் அளிக்கக் கூடியது.
தமிழகத்திலிருந்து: நம்மைக் கொல்லும் தீண்டாமை!!
தருமபுரி ஒரு பின்தங்கிய மாவட்டம். ஆனால் சாதிவெறியில், தீண்டாமைக் கொடுமையில் மிகவும் முன்னேறியுள்ளது. காதல், காதல், காதல், காதல் போயின் சாதல், சாதல், சாதல் என்று அன்பின் வலிமையை, காதலின் சிறப்பை வலியுறுத்தினான் பாரதி. அந்த எட்டயபுரத்தானின் நெஞ்சில் நெருப்பு கொட்டியிருக்கிறார்கள் தருமபுரி சாதிவெறியர்கள். தருமபுரி – திருப்பத்தூர் சாலையில் நாய்க்கன் கொட்டாய் பகுதியில் இருக்கிறது நத்தம் குடியிருப்பு. இந்த ஊர் இளவரசனுக்கும் பக்கத்து ஊரான செல்லங்கொட்டாய் ஊரைச் சேர்ந்த திவ்யாவிற்கும் காதல். திவ்யா வன்னிய சமூகம். இளவரசன் ஆதிதிராவிடர். திவ்யாவின் பெற்றோர் இவர்களின் காதலை விரும்பவில்லை. ஆனால் எதிர்ப்பை மீறி இருவரும் அக்டோபர் 14ஆம் நாள் பதிவுத் திருமணம் முடித்துக் கொள்கின்றனர். குடும்பங்களுக்குள் சண்டை, இரண்டு ஊரின் சண்டையானது. இரண்டு ஊரின் சண்டை சாதியச் சண்டையானது. பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்பும் இருவரையும் பிரிக்க முடியவில்லை.
மீள்பிரசுரம்: கௌதம புத்தரின் பூமிக்கு இங்கு என்ன தவறு நடந்துள்ளது
இரண்டு மாதங்களுக்கு மேலாக நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது வசைமாரி பொழிந்து வரும் விவகாரம், பிரதம நீதியரசராக இருக்கும் ஷிராணி பண்டாரநாயக்காவின் வெளியேற்றத்தோடு ஒரு முடிவுக்கு கொண்டுவரப்படுவதற்கு, எண்ணிக் கொள்ளுங்கள் இன்னும் ஏழு நாட்கள்தான் பாக்கியிருக்கின்றன, ஏனெனில் அவர் தவறு இழைத்துள்ளார் என்று நிரூபிக்கப்பட்டதாலோ, அல்லது குற்றம் புரிந்துள்ளார் என்பதாலோ இது நடக்கவில்லை ஆனால் ராஜபக்ஸவின் ஆட்சி அவர் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. அந்த ஆசனத்தில் அமரப்போகும் அடுத்த அரசாங்க வேலைக்காரர் யாராகவிருந்தாலும், அவர் நிச்சயமாக ராஜபக்ஸவின் கற்பனைக்கு ஏற்ற ஒருவராக இருப்பாரே தவிர, தகுதிப்படி நியமனம் பெற்றவராக இருக்கமாட்டார். சுயாதீனமான நீதித்துறை பற்றி உருவாகிவரும் இந்த குழப்பங்கள் யாவற்றுக்கும் அப்பால், இந்த விடயம் பற்றி மிகவும் குறைவாகப் பேசப்பட்டது மாத்திரமன்றி இதை ஒரு பிரச்சினையாக ஒருபோதும் யாருமே எடுத்துக் கொள்ளாததுதான், இதிலுள்ள மனிதாபிமானமான துயரம்.
லெ. முருகபூபதி - மறக்க முடியாதவர்களின் இருப்பிடம்!
அநேகமாக கவனத்தைக் கோருவதும் குவிப்பதும் விலகல்களும் வேறுபடல்களும் ஆச்சரியங்களுமே. குறிப்பாக எழுத்தாளர்கள் இந்த வகை விலகல்களாகவும் ஆச்சரியங்களாகவும் இருப்பதுண்டு. அதனால் அவர்கள் கவனத்தைக் குவிப்பவர்களாகவும் அவர்களால் பல மையங்கள் கவனத்துக்குரியனவாகவும் அமைகின்றன. கவனத்தைக் குவிக்கும் விலகல்களில் ஒருவராக லெ. முருகபூபதியும் இருக்கிறார். அவருடைய இலக்கியப் பங்களிப்பு, எழுத்து என்பவற்றுக்கு அப்பால், இலக்கியத்தின் வழியாக அவர் கொண்டிருக்கும் அக்கறைகளும் செயற்பாடுகளும் இந்த விலகலை அடர்த்தியாக்குகின்றன. எனவேதான் முருகபூபதி கூடிய கவனத்தைப் பெறுகிறார். தன்னுடைய அக்கறைகளுக்காகவும் பங்களிப்புக்காகவும் முருகபூபதி இயங்குகின்ற வேகமும் நுட்பமும் அசாதாரணமானது. துடிப்பும் ஒருங்கு குவிந்த கவனமும் அவரையும் அவருடைய செயற்பாடுகளையும் முன்னகர்த்திக் கொண்டிருக்கின்றன. அதனால் அவர் சோர்வின்றி உழைக்கிறார். எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறார். பிறரையும் இயக்குகிறார். பிறரும் இயங்கத்தூண்டுகிறார். இதில் பெரும்பாலானவை பொதுப்பணிகள். உதவிப்பணிகள். ஊக்கப்பணிகள். மறு பக்கத்தில் “எழுதுங்கள் - செயற்படுங்கள்“ என்று ஊக்கப்படுத்தும் காரியங்கள்.
மார்ச் 29, 2012: சின்மயியிடம் சில கேள்விகள்!
[அண்மையில் திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி கொடுத்த புகாரின் அடிப்படையில் புகழ்பெற்ற வலைப்பதிவர்களில் ஒருவரான ராஜன் லீக்ஸ் கைது செய்யப்பட்ட விடயம் யாவரும் அறிந்ததே. ஒழுங்காக விசாரணை முடியவில்லை. வழக்கு முடியவில்லை. அதற்குள் தமிழகப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், 'பிரபல' எழுத்தாளர்களெனப் பலரும் பாடகிக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கி விட்டார்கள். இந்நிலையில் இணையத்தில் தேடியபோது ராஜன் லீக்ஸ் தனது வலைப்பதிவில் மார்ச் 29, 2012 அன்று எழுதிய பதிவொன்று கிடைத்தது. இதற்கெல்லாம் முதற் காரணம் பாடகி சின்மயி தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டது சம்பந்தமாகத் தெரிவித்த கருத்துகளே எனத்தெரியவருகிறது. ராஜன் லீக்ஸின் அந்தப் பதிவினை ஒரு பதிவுக்காக 'பதிவுகள்' மீள்பிரசுரம் செய்கின்றது. சின்மயியின் புகார் சம்பந்தமாகச் சட்டம் தன் கடமையினைப் பாரபட்சமில்லாது செய்வது அவசியம். ஆனால் அது அவ்விதம் செய்யுமா என்பது தற்போது நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது சந்தேகமாகவிருக்கிறது. வழக்கு முடிவதற்கு முன்னரே ராஜன் தண்டிக்கப்பட்டுவிட்டார். அவரது பதவி பறி போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாடகிக்குப் பின்னால் அதிகாரமும், பணபலமும் இருப்பதாகத் தெரிகின்றது. இவ்விதமானதொரு சூழலில் ராஜனின் அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்படுமா என்பதுவும் சந்தேகமே. மார்ச் 29, 2012இல் எழுதப்பட்ட ராஜனின் பதிவினை வாசிக்கும்போது ராஜனில் கேள்விகள் நியாயமானவையாகவே தெரிகின்றன. இக்கேள்விகளுக்குப் பாடகி பதிலளித்தாரா என்பதும் தெரியவில்லை. இவ்விதமானதொரு சூழலில் , ராஜனுக்கு எதிராகத் தமிழகக் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், ஊடகங்களும் சரி, தனிப்பட்ட மனிதர்களும் சரி ராஜனைக் குற்றவாளியாக முடிவு செய்து தமது கருத்துகளை அள்ளி வீசுவது தவறு, ராஜன் நீதியான விசாரணைகளை எதிர்கொள்வதற்கு அவை இடையூறாக இருக்கும். கைது செய்யப்பட்ட ராஜன் பிணையில் விடுதலை செய்யப்பட்டு, தனது பக்க நியாயங்களை எடுத்துரைப்பதற்கு நியாயமான சந்தர்ப்பம் வழங்கப்படுவது மிகவும் அவசியம். - பதிவுகள்]
பிரசவத்திலும் உலகச்சாதனை படைக்கும் பெண்கள்
இப்பூவுலகில் மனித இனப் பெருக்கத்தில் மிகப் பாரிய பொறுப்பை ஏற்றுச் செயற்பட்டு நிற்பவர்கள் தன்னலங் கருதாப் பிறர் நலங்கருதும் பெண்குலத்தினர் ஆவர். அவர்கள்தான் பத்து மாதம் கருவைத் தம் வயிற்றில் சுமந்து பாதுகாத்துப் பிள்ளைச் செல்வங்களைப் பெற்றுத் தந்து உலகை நிலைநாட்டி நிற்கின்றனர். இது ஓர் அளப்பரிய சேவையாகும். பெண்களின் உடல் அமைப்பு அதற்கு ஏதுவாய் அமைந்துள்ளது. ஆண்களால் இதைச் செய்ய முடியாது. ஆனாலும் பெண்கள் கருவறையில் குழந்தை உருவாவதற்கு ஆண்கள்தான் உயிர் விந்துக்களைக் கொடுத்துதவுகின்றனர். இத்துடன் அவர்கள் உயிர் கொடுக்கும் வேலை முடிவடைந்து விடுகின்றது. தற்பொழுது உலகில் எழுநூற்றியொரு (701) கோடி மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரையும் பெற்றுத் தந்த பெருமை பெண்குலத்தாரைச் சாரும். பெண்கள் எல்லாரும் தாய்மை அடைவதையே விரும்புவர். அது அவர்கள் சுபாவம். திருமணம் ஆகியதும் பெண்கள,; குழந்தை வேண்டுமென்று திட்டம் தீட்டித் தொழிலில் இறங்கி விடுவர். அதிலும் வெற்றி காண்பது அவர்கள்தான். பிள்ளைப் பேறற்ர பெண்களை ‘மலடி’ என்று பட்டஞ் சூட்டி மகிழ்வர் மனித குலத்தார். “தாயறியாத சூல் உண்டோ? ” என்பது பழமொழியாகும். “பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த, மக்கட்பேறு அல்லபிற.” (குறள் 61) என்று பெண்நிலை முற்றும் அறிந்த திருவள்ளுவர் மக்கட்பேற்றின் பெருமை பற்றித் திருக்குறளில் பேசுகின்றார்.
நடுகற்கள் கல்வெட்டு காட்டும் மக்கள் வரலாறு மக்கள் மொழி
எளிய மக்கள் வரலாறு - மக்கள் மொழி என்பவை பற்றிய நோக்கில் நடுகல் கல்வெட்டுகள் உணர்த்தும் செய்திகளை விளங்கச் செய்வதே இக்கட்டுரை வரையப்பட்டதன் நோக்கம். நடுகற்கள் குறித்த அறிமுக உரை ' தமிழ்ப் பெயர்கள் ஏந்திய நடுகற்கள் ' என்ற தலைப்பில் ஏற்கெனவே ஒரு கட்டுரையாக வரையப்பட்டுவிட்டது. அதன் இரண்டாம் பகுதியே இக்கட்டுரை. தமிழ முன்னோரே மேலை நாகரிகங்களையும், கீழை நாகரிகங்களையும் ஏற்படுத்தினர் என்பதற்குச் சான்றாக நடுகல் கல்வெட்டுத் தமிழ்ப் பெயர்களுடன் ஒத்து உள்ள பிற நாகரிக மன்னர்ப் பெயர்களும் இதில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன. நடுகல் கல்வெட்டுகளில் சிறப்பாக ஆளப்பட்டு உள்ள மருமக்கள் > மருமகன், மக்கள் > மகன், சேவகன், அடியான் ஆகிய சொற்கள் வெவ்வேறு நிலைகளில் உள்ள படைவீரர்களைக் குறிக்கின்றன. ஒரு வேந்தனுக்கு அவன் தனியாகப் பேணுகிற நிலைப் படை (Reserve Army) தவிர படை உதவிகள் அவனுக்கு அடங்கிய மாமன்னர், மன்னர் ஆகியோரிடம் இருந்தே வந்தன. ஆதலால் ஒரு வேந்தனுக்கு மன்னன் எனபவன் படைத்தலைவன் ஆவதால் மருமகன், மகன், சேவகன் எனக் குறிக்கப்பட்டான். அவ்வாறே ஒரு மன்னனின் மேலாதிக்கத்தை ஏற்ற பல சிற்றரசர் அவனுக்கு படைத் தலைவர் ஆவதால் மருமகன், மகன், சேவகன் எனக் குறிக்கப்பட்டனர். ஒரு சிற்றரசனுக்குக் கீழ் இருந்த வேள், கிழான் எனும் ஊர்த் தலைவன் படைத்தலைவன் ஆவதால் மகன், சேவகன் எனப்பட்டான். ஈண்டு, வேந்தன் குலோத்துங்கனுக்கு பல்லவன் கருணாகரத் தொண்டைமான் படைத் தலைவனாய் இருந்ததை எண்ணுக.
பயணம்: கல்தோன்றி மண் தோன்றாத காலம்
பெண்கள் பற்றிய ஆண்களின் மனோநிலைதான் என்ன?
“பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்
பெண்மனது என்னவென்று புரியவில்லையே?”
மேலேயுள்ள பிரபலமான பழைய தமிழ் சினிமாப் பாடலின் வரிகளை நீங்கள் அறிவீர்களா? முன்பெல்லாம் அந்தப்பாடல் வரிகளைக்கேட்கும்போது ‘அட! நாம் ஆண்களெல்லாம் புரிந்துகொள்ள முடியாதளவு பெண்கள் புதிராக இருக்கின்றார்கள் போல’ என்று பெருமையாகக்கூட நினைத்திருக்கின்றேன். ஆனால், இப்போது கேட்டால் அருவருப்பாகவுள்ளது. இதை வாசித்துக்கொண்டு செல்லும்போது ஏனென்பது உங்களுக்கும் புரியும். பெண்களைப்பற்றி நமது சமூகத்திலுள்ள ஆண்கள் என்னதான் நினைக்கின்றார்கள்? தாய் எனும் பெண்ணிலிருந்து பிறந்து அவளிடம் பாலருந்தி அவளது பராமரிப்பிலேயே வளர்ந்து வருகின்றான்; ஒரு ஆண்மகன். அதே பெண்ணின் வயிற்றிலே பிறந்து தன்னைப்போலவே வளரும் பெண்குழந்தையான தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே வீட்டில் ஒரேசூழலில் ஒன்றாக வளருகின்றான். ஆனால் இளம்பருவத்தை எட்டியதும் அவனிடத்தில் பெண்கள் பற்றிய ஏளனமான கருத்துக்களும் வக்கிரமான சிந்தனைகளும் எப்படித் தலைதூக்குகின்றன..?
புத்துலகு அமெரிக்காவில் தொல்தமிழர் பழமை அடையாளம்
புத்துலகு அமெரிக்காவின் செவ்விந்திய மக்கள் காகேசியன், மங்கோலியன் மற்றும ஆத்திரிக்கு(Astraloid) மரபினங்களின் கலப்பால் உண்டானவர்கள் என அறிஞர் உரைக்கின்றனர். சற்றொப்ப 30,000 - 20,000 ஆண்டுகளுக்கு முன்னம் ரசியாவையும் அலாசுகாவையும் இணைத்தபடி இருந்த பெர்ரிங்கு நிலப்பாலம் ஊடாக ஆசிய, ஐரோப்பாவில் இருந்து பெயர்ந்த தொல் மாந்தர் வட, தென் அமெரிக்காவில் பரவி வாழ்ந்தனர். இங்கு 12,500 ஆண்டுகள் அளவில் கற்காலம் தொடங்கியதாக அறியப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 9,000 ஆண்டுகள் அளவில் சிறுசிறு வேளாண் குமுகங்கள் அமைந்ததாக தொல்லியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
காலச்சுவடு.காம் - பயனுள்ள மீள்பிரசுரம் - குழந்தைகள் மீதான வன்முறை: கல்வி நிலையங்களில் கயமை இருள்
-2003 ஜூலை 8 அன்று செய்தித்தாள்களில் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளிவந்திருந்தது. சென்னைப் புறநகர் தனியார் (சுயநிதி) மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் ஒன்பது வயதான நான்காம் வகுப்பு மாணவி மாதவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடற்கல்வி ஆசிரியரால் பள்ளி நேரத்திலேயே கழிப்பறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். நான் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் இருந்த காலம். உடனே உண்மையறியும் குழு - சிறந்த குழந்தை மருத்துவ வல்லுநர், குழந்தை உரிமை ஆர்வலர், வழக்கறிஞர், ஆணையச் செயலர் ஆகியோர் கொண்ட என் தலைமையிலான குழு - ஒன்றினை நியமித்து, கள ஆய்வுக்குச் சென்றோம். அதற்குள் சென்னை மனித உரிமை நிறுவனம் (Human Rights Foundation) செய்தி சேகரித்து, ஆணையத்தின் தலையீட்டை வேண்டிற்று; ஆய்வில் பெரிதும் துணை நின்றது. நடுத்தர வர்க்க வீடுகள் கொண்ட தெருவில் எதிரெதிரான இரு கட்டடங்கள்தான் பள்ளி. சுற்றிலுமுள்ள வீடுகளிலிருந்து வேறுபடுத்த முடியாத கட்டடங்கள். மூன்று கட்டடங்களுக்கு அப்பால் குற்றம் நடந்த விளையாட்டுத் திடல். திடலின் ஒரு பக்கம் பின்புறச் சுவரையொட்டி வரிசையாக அமைந்த கழிப் பறைகள். பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்கும் அனைத்து ஆண் மாணவர்களுக்கும் ஐந்தாம் வகுப்புவரையான பெண் குழந்தைகளுக்கும் ஒரே கழிப்பறைகள்தான்.
சமூகம் பற்றியே சிந்திக்கும் மானிடநேசன் ஐ.தி சம்பந்தன்
காலத்துக்குக் காலம் ‘வரலாற்று நாயகர்கள்’எனத்தகும் பெரியோர்கள் அவதரித்து தமது அரும்பெரும் சாதனைகளாலும், தன்னலமற்ற சேவைகளாலும் வறுமையில் தாழ்வுற்று, அடக்கி ஒடுக்கப்பட்டு, விடுதலையின்றிப் பாழ்பட்டுக்கிடந்த மனித குலத்தை ஏற்றம் பெறச் செய்துள்ளதையும், வாழ்க்கையின் நெறிகளை சுட்டிக்காட்டிச் சென்றுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இத்தகைய பெரியோர்களின் அரும் பெரும் சாதனைகளையும், தன்னலமற்ற சேவைகளை உணரவும், பிறருக்கு அவற்றை உணர்த்தவும் இப்படியான விழாக்கள் அவசியம் என்பது மிகவும் மனங்கொள்ளத்தக்கது. அந்தவகையில் பல்துறைச் சேவையாளர் ஐ.தி.சம்பந்தன் அவர்களுக்கு பவள விழா எடுக்க நினைத்த கலாநிதி பொன். பாலசுந்தரம் அவர்களையும் விழாக் குழுவினரையும் பாராட்டுகின்றது என் மனம். பழகுவதற்கு இனிமையானவர். அன்பானவர். பண்பானவர். தனக்காகவும் பிறருக்காகவும் வாழும் சிறந்த ஒரு சேவையாளர்தான் ஐ.தி.சம்பந்தன். அவரின் பல்வேறுபட்ட சேவைகளை நோக்கும்போது ‘பிறந்த நாட்டிற்குச் சேவை செய்வது கற்றறிவாளரின் கட்டாய கடமை’ என்ற கருத்துக்களின் தந்தையாக விளங்கிய கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ என் நினைவில் வந்து போகின்றார்.
ஸ்ரீ சத்யசாய் பாபா – புட்டபர்த்தியிலிருந்து கடைசிப் பயணம் வரை
96வது பிறந்தநாளை கொண்டாடிய பிற்பாடு அதாவது 2022ஆம் ஆண்டு, தன்னுடைய ஆன்மா கடைசி யாத்திரைக்கு தயாராகிக் கொண்டிருக்குமென்று சொன்ன ஸ்ரீசத்யசாய் பாபாவினுடைய ஆன்மா, ஏப்ரல் 24ஆம் தேதி காலை 7.40 மணிக்கு உடலை விட்டு பிரிந்தது. பக்தர்களை விட்டு திடீரென்று பதினோரு வருடங்களுக்கு முன்னதாகவே சத்யசாய்பாபா கடைசி யாத்திரை பயணத்தை மேற்கொண்டார். பாபா காலமாகிவிட்ட போதிலும் இன்னமும் பக்தர்கள் அவருடைய மரணத்தை ஏற்றுக் கொள்ளாமல், அவர் யோகநித்திரையில் உள்ளதாக நம்புகிறார்கள். பாபா மருத்துவமனையிலிருந்த போது, உடல்நலம் பெறவேண்டுமென்று பிரார்த்தனை செய்த பக்தர்கள் ஸ்ரீசத்யசாய்பாபா தங்களைவிட்டு பிரியவில்லையென்று, மறையவில்லையென்று நம்பிக்கையோடு சொல்லுகிறார்கள். 24.04.2011 அன்று நாடு புதியதொரு விடியலை அனுபவித்துக் கொண்டிருந்தபோது புட்டபர்த்தி சோகத்தில் மூழ்கியது.
எதியோப்பிய நாகரிகர் முன்னோர் தமிழர்
எதியோப்பிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிப்து நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோப்பிய நாகரிகரே எகிப்து நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிப்தையே பெருமைப்பட பேசுகின்றனர். உலகில் பலருக்கு எதியோப்பியாவில் பழம் நாகரிகம் இருந்ததே அறியாமல் உள்ளனர். எதியோப்பிய நாகரிகம் காலத்தால் எகிபதினும் முற்பட்டது, இதாவது, 9,500 ஆண்டுகள் பழமையுடையதாய் சொல்லப்படுகிறது. இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மண்டி எனும் ஊரில் கண்டெடுக்கப் பட்டன. இதற்கு பிற்பட்டதே எகிபதின் எழுத்துகள். நாகரிகத்தில் எதியோப்பியா எகிப்துக்கு சற்றும் குறைவில்லாதது.. எதியோப்பிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில் சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது