- எழுத்தாளர் மாலனின் 'திசைகள்' மின்னிதழ் தற்போது 'வான் வழியே ஒரு வாசகசாலை' என்னும் தாரக மந்திரத்துடன் இணையத்தில் மின் நூலகமாகப் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கின்றது. 'திசைகள்' மின்னூலகத்தினை www.thisaigal.in என்னும் இணைய முகவரியில் பாவிக்கலாம். 'திசைகள்' மின்னூலகத்தில் எழுத்தாளர் மாலன் அதனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ள அறிமுகக்குறிப்பினைப் பகிர்ந்து கொள்கின்றோம். -
திசைகள் என்பது எனக்கு ஒரு மந்திரச் சொல். எட்டுத் திக்கையும் குறிப்பது என்பது அதற்குச் சொல்லப்படும் வழக்கமான பொருள். ஆனால் என்னைப் பொருத்தவரை அது 360 பாகைகளை (டிகிரியை) குறிப்பது.
தமிழின் விளிம்புகளை இயன்றவரை விரித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை எனக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும் சொல். அது.
தமிழ் வெகுஜன இதழ்களை வணிக வெறியும், இலக்கியச் சிற்றேடுகளை கோஷ்டிப் பூசல்களும், மொய்த்துக் கொண்டிருந்ததின் விளைவாக இளந்தலைமுறையினர் இடையே சோர்வும் கசப்பும் முளை கட்டத் தொடங்கியிருந்த நேரத்தில் முதியவர்களைத் தவிர்த்து விட்டு, முற்றிலும் இளைஞர்களைக் கொண்டு நம்பிக்கை விதைக்க முற்பட்ட முயற்சி அச்சுத் திசைகள்
நம்பிக்கையையும் உற்சாகமும் சந்தோஷமும்தான் மனிதர்களையும் பூக்க வைக்கிற விஷயம்… எண்ணற்ற பத்திரிகைகள் மண்டியிருக்கிற இந்த நேரத்தில் திசைகள் இவற்றுக்குத்தான் நாற்றுப்பாவ ஆசைப்படுகிறது…
இது முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், திசைகள் என்ற இளைஞர்கள் பத்திரிகைக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட போது எழுதிய வரிகள். இத்தனை காலத்திற்குப் பின் திரும்பிப் பார்க்கும் போது, திசைகள் பாவிய நாற்றுக்கள் விளைந்து செழித்து அடுத்த தலைமுறைக்குக் கனிகளையும் கனிகளுக்குள் பொதிந்து வைத்த விதைகளையும் தந்திருப்பதைக் காணமுடிகிறது.
•Last Updated on ••Wednesday•, 23 •December• 2015 08:42••
•Read more...•
பிரதிலிபி என்றொரு இணையதளம் இந்திய மொழிகள் பலவற்றில் மின்நூலகளைத் தனது தளத்தில் வெளியிட்டு வருகிறது. இது எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களைத் தாங்களே மின்னூலாகப்... பதிப்பிக்க உதவும் தளம். என்னுடைய ஆங்கில நூலை நானே அமேசான் தளத்தில் பதிப்பித்த போது தமிழ்நூலகளையும் பதிப்பிக்க எண்ணினேன். ஆனால் அமேசான் தமிழுக்கு இடமளிப்பதில்லை
தமிழில் மின்னூல் பதிப்பிக்க வாய்ப்பளிக்கும் இணையதளங்கள் பலவற்றை ஆராய்ந்து பிரதிலிபியைத் தேர்ந்தெடுத்தேன். சுயமாகப் பதிப்பித்துக் கொள்ள உதவும் தளம் என்ற போதிலும் என்னுடைய முதல் நூலான 'தப்புக்கணக்கு' மற்றும் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை அவர்களே மின்னூலாக உருவாக்கித் தந்தார்கள்.
நீங்களும் கூட உங்கள் படைப்புக்களை மின்னூலாக அங்கு வெளியிடலாம். தொடர்புக்கு:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•Last Updated on ••Sunday•, 26 •April• 2015 01:24••
•Read more...•
அன்புடையீர் வணக்கம், அறிஞர் க.பூரணச்சந்திரன் அவர்கள் எங்களைப்போன்ற பல தமிழ் இலக்கிய ஆர்வலர்களையும், முனைவர் பட்ட ஆய்வரிஞர்களையும் உருவாக்கியவர். அவர் திருச்சிராப்பள்ளி பிஷப் ஈபர் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் மரிடஸ் பேராசிரியராகப் பணியாற்றியதோடு, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வு வரலாற்றினை வரைந்துகொடுத்தவர். நல்ல விமரிசகர், சிறந்த மொழி பெயர்ப்பாளர். 2011இல் ஆனந்தவிகடன் இவருக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கியது. பத்துக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார். அவற்றில் சில கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளன. அறிஞர் க. பூரணச்சந்திரன் அவர்களின் சமூகம் சார்ந்த கட்டுரைகள், விமர்சனங்கள், கேள்வி - பதில் பகுதிகள், நூல் ஆரிமுகம் - மதிப்புரைகள், உலக திரைப்பட அறிமுகங்கள், மொழியியல் கொள்கை என பல்வேறு தலைப்புகளை சமூகம் சார்ந்து எழுதப்பட்டுவரும் அனைத்தும் ஒரு தொகுப்பாகக் கிடைக்கும்படி எங்களைப்போன்ற மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அறிஞர் பூரணச்சந்திரன் அவர்களும் அவரது மகா திரு. செவ்வேள் அவர்களும் இசைவு தந்து, இன்று ஒரு இணைய தளமாக http://www.poornachandran.com வடிவம் பெற்றுள்ளது. இந்த இணையதளம் அறிஞர் க.பூரணச்சந்திரன் அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், மாணவர்கள், ஆய்வாளர்கள் பயன்பெறும் வகையில் உள்ளதனால், தமிழர்கள், தமிழ் மாணவர்கள், புலம் பெயர் தமிழர்கள் என அனைவரிடமும் இந்த இணையதளம் சென்றடைந்தால், மொழி வளர்ச்ச்சி குறித்த சிந்தனையாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் நன்மை பயக்கும் என்று கருதி இந்த மினஞ்சலை தங்களுக்கு அனுப்புகின்றேன். இதனைத் தங்கள் நட்பு வட்டத்தில் அனுப்பி அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.
•Last Updated on ••Wednesday•, 01 •October• 2014 22:17••
•Read more...•
[எழுத்தாளர் ஜீவி தனது வலைப்பதிவான 'பூ வனத்தில்' எழுதிய கட்டுரை ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றது. இந்த மீள்பதிவின் மூலம் ஜீவியின் 'பூ மனம்' வலைப்பதிவினைப் 'பதிவுகள்' தன் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றது. http://jeeveesblog.blogspot.ca/ - 'பதிவுகள்'] நெருங்கிய வட்டத்தில் கல்யாணியாகிறவர், கவிதைகள் எழுதும் பொழுது, கல்யாண்ஜி ஆவார். சொந்தப் பெயர் கல்யாணசுந்தரம் வேலை பார்த்த பாரத ஸ்டேட் வங்கியோடு சரி போலிருக்கு. சகோதரர் வல்லிதாசனிடமிருந்து எடுத்துக் கொண்ட வண்ணதாசன் கதைகளுக்காகவும், கல்லூரி நண்பர் அழைத்த கல்யாண்ஜி கவிதைகளுக்காகவும் ஆயிற்று. ஆனால் வண்ணதாசனைத் தெரிந்த அளவுக்கு ரொம்ப பேருக்கு கல்யாண்ஜியைத் தெரியாது; அதாவது இவர் தான் அவர் என்று தெரியாது. வண்ணதாசனும் எந்த காலத்தும் இலக்கிய உலகில் தன்னைப் படாடோபமாகக் காட்டிக் கொண்டதில்லை. எழுத்திலும் அப்படித்தான். எல்லாமே அவரைப் பொருத்த மட்டில் இயல்பாகிப் போன விஷயங்கள்.
•Last Updated on ••Saturday•, 27 •October• 2012 18:16••
•Read more...•
[எழுத்தாளர் பிரபஞ்சன் தமிழ் இலக்கிய உலகில் 'வானம் வசப்படும்', 'மானுடம் வெல்லும்' ஆகிய நாவல்கள் மூலமும், சிறுகதைகள் முலமும் தனக்கென்றோர் இருப்பிடத்தை நிலைநிறுத்திக்கொண்டவர். ஆர்ப்பாட்டமில்லாமல் செயற்படுபவர். அவரது இணையத்தளத்தை இம்முறை 'பதிவுகள்' தன் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றது. அவரது தளத்தில் அவர் தனது மனைவி பற்றி எழுதியுள்ள கட்டுரை வாசிப்பவர்களின் நெஞ்சினை உலுக்கிவிடும் தன்மை மிக்கது. நேர்மையாக, உண்மையாகத் தனது எண்ணங்களைப் பதிவு செய்திருக்கின்றார். இதனை வாசித்தபொழுது தோன்றிய முதலாவது எண்ணம்.. சினிமா நட்சத்திரங்களின் முதல் காட்சி பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கில் கூடச் செல்வழிக்கத் தயங்காத மக்கள் வாழும் தமிழகத்தில் , சுமார் 60 மில்லியன்களுக்கும் அதிகமாக மக்கள் வாழும் தமிழகத்தில், இன்றுமோர் எழுத்தாளர், தமிழ் எழுத்தாளர் தன் எழுத்தை நம்பி திருப்தியாக வாழமுடியாத நிலைதான் நிலவுகின்றது. இந்நிலை என்று மாறுதோ அன்றுதான் தமிழகம் பெருமைப்பட முடியும். தமிழக அரசு இந்த விடயத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை ஏற்படுத்தி உதவலாம். உதாரணமாக எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பதிப்பிப்பதற்கு உதவுவதன் மூலமும், அவ்விதத்திட்டத்தின்கீழ் பதிப்பிக்கப்பட்ட நூல்களை நேரடியாக எழுத்தாளர்களிடமிருந்தே நூலகங்களுக்கு வாங்கும் வகையிலான திட்டங்களை ஏற்படுத்திச் செயற்படுதுவதன் மூலமும் உதவினால் அது எழுத்தையே நம்பி வாழும் எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய உதவியாகவிருக்கும். இது போன்ற திட்டங்களை உருவாக்கிச் செயற்படுத்த எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும். எழுப்புவார்களா? - பதிவுகள்]
•Last Updated on ••Thursday•, 04 •October• 2012 06:06••
•Read more...•
••Monday•, 10 •September• 2012 21:05•
??https://www.indianfolklore.org/journals/index.php/Panu/index??
இணையத்தள அறிமுகம்
புதிய பனுவல் : An International Journal of Tamil Studies is a quarterly, bi-lingual journal in Tamil and English that publishes research articles, book reviews and new manuscripts relating to Tamil classical and modern literature, grammar, folklore and translation. Requests for manuscripts/online submissions should be addressed to Dr. R. Srinivasan, Editor-in-Chief, Dr. R. Srinivasan, Puthiya Panuval : An International Journal of Tamil Studies, 12, New Street, Vinayagapuram, Ambattur, Chennai - 600 005, India.
Website: https://www.indianfolklore.org/journals/index.php/Panu/index Email:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•Last Updated on ••Monday•, 10 •September• 2012 21:11••
முனைவர் தெ.வெற்றிச்செல்வனை ஆசிரியராக்கொன்டு வெளிவரும் இணையத்தளம் 'பன்னாட்டுத் தமிழ் ( A Study of International Tamilology) '. அத்தளத்தினை இம்முறை 'பதிவுகள்' வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றோம். 'திணைசார் சமூக வாழ்வியல் கொண்ட தமிழர், திணைபெயர் வாழ்வியல் மாற்றம் பெற்று உலகெங்கிலும் பரவி வாழ்கின்றனர். வணிகம், போர் போன்ற பண்டைக்கால தமிழர் பரவல் காரணமாகவும், வேலைவாய்ப்பு, அகதிமைசார் அலைந்துழல்வு போன்ற சமகால தமிழர் பரவல் காரணமாகவும் உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் சிறப்பாக தமிழ் அடையாளத்தைப் பேணுவதில் பல்வேறு இடர்ப்பாடுகள் சூழ்ந்த போதிலும், ஓரளவு உலகளாவிய தமிழியல் முயற்சிகள் குறித்த அடையாளங்கள் ஆங்காங்கே தென்படாமல் இல்லை. கல்வி, தமிழாய்வு இவற்றில் இவர்கள் செலுத்திவரும் கவனம் இப்போது கூர்மைப்பட்டுள்ளது. பன்னாட்டுத் தமிழியல் குறித்த ஊடகம், மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், கல்வி, வரலாறு, அரசியல்அறிவியல், பொருளாதாரம் பல்இன மக்களிடையே வாழ்வியல் பொருத்தப்பாடு, ஆய்வியல் என பல்துறைத் தேவைகளை வெளிக்கொண்டு வர உள்ளது, இவ்விதழ். படைப்புகள், நூல்அறிமுகங்கள், கூட்டநிகழ்வுகள், பதிவுகள், பின்னூட்டங்கள் அனுப்பி உதவி, தொடர்ந்து ஆதரவு தர விழைகிறோம்' என்று உலகத்தமிழ் வாசகர்களைக் கேட்டுக்கொள்ளும் 'பன்னாட்டுத் தமிழ்'க் குழுவினருக்கு உங்கள் ஆதரவினை வழங்குங்கள். 'பன்னாட்டுத் தமிழ்' இணையத்தளத்தின் முகவரி: http://internationaltamilology.com
ஆசிரியருடனான தொடர்புகளுக்கு: முனைவர் தெ. வெற்றிச்செல்வன் செல் பேசி: 94439 43988 மின்னஞ்சல்:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•Last Updated on ••Sunday•, 09 •September• 2012 18:47••
••Wednesday•, 22 •August• 2012 22:20•
??- கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன், இயக்குநர், சிந்தனைவட்டம் -??
இணையத்தள அறிமுகம்
உலகெங்கும் பிரசுரமாகும் ஈழத்தவரின்; தமிழ் நூல்களைத் தேடிப் பதிவுசெய்யும் பணியை பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருபவர் நூலகவியலாளர் என்.செல்வராஜா. ஒரு தேசிய நூலகத்தின் கடமையை தன் இனத்தின் வரலாற்றுத் தேவைக்காகத் தன் தோளில் சுமந்து, நிறுவனரீதியான பொருளாதார உதவிகள் எவையுமின்றிச் செய்துவரும் செயல்வீரர். பிரபல எழுத்தாளரும், மூத்த நூலகவியலாளரும் பன்னூலாசிரியருமாக எம்மிடையே வலம்வருபவர் செல்வராஜா. 30க்கும் அதிகமான நூல்களைத் தமிழுலகிற்கு வழங்கிய போதிலும் இவர் தன்னை எழுத்தாளர் என்று கூறிக்கொள்வதில் கூச்சப்படுபவர். நூலகவியலாளராகவே நம் மத்தியில் வாழத்துணிந்தவர். இன்று ஈழத்து நூலகவியலாளர் என்றதும் அறிவுஜீவிகளின் சிந்தையில் உதிக்கும் முதல் பெயர் செல்வராஜாவினுடையதாகவே இருக்கும். நடராஜா-சிவபாக்கியம் தம்பதியினரின் கனிஷ்ட புதல்வராக 20.10.1954இல் பிறந்த இவர், நீர்கொழும்பு விவேகானந்த வித்தியாலயம் (பின்னாளில் விஜயரத்தினம் மகாவித்தியாலயம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது), நீர்கொழும்பு புனித மரியாள் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர்.
•Last Updated on ••Wednesday•, 22 •August• 2012 22:28••
•Read more...•
[எழுத்தாளர் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் அவரது நாவல்களிலேயே பலத்த வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பிய நாவல். அந்நாவல் பற்றி அவ்வப்போது வெளிவந்த கட்டுரைகளை உள்ளடக்கிய இணையத்தளம் விஷ்ணுபுரம்.காம். அத்தளத்தினை இம்முறை பதிவுகள் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றோம். இத்தளத்திலிருந்து ஜடாயு விஷ்ணுபுரம் பற்றி எழுதிய கட்டுரை இங்கு மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள்-]
விஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை
- ஜடாயு
“மௌனம் ஒரு விதையாயிற்று. அதிலிருந்து வேர் முளைத்தது. அது மண்ணைக் கவ்வி உறிஞ்சியது. அதில் அர்த்தம் நிரம்பியது. காவியம் முளைவிட்டது. மண்ணைப் பிளந்து வெளிவந்தது”. விஷ்ணுபுரம் நாவலும் விஷ்ணுபுரம் கோயிலைப் போன்றே பிரம்மாண்டமானது. திசைக்கொரு கோபுரம். மேகங்களைத் தாண்டி விண்ணில் எழும் அவற்றின் முகடுகள். பூலோகத்தை மட்டுமல்ல, புவர்லோகத்தையும், சுவர்லோகத்தையும் அதன் மேல் உலகங்களையும் உள்ளடக்கிய அதன் வெளி. பிரக்ஞையின் பல அடுக்குகள். இதெல்லாம் சேர்ந்தது விஷ்ணுபுரம். நம் கண்ணையும் கருத்தையும் கவர்வது போல பல்வேறு விதமான புடைப்புத் தூண்கள், சுதைகள், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட சிற்ப அற்புதங்கள் எல்லாம் செறிந்தது விஷ்ணுபுரம். இடையறாது ஒலித்து அதிர்வெழுப்பும் சுவர்ணகண்டம் போல, சோனாவின் நீரொழுக்குப் போல, ஒரு இடையறாத தொடர்ச்சி, அதில் பல்வேறு சலனங்கள்.
•Last Updated on ••Wednesday•, 18 •July• 2012 22:14••
•Read more...•
'பெயரற்ற யாத்ரிக'னின் 'நடைவழிக்குறிப்புகள்' வலைப்பதிவு நவீன கலை, இலக்கியம் சம்பந்தமான சிந்தைக்கு விருந்தளிக்கும் பல்லாக்கங்களை உள்ளடக்கியுள்ளதொரு வலைப்பதிவு. ஏப்ரில் 2006 இலிருந்து நவம்பர் 2007 வரையில் மட்டுமே இவ்வலைப்பதிவில் தொகுப்புகள் காணப்படுகின்றன. இத்தொகுப்புகளில் காணப்படும் ஆக்கங்களின் பயன் கருதி பதிவுகள் வாசகர்களுக்கு இவ்வலைப்பதிவினை அறிமுகம் செய்கின்றோம். அதன்பொருட்டு இவ்வலைப்பதிவில் காணப்படும் நோபல் பரிசுபெற்ற துருக்கிய எழுத்தாளரான ஒர்ஹான் பாமுக் பற்றிய கட்டுரையினைப் பிரசுரிக்கின்றோம். - பதிவுகள்-
ஒர்ஹான் பாமுக் 2 : படைப்புகளில் மிளிரும் சாதுர்யம்
அரசியலைக் குறித்து பாமுக் வெளிப்படுத்தும் கருத்துக்களைவிட, அவரது படைப்புகளில் மிளிரும் கருத்துகள் மிகவும் புத்திசாலித்தனமானவை. —ஒரு விமர்சனத்திலிருந்து.
•Last Updated on ••Monday•, 25 •June• 2012 17:54••
•Read more...•
[அகமுகம்: எழுத்தாளரும், விமர்சகரும், இதழாசிரியரும் , கவிஞருமான சி.ரமேஷின் வலைப்பதிவு. ஆரம்பநிலையிலிருந்தாலும், இவ்வலைப்பதிவில் காணப்படும் படைப்புகள் ஆழமானவை; வரவேற்கத்தக்கவை. ரமேஷ் அவர்கள் தனது வலைப்பதிவினைத் தொடர்ந்தும் வளர்த்தெடுக்க வாழ்த்துகிறோம்; அத்துடன் 'பதிவுகள்' வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைக்கின்றோம். - பதிவுகள்-]
அறிமுகக் குறிப்புக்கள்
நவீனம் என்னும் சொல் புதியது, புதுமை, மறுமலர்ச்சி என்னும் பொருண்மையில் கட்டமைக்கப்பட்டு தமிழில் வழங்கி வரும் சொல்லாகும். இவற்றிடையே சிற்சில நுண்ணிய வேறுபாடுகள் இருப்பினும் “புதுமை” என்ற அம்சமே பொதுவானதாய் இருப்பது கவனிக்கத்தக்கது. நவீனம் என்னும் சொல்லை க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி புதிய மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற முறைகளையும் தன்மைகளையும் கொண்டமைவது” என வரையறுக்கும். எனவே நவீனம் என்றால் வழிவழி வந்த மரபிலிருந்து மாறுபட்டு புதுமையைச் சார்ந்து நிற்றல் அல்லது புதுமையை நாடிச் செல்லல் எனப்பிறிதொரு வகையில் பொருள் கொள்ளலாம். நவீன கவிதையுருவாக்கத்தில் நவீனத்துவத்தின் பண்புகள் இன்றியமையாதவையாகும். நவீனத்துவம் என்பது சமூக, அரசியல், பொருளாதாரப் பண்பாட்டு அம்சங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கும் ஒரு வளர்ச்சி நிலையைச் சுட்டுகின்றது. கிறிஸ்தவ இறையியலுக்கூடாக அடையாளம் காணப்பட்ட நவீனத்துவம் ஆரம்பத்தில் ஜெர்மனியில் டி.எம்.ஸ்ட்ராஸ், பிரின்ஸில் ஏர்னஸ்ட்ரெனான், முதலானோராலும் இங்கிலாந்தில் பெடரிக்ஹேன் ஹ்யூகல், இத்தாலியில் அன்டானியோ போலஸ்டோ ரோமலோ போன்றோராலும் வளர்த்தெடுக்கப்பட்டது. ஆக்ஸ்போர்ட் இயக்கத்தை நிறுவிய பிரிட்டிஸ் மதப் பேச்சாளரான ஜான்நியூமான் மூலம் இலக்கிய உலகில் நுழைந்தது.
•Last Updated on ••Monday•, 25 •June• 2012 17:15••
•Read more...•
'எழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்' என்று கூறும் எழுத்தாளர் சத்யானந்தனின் வலைப்பதிவான tamilwritersathyanandhan என்னும் இணையத்தளத்தினைப் பதிவுகள் வாசகர்களுக்கு இம்முறை அறிமுகப்படுத்துகின்றோம். தனது மேற்படி வலைப்பதிவில் தனது கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், தொடர் கட்டுரைகள் மற்றும் நாவல் போன்ற பல படைப்புகளை ஆவணப்படுத்தியிருக்கின்றார் சத்யானந்தன். அண்மையில் பதிவு செய்திருந்த 'அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்' என்னும் கட்டுரையினை இங்கு மீள்பிரசுரம் செய்திருக்கின்றோம். மேற்படி தளமானது எழுத்தாளர் சத்யானந்தனின் படைப்புலகை அறிந்து கொள்வதற்குரிய நல்லதொரு தளம். இது போல் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தமது படைப்புகளை ஆவணப்படுத்துவது அவசியமானதாகும். அவரது தளத்தில் அவரது ஆக்கங்களை வாசிப்பதற்கு இங்கே அழுத்தவும்.
அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்
- சத்யானந்தன் -
30 வருடங்களுக்கு முன் மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆனந்த விகடனில் “சொல்” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார். பின்னாளில் அந்தக் கவிதை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்னும் அவரது நாவல் சினிமாவாக ஆன போது அதில் பாட்டாக வந்தது. அதில் வரும் ஒரு பத்தி இது:
கும்பிடச் சொல்லுகிறேன்-உங்களை கும்பிட்டுச் சொல்கிறேன்- என்னைக் கொல்வதும் கொன்று கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்- உம்முடன் கூடி இருப்பதுண்டோ?
•Last Updated on ••Tuesday•, 29 •May• 2012 03:31••
•Read more...•
'ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்' என்னும் வலைப்பதிவினை இணைய இதழுக்கு அறிமுகம் செய்கின்றோம். மிகவும் பயனுள்ள வலைப்பதிவு. உடல் நலம், இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு விடயங்களைப் பற்றியும் பல்வேறு இணையத்தளங்களில் வெளிவந்த ஆக்கங்களையும், தனது ஆக்கங்களையும் உள்ளடக்கித் தனது வலைப்பதிவில் மீள்பிரசுரம் செய்கின்றார். மிகவும் பயனுள்ள வலைப்பதிவு. மேற்படி வலைப்பதிவினை நடாத்திவரும் ரத்னவேல் நடராஜன் தன்னைப் பற்றிப் பின்வருமாறு விபரிக்கின்றார்: 'எனது பெயர் ரத்னவேல். எங்களது பூர்விகம் சிவகாசி. எனது படிப்பு SSLC. திரு காமராஜர் காலத்தில் இலவச கல்வித் திட்டம் வந்ததால் இந்த அளவு படிக்க முடிந்தது. எனக்கு மூன்று பையன்கள். அனைவரும் எனது மனைவியின் விடா முயற்சியால் நன்கு படித்து கணிப்பொறியில் பொறியாளர்களாக பணிபுரிகிறார்கள். இரண்டு பையனகளுக்கு திருமணமாகி விட்டது. சென்னையில் இருக்கிறார்கள். கடைசி பையன் நியுஜெர்சியில் இருக்கிறான். தீப்பெட்டி, பட்டாசு, காலண்டர் சம்பந்தமாக சிவகாசியில் தேவை என்றால் என்னை அணுகலாம். நான் அனைத்து துறைகளைப் பற்றிய செய்திகளை அறிய எல்லா வழிகளிலும் படிக்கும் ஒரு தீவிர வாசகன். திரு சுஜாதா 'ரத்தம் ஒரே நிறம்' புத்தகம் எழுதுவதற்கு நான் அவருக்கு அனுப்பிய 'தமிழக நாடார் வரலாறு' புத்தகம் தான் மூல காரணம். அதில் எனக்கு பெருமை. எனக்கு பிடித்த தலைவர்கள்; காமராஜர், ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, அப்துல் கலாம். எனது கொள்கை - முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுவது, படிப்பதற்கு - ஆலோசனை, இதர வழிகளில். தொடர்புக்கு.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
94434 27128' வலைப்பதிவினை வாசிக்க ....... உள்ளே
•Last Updated on ••Sunday•, 20 •May• 2012 05:32••
அனைத்து சமூக சக்திகளையும் எழுதுமாறும் கருத்துக்களை பதிவிடுமாறும் அழைக்கிறோம்! “நமது மக்கள் எதிர்கொள்கின்ற நீண்டதும் பெரியளவிலுமான அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டு நெருக்கடிகளையும் சவால்களையும் மேலாதிக்கத்தினையும் அக/புற முரண்பாடுகளையும் எவ்விதமான அணுகுமுறைக்கு ஊடாக குறைக்க முடியும் அல்லது தீர்க்கமுடியுமென நீங்கள் நம்புகிறீர்கள்?” என்ற இந்தக் கேள்விக்கு பலரிடம் பல்வேறு பதில்கள் இருக்கலாம்… சமூக மாணவர்களாகிய எங்களைப் பொறுத்தவரை நமது பண்பாட்டுத்தளத்தில் எழுத்து ,வாசிப்பு, கற்றல்,உரையாடலின் மூலம் இந்த நிலைமைகளை மாற்ற குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்க முடியுமென நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்.அதற்கான களங்களைத் திறப்பதும் இந்த வழிமுறை மீது நம்பிக்கை வைத்து தொடர்சியாக செயற்படுவதும் இன்று அவசியமாக உள்ளது.!/
•Last Updated on ••Saturday•, 12 •May• 2012 22:52••
•Read more...•
அன்புடையீர், இந்திய நவீன இலக்கியத்தை குறிப்பாக தமிழ்படைப்புகளை பிரெஞ்சு மட்டுமே அறிந்த நண்பர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டுமென்ற வகையிலும், எதிர்காலத்தில் இயலுமாயின் சிறந்த சில படைப்புகளை பிரெஞ்சுமொழியில் கொண்டுவரவேண்டுமென்ற ஆதங்கத்துடன் ஒரு பிரெஞ்சு வலைத்தளத்தை: http://franceindechassecroise.wordpress.com நண்பர் பாவண்ணன் சிறுகதையுடன் தொடங்கியுள்ளோம். மொழிபெயர்ப்பு செய்தவர் நண்பரும் பேராசிரியருமான வேங்கட சுப்புராய நாயக்கர். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் புதுச்சேரியில் தெரிவித்த யோசனையின் படி மாதம் ஒரு சிறுகதையை எழுத்தாளர்கள் சம்மதத்துடன் வெளியிடுவதென்று திட்டம். இறுதியில் அத்தொகுப்பை பிரெஞ்சு பதிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம். பதிப்பிக்கும் முடிவு அவர்கள் விருப்பத்தைச் சார்ந்தது: எனது அமைப்பு மூலம் தொகுப்பை வெளியிட இயலாது. இந்தியப்புத்தகங்களை வெளியிட பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்கவேண்டாமென அவர்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். சொந்தமாக வெளியிட நிதி ஆதாரமில்லை. தவிர அப்படி வெளியிட்டாலும் நண்பர்களுக்கு இலவசாமக கொடுப்பதன்றி வேறு பயன்களை எதிர்பார்க்கமுடியாது. எனவே பிரெஞ்சு பதிப்புலகத்தையன்றி வேறு உருப்படியான வழிகள் தற்போதைக்கு இல்லை.
•Last Updated on ••Sunday•, 06 •May• 2012 21:38••
•Read more...•
••Monday•, 13 •February• 2012 20:45•
??வீ.சு.இராமலிங்கம் (தஞ்சாவூர்)??
இணையத்தள அறிமுகம்
அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் 'பாரதியைப் பயில...' http://www.mahakavibharathiyar.info வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்துகொள்ளவும்.
நன்றி.
அன்புடன், வீ.சு.இராமலிங்கம் தஞ்சாவூர்
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•Last Updated on ••Monday•, 13 •February• 2012 20:55••
அன்பார்ந்த அண்ணா பற்றாளர்களுக்கு, வணக்கம். 15.03.2011 அன்று அண்ணா இணையதளத்தில் சேர்க்கப்பட்ட பக்கங்கள் பார்க்க http://www.arignaranna.info
நன்றி. இரா.செம்பியன் அண்ணா பேரவை (R.Sembian, Anna Peravai) Mob:- 09380552208
•Last Updated on ••Friday•, 01 •April• 2011 16:44••
|