பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

ஆய்வு

ஆய்வு: நீலகிரி படகர்களும் வெள்ளியும் ஒரு குறியீட்டியல் நோக்கு “பெள்ளிய கம்புக ஒரெயலி”

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -மனிதகுலத்தின் பண்பாட்டு வளர்ச்சியின் இன்றியமையான படிநிலையாக உலோகங்களின் கண்டுபிடிப்பு விளங்குகின்றது. மானுடப் படிமலர்ச்சியில் இது ‘உலோகக்காலம்’ என்றே வரையறுக்கப்படுகின்றது. தங்கமும் அதற்கு அடுத்த நிலையில் வெள்ளியும் மதிப்புமிகுந்த உலோகங்களாகப் பண்டுதொட்டு வழங்கப்பட்டு வருகின்றன. உலோகங்களின் பயன்பாடும் பண்பாடும் குறியீட்டு நிலையிலிருந்தே பரிணமித்தவை எனலாம். இன்று அழகியலுக்கான நோக்கோடு ஆபரணங்களாக பயன்பாட்டிலுள்ள இந்த அணிகளின் குறியீட்டு தன்மை அதன் மாரபினை, பண்பாட்டினைத் தக்கவைத்துள்ளன. ஆனால் இன்றும் குறியீட்டு நிலையிலேயே தொடரும் நீலகிரிவாழ் படகர் இனமக்களின் வெள்ளி ஆபரணங்களைக் குறியீட்டு நிலையில் இந்தக் கட்டுரை ஆய்கிறது.

படகர்களின் இறப்புச்சடங்கில் இன்றியமையானதாகத் திகழக்கூடிய இறந்தவர்களின் பாவத்தினைப் போக்கும் “கரு ஹரசோது” சடங்கில் இடம்பெறும் “பெள்ளிய கம்புக ஒரெயலி” (இறந்தவரின் ஆன்மா வெள்ளியால் ஆன கம்பத்தில் உராயட்டும்) என்ற மரபார்ந்த சொல்வழக்கு வெள்ளிக்குப் படகர்களிடம் உள்ள மதிப்புநிலையையும் அவர்தம் வாழ்வியலில் வெள்ளி பெற்றுள்ள இடத்தினையும் உணர்த்துகின்றது. வெள்ளியைப் படகர்கள் “பெள்ளி” என்று அழைக்கின்றனர். இப்பெயரை தம் ஆண்பால் பெயராகவும் இடுகின்றனர். வெள்ளிப் போன்றவன் எனும் அடிப்படையில் “பெள்ளா” என்ற பெயரும் இவர்களிடம் உண்டு. பொதுவாகவே “மாதா – மாதி”, “மல்லா – மல்லெ”, “களா – காளு” என்று இருபாலிற்குரிய இவர்களின் தொன்மையான இணைபெயர்களுள் வெள்ளியைக்குறிக்கும் “பெள்ளி”, “பெள்ளா” எனும் பெயர்களுக்கான பெண்பால் பெயர்கள் இல்லை. வெண்மை நிறத்தினைப் படகர்கள் “பெள்ளெ” என்கின்றனர். மேற்கண்ட “பெள்ளா” என்ற பெயரை வெண்மை நிறமுடையவன் என்றும் பொருள் கொள்ளலாம். எனவே நீலம்கலந்த வெண்மைநிறமுறைய வெள்ளியின் நிறத்தன்மையினைக் கொண்டு படகர்கள் வெள்ளிக்கு “பெள்ளி” என்று பெயரிட்டிருக்கலாம்.

பங்கரா –

“பங்கரா” என்ற படகுச்செல் ஆபரணம் என்று பொருள்படுகிறது. படகர்களின் மரபார்ந்த ஆபரணங்கள் பெரும்பாலும் வெள்ளியால் ஆனவை. “செருப்பினிகெ”, “மாலெ மணி” (அல்லது) “குப்பிகெ மணி”, “உங்கரா”, “முத்தரா”, “குண்டு”, “குசுறு”, “பே” போன்றவை படகர்களின் மரபார்ந்த வெள்ளி ஆபரணங்களாகும். இவைகளனைத்தும் சடங்கியல், அழகியல் சார்ந்து படகர்களின் வாழ்வியலில் தவிர்க்கவியலாதவைகளாகும். இவர்தம் வாழ்க்கை வட்டச் சடங்குகள் அனைத்திலும் வெள்ளியே முதன்மை வகிக்கின்றது.

•Last Updated on ••Monday•, 15 •February• 2021 17:22•• •Read more...•
 

ஆய்வு: புறநானூற்றில் வானவியல் செய்திகள்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் மூ.சிந்து, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), காளப்பட்டி,கோவை -641048 -முன்னுரை

இலக்கியங்கள் பொதுவாக மனித வாழ்வினைப் பிரதிபலிக்கும் தன்மையில் அமைகின்றது. இலக்கியங்கள் வாயிலாக மொழியும் மனித வாழ்வியலும் உயர்வு பெறுகின்றன. செவ்விலக்கியங்கள் எனப்போற்றப்படும் இலக்கியங்களில் ஒன்று புறநானூறு. அப்புறநானூற்றின் வழியாகப் பண்டைத் தமிழரின் வானிவியல் அறிவை அளவிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.

ஐம்பூதங்கள்

இவ்வுலகமானது பஞ்சபூதங்களால் ஆனது. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் பஞ்சபூதங்களாக் கூறுவர். இத்தகைய ஐம்பூதங்களை ,
மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசம்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல
(புறம்.2.1-6)

என்னும் வரிகளால் இயற்கை ஐந்து கூறுகளால் அமைந்தது என்பதை முரஞ்சியூர் முடிநாகராயர் சங்க கால வாழ்வு இயற்கையுடன் இணைந்து வாழ்வு என்பதனையும் இயற்கையை ஐந்து கூறுகளாகக் கண்ட அறிவினையும் அறியமுடிகிறது.

ஞாயிற்றின் வெம்மை

சேர மன்னனைப் புகழ்ந்து பாடும் புலவர் நினது ஆட்சியில் ஞாயிற்றின் வெம்மையைத் தவிர வேறெந்த வெம்மையும் மக்கள் அடையவில்லை என்பதனை ,

செஞ்ஞாயிற்றுத் தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரோ


என்கிறார் சங்கத் தமிழர்கள் சூரியன் மிகுந்த வெம்மையுடையது என்பதனை அறிந்திருந்ததுப் புலனாகிறது.

•Last Updated on ••Sunday•, 14 •February• 2021 00:20•• •Read more...•
 

ஆய்வு: மழையும் தமிழர் சிந்தனை மாற்றப் போக்குகளும்

•E-mail• •Print• •PDF•

அ.ந.க.வின் 'நான் ஏன் எழுதுகிறேன்?'உலகில் சிந்தனையாலும் பண்பாட்டாலும் வளர்ச்சியடைந்த  தொல்குடி தமிழ்ச்சமூகம். இதற்கு இரண்டாயிரமாண்டு கால சிந்தனை மரபு உண்டு. வாழ்தல் சார்ந்த, உழைப்பு சார்ந்த செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் அம்மாக்களின் சிந்தனையிலும் மாற்றங்களை உருவாக்குகின்றன. ஒரு சமூகத்தின் சிந்தனை மாற்றத்தை அறிந்து கொள்ள ஒவ்வொரு கால கட்டத்திலும் உருவான  பனுவல்களே தக்கச் சான்றாக அமைகின்றன. அந்த வகையில் தமிழரின் மழை சார்ந்த பகுத்தறிவு சிந்தனை எப்படி கருத்துமுதல்வாதச் சிந்தனைக்குச் சென்றது அதற்கான சமூகக் காரணங்களை இலக்கியத்தில் இருந்ததும் சமூக அரசியல் பொருளாதாரச் சூழலில் இருந்தும் முன்வைத்து ஒரு உரையாடலை கட்டமைப்பதே  இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

வரலாறு அறியும் காலம் சங்க காலம். சங்க கால மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்ள தொல்லியல் சான்றுகள் தொடங்கி பல சான்றுகள் கிடைக்கின்றன. என்றாலும் சங்க இலக்கியம் புனையும் வாழ்க்கைச் சித்திரம் முழு நம்பகத்தன்மை கொண்டதாக விளங்குவதை இந்திய சமூக ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சங்கப் பனுவல்களுக்கு மூலமாக விளங்கியது தொல்காப்பியம். ஒரு சமூகத்தின் முதற் பொருள் என்பது நிலமும் பொழுதும் என்ற வரையறை தமிழ்ச் சிந்தனை மரபின் உச்சாணி கொம்பு. அனைத்து நிலத்திற்கும் பொதுவானது மழை. மழை பெய்யும் காலத்தைக் கார் காலம் என்று கூறும் முறையில் தமிழர்ச் சிந்தனை வியந்து நிற்கிறது. இதனை,

•Last Updated on ••Sunday•, 31 •January• 2021 09:08•• •Read more...•
 

ஆய்வு – ஒப்பாரியும் பெண்களும்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை :
- சௌ. சிவசௌந்தர்யா,  ஆய்வியல் நிறைஞர்,  தமிழ்த்துறை,  காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம்,      காந்திகிராமம்,    திண்டுக்கல் -ஏட்டு இலக்கியம் தோன்றுவதற்கு முன்பே வாய்மொழி இலக்கியம் தோன்றியது. வாய்மொழி இலக்கிய வடிவங்களில் ஒன்று பாட்டு இலக்கியமாகும். பாட்டு என்பது தமிழக மக்களைப் பொறுத்தவரை பிறப்பு முதல் இறப்பு வரை நிற்கின்றது. தொன்மைக் காலத்தில் ஒப்பாரியை கையறு நிலைப்பாடல், புலம்பல், இரங்கற்பாää சாவுப்பாட்டு, இழிவுப்பாட்டு, அழுகைப்பாட்டு என முன்னோர்கள் ஒப்பாரியை அழைத்தனர். ஒப்பாரி என்பது பெண்களுக்கே உரிய வழக்காற்று வடிவமாக உள்ளது. ஒப்பாரி பாடல்கள் இறந்தவர்களின் சிறப்புகளைப் பற்றிப் பாடப்படுகிறது.

ஒப்பாரி – சொற்பொருள் விளக்கம் :
ஒப்பாரி என்பதற்கு “ஒத்த பாவனை” “அழுகையிலொப்பனையிடுகை”, “அழுகைப் பாட்டு”, “ஒப்புச் சொல்லியழுதல்” என்று பொருள் விளக்கம் கூறப்படுகிறது.

ஒப்பாரி பொருள் விளக்கம் :
ஒப்பாரி என்பதனை ஒப்பு 10 ஆரி ஸ்ரீ ஒப்பாரி எனப் பிரித்துக் கொள்ளலாம். ஒப்பு என்றால் இழந்தப்  பொருளுக்கு இணை என்றும், இதற்கு ஒப்புச் சொல்லி ஆரிப்பதும் என்று பொருள் கொள்ளப்படுகிறது. மேலும் அழுகைப்பாட்டு என்றும், போலி என்றும், ஒப்பு என்றும் அகராதி பொருள் விளக்கம் தருகிறது. ஆரிப்பது என்பதை அவழச் சுவையுடன் ஆரவாரம் செய்வதும் என்றும் கூறலாம். எனவே இறந்தவர்களை எண்ணிப் பெண்கள் பாடும் ஒரு வகை இசைப்பாடலே “ஒப்பாரி” என்கிறார் மு. அண்ணாமலை

“மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரியுங் கண்டது இல்”      குறள் -1071

என்ற குறளில் ஒப்பாரி என்ற சொல் ஒத்தவர் என்ற பொருளில் திருவள்ளுவர் கூறியுள்ளார்.

•Last Updated on ••Wednesday•, 27 •January• 2021 12:03•• •Read more...•
 

ஆய்வு: நாட்டுப்புறக்கலைகளில் நிகழ்த்துக்கலைகள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

- முனைவர் மூ.சிந்து, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), காளப்பட்டி,கோவை -641048 -நாட்டுப்புறக்கலைகளுள் சிறந்த இடத்தைப் பெறுவன நிகழ்த்துக்கலைகளாகும். திருவிழாக்காலங்களின் போதோ அல்லது சுபநிகழ்ச்சிகளின் போதோ நிகழ்த்துப்படுகின்ற கலையாதலால் இது ‘நிகழ்த்துக்கலை’ எனப்பெயர்பெறுகின்றது.

நிகழ்த்துக்கலை

மக்களின் முன் நிகழ்த்திக்காட்டப்படுவதால் இது நிகழ்த்துக்கலை எனப் பெயர் பெற்றன. நாட்டுப்புற நிகழ்த்துகலைகள் என்னும் சொற்றொடர் ‘Folk Performing Art’ என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ் சொல்லாகக் காட்சிதருகிறது.

இச்சொற்றொடரில் முக்கியமான நிகழ்த்துதல் என்பது ஏனையவற்றை உள்ளடக்கி நிற்பதை நம்மால் உய்த்து உணரமுடிகிறது.

நாம் நடத்துகின்ற நிகழ்த்துதல் அழகு உடையதாகவும், நம்முடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதாகும். நம்கருத்து முழுமையாக பார்வையாளர்களை அடைவதாகவும் இருத்தல் வேண்டும்.

நிகழ்த்துகலைகளாவன

கரகாட்டம்
காவடியாட்டம்
தேவராட்டம்
மயிலாட்டம்
ஒயிலாட்டம்
பொய்க்கால்குதிரையாட்டம்

•Last Updated on ••Tuesday•, 26 •January• 2021 23:19•• •Read more...•
 

வசந்தம் தமிழ் உளவளத் துணை நிலையம் வழங்கும் தமிழர் பாரம்பரியக் கலை விழா!

•E-mail• •Print• •PDF•

•Last Updated on ••Monday•, 18 •January• 2021 11:10••
 

தாமரையின் கவிதைகளில் மெய்ப்பாடுகள்

•E-mail• •Print• •PDF•

கட்டுரை வாசிப்போம்.கவிதை என்பது ‘வாழ்வின் விமர்சனம்‘ என்பர் மாத்யூ அர்னால்டு. மனிதத்தைப் பாடுவதும் அவனின் மறுமலர்ச்சிக்குத் துணை செய்வதும்தான் கவிதை. தான் வாழும் காலத்தில் தன்னைக் கடந்து சென்ற நிகழ்வுகளையும் பட்டறிவினால் உணர்ந்ததைப் பிறருக்கு உணர்த்தும் வகையிலும் கவிஞர்கள் தங்கள் படைப்புகளை உருவாக்குகின்றனர். சமுதாய சீர்கேடுகளானது ஒழிக்கப்பட்டு அக்கேடு மீண்டும் உருவாகாமல் இருப்பதில் கவிஞர்களின் பங்கு முக்கியமானதாக அமைகிறது.

கவிஞனின் இதயக் கருவறையில் தோன்றுவது கவிதை. தன் வாழ்வியல் அனுபவங்களுக்கு உயிர்கொடுத்து கவிஞன் கவிதையைப் படைக்கிறான். “கவிதைகள் அனைத்தும் ஏதோ ஒரு கருத்தைத் தெரிவிப்பனவாக அமைந்துள்ளன. அந்த ஏதோ ஒரு கருத்தே கவிதையின் உள்ளடக்கமாகின்றது.“1 இலக்கிய வகைகளைத் தீர்மானிப்பதில் உருவத்தைப் போன்றே உள்ளடக்கமும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. அவ்வகையில் கவிஞர் தாமரையின் முதல் கவிதைத் தொகுப்பான ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்‘ என்ற தொகுப்பிலுள்ள கவிதைகள் வார்த்தைகளில் வித்தை காட்டாமல் எளிமையாக உள்ளடக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

தொல்காப்பியர் உரைக்கும் மெய்ப்பாடு

தமிழில் நமக்குத் கிடைத்த முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் உணர்ச்சிகளை வகைப்படுத்தி,

“உய்த்துணர் வின்றித் தலைபடு பொருளின்
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்“2

•Last Updated on ••Monday•, 18 •January• 2021 11:03•• •Read more...•
 

அம்மா வந்தாள் புதினத்தில் மீறல்கள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
முனைவர் ராம்கணேஷ்1966- ஆம் ஆண்டு வெளியான தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் புதினம் அன்றைய காலத்தின் ஆசாரங்களைப் பின்பற்றும் அந்தணக் குடும்பமொன்றில் நடைபெறும் வித்தியாசமான  வாழ்வியலை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சமூக கட்டுகளை உடைத்தெறிந்து விட்டு நுட்பமான பார்வையில் எதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கும் நிலையில்  புதினம் அமைந்துள்ளது. ஒளிவு மறைவின்றி கதாபாத்திரங்களின் மனநிலைகளை ஆர்ப்பாட்டமில்லாமல் விறுவிறுப்பாக பதிவு செய்துள்ளது. ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக இப்படியொரு புதினம் வெளிவந்திருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது. தி. ஜானகிராமனின் 'மோகமுள்', 'மரப்பசு' உள்ளிட்ட பிற படைப்புகளும் வேறுபட்டதொரு கதைக்களத்தைக் கொண்டு விமர்சனங்களுக்கு உள்ளாகும் நிலைகளில் அமைக்கப்பட்டிருக்கிறது.

கதைச்சுருக்கம்
அப்பு என்ற வேதம் படிக்கும் ஒருவனின் குடும்பத்தை மையமிட்டதாக புதினம் அமைந்துள்ளது. சிறுவயதில் கணவனை இழந்த பவானியம்மாள் என்பவரின் வேதபாடசாலையில் சுந்தர சாஸ்திரிகளிடம் படிக்கும் அப்பு, பதினாறு ஆண்டுகள் படிப்பு முடிந்து தன் சொந்த ஊருக்குச் செல்லத் தயாராகிறான். பவானியம்மாளின் தம்பி மகள் இந்து, தாய் தந்தையை இழந்தவள். கணவனையும் இழந்து தன் அத்தையுடன் வசித்து வருகிறாள். கல்யாணமென்றால் என்னவென்று அறியாத வயதில் அவள் வாழ்க்கை தொடங்குகிறது. சிறிது காலத்தில் கணவன் இறந்துவிட திரும்பி விடுகிறாள். நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே அப்புவின் மீது கொண்ட காதலை வெளிப்படுத்துகிறாள். வேதங்களைக் கற்று பெரியாளாக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அப்புவுக்கு அவள் மேல் ஆசையிருக்கிறது. இருப்பினும் வெளிக்காட்டாமல் மறுக்கிறான். இந்து ஒதுங்கிச் செல்லும் அப்புவிடம் அவன் தாயின் நடத்தையைப் பற்றிப் பேசி விடுகிறாள். கோபம் கொண்டான் அப்பு. மறுநாள் பவானியம்மாளிடம் சொல்லிக் கொண்டு ஊருக்குச் செல்கிறான். இரயில் பயணத்தில் இந்து தன் தாயைப் பற்றிச் சொன்னதைச் சிந்திக்கிறான்.

•Last Updated on ••Monday•, 18 •January• 2021 09:55•• •Read more...•
 

ஆய்வு: நற்றிணையில் கடற்பெயர்கள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

- ம.பிரசன்னா, தமிழ் உதவிப்பேராசிரியர், கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில் -கடல் என்னும் நீர்நிலையானது, நீர் நிலைகளில் தனித்துவமான ஒன்றாகும். வருடம் முழுவதும் நீரினைக் கொண்டதாகக் கடல் திகழ்கின்றது. அதன் பிரம்மாண்ட அளவும், அது கொண்ட நிறமும், அதன் செயல்பாடும் கொண்டு கடலை பல்வேறு பெயர்களில் நற்றிணைப் புலவர்கள் பதிவு செய்துள்ளனா். ஆசிரியப்பா என்னும் இலக்கண வடிவத்தில் கவிபுனைந்த புலவர்கள், கடற் பெயர்களை அவரவர் புலமை அனுபவத்தில் செம்மையான சொற்செட்டுமானத்துடன் படைத்திருப்பதை நற்றிணைப் பாடல்களின் வழி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கடலும் அதன் குடிவழிகளும்

தமிழன் பயன்படுத்திய நீர்நிலைகளில் பல அழிந்துபட்டும் வனப்பு கெட்டும் காணப்படுவதை அறிவோம். இதில் கடல் என்பது மனிதப் பயன்பாட்டில் பெரிய நீர்நிலையாகும். மனிதனால் பெரிதளவு ஆக்கிரமிப்பு செய்யப்படாத நீர்நிலை என்றும் சொல்லலாம். பொதுவாக ஆற்றங்கரைகளின் அருகிலே மனிதகுல நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டதாய்க் கூறுவர். அதுபோல கடல் அருகிலும் நாகரிகம், இனக்குழுக்கள் தோன்றியுள்ளன. அந்நாகரிகத்தைக் கடற்கரை நாகரிகம், அங்கு தோன்றிய இனக்குழுக்களை பரதவர் இனம் எனும் பெயரில் குறிக்கலாம். ஏனைய திணைகளில் நீர் நிலை அருகாமைக் குடியிருப்புகள் எல்லாம் வேளாண்மை தவிர்த்த பிற தொழில்களால் ஈர்க்கப்பட்டு நீர்நிலைகளுக்கு அடுத்த இடங்களுக்கு மக்கள் நகரத் தொடங்கினா். நெய்தல் நிலக் குடிகள் பெரிதாக நகர்வுக்கு ஆட்படாமல் அந்நிலத் திற்கு உரித்தான தொழில்களையே செய்து நிலவயப்பட்டோராக வாழ்ந்து வருகின்றனா். கடலால் நெய்தலோர் ஈர்க்கப்படக் காரணம் அதன் நீர்வளமும் அது கொண்ட பிற வளங்களும் ஆகும். கடலுக்குச் சென்று கடல் பொருட்களைக் கொண்டுவரும் மீனவர்கள் ஒரு புறம் இருந்துள்ளனா். கடல் நீரால் உப்பு தயாரிக்கும் உமணர்களும் அந்நிலத்தில் வசித்து வந்துள்ளனா். இவைபோக முத்து, கிழிஞ்சல்கள், சங்கு போன்றவற்றால் மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்கும் மக்களும் அவற்றை விற்பனை செய்யும் மக்களும் அந்நிலத்தில் வாழ்ந்து வந்துள்ளனா். இவ்வாறு கடல் பலதரப்பட்ட மக்கள் வந்து பழகிய இடமாக இருந்துள்ளது. இன்று பொழுதுபோக்கு இடமாக இருக்கும் பல கடற்கரைகளை நாம் பார்க்கின்றோம். அன்றும் கடற்கரைகளில் காதல் வளர்த்த மக்கள் கடற்கரைகளில் இருந்துள்ளனா். இதனாலேயே அகம் சார்ந்த பல பாடல்களில் எரிதிரைக் கொண்கன், மல்குநீர் சேர்ப்பன், பனிநீர்ச் சேர்ப்பன் என்ற அடைகளால் பலவாராகக் காதல் தலைவர்கள் சுட்டப்பெறுகின்றனா்.

•Last Updated on ••Friday•, 15 •January• 2021 21:20•• •Read more...•
 

ஆய்வு: ஒப்பாரியும் உணர்வு வெளிப்பாடும்!

•E-mail• •Print• •PDF•

கட்டுரை வாசிப்போம்.முன்னுரை:
ஏட்டு இலக்கியம் தோன்றுவதற்கு முன்பே வாய்மொழி இலக்கியம் தோன்றியது.  வாய்மொழி  இலக்கியங்களில் பாட்டு ஒரு இலக்கியம்தான்.  ஒப்பாரி என்பது இறந்தவர்களை நினைத்து அழும் பெண்கள் பாடுவதாகும்.  நாட்டுப்புற மக்களின் பிறப்பிடமான மரபு பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் இவற்றோடு இரண்டறக் கலந்து விட்ட நாட்டுபுறப்பாடல்களில் ஒப்பாரிப் பாடலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறப்படுகிறது.  ஒப்பாரியைப் பற்றி பாடும் பொழுது இறந்தவர்களின் சிறப்புகளைப் பற்றி பாடுவார்கள் தொன்மைக் காலத்தில் ஒப்பாரியை கையறுநிலைப்பாடல், புலம்பல், இரங்கற்பா, சாவுப்பாட்டு, இழவுப்பாட்டு. அழுகைப்பாட்டு என நம் முன்னோர்கள் ஒப்பாரியை அழைத்தனர். 

‘குழந்தைப் பெற்றவளுக்குத் தாலாட்டும் கணவனை இழந்தவளுக்கு ஒப்பாரியும் தானே வரும்” என்பது பழமொழி ஒப்பாரி பாட்டு பற்றிக் கட்டுரையில் கூறப்படுகின்றது.

ஒப்பாரி பொருள் விளக்கம்:
ஒப்பாரி என்பதனை ஒப்பூஆரி ஸ்ரீ ஒப்பாரி எனப் பிரித்துக் கொள்ளலாம், ஒப்பு என்றால் இழந்தப்பொருளுக்கு இணை என்றும், இதற்கு ஒப்புச் சொல்லி ஆரிப்பதம் என்று பொருள் கொள்ளப்படுகிறது.  மேலும் அழுகைப்பாட்டு என்றும், போலி என்றும், ஒப்பு என்றும் அகராதி பொருள் விளக்கம் தருகிறது.  ஆரிப்பது என்பதை அவழச்சுவையுடன் ஆரவாரம் செய்வதும் என்றும் கூறலாம்.  எனவே இறந்தவர்களை எண்ணிப் பெண்கள் பாடும் ஒரு வகை இசைப்பாடலே ‘ஒப்பாரி’ என்கிறார் மு.அண்ணாமலை.

‘மக்களே போல்வர் கயவர் அலரன்ன
ஒப்பாரியுங் கண்டது இல்”
(குறள்-1071)

ஒப்பாரி:
ஒருவருடைய நெங்கிய உறவினர்கள் இறக்கும் போது இழப்பின் துயரம் தாங்கிக் கொள்ள முடியாமல் பெண்கள் இறந்தவர்களின் சிறப்புகளையும், அவர்கள் இறந்ததால் அடையப்போகும் துயரத்தையும் பாடலாகப் பாடுவார்கள்.  ஒப்புச் சொல்லி அழுவதால் ஒப்பாரி என்று அழைக்கப்படுகிறது.

•Last Updated on ••Monday•, 04 •January• 2021 22:19•• •Read more...•
 

ஆய்வு: கிறித்துவ சமய மக்களின் விழாக்களில் நாட்டார் பண்பாட்டின் தாக்கம் (விழுப்புரம் மாவட்டம்)

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

கட்டுரை வாசிப்போம்.தமிழ்நாட்டில் இந்து, இஸ்லாமியம், கிறித்தவம், ஆகிய பல தரப்பட்ட சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றன. பல சமயத்தைச் சார்ந்த மக்கள் தங்களின் நிறுவனங்கள் கட்டமைத்துள்ள முறைகளையும், வழிபாடுகளையும், பின்பற்றுகின்றனர். மக்கள் தங்கள் சமய சட்டங்களை கடைபிடித்தாலும், வெகுசன மக்களாகிய அவா்களின் உள்ளங்களில் உயிராய் கலந்துகிடக்கின்ற நாட்டார் பண்பாட்டின் தாக்கம் அவா்களின் வாழ்வில் விழாக்களில் அதிகம் காணப்படுகின்றன என்று பல நாட்டார் வழக்காற்றியல் அறிஞா்கள் கூறுகின்றனர். நாட்டார் பண்பாடு தென்தமிழக, கிறித்துவ மக்களின் விழாக்களில் பரந்து விரிந்த தன்மை குறித்து ஆ.சிவசுப்பிரமணியன், பிலவேந்தரின், இருதயராஜ் போன்றோர் குறிப்பிட்டுள்ளனர் இந்நிலையை நாட்டார் பண்பாடு வடத்தமிழகத்தில் கத்தோலிக்க கிறித்துவ விழாக்களில் எவ்வாறு அடித்தளமிட்டுள்ளது. என்பதை பற்றி ஒரு சில விழாக்களில் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

புனித வியாழன்

“பெரியவியாழன் அல்லது புனித வியாழன் என்பது கிறித்தவா்கள் இயேசு கிறித்துவின் இறுதி நாள்களை நினைவுகவா்ந்து உயிர்ப்பு ஞாயிறுக்கு முன்வரும் வியாழன் அன்று கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இது Holy Thusday Maundy Thusday என்றும் அழைக்கப்படுகிறது.”1

இயேசு தான் சிலுவையில் பாடுகள் படும் முன் தினம் இரவு கெஸ்தமணி தோட்டத்தில் செபித்தார் அதை நினைவுக் கூறும் வகையில் அனைத்து கிறித்துவ கோவில்களிலும் “மாற்றுப் பீடம் அமைத்து மக்கள் அன்பின் வாரியாக வந்து விளக்குகளை ஏற்றி அன்று இரவு முழுவதும் கண்விழித்து இயேசு அணுபவித்த துன்பத்தை தானும் உணரவேண்டும்”2 என்று திரு.அ.மாரியநாதன் அவா்கள் கூறுகின்றார். இந்த நிகழ்வு ஒருவா் இறந்துவிட்டார் இரவு முழுவதும் இருந்து வேண்டுவதை குறிக்கும் ஒரு நாட்டார் நம்பிக்கையாக கருதப்படுகிறது.

•Last Updated on ••Tuesday•, 29 •December• 2020 21:11•• •Read more...•
 

ஆய்வு: ஈரோடு தமிழன்பனின் சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

ஆய்வு: ஈரோடு தமிழன்பனின் சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகள்தமிழில் சென்ரியு கவிதையின் உள்ளடக்கம் குறித்து சரியான புரிதல் அற்ற நிலை காணப்படுகிறது. பல சென்ரியு கவிதைகள் ஹைக்கூ என்று அழைக்கப்படும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹைக்கூவும் சென்ரியுவும் வடிவ அளவில் ஒன்றாக தோன்றினாலும் கருத்தளவில் இரண்டும் வெவ்வேறானவை. மனித நடத்தைகளையும் சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் சிக்கல்களையும் அடிப்படையாக கொண்டு படைக்கப்படுவது சென்ரியு. ஹைக்கூவின் சென் தத்துவம், புரிதல் அற்ற தன்மை, வார்த்தைகள் தேர்ந்தெடுப்பு ஆகிய இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்டது. சென்ரியு எவ்விதமான கட்டுபாடுகளும் இன்றி சுதந்திரமாக செயல்பாட்டினை உடையது. சென்ரியுவின் இத்தகைய தன்மையே சென்ரியு பிற இலக்கியங்களிலிருந்து வேறுபடக் காரணமாகின்றது. சென்ரியுவின் தனித்தன்மைகளான அங்கதம், நகைச்சுவை, வேடிக்கை, உண்மையை உரைத்தல், விடுகதை, பொன்மொழி ஆகியத் தனித்தன்மைகள் ஈரோடு தமிழன்பனின் 'ஒரு வண்டி சென்ரியு' நூலில் வெளிப்படும் தன்மையினை இவ்வாய்வுக்கட்டுரை ஆராய்கிறது.

அங்கதம்

அங்கதம் என்பது நகைச்சுவையும் கருத்து வளமும் உடைய இலக்கிய வடிவம். சமுதாயத்தில் நிகழும் நிகழ்வுகளை நேரடியாக அல்லது மறைமுகமாக எடுத்துரைப்பது ஆகும்.

“அங்கதத்தின் பணி ஒருவரை இழித்துரைப்பதோடு முடிந்து விடுவதில்லை மாறாக அன்னாரைக் கண்டித்து திருத்தி சீர்திருத்தும் பொழுதே அதன் பணி முழுமையடைகின்றது. ஆக பழிப்புக்குரிய ஒன்றை ஏளனம் செய்து தாழ்த்தியுரைத்து உணர வைத்து திருத்துகின்ற ஓர் உன்னத இலக்கியக் கலையாக அங்கதம் உருவெடுத்துள்ளது.”1

என்று கூறப்படுகின்றது. அங்கதம் குறித்து தொல்காப்பியத்தில்

“அங்கதம் தானே அரில்தபத் தெரியிற்
செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே”2

அங்கதமானது செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் என இருவகைப்படும். நேரடியாக உண்மையை உரைப்பது செம்பொருள் அங்கதம் மறைமுகமாக உலகியல் நிகழ்வை உரைப்பது பழிகரப்பு அங்கதம் என்றும் கூறப்படுகின்றது.

•Last Updated on ••Tuesday•, 29 •December• 2020 20:58•• •Read more...•
 

ஆய்வு: நாணற்காடன் சிறார் கதைகளில் இயற்கையும் அறிவியலும்

•E-mail• •Print• •PDF•

முனைவர்.சி.சங்கீதாமுன்னுரை

தமிழில் சிறார் இலக்கியங்கள் என்பது மிகவும் அரிதாக இருக்கின்ற நிலையில், நாணற்காடன் குழந்தைகளுக்கான கதைகளை எழுதி வருகின்றார். அந்த வகையில், தன் முகநூல் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 11/04/2020 முதல் 30/04/2020 வரை வெளியிட்டுள்ள சிறார் கதைகளில் இயற்கை மற்றும் அறிவியல் பற்றி இக்கட்டுரையில் எடுத்துரைக்கப்படுகிறது.

ஆசிரியர் அறிமுகம்

நாணற்காடன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் என்ற ஊரைச் சார்ந்தவர். தனியார் பள்ளியில் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக இந்தி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கூப்பிடு தொலைவில், பிரியும் நேரத்தில் என்ற இரு ஹைக்கூ நூல்களையும் சாக்பீஸ் சாம்பலில், நூறு நாரைகளாய் நின் நிலமெங்கும் என்ற இரு கவிதை நூல்களையும் கோமலி, கர்வாச்சௌத் என்ற இரு இந்தி மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பினையும் அப்பாவின் விசில் சத்தம் என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பினையும் படைத்திருக்கிறார். இதில் சமீபத்தில் வெளியான நூல் கர்வாச்சௌத் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவர் நாமக்கல் மாவட்டத் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் செயலாளராகப் பணியாற்றியதோடு, தற்போது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளராக இருக்கின்றார். தமிழிலிருந்து இந்தி, இந்தியிலிருந்து தமிழுக்குப் படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். பன்மொழிப் புலமை கொண்ட இவர், தற்போது தன்னுடைய முகநூல் பக்கத்தில் சிறுவர்களுக்கான கதைகளை எழுதி வருகிறார்.

இந்தச் சிறார் கதைகளை எல்லா தரப்பட்ட வயதினரும் வாசிக்கின்றார்கள். பின்னூட்டத்தில், தங்களுடைய குழந்தைகளுக்கு இந்தக் கதைகளைச் சொல்லி வருவதாகவும் மேலும் தாங்கள் குழந்தைகளாகவே மாறி விடுவதாகவும் பதிவு செய்தனர். இதுபோன்ற வாசகர்களினுடைய பின்னூட்டங்கள், ஆசிரியருக்கு மேலும் மேலும் கதை எழுதுகிற ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.

•Last Updated on ••Wednesday•, 23 •December• 2020 10:20•• •Read more...•
 

ஆய்வு: திருக்குறளில் நீதிக் கருத்துக்கள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: திருக்குறளில் நீதிக் கருத்துக்கள்முப்பால், உத்தரவேதம், தமிழ்மறை, உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, என்னும் சிறப்பினைப்பெற்ற அரியநூல் திருக்குறள். இந்தக் குறள் வெண்பாவைவிடச் சிறந்த நூல்கள் இருந்தாலும் அந்த நூல்கள் இனம், மதம், மொழி, குலம், நாடு என்கின்ற கட்டுப்பாட்டிற்குள் சிக்கித் தவிக்கின்றது. இந்த முப்பால் மட்டும்  எந்தப் பிரிவினைக்குள்ளும் சிக்காமல், எந்தக் காலத்திற்கும் பொருந்துவதான பொதுமைக் கருத்தினைச் சுமந்து நிற்கின்றது. குறளில் கூறப்பாடாத செய்திகளே இல்லை எனும் அளவிற்கு அனைத்துக் கருத்துக்களும் பொதிந்து கிடக்கின்றன. இவ்வாறான பல சிறப்புக்களை உள்ளடக்கிய திருக்குறளிலுள்ள அறத்துப்பாலில் (பாயிரவில், இல்லறவியல், துறவறவியல்) நீதிக்கருத்துக்களைக் குறித்து ஆய்வதாக இந்தக் கட்டுரை அமைகின்றது.

திருக்குறள் நூல் அறிமுகம்

திருக்குறள் என்னும் நூலின் ஆசிரியர் திருவள்ளுவர். திருவள்ளுவரின் இயற்பெயர் தெரியவில்லை. திரு-என்னும் மரியாதைக்குரிய சொல்லையும், வள்ளுவர் – என்னும் குலப்பெயரையும் சேர்த்து திரு+வள்ளுவர் = திருவள்ளுவர் என்று பெயர் வந்துள்ளது. இவரது காலம் கி.மு.31ஆம் நூற்றாண்டாகும். திருக்குறளில் அறத்துப்பாலில் முப்பத்தெட்டு அதிகாரங்களும், பொருட்பாலில் ஏழுபது  அதிகாரங்களும், இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பாலில் இருபத்தைந்து அதிகாரங்களுமாக மொத்தம் நூற்றி முப்பத்தி மூன்று அதிகாரங்கள் காணப்படுகின்றன. அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்கள் வீதம் 133x10=1330 குறட்பாக்கள் உள்ளன. ச. சுபாஷ் சந்திரபோஸ் தமிழ் இலக்கிய வரலாற்றில் மொத்தம் பதிமூன்று இயல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், திருக்குறள் பரிமேலழகர் உரையில் ஒன்பது இயல்கள் காணப்படுகின்றன. க.ப.அறவாணன் எழுதிய திருக்குறள் சிறப்புரை விளக்கம் கருத்து அடைவு என்னும் நூலில் பத்து இயல்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு இயல்பகுப்பில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. குறள் வெண்பாவாலான இந்தத் திருக்குறள் ஏழு சீர்களைக் கொண்டமைந்துள்ளது.

•Last Updated on ••Tuesday•, 29 •December• 2020 21:03•• •Read more...•
 

ஆய்வு: பாரியும் பனையும்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
- தூ.கார்த்திக் ராஜா, இளம் முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை , காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம். -624 302 -உலகின் மூத்த மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்க கூடியது தமிழ்மொழி ஆகும்.  தமிழ்மொழியின் பெருமைகளைத் தலைமுறைத் தலைமுறையாக இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.  அத்தகைய இலக்கியங்கள் பல இலக்கிய வகைமைகளைத் தோற்றுவிக்கின்றன.  தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு எண்ணற்ற இலக்கிய வடிவங்கள் தோன்றின.  இது காலத்தின் தேவையாக இருக்கின்றது.  அந்த வகையில் சங்க இலக்கியத்தை மூலமாகக் கொண்டு அண்மையில் ஆனந்த விகடனில் 111 வாரமாக ‘வீரயுகநாயகன் வேள்பாரி’ என்ற வரலாற்றுத் தொடர் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களின் எழுத்தாலும், மணியம் செல்வன் என்ற புகழ்பெற்ற ஓவியரின் கை வண்ணத்தாலும், தமிழரின் ஈராயிரம் ஆண்டுகாலம் பழமை வாய்ந்த வரலாறுகளையும், பண்டைத் தமிழரின் அக, புற வாழ்வையும் விரிவாக எடுத்துரைக்கின்றனது. இந்நாவலில் தமிழரின் ஆதி அடையானமான ‘பனைமரம்| ஒரு மையக் குறியீடாக இருந்து கதையின் தொடக்கத்தையும் இறுதியையும் இணைக்கிறது என்பதையும் தமிழினத்தின் பேரடையானமாகப் ‘பனைமரம்’ நாவலில் எவ்வாறு இடம் பெறுகின்றது என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

முதல் நூலில் பனைமரம்
தொல்காப்பயித்தில் மூவேந்தர்கள் பகையின் காரணமாகவும், தங்களைத் தனித்து அடையாளப்படுத்தவும் தனித்தனி அடையாள மாலையை பயன்படுத்தினர் என்று குறிப்பு இடம்பெறுகிறது.  இதில் சேரனுக்குரிய அடையாளமாகப் போந்தையும், சோழனுக்குரிய அடையாளமாக ஆத்தியும், பாண்டியனுக்குரிய அடையாளமாக வேம்பும் குறிப்பிடப்படுகின்றது.இதனை,

“…………………………உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்
போந்தை வேம்பே ஆரென வரூஉம்
மாபெருந்தானை மலைந்த பூவும்”    (தொல்.பொ.நூ-1006)

என்ற நூற்பாவின் வழி அறியமுடிகிறது.     போந்தை என்பது பனம் பூவைக் குறிப்பதாகும்.  தொல்காப்பியர் பனம் பூவை “ஏந்து புகழ் போந்தை” என்று குறிப்பிடுகின்றார்.  இதன் பொருள்,“உயர்ந்த புகழை உடைய பனம் பூ” என்பதாகும்.  உயர்வு கருதி குறிப்பிட்டதன் காரணம் தமிழரின் பேரடையாளமாக பனைமரம் இடம் பெற்று இருப்பதே ஆகும்.

•Last Updated on ••Tuesday•, 29 •December• 2020 21:04•• •Read more...•
 

ஆய்வு: தலைமைக்கும் தனிமனிதனுக்கும் நெறியுரைக்கும் சூளாமணி

•E-mail• •Print• •PDF•

கட்டுரை வாசிப்போம்.தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பியகாலம் என்று தனித்துச் சுட்டும் அளவிற்கு ஐம்பெருங்காப்பியங்களும் , ஐஞ்சிறுகாப்பியங்களும் தோன்றி மக்களுக்கு சுவையுடன் கூடிய நன்னெறிகளை வழங்கியது என்பது மறுப்பதற்கில்லை. சமணக்காப்பியங்களும், பௌத்தக்காப்பியங்களும் தோன்றி தமிழ் இலக்கியத்திற்குச் செய்துள்ள தொண்டுகள் மிகப்பலவாகும். மக்களை நன்கு புரிந்துகொண்டு அவர்கள் ஏற்று நடக்கும் வகையில் நல்லசிந்தனைகளை, நன்னெறிகளை ‘தேனுடன் கலந்த நோய் தீர்க்கும் மருந்தினைப்போலத்’ தந்த நல்லதொரு காப்பியம் சூளாமணியாகும்.

சமணர்கள் சீவக சிந்தாமணிக்குப் பிறகு போற்றும் காப்பியம் இச்சூளாமணியாகும். இது வடமொழியிலுள்ள மகா புராணத்தைத் தழுவி தமிழில் அமைந்த காப்பியமாகும். இருப்பினும் வடமொழிப்பெயர்கள் தமிழில் மாற்றப்பெற்று தமிழ்க்காப்பிய மரபிற்குத் தகுந்தவாறு தரப்பட்டுள்ளன.

தோலாமொழித்தேவரால் இயற்றப்பட்ட இக்காப்பியம் பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னர் கி.பி ஏழாம் நூற்றாண்டில் அல்லது அதற்குப்பின்னர் தோன்றிய காப்பியம் என்ற கருத்துண்டு.திவிட்டன்,விசயன் என்னும் இருவரின் கதையை எடுத்துச்சொல்லும் இக்காப்பியம் விருத்தப்பாவால் ஆன காப்பியச்சுவை நிரம்பப்பெற்ற காப்பியமாகும்.

தமிழ் மரபுக்கேற்ற வகையில் இயற்றப்பெற்ற இக்காப்பியம் பற்றிய,‘இவ்வளவு இனிமையாகச் சொல்லும் செய்யுள்கள் தமிழில் சிலவே எனலாம். சிந்தாமணியிலும் இந்த ஓட்டமும் இனிமையும் இல்லை’1 என்ற தெ.பொ.மீயின் கருத்தும்,

‘விருத்தப்பாவைக் கையாள்வதில் இவர் சீவகசிந்தாமணி ஆசிரியரைப் பின்பற்றிய போதிலும் சில இடங்களில் அவரையும் மிஞ்சிவிட்டார் என்று கூறலாம்’2 என்ற டாக்டர் மு.வரதராசனின் கருத்தும் சூளாமணியின் சிறப்பை எடுத்துணர்த்தும்.

•Last Updated on ••Friday•, 11 •December• 2020 01:12•• •Read more...•
 

ஆய்வு: தமிழ் இலக்கியங்களில் நீதி

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ. வசந்திமாலா, தமிழ்த்துறைல, இணைப்பேராசிரியர், பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி, கோவை – 641014 -மக்களின் வாழ்க்கையை முழுமை படுத்தவும் செம்மைப் படுத்தவும் எழுந்தவை தான் நீதி இலக்கியங்கள் எனப் பொருள் கொள்ளலாம். மனிதன் வாழ்க்கையில் எதனைப் பின்பற்ற வேண்டும் எதனைப் பின்பற்றக் கூடாது என்று சொல்லுவதுதான் நீதிநூல்கள். மக்களின் செயல்பாடுகளை நெறிப்படுத்துவதற்கு ஓர் அளவுகோலாக இலக்கியங்கள் விளங்குகின்றன. சங்க இலக்கியமான புறநானூறு; அற இலக்கியமான திருக்குறள், நாலடியார் போன்றவை நீதியை எடுத்தியம்பும் உயர்ந்த நோக்கில் இவ்வாய்வு அமைகின்றது.


மனித சமுதாயத்தில் நீதி கோட்பாடுகள்

பழந்தமிழர்கள் கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழும் மக்களாக விளங்கினர். பின்னர் பல்வேறு நாகரீக மாற்றத்தால் கூடி வாழும் வாழ்க்கையை வாழ்வதற்கு துவங்கினர். அதன் பின்னர் ஒருவர் செய்யக்கூடிய தவறுகள் அல்லது குற்றங்களை தட்டிக்கேட்டு அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இதன் விளைவாக சமூகம் என்ற அமைப்பு உருவானது சமூகத்தில் வாழும் போது நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும். இம்மை மறுமை என்ற இருவகை வாழ்க்கை உள்ளதை மக்கள் அறிந்திருந்தனர்.

தற்பொழுது தாம் வாழும் வாழ்க்கையில் அவர்கள் செய்கின்ற செயலை மறுமைக்கும் தொடர்ந்து வரும் என நம்பினார்கள், எனவே அத்தகைய வாழ்வே அனைவரும் விரும்பத்தக்கது என்று நல்வழி படுத்துகின்ற வழிகளையும் உணர்ந்தனர். எனவே தன் வாழ்நாளில் பிறருக்கு நல்லது செய்யாவிட்டாலும் கூட தீயதை செய்யாமல் வாழ வேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்கம் உடையவர்களாக மக்கள் வாழத் துவங்கினர். அதுவே மனிதனை நல்ல கதிக்கு கொண்டு சேர்க்கும் என்றும் உணர்ந்தனர். இத்தகைய சமூக வாழ்வை புறநானூறு,

•Last Updated on ••Monday•, 30 •November• 2020 11:33•• •Read more...•
 

ஆய்வு: “செடல்” நாவலில் மதமாற்றத்திற்கான பின்புல அரசியல்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போம்.தமிழக நிலபரப்பு ஐவ்வகையான நில அமைப்பைக் கொண்டுள்ளது. இங்குள்ள நிலஅமைப்புக்கேறிய ஐவ்வகையான தெய்வ வழிபாடுகளை மக்கள் வழிபட்டு வந்தனர். அதில் குறிப்பாக சிறுதெய்வ வழிபாட்டு முறையே மக்கள் கையாண்டு வந்தனர். இதனை ஆரியர் வருகைக்குப் பின் இந்நிலமைப்பில் சிறுதெய்வ வழிபாட்டு முறை மாறி, அனைத்தும் பெருதெய்வ வழிபாட்டு முறையாக மடைமாற்றம் செய்தனர். இதனால் மக்கள் குழப்பத்திற்குள்ளாகிய ஆரியர் வருகையினால் சிறுதெய்வ வழிபாடு பெரிதும் முடங்கின. இந்நிலையில் தமிழகத்தில் இந்துத்துவம் மிகவும் காலுன்றியது எனலாம். இந்துவத்தினால் இங்குள்ள மக்கள் மேலாதிக்க சாதியினர் மட்டுமே கோயிலில் நுழைய முடியும் என்ற நிலை வந்தது. மற்ற சமூக மக்கள் கோயிலில் நுழைத்தால் தீட்டுப்பட்டு விடும் என்றனர். இங்கு வாழ்ந்த மக்களுக்கு சுதந்திரமாக கோயிலில் கூட செல்ல முடியாத நிலை நிலவியது. இதனை அறிந்துக் கொண்ட கிறிஸ்துவ மத பாதிரியர்கள் தங்களின் மதபோதத்தைத் தமிழக தாழ்த்தப்பட்ட மக்களிடம் பரப்பி, கிறிஸ்துவ மதத்தைக் காலுன்ற செய்தனர். கிறிஸ்துவத்தைப் பரப்ப வந்த, பாதிரியர்கள் தமிழ்மொழியின் இலக்கண, இலக்கியங்களையும் நன்றாக கற்றுத் தேர்ந்தனர். அதன் பின்பு மதத்தைப் பரப்ப அவர்களுக்கு ஏதுவாக அமைத்தது எனலாம். 18,19-ஆம் நூற்றாண்டுகளில் பெரிதும் வளர்ச்சியடைந்த நவீன இலக்கியப் பிரதிகளில் தமிழ்நிலப்பரப்பில் நிலவும் சாதிய போக்கினையும், மக்களின் அன்றாட வாழ்வில் நிகழ்வினையும், நிலவுடைமையாளர்களால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் போன்ற பல்வேறு கருதுபொருள், நவீன இலக்கியப் பிரதிகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்துத்துவ கொள்கையினால் மக்களின் ஏற்றத்தாழ்வுகளைக் கண்ட கிறிஸ்துவர்கள் தங்களுக்குச் சாதகமாக மதப்பரவலைக் கையாண்டனர். இதன் விளைவாக தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பாலனோர் கிறிஸ்துவ மதத்திற்கு மதம்மாற்றம் செய்யப்பட்டனர். இதனால் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுக் காணப்படும் என்று அம்மக்கள் நினைத்தனர்.

தலித்திய இலக்கிய எழுத்தாளரான இமையம் தான் கண்ட நிகழ்வுகளைப் படைப்பாக்கமாக்கினார். அதில் “செடல்” நாவல் மிகவும் கவனத்திற்குரியது. இந்நாவலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு பெண்ணை (செடல்) ஊர்காவல் தெய்வமான செல்லியம்மனுக்குப் பொட்டுகட்டி விடுதல் என்ற வழக்கத்தைப் பற்றியும், அப்பகுதியில் கூத்தாடும் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்துள்ளார். இந்நாவலில் நிலவுடைமை சமூகத்தால் பல்வேறு இன்னல்களுக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினர். அப்படி மதம்மாறினால் தங்களின் நிலைமாறும் அதாவது கல்வி, பொருளாதாரத்தில் உயர்ந்து விளங்கலாம் என்று எண்ணினர். இந்நாவலில் வெளிப்படும் மதமாற்ற அரசியலை வெளிக் கொண்டுவருவதை ஆய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.

•Last Updated on ••Sunday•, 29 •November• 2020 22:02•• •Read more...•
 

ஆய்வு: பாரதியார் கவிதையில் பெண்ணியச் சிந்தனைகள்

•E-mail• •Print• •PDF•

- முனைவர். ப. விக்னேஸ்வரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை நேரு கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் – 105 -மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இந்தியாவின் விடிவெள்ளியாகத் தோன்றியவர். விடுதலை உணர்வையும், விழிப்புணர்வையும் மக்களிடையே பரவச் செய்த மகான். நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தேசிய உணர்வு ,மனிதநேயம் ஆகியவற்றை தம் கருப்பொருளாகக் கொண்டு பாடல்கள் பாடியவர். பெண் என்பவள் ‘பேசும் தெய்வம்’ என்பதை வலியுறுத்துமுகமாக அன்னை காளியை ஆயிரம் இடங்களில் சுட்டுகிறார். அதுமட்டுமல்லாமல் புதுமைப்பெண், பெண்மை விடுதலைக்கும்மி போன்ற பல்வேறு தலைப்புகளில் பெண்மையைப் போற்றியுள்ளார்.

சமுதாயத்தில் பெண் என்பவள் ஒரு அங்கமாகக் கருதப்படுகிறாள். பெண் என்பவள் பிறந்தது முதல் யாரையேனும் சார்ந்து வாழ வேண்டி உள்ளது. இளமைப்பருவத்தில் பெற்றோரையும், திருமணம் முடித்து பின் கணவனையும், அதற்குப்பின் தன்னுடைய மகனையும் சார்ந்து வாழ வேண்டி உள்ளது. ஆண் ஆதிக்கச் சமூகம் பெண்ணுக்கு பல அடிமை விலங்குகளை பூட்டி அவர்களை அடக்கி வைத்திருக்கிறது. பாரதியாரின் பெண்விடுதலை பற்றி கூறும் கருத்துக்கள் ஆண் ஆதிக்கச் சமூகத்திற்கு பாடமாக அமைந்துள்ளது எனில் மிகையாகது.

பெண் என்பவள் அழகானவள், மென்மைளானவள், இன்பம் தரக்கூடியவள், பொறுமையில் பூமாதேவி, கேலி செய்யப்பிறந்தவள், ஐயத்திற்குரியவள் என்ற கருத்து நிலவி வருகிறது. ஒரு பெண்னை திருமணம் செய்து கொள்ளும் முன் பல வகையான பலன்களை எதிர்பார்க்கின்றனர். அவள் அழகுடையவளாகவும் அதிகமான சீர்வரிசை கொண்டு வருபவளாகவும், வீட்டிற்கு அடங்கி நடப்பவளாகவும் இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் வீடுதிரும்பும் வரை பல்வேறு விதமான இன்னல்களுக்கு ஆளாகவேண்டி உள்ளது. பலபேரின் கேலிச் சொற்களைக் கேட்டு அதை சகித்து கொண்டு வாழ வேண்டி இருக்கிறது.

•Last Updated on ••Sunday•, 29 •November• 2020 21:16•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கியத்தில் கற்பு என்னும் சொல்லின் பொருள்

•E-mail• •Print• •PDF•

அறிமுகம்
- முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் மாவட்டம் -கற்பு என்ற சொல் தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு விவாதப் பொருளாகவே இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறது.  என்றாலும் கற்பு என்ற சொல் பற்றிய கருத்தாக்கம் பாரதி,  தந்தை பெரியார் போன்றவர்களிடம் வந்து சேருகிறபோது கடுமையான  விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று.  குறிப்பாக பெரியார், ‘கற்பு என்பதற்குப் "பதிவிரதம்" என்று எழுதிவிட்டதன் பலனாலும், பெண்களைவிட ஆண்கள் செல்வம், வருவாய், உடல் வலி கொண்டவர்களாக ஆக்கப்பட்டு விட்டதனாலும் பெண்கள் அடிமையாவதற்கும், புருஷர்கள் மூர்க்கர்களாகிக் கற்பு என்பது தங்களுக்கு இல்லை என்று நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை. தவிர புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை (குடிஅரசு, 8 -11-1928)’ என்ற சிந்தனையை முன்வைத்துள்ளார்.

பாரதியாரோ,

‘கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ (பெண்கள் விடுதலைக்கும்மி.5)

என்கிறார். அதாவது கற்பு என்பது, பெண்ணுக்கு மட்டும் உரியதன்று; ஆண், பெண் இருவருக்கும் அது பொதுவானதாக இருக்க வேண்டும் என்பது அவரது கருத்தாகும்.

கற்பு என்ற சொல் பெண்களைக் குறித்ததாக சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட சூழலில் புதுமைப்பித்தன் ‘என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இதுதான் ஐயா பொன்னகரம்’ (புதுமைப்பித்தன் சிறுகதைகள், ப.3) என்று பெண்ணுக்கு எதிரான
சமூகத்தினுடைய கட்டமைப்பைக் கிண்டல் செய்துள்ளார்.

•Last Updated on ••Sunday•, 29 •November• 2020 10:39•• •Read more...•
 

ஆய்வு: சேக்கெ முட்டோது (படகர்களின் சடங்கியலும் தொன்மையும்)

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -வழக்காறுகளைப் பற்றிய வழக்காறுகள் என்ற சொல்லாட்சி கூர்ந்து நோக்கத்தக்கது. வழக்காற்றினைக் குறிக்கும் சொற்கள், சொல்லிலிருந்து உருவான வழக்காறுகள் என்ற இருநிலைகளில் நோக்கும்போது பெரும்பான்மையான சொற்கள் வழக்காற்றிலிருந்து கிளைத்தவையாகும். வழக்காறுகளின் ஆன்மா என்பது நிகழ்த்துதல் மற்றும் இயங்குதலில் உறைகின்றது. சொல்வழக்குகளும் அதன் நிலைபேறில்தான் உயிர்த்திருக்கின்றன. சொல்லோடு தொடர்புடைய பண்பாடும், வழக்காறுகளும் அச்சொல்லின் நிலைபேற்றிற்கு அடிப்படையானவை. செயல்தன்மைக்கொண்ட வழக்காறுகளைக் குறிக்கும் சொற்கள் தகவமைப்பு, சமூகம், மரபு, மொழி, பண்பாடு போன்றவற்றின் தொன்மையினைக் கணிக்கும், ஊகிக்கும் ஆவணமாகத் திகழ்கின்றன. ஒரு வழக்காற்றிலிருந்து கிளைத்த பல வழக்காறுகள் ஒரு சமூகத்தின் வழக்காற்றுச் செழுமைக்கும், மொழியாக்கத்திற்கும் அடிப்படையானவையாகவும் திகழ்கின்றன.

நீலகிரியின் குடிகளான படகர்கள் யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்டதற்கு இயற்கையை மூலமாகக்கொண்டு உருவான, இயற்கையைப் பேணக்கூடிய அவர்களின் வழக்காறுகள் அடிப்படையான காரணங்களாகும். பூர்விகக் குடிகள் என்ற அங்கீகார நிலையில் இயற்கைப் புரிதலும், இயற்கை வாழ்வும் இன்றியமையான கூறுகளாகும். படகர்களிடையே வழக்கிலிருக்கும் “சேக்கெ முட்டோது” எனும் வழக்காறு இயற்கை, தகவமைப்பு, பண்பாடு, இயங்கியல், சடங்கியல், நம்பிக்கை, உணர்வுகள் என்ற பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. இந்த வழக்காற்றின் தோற்றம் மற்றும் தொன்மையினை நாடிச்செல்வது இந்த வழக்காற்றோடு இணைந்த பல்வேறு வழக்காறுகளைக் காண்டறிவதற்கும், அதன்வழி இம்மக்களின் மரபு மற்றும் பண்பாடுச் சார்ந்த கூறுகளை அறிந்துகொள்வதற்கு ஏதுவாக அமையும்.

•Last Updated on ••Thursday•, 26 •November• 2020 00:22•• •Read more...•
 

ஆய்வு: கல்வியும், ஒழுக்கமும்!

•E-mail• •Print• •PDF•

- முனைவர். ப. விக்னேஸ்வரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை நேரு கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் – 105 -மனிதன் சிகரம் தொட அடிப்படைக் காரணமாக அமைவது கல்வியும் ஒழுக்கமும் ஆகும். குடும்பத்திலும் சரி வெளியிடங்களிலும் சரி நம்மை உயர்த்தும் ஆயுதம் கல்வி மட்டுமே. இதனை உணர்ந்த ஜாம்பவான்கள் கல்வியின் சிறப்பினை,

“ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்”
“இளமையில் கல்”
“எண்ணும் எழுத்தும்_கண்ணெனத் தரும்”
“கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி”
“கற்றது கைமண் அளவு
கல்லாதது உலக அளவு”

“கல்வி கரையில கற்பவர் நாள்;
சில மெல்ல நினைக்கின் பிணிபல”

என்று கூறினர். மேற்கூறிய கூற்றுகள் கல்வியின் அவசியத்தை உணர்த்துகின்றன.

ஏராளமான செல்வத்தை பிள்ளைக்குத் தருவதிலும் சீரானது கல்வி மட்டுமே தான் எவ்வளவு கோடிஸ்வரர் ஆனாலும் தான் கற்ற கல்வியை சொத்தாகக் கொடுக்கவும் முடியாது பெறவும் முடியாது .ஆதலால் தான் கல்வி சிறப்பு வாய்ந்த
அணிகலனாகக் கருதப் படுகின்றது. என்பதனை,

“அரும்பரிசு ஆயிரம் கொடுத்தாலும்
பிள்ளைக்கு பெரும்பரிசு கல்வி”

என்ற வரிகள் உணர்த்துகின்றன.

•Last Updated on ••Monday•, 16 •November• 2020 10:04•• •Read more...•
 

நாலடியார் உணர்த்தும் தமிழர் பண்பாடும் பழக்கவழக்கங்களும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போம்.முன்னுரை

சங்க இலக்கியங்கள் என்று அறியப்படும் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் பண்பாட்டையும் பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளையும் அறிந்துகொள்ள பெரிதும் உதவுகின்றன. அதுமட்டுமன்றி
இச்சங்க நூல்கள் இலக்கிய ஆவணங்களாகவும் விளங்குகின்றன. இவ்வியலக்கியத் தகவல்கள் மற்றும் கல்வெட்டு, அகழ்வாராய்ச்சித் தரவுகளைக் கொண்டு தமிழரின் தொன்மை மரபையும் அவர்களின் தனித்தன்மைகளையும் அறிந்துகொள்ள முடிகின்றது.

இத்தொகை நூல்கள் மட்டுமே தமிழர் சார்ந்த பண்பாட்டு ஆவணங்கள் என்று சொல்லிவிட முடியாத அளவிற்குப் பிற்காலத்திலும் பல்வேறு நூல்கள் தோன்றி நம் தமிழர் மரபைப் பரைசாற்றி நிற்கின்றன. அதில் திருக்குறள் நாலடியார் போன்ற
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிப்பிடலாம். மேலும், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்களும் இதற்குள் அடங்கும். இவ்வாறு தொன்றுதொட்டு எழுதப்பட்டுவரும் இலக்கியங்களில் ஒரு இனத்தின்
பண்பாட்டுச் செய்திகள் பொதிந்திருப்பது இயல்பே. அந்தவகையில் நாலடியாரில் இடம்பெற்றிருக்கும் தமிழர் பண்பாடும் பழக்கவழக்கங்களும் சார்ந்த தகவல்களை இக்கட்டுரை எடுத்தியம்புகின்றது.

பெரியோரை மதித்தல்

பெரியோரக் கண்டால் இருக்கையில் இருந்து எழுவது எதிர் நின்று வரவேற்பது, அவர் பிரியும்போது அவருக்குப் பின்சென்று வழியனுப்புவது போன்ற உயர்ந்த ஒழுக்கநெறிகள் இருந்துள்ளதை,

•Last Updated on ••Monday•, 16 •November• 2020 09:33•• •Read more...•
 

ஆய்வு: தமிழர்களின் இறை நம்பிக்கை

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போம்.தமிழர்கள் பல சமயங்களைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர்.இன்றும் சைவம், வைணவம், புத்தம், சமணம், இஸ்லாமியம், கிறிஸ்துவம் போன்ற பல சமயங்கள் தமிழர்களிடம் பரவி இருக்கின்றன. இஸ்லாம், கிறிஸ்தவமும் நமது நாட்டில் புகுவதற்கு
முன் சைவம், வைணவம் ,புத்தம், சமணம் ஆகிய நான்கு சமயங்கள் தமிழகத்தில் பெரும்பாலும் நிலவின.ஆனால் சமயங்களை வேண்டாம் என்பவரும் சமய நெறிகளைப் பின்பற்றாதவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை உலக ஆயுத என்பர்.
இருப்பினும் சமயம் என்பது மிகப் பழமையானது.

சமயம் என்ற ஒன்றைத் தமிழர்களிடம் எப்பொழுது தோன்றியது என்பதை அறுதியிட்டு கூற இயலாது. ஆனால் இறை நம்பிக்கை என்பது பண்டுதொட்டு தமிழர்களிடம் இருந்து வந்துள்ளது என்பதை எடுத்துரைப்பது இவ்வாய்வுக் கட்டுரையின்
நோக்கமாகும்.

தெய்வங்கள்

தமிழர்கள் எப்பொழுது தனித்தனிக் குடும்பங்களாக வாழத் தொடங்கினார்களோ அப்பொழுது அவர்களிடம் இறைவன் நம்பிக்கை ஏற்பட்டது என்று கூறலாம். மனிதர்களின் மனதில் தோன்றிய அச்ச உணர்வே தெய்வ நம்பிக்கையை உண்டாக்கியது
எனலாம். எனினும் தெய்வ நம்பிக்கை தோன்றிய காலத்தைக் கணக்கிட முடியாது தொல்காப்பியர் காலத்திலேயே பல தெய்வ வழிபாடு இருந்துள்ளதைச் சான்றுகளின் வழிக் காணலாம் .

•Last Updated on ••Sunday•, 15 •November• 2020 01:05•• •Read more...•
 

ஆய்வு: மாமூலனார் பாடல்களில் இடம்பெற்றுள்ள புறச்செய்திகளின் பின்புலம்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போம்.முன்னுரை

மாமூலனார் குறுந்தொகையில் (பாலைத்திணை - 11) ஒன்று, நற்றிணையில் (பாலைத்திணை -14, குறிஞ்சித்திணை - 75) இரண்டு, அகநானுாற்றில் (பாலைத்திணை - 1, 15, 31, 55, 61, 65, 91, 97, 101, 115, 127, 187, 197, 201, 211, 233, 251, 265, 281, 295, 311, 325, 331, 347, 349, 359, 393) இருபத்தேழு என மொத்தம் 30 பாடல்களைப் பாடியுள்ளார். இவற்றில் நற்றிணை 75 ஆம் பாடலைத் தவிர்த்த எஞ்சிய 29 பாடல்களிலும் புறச்செய்திகள் இடம்பெற்றுள்ளதுடன் அவை அனைத்தும் பாலைத்திணையில் இடம்பெற்றுள்ளன. பரணருக்கு அடுத்தபடியாக அகப்பாடலில் அதிக அளவிலான புறச்செய்திகளைக் கூறியிருக்கும் இவர் ஒரு புறப்பாடல்கூட பாடவில்லை.

இக்குறிப்புகள், 29 அகப்பாடலில் புறச்செய்திகளைப் பாடியுள்ள இவர் ஏன் ஒரு புறப்பாடல்கூட பாடவில்லை? இவரது அகப்பாடல்களில் இடம்பெற்றுள்ள புறச்செய்திகளின் தனித்துவம் என்ன? இவரது வரலாற்றுப் பதிவுகளினால் அறியப்படும் பண்டைத் தமிழரின் மறைக்கப்பட்ட அடையாளங்கள் என்று ஏதேனும் உண்டா? என்பன போன்ற கேள்விகளை எழுப்புகின்றன. அவற்றை அறிய முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

புறச்செய்திகளும் அவற்றின் உள்ளடக்கங்களும்

மூவேந்தர்கள், நன்னன், ஆவி, அதிகன், புல்லி, மழவர்கள், கோசர்கள் முதலான மன்னர்களைப் பற்றிக் கூறும் இவர் வட இந்தியாவில் மகத நாட்டை ஆண்ட நந்தர்கள் பற்றியும், அவர்களுடைய தலை நகரமான பாடலிபுத்திரத்தின் செல்வ செழிப்பு பற்றியும் கூறியுள்ளார். அதை,

‘பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ’ (அகம்.265)

என்ற பாடல் வரிகள் மூலம் அறியமுடிகின்றன.

மேலும், நந்தர்களை வெற்றி கொண்ட மௌரியர்கள் பெரியதோர் பேரரசை நிறுவினர். பெரிய படையெடுப்பாளர்களாக விளங்கிய அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலை வழியே படைநடத்தினர். ஆனால் கோசருக்குப் பணியாத பாண்டி நாட்டு மோகூர் இவர்களுக்கும் பணியவில்லை (அகம்.251) என்ற வட இந்திய மன்னர்களின் படையெடுப்பு பற்றியும் கூறியுள்ளார்.

•Last Updated on ••Wednesday•, 11 •November• 2020 10:06•• •Read more...•
 

ஆய்வு: சுவடிகளின் வகைகள்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் அ.ஸ்ரீதேவி,,   உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்-641105. -முன்னுரை:
சுவடி என்றாலே நமக்கு ஞாபகம் வருவது ஓலைச்சுவடிதான். தமிழகத்தில் முன்பெல்லாம் முதியோர் கையில் ஓலையும், அரையில் எழுத்தாணியும் வைத்திருந்தனர். வீடுகள் தோறும் ஓலைச்சுவடிகள் இருக்கும்.
அக்காலத்தில் ஓலையில் தான் கணக்கு எழுதுவர். சுவடி என்பது எழுத்துக்கள் பதிமாறு (சுவடு) எழுதப் பெற்ற ஏடுகளில் தொகுப்பு சுவடி எனப் பெயர் பெறுகின்றது.


சான்றாக,


“பூ வாரடிச்சுவடு என் தலைமேல் பொறித்தலுமே”
- மாணிக்கவாசகர்

“யாதும் சுவடு பாடாமல் ஐயாநடைகின்ற போது”
-திருநாவுக்கரசர்

இதில் சுவடு என்னும் சொல் பதித்தலை உணர முடிகிறது.

சுவடி கணக்கெடுப்பு :-
இந்திய தேசியக் கலை மற்றும் பாரம்பரியப் பொருட்கள் பாதுகாப்பு மையத்தின் மூலம் சுவடிகள் 1995 ஆம் ஆண்டு கணக்கெடுக்கும் பணி செய்யப்பட்டது. இதுவரை இந்தியாவில் 31.5 லட்சம் சுவடிகளுக்கு மேல் இருப்பது அறிய முடிகிறது. மேலும் சுமார் 1,50,000 சுவடிகள் ஆசியக் கண்டத்திலும் 60,000 சுவடிகள் ஐரோப்பிய நாடுகளும் பாதுகாக்கப்படுகின்றன.

•Last Updated on ••Saturday•, 07 •November• 2020 09:34•• •Read more...•
 

ஆய்வு: ஹைக்கூ கவிதைகளில் நாட்டுப்புறவியல் கூறுகள்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சா.சதீஸ்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோவை. முன்னுரை:
நாட்டுப்புறவியல் என்பது கிராமப்புறம் சார்ந்த இயற்கை எழில்கள், கிராம மக்களின் வீடுகள், தெருக்கள்,மரம்,செடி, கொடிகள், குளம்,குட்டைகள், பறவைகள், அம்மக்களின் இயல்பான வாழ்க்கைப் பதிவுகளையும் கிராமப்புற மக்களின் தெய்வ வழிபாட்டு முறைகள், உணவு முறைகள், விளையாட்டுகள், தாலாட்டுப் பாடல் முதல் ஒப்பாரிப் பாடல் வரையிலான இன்ப – துன்ப நிகழ்ச்சிகளையும் அவர்களின் வாழ்வியலுக்குத் தேவையான வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஏற்படும் விரயங்கள்,அவர்களின் பேச்சு வழக்கு, திருவிழாக்கள் போன்ற அனைத்து நிலைகளிலும் அனுபவம் சார்ந்த கவிஞர்கள் தங்கள் ஐக்கூக் கவிதைகளில் பாடுபொருளாக எவ்வாறு உருவகித்துப் பதிவு செய்துள்ளனர் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

உத்தி
மனித வாழ்க்கையின் அனுபவக் கூறுகளை ஒழுங்குபடுத்தி, ஒன்றுபடுத்தி ஒரு முழுமை வடிவம் தந்து நாம் முற்றும் உணருமாறு செய்பவர்களே கவிஞர்களாவர். கவிஞர்கள் கவிதைகளைப் புனையும் கற்பனைகள் பலப் பல. அவர்களின் உள்ளத்தின் வெளிப்பாடுகளையே அவர்களின் எழுதுகோல் மையும் சிந்துகின்றது. அவற்றைப் படிப்போரைச் சிந்திக்க வைக்கவும் செய்கின்றன. கவிஞர்களின் நடை வேறுபடுவதுடன் மொழிநடையும் வேறுபடுகின்றது. ஆனால் மையக் கருத்து என்பது ஒன்றே.

நாட்டுப்புற இயல்
நாட்டுப்புற மக்களின் கலைகளையும், இலக்கியங்களையும் நம்பிக்கைகளையும் பற்றி அறிந்து கொள்ளும் இயலே நாட்டுப்புற இயலாகும்.நாட்டுப்புறம் என்பது கல்வி பெறாத சிற்றூர்ப் பகுதிகளையே குறிக்கும். இவர்களைக் கிராமத்தான், பட்டிக்காட்டான்,பாமரன்,நாட்டுப்புறத்தான், ஊர்மகன் எனப் பலவாறு பெயரிட்டு அழைக்கின்றனர். இவை அனைத்தும் சிற்றூர்ப் புறங்களில் வாழும் மக்களையே குறிக்கின்றன.

•Last Updated on ••Saturday•, 07 •November• 2020 09:27•• •Read more...•
 

ஆய்வு: குறிஞ்சி, முல்லை நிலப் பொது மக்களின் புற வாழ்க்கை

•E-mail• •Print• •PDF•

- முனைவர் அ.ஸ்ரீதேவி,,   உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்-641105. -முதன்முதலில் மக்கள் தோன்றிய இடம் மலையுச்சி. ஆகவே இங்கு மக்கள் விலங்குகளாக வாழ்ந்து நாளடைவில் விலங்கு வாழ்வினின்றும் வேறுபட்ட நாகரிக வாழ்வை தொடங்கிய இடமும் குறிஞ்சி நிலப்பகுதி எனலாம்.
வேட்டையாடல்:-

குறிஞ்சி நில மக்களின் முக்கியத் தொழில் வேட்டையாடுதல், தினைப் பயிரிடல், விலங்குகள் வளர்த்தல் போன்றவையாகும். பண்டைய மனிதன் முதன் முதலாக வேட்டையாடு தலையே மேற்கொண்டான் என்பதை ‘கலைக்களைஞ்சியம்’ குறிஞ்சி நிலப் பொதுமக்களின் உணவு வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சியே. மான், முயல், உடும்பு, நரி, முதலிய விலங்குகளை வேட்டையாடியது. விலங்குகளால் தம் உயிருக்கு ஊறு இல்லையாயினும் விலங்கு ஊனின் மீது கொண்ட விருப்பின் காரணமாக இவற்றை வேட்டையாடினர். மக்கள் தம்மை காத்துக் கொள்ளவும், உணவுக்காகவும் ‘வேட்டைத் தொழில்’ செய்தனர். உயிரை காப்பதற்காக மேற்கொள்ளப்படும் வேட்டைத் தொழிலில் உயிரை அழித்துவிடும் அபாயமும் உண்டு. வேட்டைக்கு செல்கிறவன் கொடிய விலங்குகளால் வேட்டையாடப்பட்டு விடுவதும் உண்டு. பிற தொழில்களில் இல்லாத மரண அச்சம் இதில் உண்டு. உழைத்தால் உறுதியாக பலன் கிட்டும். அத்தகைய உறுதிப்பாடு அற்ற தொழில் வேட்டையாடுதல்.

பயிரிடுந் தொழில்:-
வேட்டை தொழில் குறிஞ்சிநிலத்து பொது மக்களுக்கு குறைவான பயனை தருவதால் மக்கள் கொடுமையால் கனி, காய், கீரைகளை உண்போராக மெல்ல மெல்ல மாறினர். குறிஞ்சிநிலத்து பொது மக்கள் கோரை, நெல், திணை, இவற்றை பயரிட நிலம் இல்லாத போது, மணம் கமழ் சந்தன மரங்களை வெட்டி நிலத்தை பயன்படுத்தி அதில் தோரை, நெல், வெண்சிறுகடுகு, இஞ்சி, மஞ்சள், மிளகு, அவரை என்று பல தானியங்களை பயரிட்டு வாழ்ந்தனர்.

•Last Updated on ••Saturday•, 07 •November• 2020 09:17•• •Read more...•
 

ஆய்வு: பாரதியின் சமுதாயச் சிந்தனையும் , கல்விச் சீர்திருத்தமும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: பாரதியின் சமுதாயச் சிந்தனையும் , கல்விச் சீர்திருத்தமும்முன்னுரை
குழந்தைகள் ஒரு குடும்பத்திற்கு மகிழ்வ10ட்டும் செல்வங்கள்.  மொட்டாக அரும்பி, மலர்களாக மலர்ந்து மணம் வீசுங்கால் அந்தக் குடும்பம் குதூகலத்தில் குலுங்கும்.  சிறப்பும் மேன்மையும் அடையும்.  குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலச் சிற்பிகள்.  குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் அணிகலன்கள்.  மகாகவி பாரதியும் அவரது பரந்த பார்வையில்  குழந்தைகள் நலனுடனும் சிறப்புடனும் எவ்வாறு வளர்க்கப்பட வேண்டும், அவர்களது அறிவுத்திறன் சிறப்புற பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் பொறுப்பு என்ன? என்பதை அவரது ஆத்மார்த்த சிந்தனையில் உதித்த அவரது எண்ணங்களைப் பதித்துள்ளார்.  முதற்கண் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளிப்பதினால், கற்றுத்தேர்ந்த குழந்தைகள் நல்லறிவு பெற்றவர்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் திகழ்வார்கள். சமுதாயமும் சீர்பெறும். இக்கருத்தை உறுதிப்படுத்தும்படியாக, பாரதி  இச்சமுதாயத்தில் விதைக்க நினைத்த சமுதாயச் சிந்தனைகளையும் கல்விச் சீர்திருத்தத்தையும் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குழந்தைக் கல்வியில் பெண்களின் பங்களிப்பு
தேசியக் கல்வியில்; தமிழ்நாட்டுப் பெண்களின் முக்கியப் பங்கு என்னவென்பதை பாரதி கூறுகையில்,  “தமிழ் நாட்டு ஸ்திரிகளையும் சேர்த்துக் கொண்டு அவர்களுடைய யோசனைகளையும் தழுவி நடத்தாவிடில் அக்கல்வி சுதேசியமாகமாட்டாது.  தமிழ்க் கல்விக்கும், தமிழ்க் கலைகளுக்கும் , தொழில்களுக்கும் தமிழ் ஸ்திரீகளே விளக்குகளாவர். தமிழ்க் கோவில், தமிழரசு, தமிழ்க்கவிதை, தமிழ்த் தொழில் முதலியவற்றுக்கெல்லாம் துணையாகவும் தூண்டுதலாகவும் நிற்பது தமிழ் மாதரன்றோ?  ஒரு பெரிய சர்வகலா சங்கத்தின் ஆட்சி மண்டலத்தில் கலந்து தொழில் செய்யத் தக்க கல்விப் பயிற்சியும் லௌகீக ஞானம் உடைய.... பத்துப் பெண்களைக் கூட்டி நடத்த வேண்டிய காரியங்களைப் பச்சைத் தமிழில் அவர்களிடம் கூறினான்.  அதனின்றும் அவர்கள் பயன்தரத்தக்க பல உதவி யோசனைகளும், ஆண்மக்கள் புத்திக்குப் புலப்பட வழியில்லாத புதுக் குணங்களும், சமைத்துக் கொடுப்பார்களென்பதில் சந்தேகமில்லை” (காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - 9:2008 : 58-59)

என்ற வரிகள் பெண்கள் நாட்டின் கண்களாகவும் ஒளி விளக்காகவும் அமைந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன. குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும்  பாதையில் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியம் என்ற கருத்தை இவ்வரிகளின் வழியாக பாரதியார் முன்வைக்கின்றார்.

•Last Updated on ••Saturday•, 07 •November• 2020 02:38•• •Read more...•
 

பாரதிதாசன் பார்வையில் தொழிலாளர்கள் நிலை

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

பாரதிதாசன் பார்வையில் தொழிலாளர்கள் நிலைஇருபதாம் நூற்றாண்டினை ஒரு தொழிற்புரட்சிக் காலம் என்று சொல்லலாம். சமுதாயத்தில் பெரும்பாலோராக இருப்பவர்கள் உழைக்கும் மக்களே. இவ்வுலகம் இயங்குவதற்கும் மனித வாழ்வில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் மாற்றங்களுக்கும் உழைப்பின் பயனே அடிப்படையாக அமைகின்றன.. எனவே தொழிலாளர்களைச் சமுதாயச் சிற்பிகள் என்றும் சமுதாய மாற்றத்திற்குக் கிரியா ஊக்கிகள் என்றும் கூறுவர். இதனை உணர்ந்த தமிழ்க் கவிஞர்கள் உழைப்பின் பெருமையையும் உழைப்போரின் இழிநிலைமையையும் அவர்களைச் சுரண்டிப் பிழைக்கும் முதலாளிகளின் ஈவிரக்கமற்ற அலட்சியப் போக்கினையும், உழைப்பாளர்கள் வாழ்க்கையில் அடைய வேண்டிய நல்வாழ்வையும் தம் பாடல்களில் பதிவு செய்ய முற்பட்டனர். சிற்றிலக்கியக் கவிஞர்கள் நிலவுடைமையாளர்களைத் துதிபாடி மகிழ்ந்த நிலையை மாற்றி இக்காலக் கவிஞர்கள் தொழிலாளர்களின் அவல வாழ்வைத் தம் கவிதைகளில் அம்பலப்படுத்தியுள்ளனர். அத்தகைய கவிதைப் படைப்பாளர்களின் முன்னோடியாக பாரதிதாசன் விளங்குகிறார் என்பதை அடிப்படையாகக்கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

தொழிலாளர் மேன்மை
பாவேந்தர் பாரதிதாசன் காணும் பொருள்களையெல்லாம் தொழிலாளர்களின் கைவண்ணமாகவே காண்கிறார்.

“கீர்த்திகொள் போகப் பொருட்புலிவே! உன்
கீழிருக்கும் தொழிலாளர் உழைத்த உடம்பிற்
சிதைந்த நரம்புகள் தோல்” (பா.தா க தொகுதி1 ப. 57)

மேலும், இவ்வுலக வாழ்வக்கும் வளத்திற்கும் காரணமானவர்கள் தொழிலாளர்கள் என்பதைப் புரட்சிக் கவி பின்வருமாறு பாடுகிறார்.

•Last Updated on ••Saturday•, 07 •November• 2020 09:46•• •Read more...•
 

நான்மணிக்கடிகை காட்டும் பெண்ணியம் -

•E-mail• •Print• •PDF•

-  ஆ.இராஜ்குமார் எம்.ஏ, எம்ஃபில் -செம்மொழியான தமிழ்மொழிக்குரிய இலக்கியம் பல்வேறு வடிவங்களில் விளங்குகின்றன. அவற்றுள் நவீன இலக்கியங்கள் இன்றையக் கால சமூகத்தின் பாடுபொருளாக விளங்குகின்றன. இன்றைய சமுதாயப் பாடுபொருள்களில் ஒன்று பெண்ணியம் பற்றியக் கருத்தாக்கங்கள். பண்டைய இலக்கிய இலணக்கண நூல்களும் பெண்ணியம் பற்றிப் பேசினாலும், இன்றுதான் அவைகள் தனி இலக்கிய வடிவம் பெற்றுள்ளன. இன்றைய தனி இலக்கிய வகையாக விளங்குவது நான்மணிக்கடிகை. அந்நூலில் பயின்றுவரும் பெண்ணியம் பற்றி ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

பெண்ணியம் விளக்கம்

ஆங்கிலத்தில் ‘‘Feminisam’ என்று வழங்கும் கலைச் சொல்லையே தமிழில் பெண்ணியம் என்றுகூறுகின்றோம்.இச்சொல் ‘Feminisam’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. ‘பெண்’ என்னும் சொல்லுக்கு பெண்களுக்குரிய இயல்புகளை உடையவள் என்று பொருள்.

“1889 வரையில்‘Feminisam’ என்ற சொல் பெண்களின் உரிமைப் பிரச்சினைகளையும், அதன் அடிப்படையிலான பெண்களின் போராட்டங்களையும் உணர்த்தப் பயன்பட்டு வந்தது. பின்பே பெண்களின் உரிமையைப் பேசுவதற்காகக் குறிப்பிடப்பட்டது நான்மணிக்கடிகையில் வரும் பெண்கள் பற்றிய பாடல்கள், பெண்களின் உண்மை வாழ்வை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. காலத்திற்கு காலம் பெமினிசம் என்ற ஆங்கிலச் சொல்லுக்குரிய தமிழ் சொல்லின் பொருள் மாறி வந்துள்ளன. அச்சொற்கள் அனைத்தும் பெண்ணிய விளக்கத்திற்கு பலவாறு ஏற்புடையதாக அமைகின்றன. அந்தவகையில் “சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழ் பேரகராதி ‘Feminisam’ என்பதற்கு ‘பெண்ணுரிமை ஏற்புக் கோட்பாடு, பெண்ணுரிமை ஆதரவு என்று பொருள் கொள்கிறது.”4 என்று கூறியிருக்கும் பொருள் பொருத்தமுடையதாகும்.

•Last Updated on ••Saturday•, 31 •October• 2020 23:48•• •Read more...•
 

அள்ளுா் நன்முல்லையார் பாடல்கள் காட்டும் சங்ககால மகளிர்நிலை

•E-mail• •Print• •PDF•

கட்டுரை வாசிப்போம்.சங்க இலக்கியச் சிறப்பு

தமிழ்மொழியின் நீடித்த நிலைத்த தன்மைக்கு வளமும் பலமும் பொருந்திய வேராகத் திகழ்வது சங்க இலக்கியமாகும். பாட்டும் தொகையுமாகப் பாடப்பட்ட சங்க இலக்கியம் அக்கால மக்களின் வாழ்வியலுடன் இரண்டக் கலந்த ஒன்றாகும். சங்கப் புலவா்கள் சமூகப் பொறுப்பு உடையவா்களாகத் திகழ்ந்தனா். அவா்கள் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்தவற்றையும் அக்காலப் பழக்க வழக்கங்களையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பதிவுசெய்து, தமது நுண்மான் நுழைபுலத்தையும் சமூகக் கடமையையும் வெளிப்படுத்தியுள்ளனா்.

”தமிழ்மொழி செம்மொழியாக உலக அரங்கில் ஏற்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தவை சங்கக் கவிதைகள். பாட்டும் தொகையுமாக அமைந்த இவை காலந்தோறும் பல்வேறு விதமான வாசிப்புகளுக்கு உட்பட்டுப் பயணித்து வந்துள்ளன.”1 என்ற முனைவா் அ.மோகனா அவா்களின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது.

பெண்பாற்புலவா்கள்

சங்கப் பாடல்களைப் பாடிய புலவா்கள் ஏறத்தாழ 473 எனவும் அவா்களுள் பெண்பாற் புலவா்கள் நாற்பத்து எழுவா் எனவும் அறியப்பெறுகிறார்கள். இது அக்காலப் பெண்களுக்கிருந்த கல்வி உரிமையைக் காட்டுவதாய் அமைகிறது. பெண்களின் மதிநுட்பம் மதிக்கப்பட்டது. பேரரசா்களைக் கண்டு பாடிப் பரிசு பெறவும் அவா்களுக்கு அறிவுரை கூறித் திருத்தவும் தகுதிபெற்றவா்களாகத் திகழ்ந்தனா்.

”படைப்பு சார்ந்த புலமையென்பது பெண்கள் வகைப்பட்டதாக மாறுகையில் அதன் தன்மையானது சமூகத்தின் கூட்டு மனசாட்சியாக வெளிப்படும். ஆண்களின் படைப்புகளில் பெண்களை எழுதிப்பார்க்க முனைவது பல சமயங்களில் வலிந்து கூறுவது வெளிப்படையாகத் தெரியும். பெண்கள் தங்களைப் பற்றித் தாங்களே எழுதும் பொழுது சமூகத்தின் ஊடுபாவுத் தோற்றம் அசலானதாகவும் அழுத்தமானதாகவும் உருவாகும்.”2

•Last Updated on ••Wednesday•, 28 •October• 2020 02:06•• •Read more...•
 

நெலிகோலு (தீக்கடைக் கோலும் படகர்களின் தொன்மையும்)

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -மொழியும் பண்பாடும் இரண்டறக் கலந்தவை. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்ற தொல்காப்பியரின் கூற்றிற்கு மேலும் வலுவூட்டுகின்றது மொழியோடு கூடிய பண்பாடு. யுனெஸ்கோவின் மலைகள் கூட்டமைப்புச் சங்கத்தின் உலக பூர்வீகக் குடிகள் பட்டியலில் இணைக்கப்பட்ட நீலகிரி படகரின மக்களின் வாழ்வியலில் எண்ணற்ற தனித்துவமான பண்பாட்டுக் கூறுகள் விரவிக்கிடக்கின்றன. தனித்திராவிட மொழியாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட படர்களின் மொழியான “படகு” மொழியிலுள்ள பெரும்பான்மையான சொற்கள் இயற்கையை மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அவர்தம் மொழியியற்கூறும் அவர்களின் தொன்மைக்குச் சிறந்த சான்றுகளாகும்.

இயற்கையின் அரிய கொடையாகவும், மனித சமூகத்தின் அரிய கண்டுப்பிடிப்பாகவும் நெருப்பு விளங்குகின்றது. நெருப்பினை ஒருவகையில் மனிதனின் ஆதிக் கண்டுப்பிடிப்பு என்றும் துணியலாம்.

படகர்கள் ஆதியிலிருந்து நெருப்பினை இரண்டு வகைகளில் உருவாக்குகின்றனர். தீக்கடைக்கோலான ஞெலிகோலினைக் கொண்டு கடைந்தும், சிக்கிமுக்கிக் கற்களைக் கொண்டு உரசியும் நெருப்பினை உருவாக்குகின்றனர். ஞெலிகோலினைப் படகர்கள் அதே, சங்கச் சொல்மாறாமல் “நெலிகோலு” என்றே அழைக்கின்றனர். பெரும்பாலும் தவட்டை மரத்தினால் (litsoea Wightiana) ஆனதாக நெலிகோலு அமைந்திருக்கும். சிக்கிமுக்கிக் கல்லினைப் “பிங்கசக்கல்லு” என்று அழைக்கின்றனர்.

நெலிகோலு –
நெருப்பினை உண்டாக்க படகர்கள் பயன்படுத்திய கோலான நெலிகோலின் வழக்கு, சங்கம் தொட்டு வழங்கிவருவதை நாம் கண்டோம். அதிலும் இடையர்களோடு நெருங்கிய தொடர்புடையதாக இந்தக்கோல் விளங்கியது.

•Last Updated on ••Thursday•, 26 •November• 2020 00:20•• •Read more...•
 

நபிகள் நாயகத்தின் வாழ்வியல் சிந்தனை

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
வல்ல இறைவனின் இறுதித் திருத்தூதர் அகிலங்கள் அனைத்தும் அருட்பெருங் கொடையாக பிறந்த நாயகர். நபிகள் நாயகம் அவா்கள் மனித குலத்தை மாண்புறச் செய்வதற்காக சொல்லுக்கும், செயலுக்கும், தூய்மைக்கும், வாய்மைக்கும் புதுப்புது அர்த்தங்களை சிந்திக்க கற்றுக் கொடுத்த செம்மலார் அவா்கள் வழங்கிய சிந்தனைக்குரிய சில கருத்துக்களை இக்கட்டுரையின் வாயலாக காணலாம்.

குடும்பநலச் சிந்தனைகள்
குடும்ப நலமே நாட்டின் நலம் எனலாம். குடும்ப உறுப்பினர்களின் தொகுப்பே சமுதாயமாக மலர்கின்றது. சமுதாய நல நோக்கில் பல்வேறு சிந்தனைகளை வழங்கிய பெருமானார்.

இறைமறை இயம்பும் கணவன்.
ஒரு குடும்பத்தின் தலைமை உறுப்பினர்கள் கணவன், மனைவியுமாவர். இருவருக்கிடையே ஒவ்வொருவரும் கொள்ள வேண்டிய உரிமைகள், கடமைகள் ஆகியவற்றை எல்லாம் பெருமானார் அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார்.

”மனைவியா் கணவனுக்கு ஆடையாகவும்
கணவன் மனைவிக்கு ஆடையாகவும்
இருக்கின்றார்கள்” (திருக்குர்ஆன் 2 187)

முதலில் கணவன் மனைவி இருவரும் ஏற்றத் தாழ்வில்லா ஒத்த நிலையினர் என்பதை உணர்த்துகிறது.

•Last Updated on ••Wednesday•, 28 •October• 2020 00:05•• •Read more...•
 

சமகாலத் திறனாய்வுகள்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -படைப்பிலக்கியம் என்பது வாழ்க்கையின் விளக்கமாகும். திறனாய்வு வாழ்க்கை விளக்கமாகிய அப்படைப்புகளின் விளக்கமாகும். என்ற கூற்று திறனாய்வின் இன்றியாமையை விளக்குகின்றது. ஓர் படைப்பாளனின் சிறந்த அனுபவமே படைப்பாகின்றது. அவ்வனுபவத்தின் மதிப்பினை அளவிடுவதே திறனாய்வின் நோக்கமாகும். சிறந்ததை, உயர்வனதைக் கண்டறிந்து தன்னலமற்ற முறையில் பரவலாக்குவது, அறச்சிந்தனை உணர்வினை விளக்குவது, இலக்கியத்தின் குறைநிறைகளைக் காண்பது, கலைஞனின் கூற்று – அதன் வெற்றி – அதன் தகுதி ஆகிவற்றை காண்பது, கலையினை நுண்ணறிவுக் கொண்டு உணர்த்தி  அதன் தரத்தினை மதிப்பிடுவது என்று திறனாய்விற்கான விளக்கத்தினை அடுக்கிக்கொண்டே செல்லலாம். மேற்சொன்ன கூறுகளுக்கெல்லாம் ஒரு படைப்பினை உற்றுநோக்கி, ஆராய்ந்து, பாகுப்படுத்தி, விளக்கி, மதீப்பீடு செய்வது என்பது அடிப்படையாகும்.

என்று இலக்கியம் தோன்றியதோ அன்றே திறனாய்வும் தோன்றிவிட்டது என்பது திறனாய்வின் தோற்றம் பற்றிய பொதுக்கருத்து. தமிழில் திறனாய்வின் தோற்றத்தினைக் காணமுற்படும்போது சங்கப்பலகையில் வைத்து இலக்கியத்தினைச் சோதிப்பது, கற்றோர் நிறைந்த அவையில் படைப்பினை அரங்கேற்றுவது, சங்கம் அமைத்து ஆய்வது என்ற பல்வேறு மரபுநிலைசார்ந்த பரிணாமங்களைத் தமிழ்த்திறனாய்வு உலகம் பெற்றுள்ளது.

தொல்காப்பியத்திலிருந்தே திறனாய்வினுடைய தொடர்ச்சி இலக்கியபூர்வமாகத் தொடர்கின்றது. திருக்குறளிலேயே திறனறிதல் என்ற சொல்லாச்சி இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழில் களப்பிரர் காலத்தில் நிலவிய சமயநிலைசார்ந்த தருக்கம், மறுப்பு என்பவையெல்லாம் திறனாய்வின் கூறுகளாகும். ஆனால் பயிற்சி நெறியாக பழங்காலத்தில் திறனறிதல் மேற்கொள்ளப்படவில்லை.

•Last Updated on ••Tuesday•, 13 •October• 2020 10:03•• •Read more...•
 

எயினர்கள்

•E-mail• •Print• •PDF•

கட்டுரை வாசிப்போம்.எயினர்கள் வாழ்வியல்
சங்ககாலம்  இலக்கிய வரலாற்றில் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது.  காரணம் அப்போது தோன்றிய எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமாகிய பதினெண்மேல்கணக்கு நூல்களில் காணலாகும் அக்காலச்சமூகம் பற்றிய பதிவுகள் ஒவ்வொரு காலத்தும் தோன்றிய இலக்கியப்படைப்புகள் அந்தந்த கால மக்கள், அவர்களின் பழக்கவழக்கங்கள். பண்பாடுகள், நம்பிக்கைகள், வாழ்வியல் முறைகள் போன்றனவற்றை  காலம்தாண்டியும் உணர்த்தி நிற்கும் கருவூலமாய்த் திகழ்வதேயாகும். அந்த வகையில் சங்ககாலச் சமூகத்தின் ளெிப்பாடாய்க் காணப்படும் செம்மொழி இலக்கியங்களில் காணலாகும்  எயினர்களின் வாழ்வியலைப் பற்றியதாக இக்கட்டுரை அமைகின்றது.

எயினர்கள்
மணல் சார்ந்த நிலமான பாலையில் வசிக்கும் மாந்தர்கள் எயினர்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர்.தொல்காப்பியர் அகத்திணைகள் பற்றிக் குறிப்பிடுகையில்

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப“(அகத்.1)

என்றும் அவற்றுள்
நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே“(அகத்.2)

என்றும் வரையறுக்கிறார். அதாவது கைக்கிளை முதலாப் பெருந்தணை ஈறாக முதன்மைபெறுகின்ற ஒழுக்கவகைகள் ஏழு என்றும் அவ்வேழில் குறிஞ்சி முல்லை பாலை  மருதம் நெய்தல் .  என்ற ஐந்திணைகளுள் நடுவிலிருக்கும் பாலை நீங்கக் கடலால் சூழப்பெற்ற இந்நில உலகத்தைப் பகுத்துக்கொண்டனர் என்று பாலைத்திணை நிலமாகக் கொள்ளப்படாத செய்தி உரையாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது.

•Last Updated on ••Wednesday•, 28 •October• 2020 02:05•• •Read more...•
 

ஆய்வு: பெண்மையைப் போற்றுவோம்!

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை படிப்போமா?வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று வாழ ஒரு சமூகமானது நல்ல குடும்ப வாழ்க்கை உடையதாக இருக்க வேண்டும். அதற்கு முக்கியமான கருவியாக இருப்பவர்கள் பெண்கள். ஒருவன் பிறர் மதிக்கும் வகையில் பெருமையுடன் வாழ்ந்து மகத்தான சிறந்த குணங்களை உடையவனாக இருக்க வேண்டும். அத்தகைய உயர்ந்த குணங்களை உடையவனாக ஒருவனை உருவாக்குவது அவனுடைய மனைவியாகிய பெண் என்பவள் ஆவாள். பெண் வாழ்வின் உயர்ந்த இன்பத்தை வழங்குவதை அடிப்படை இலட்சியமாகத் மேற்கொள்கிறாள்.மனை என்ற சொல் ஆழமுடையது மனை என்பதற்கு வீடு மனைவி இல் இல்வாழ்க்கை அறம் ஒழுக்கம் என பலப்பொருள்களை கூறுகிறது சங்க இலக்கியம் மனை சமூகத்தின் அச்சாணியாக அமைந்திருக்கிறது அன்பே மனையின் அடிப்படை என கூறிய சங்க இலக்கியம் அன்புக்குரியவள் பெண் என்பதை அழுத்தமாக விளக்குகிறது.

அன்புதான் பெண்ணின் முழுவடிவம் என்பார் அண்ணல் காந்தியடிகள். பெண்ணின் பெருமையே அன்பில் அடங்கி வாழ்வதுதான் எனத் திருவிக கூறுவார். இத்தகைய பெரியோர்கள் எல்லாம் சிறப்பாகப்பெண்மையைப் பற்றி சிந்தித்து கூறுவதற்கு அன்போடு வழி திறந்து வைத்தவைச் சங்க இலக்கியங்கள் ஆகும். இத்தகைய பெண்ணியத்தின் மாண்புகளைச் சொல்லுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் பொருண்மையாக. அமைகின்றது.

மனையும் மனைவியும்
சங்க இலக்கியங்கள் சங்க மருவிய இலக்கியங்களில் உணர்த்துகின்ற வாக்கிலிருந்து மனைவியின் சிறப்பு சிறப்புக்குரிய பெண்ணின்பெருமை தெளிவாகிறது. மங்கலம் என்ப மனைமாட்சி என்று திருக்குறள் கூறுகின்றது. சிறப்புக்குரிய பெண்ணின் பெருமை இதன்வழி தெளிவாகிறது. மனைவியின் சிறப்பு வடிவமே மனை இயலாக வளர்ந்து வடிவெடுத்துள்ளது வாழ்க்கையின் குறிக்கோள்கள் குறிக்கோள்களை வகுப்பது இல்வாழ்க்கை ஆகும். வையத்துள் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கைக்கானக் கல்வியை அளிக்கும் முதலிடம் மனையாகும் .மனையும் மனைவியும்மக்களின் சாதனைகளும் தான் நாட்டின் முன்னேற்றத்தை அளக்கும் அளவுகோல்கள். அமைதி நிறைந்த சூழ்நிலையாகும். வாழ்க்கை முறையினை அமைத்துக் கொடுக்கும் பள்ளிதான் மனையாகும்.

•Last Updated on ••Tuesday•, 29 •September• 2020 18:43•• •Read more...•
 

ஆய்வு: பாரதியார் பாடல்களில் மனித நேயம

•E-mail• •Print• •PDF•

-  ஓசாநிதி சிவராசா, உதவி விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் -பாரதியின் காலம் 20ம் நூற்றாண்டின் ஆரம்பக் காலம், இந்தியாவெங்கும் சுதந்திர விடுதலைப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த காலம். மக்கள் அரசியல்ரீதியாக மட்டுமன்றி சமூக ரீதியாகவும் அடிமைப்பட்ட வாழ்வுக்கு உட்பட்டிருந்தார்கள். இந்த நிலையிலே பாரதி மக்களின் அரசியல், சமூக விடுதலையை நோக்காகக்கொண்டு இலக்கியங்கள் படைத்தார். தமிழ்க் கவிதை உலகில் மிகவும் முற்போக்கான சமூக, அரசியல் உணர்வுகளை உணர்வு பூர்வமாக முதன்முதல் வெளிப்படுத்தினார். முக்கியமாக அவர் தொழிலாளர்களுக்கு, அடக்கி ஒடுக்கப்பட்டவர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். அக்குரல் பாரம்பரியச் சிந்தனைகளுக்கு மாறானதாக அமைந்தன.

அந்தவகையில் அவர் மக்கள் இலக்கியத்தின் முன்னோடியாக விளங்கினார். ஆறில் ஒரு பங்கு' என்னும் சிறுகதை முன்னுரையில் 'இந்த நூலைப் பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து இரசிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்த தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்குச் சமர்ப்பணம் செய்கின்றேன்' என்று கூறுகின்றார். இது அவர் தொழிலாளர் மீது கொண்டிருந்த பற்றைக் காட்டுகிறது.

தொழிலாளர் வர்க்கத்திற்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார். தொழிலாளர்களை மேலான நிலையில் மதிக்க வேண்டும் என்று கூறினார். தேசிய எழுச்சியின்போது தொழிலாளர்கள், விவசாயிகளின் வீறுகொண்ட போராட்டங்களுக்கு அறைகூவல் விடுவதாக அவரின் எழுத்துக்கள் அமைந்தன. தன்னையும் ஒடுக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தோடு இணைந்து நோக்கினார். அவரது மக்கள் நல நாட்டத்தை 'விடுதலை' என்ற கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார். 'திறமை கொண்ட, தீமை அற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்திட வேண்டும்' என்று கூறுகிறார்.

•Last Updated on ••Wednesday•, 16 •September• 2020 10:12•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கியப்பாடல்களில் குறிப்புப்பொருள் ( குறுந்தொகை மற்றும் கலித்தொகை)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுச்சுருக்கம் (abstract)

- முனைவர் நா.ஜானகிராமன்,  தமிழ்த்துறைத்தலைவர்,  பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்  கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இனாம்குளத்தூர், திருச்சிராப்பள்ளி, 9842523869 -இலக்கியங்கள் பல்வேறு வகைகளில் பொருட்களைச் சுட்டுகின்றன. அதன் ஒரு வழி முன்னம் என்பதாகும். முன்னம் என்றால் குறிப்பு என்று பொருள். தொல்காப்பியர் இதனைப்பற்றி விளக்கியுள்ளார். தலைவன், தலைவி, தோழி, பாங்கன் ஆகியோர் பல சூழல்களில் தாம் கூறவந்த கருத்தினை நேரடியாகச் சொல்லாமல் பிறவழியில் சொல்ல முனைந்துள்ளனர். இதனையே  குறிப்புப் பொருள் என வழங்கினர். குறிப்பறியமாட்டாதவன்  ஒரு மரம் என்ற முதுமொழிக்கேற்ப குறிப்புப்பொருள் சங்கப்பாடல்களில் செல்வாக்கு மிக்க ஒன்றாய் இருந்து வந்துள்ளது. நற்தொகையிலும் கலித்தொகையிலும் இதனை நன்கு உணரமுடிகின்றது. இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் பலவற்றில் இருந்து குறிப்புப்பொருள்கள் சங்கப்பாடல்களில் எடுத்தாளப்பெற்றுள்ளன.பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் போன்றோரின் பெயர்களால் இதனை அறியலாம். தாவரங்கள் மற்றும் விலங்குகள் மலர்கள் போன்றவற்றால் குறிப்பால் பொருள்களை உணர்த்தியுள்ளனர்.  தன்னுறு வேட்கை கிழவன் முன்கிளத்தல் எத்திறத்தானும் கிழத்திக்கில்லை என்பதில் தலைவி நேரடியாகத் தன் விருப்பத்தைத் தெரிவிக்க மாட்டாள் என்பதை உணர்த்துகின்றது. தலைவி மற்றும் பிற மாந்தர்கள்  தாம் சார்ந்த அனைத்தையும் குறிப்பில் உணர்த்துவர். இவ்வாறு குறிப்பில் உணர்த்துதல் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.

கலைச்சொற்கள்

முன்னம், பிரப்பங்கொடி, அரும்புகள், பீர்க்கமலர், பொருள்வற்றல், மலர்கள் காளைகள், இயற்கைப்புணர்ச்சி, நல்லவன், அந்தணன், குடிப்புகழ், கௌரவர்கள் பாண்டவர்கள், கூற்றுவன்,காயாமலர், மத்தம் பிணித்த கயிறு.

•Last Updated on ••Wednesday•, 16 •September• 2020 10:06•• •Read more...•
 

இளம்பிறை : தொட்டிச்செடி : இடப்பெயர்வின் வலி

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

- முனைவர் கோ. சுகன்யா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர் - 641004. -கவிதை என்றால் என்ன என்று யாராலும் சொல்லிவிட முடியாது. கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடையது, ஓசையுடையது, சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலைவடிவம் இப்படி கவிதை என்பதற்குப் பலர் பல்வேறு வரையறைகளைக் கூறியுள்ளனர். கவிதை என்பதற்குத் திட்டமான வரையறைகள் எதுவும் கிடையாது. கவிதை என்பது அவரவர் தனிப்பட்ட அனுபவங்களுக்கேற்ப குருடர் தடவிய யானை போல கவிதைக்கு வரையறை தந்துள்ளனர் என்றே கூறலாம்.

மொழிவழியாகக் கிடைக்காத, அனுபவிக்க முடியாத எத்தனை எத்தனையோ உணர்வுகளைக் கவிதை புலப்படுத்துகிறது. சிறுகதை நாவல்களை விடவும் மனிதனின் அந்தரங்க உணர்வுகளோடு மிகவும் நெருக்கமானது, சக மனிதர்களின் உள்ளார்ந்த அனுபவங்களை, மனவோட்டங்களைப் புரிந்து கொள்வதற்காகவே தான் கவிதைகளைப் படிப்பதாக கவிஞர் ராஜ மார்த்தாண்டன் இப்புத்தகத்தின் மதிப்புரையில் கூறுகிறார். நமது மனவுணர்வுகளுக்கேற்ற கவிதைகளைப் படிக்கும்போது அவை நம் மனதிற்குப் பிடித்துப்போகின்றன. கவிதைக்கென வகுத்திருக்கும் பொதுவான கோட்பாடுகள் அனைத்தும் அந்த நேரத்தில் இரண்டாம்பட்சமாகின்றன. அவ்வகையில் கவிஞர் இளம்பிறை அவர்களின் “முதல் மனுசி” கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள “தொட்டிச்செடி “ கவிதை பற்றி ஆராய்வதாக அமைகிறது இக்கட்டுரை.

கவிஞர் இளம்பிறை
இவரது இயற்பெயர் க.பஞ்சவர்ணம் என்பதாகும். சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சாட்டியக்குடி ஆகும். இப்பொழுது இவர் சென்னையில் அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது எழுத்துப் பணி 1988-களில் தொடங்கியிருக்கிறது. இளவேனில் பாடல்கள் (1988), மவுனக்கூடு (1993), நிசப்தம் (1998), முதல் மனுசி(2002), நீ எழுத மறுக்கும் எனதழகு(2007) என்ற கவிதைத் தொகுப்புகளைப் படைத்தவர். யாளி அறக்கட்டளை விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, கவிஞர் கரிகாலனின் களம் இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்துவின் “ கவிஞர் தின விருது “ போன்ற பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். இளம்பிறை என்னும் புனைப்பெயரில் எழுதி வருபவர். கிராமம் மற்றும் அனுபவம் சார்ந்த படைப்புகளால் அதிகமாக அறியப்பட்டவர். நகரத்திலிருந்த புதுக்கவிதையை கிராமத்திற்கு நகர்த்தி வந்தவர் கவிஞர் இளம்பிறை.

•Last Updated on ••Thursday•, 17 •September• 2020 18:12•• •Read more...•
 

ஆய்வு: திருக்குறளில் நீர்ப்பண்பாடு

•E-mail• •Print• •PDF•

அறிமுகம்

கலாநிதி குணேஸ்வரன்உலக மக்களின் வாழ்வுக்கு வேண்டிய அரிய கருத்துக்களைக் கொண்டிருக்கும் காரணத்தினாலேயே திருக்குறள் உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகிறது. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே எழுதிவைத்த அரிய கருத்துக்கள் இந்த நூற்றாண்டு மனிதர்களுக்கும் வழிகாட்டியாக அமைவதே திருக்குறளின் அழியாச் சிறப்பாகும். இந்த வகையில் உலகப் பொதுமறையாகிய திருக்குறளில் நீர்ப்பண்பாடு பற்றிக் கூறப்பட்ட கருத்துக்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

தமிழின் அரிய இலக்கியங்களாகிய சங்க இலக்கியங்கள் நீர் மேலாண்மை பற்றியும் நீர்ப்பண்பாடு பற்றியும் மிக விரிவாக இயம்புகின்றன. பரிபாடலில் வையை ஆற்று நீர்ப்பண்பாடும் இவ்வாறுதான் கூறப்படுகிறது. திருக்குறளும் நீர்ப்பண்பாட்டை வான்சிறப்பு என்ற அதிகாரத்தில் முழுமையாகவும் ஏனைய அதிகாரங்களில் பகுதியாகவும் எடுத்துரைக்கின்றது.

வான்சிறப்பில் நீர்ப்பண்பாடு

திருக்குறளின் பாயிரவியல் என்ற அதிகாரப் பகுப்பில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகியன வைக்கப்பட்டுள்ளன. வான் சிறப்பில் மழையின் இன்றியமையாமை பற்றி வள்ளுவர் எழுதிய குறட்பாக்கள் இன்றைய வாழ்வுக்குப் பொருந்தும் வகையில் அமைந்துள்ளன. அவ்வதிகாரம் முழுவதும் மழைநீரின் இன்றியமையாமையினையும் வாழ்வின் பண்பாட்டு அம்சங்களின் ஒன்றாகிய ஒழுக்கத்தையும் தொடர்புபடுத்திப் பேசுவதும் முதன்மையாக அமைந்துள்ளது.

•Last Updated on ••Monday•, 07 •September• 2020 22:18•• •Read more...•
 

ஆய்வு: கலித்தொகையின்வழி முல்லைநில மக்களின் பழக்கவழக்கங்கள்

•E-mail• •Print• •PDF•

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -முன்னுரை

சங்க இலக்கியங்கள் பழந்தமிழர்களின் வாழ்வின் கண்ணாடியாகத் திகழ்கிறது. அதனடிப்படையில் கலித்தொகையின்வழி முல்லை நில மக்களின் பழக்கவழங்களை அவர்களின் தொழில் முறை, குடி அமைப்பு, வணிகம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இக்கட்டுரை ஆய்கின்றது.

முல்லை நிலம்

முல்லைநிலம் காடும் காடு சார்ந்த நிலப்பகுதியாகும். இந்நிலம்வாழ் மக்களாக இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் வாழ்ந்தனர். முல்லை நிலத்தில் வரகு, சாமை, முதிரை போன்றவை விளைவிக்கப்பட்டன. சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றில் களைகட்டல், அவற்றை அரிதல், கடா விடுதல், கொன்றைக் குழலூதல், கால்நடை மேய்த்தல், கொல்லேறு தழுவுதல், குரவைக் கூத்தாடுதல் ஆகியன முக்கியத் தொழிலாக இருந்துள்ளன.

முல்லை நில மக்களின் பழக்கவழக்கங்கள்

புரோகிதர் புரியும் சடங்குகள் பிற்காலத்து உண்டாயின என்பதனை,

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த காலத்தில் இயற்கை மணமுறைக்குப் பின் புலிப்பல் தாலி அணிந்து தழை உடை அளித்தல், மணக்கிரியையாக இருந்தது. இப்பொழுது இயற்கை மணத்தின் முன் மைந்தரும் மகளிரும் மணவினை ஆற்றுதலாகிய கற்பு நிகழ்ந்தது. மாலைகளாலும், தழைகளாலும் அலங்கரித்த பந்தலின் கீழ் ஆண்களும், பெண்களுமாகிய சுற்றத்தினர் கூடியிருந்து விருந்துண்டபின், ஆண் மக்களை ஈன்ற தாலி தரித்த நான்கு பெண்கள் மணமகளை முழுக்காட்டிப் புது ஆடை உடுத்தி அலங்கரித்து அவளை மணமகனுக்கு அளித்தல் அக்கால மணமுறையாக இருந்தது. (கந்தையா ந.சி, தமிழர் சரித்திரம், ப.45)

என்பதன் வழி அறியலாம்.

•Last Updated on ••Monday•, 07 •September• 2020 07:43•• •Read more...•
 

ஆய்வு: தன்னுறு வேட்கை கிழவன் முற் கிளத்தல் கிழத்திக்கும் உண்டு – ஆண்டாள் பாசுரங்களை முன்வைத்து

•E-mail• •Print• •PDF•

முனைவர்.சி.சங்கீதாமுன்னுரை
பெண்களுக்கெனக் கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் சமூகம் காலம் காலமாகத் திணித்துக் கொண்டே வருகின்றன்றது. தாய்வழிச் சமூகமாக இருந்த நிலை மாறி குடும்பத்திலும் சமூகத்திலும் ஆணுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துத் பெண்களைப் பின்னுக்குத் தள்ளித் தந்தை வழிச் சமூகமாக மாற்றியமைத்தனர். குறிப்பாகத் தன் விருப்பத்தைச் சொல்லக் கூட உரிமையில்லாத நிலையைத் தொல்காப்பியர் காலத்திலிருந்தே காணலாம். இந்த மரபு முழுதும் கட்டுடைக்கப்பட்டது பக்தி இலக்கியக் காலத்தில் தான். ஆண்டாளின் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழியில் உள்ள பாசுரங்களில் காணலாகும் தன்னுறு வேட்கையை எடுத்துரைத்துத் தொல்காப்பிய மரபு கட்டுடைவதை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொல்காப்பியமும் பெண்களும்
தொல்காப்பியர் சித்தரிக்கும் பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களைக் கொண்டு வாழ்வதைக் காணலாம். இதனைத் தொல்காப்பியர்

அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்குரிய என்ப. (தொல்காப்பியம். களவு. 8)

இந்நூற்பாவை அடியொற்றி இன்றும் இதைப் பெண்களிடம் வலியுறுத்துவதையும் சமூகத்தில் காணலாம். அடிப்படையில் மென்மையானவள் என்பதால் எதிர்த்துப் பேசுகிற குரலாக நற்றாயோ செவிலித்தாயோ தோழியோ தலைவியோ படைக்கப்படவில்லை. தலைவனின் அன்பிற்குக் காத்திருக்கிற, தனிமைத்துயரில் புலம்புகிற, வரைவிற்கு ஏங்குகிறத் தலைவியைத் தான் தொல்காப்பியர் காட்டுகிறார். அதேபோல, தொல்காப்பியர் காலத்தில் பெண்கள் தங்கள் விருப்பத்தைக் கூறுகிற மரபு இல்லை என்பதை,

தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
எண்ணுங் காலை கிழத்திக்கு இல்லை.
(தொல்காப்பியம். களவு. 8)

என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார். தன் விருப்பத்தை நினைக்கக் கூடத் தகுதியற்ற சூழல் நிலவியிருப்பதை அறியமுடிகிறது. ஆனால் ஆணுக்கான பிரிவுகளைக் பற்றிக் கூறும் போது பரத்தையற் பிரிவைக் கூறியிருப்பது ஆணுக்கான சுதந்திரமாகவும் கடமையாகவும் உரிமையாகவும் மரபாகவும் அமைத்திருக்கிற பாங்கை நுண்ணிதின் அறிய முடிகிறது.

•Last Updated on ••Saturday•, 15 •August• 2020 21:03•• •Read more...•
 

ஆய்வு: சங்க அக இலக்கியங்களில் வருணனைத் தொடர்கள்!

•E-mail• •Print• •PDF•

-முனைவர் ஈஸ்வரன், பா., உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம் –சங்க அக இலக்கியம் என்பது எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்னும் இவ்வைந்து நூற்களும், பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு, குறுஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை (நெடுநல்வாடையைப் பெரும்பாண்மை கருதி அகத்திலும், சிலர் சான்று கூறி புறத்திலும் கூறுகின்றனர். ஆகையால், அகத்தில் இந்நூலைச் சேர்க்கவில்லை.) ஆகிய இம்மூன்று நூற்களும் ஆகும். இவற்றில் ஆய்வு எல்லை கருதி, எட்டுத்தொகையிலுள்ள அகநூற்கள் ஐந்தில் குறிஞ்சித்திணையிலான அறத்தொடு நிற்றல் துறைகளையுடைய தலா ஒரு பாடலும், பத்துப்பாட்டில் குறிஞ்சிப்பாட்டும் ஆய்வின் மூலமாக அமைகிறது. மேலும், சங்க அகஇலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களில் குறுகியதொடர்கள் மற்றும் நீண்ட தொடர்கள் மூலமாக முதற், கருப்பொருட்களும் வருணனைகளும் எவ்விதத்தில் இடம்பெறுகின்றன என்பதனைக் குறித்து ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகின்றது.

ஐங்குறுநூற்றில் வருணனை தொடர்கள்

சங்க இலக்கியங்களிலேயே குறைந்த தொடரைப்(அடியளவைப்) பெற்றுள்ள நூல் ஐங்குறுநூறாகும். இந்நூலில் குறைந்த தொடரான (அடியளவான) மூன்று அடிகளில் செய்திகளை விரிவாக விளக்குவதற்கு இடமில்லை. ஆகையால், உள்ளுறையின் மூலமாக ஆசிரியன் தான் புலப்படுத்த நினைத்த செய்தியை முழுமையாக நிறைவு செய்கின்றமையை  அறியமுடிகின்றது. தொடர்கள் (அடிகள்) குறையுமிடத்து முதற்பொருளும், கருப்பொருளும் மிகமிகக் குறைந்து வருகின்றன. முதற்பொருளில் நிலம் இடம்பெற்றும் பொழுது இடம்பெறாமலும் அல்லது பொழுது இடம்பெற்றும் நிலம் இடம்பெறாமலும் அமைகின்ற தன்மையினைக் காணமுடிகின்றது. இதனைப்போன்றே கருப்பொருட்களில் தொல்காப்பியர் சுட்டக்கூடிய அனைத்துக் கருப்பொருட்களும் அல்லது பிற இலக்கணிகள் கூறியுள்ள அனைத்துக் கருப்பொருட்களும் தொடர்கள் (அடிகள்) குறையுமிடத்து இடம்பெறாமல் ஒரு சில கருப்பொருட்கள் மட்டும் காணப்படுகின்றன. தொடர்கள் (அடிகள்) குறைந்து வருவதால் முதற்பொருள், கருப்பொருள் வருணனையில் அடைவிரிப்புகள்  பெரும்பாலும் இல்லாமலோ அல்லது குறைந்த அளவிலான அடைகளோ பயன்படுத்தப்பட்டுள்ளமை கீழ்க்காணும் ஐங்குறுநூற்றுப் பாடல் எடுத்துரைக்கின்றன.

•Last Updated on ••Tuesday•, 11 •August• 2020 12:13•• •Read more...•
 

ஆய்வு: தமிழில் வருணனையும் மரபும்

•E-mail• •Print• •PDF•

-முனைவர் ஈஸ்வரன், பா., உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம் –தமிழ் இலக்கிய உலகில் வருணனையானது முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இவ்வருணனையானது ஒரு இலக்கியம் வளர்ச்சியடைவதற்கும் அது சிறப்படைவதற்கும் உறுதுணையாக அமைகின்றது. இலக்கியத்தில் வருணனை அமையவில்லையென்றால் அவ்விலக்கியம் சுவையுடையதாக அமையாது. படிக்கும் வாசகர் மனதில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டுவிடும். ஆசிரியர், மாணவர்களுக்கு அல்லது வாசகர்களுக்கு மற்றும் அறிவுத்தளத்தில் உள்ளவர்களுக்குத் தான் கூறநினைக்கும் கருத்தினை வருணனையைப் பயன்படுத்தி எடுத்துரைத்தால் வாசகர்கள் மனதில் எளிமையாகப் பதிந்துவிடும். இவ்வாறு, வருணனையைப் பயன்படுத்தி கருத்தினை எடுத்துரைக்கின்றபோது, மரபு மாறாமல் எடுத்துரைக்கவேண்டும். மரபானது இலக்கியத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் முக்கியமானதாகும். மரபுயில்லையேல் மனிதன் இல்லை. மனிதன் இல்லையேல் இலக்கியம் இல்லை. ஆகையால், இவ்வாறு முக்கிய இடத்​தை வகிக்கின்ற வருணனை மற்றும் மரபு பற்றிய விரிவான விளக்கங்கள் குறித்து இக்கட்டுரை ஆராய்வதாக அமைகின்றது.

வருண​னை - அகராதி தரும் விளக்கம்

‘வர்ண​னை’ என்பதற்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) ​‘நேரில் பார்ப்பது ​போன்ற உணர்​வை ஏற்படுத்தும் ​பேச்சு அல்லது எழுத்து; description; Commentary’1 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வருணனை

வருண​னை மனிதர்க​ளை​யோ அல்லது மிருகங்க​ளை​யோ அல்லது இயற்​கை மற்றும் ​செயற்​கைப் ​பொருட்க​ளை​யோ விரிவாக நீட்டி அழகுணர்வுடன் அழகுபடுத்தி விவரிப்பத​னை மட்டும் ​தன்னகத்துள் கொண்டதல்ல. வருண​னை என்பது அழகுபடக் கூறுவதுதான் என்று அனைவரும் நி​னைத்துக்​ கொண்டிருக்கின்​றனர். ஆனால், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் பெயர்களுக்குப் ​பெயர​டையாகவும், இவ்வுலகிலுள்ள உயிர்கள் ​செய்கின்ற வினைகளுக்கு வினையடையாகவும் வருண​னை இடம்​பெறுவதுண்டு. ​மேலும், இயற்​கை மற்றும் செயற்​கைப்​ பொருட்களுக்கு முன்ன​டையாகவோ அல்லது பின்னடையாகவோ இடம்​பெறுவதும் வருண​னையாகும்.

•Last Updated on ••Tuesday•, 11 •August• 2020 12:13•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கியங்களில் மாந்தர்களின் நிலை

•E-mail• •Print• •PDF•

- முனைவர் த. அமுதா, கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), வேலூர்- 2 -தமிழர்களின் அடையாளத்தைக் காத்து வைத்துக் கொண்டிருக்கின்ற பெட்டகமே சங்க இலக்கியங்கள். சங்க இலக்கிய காலத்தில் நிலவிய வேட்டைநிலை, உணவு பயிரிடும் நிலை, பண்டமாற்று மூலம் வாணிப நிலை ஆகியவற்றைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைகளில் காண முடிகிறது. உலக இலக்கியங்களில் நடப்பியம் சார்ந்த முதல் இலக்கியம் சங்க இலக்கியமாகத்தான் இருக்க வாய்ப்புண்டு என்பர் ஆய்வர். இயற்கையின் எழில் காட்சியையும், இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழ்ந்த மாந்தரின் பெருமையையும், மனிதகுலத் தோற்றத்துக்கும், செழுமைக்கும், நிலைத்தன்மைக்கும் ஆணிவேரான அன்பையும் காதலையும், பல்லுயிர்க்கும் இரங்கும் பாச மனதையும், மனிதகுலம் போர்க்காயம் படாமல் பூவாசத்தை மட்டுமே நுகரவேண்டும் என்ற கவிஞர்களின் குரலையும் நமக்கு அறிவிக்கிற இலக்கிய வரலாற்று ஆவணமாகத் திகழ்வது சங்க இலக்கியமே.

சங்ககாலப் பெண்டிர்

மனமொத்த கிழவனும் கிழத்தியும் கருத்தொருமித்து ஆதரவுபட்ட இன்பத்தைப் பண்டைய தமிழர் ஊக்குவித்தனர். தலைவிக்குத் துணையாக இருக்கும் தோழி அவளுடைய காதலுக்குத் தூதாக மட்டுமின்றி, விரைவில் காதலர்களின் திருமணத்தை நடத்தச் செவிலியிடமோ தாய் தந்தையரிடமோ எடுத்துரைத்து முனைந்த காட்சிகளைச் சங்க இலக்கியம் பதிவு செய்திருக்கிறது. உடன்போக்கு செல்வதை வெறுக்காமல் வாழ்த்திய நெஞ்சங்களைக் காட்டும் வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது கலித்தொகை.

வீட்டைத் துறந்து தலைவனோடு சென்று விடுகிறாள் தலைவி. தேடி வருகிறாள் செவிலி. எதிர்வரும் அந்தணரிடம் என் மகள் பிற ஆடவன் ஒருவருடன் சென்றதைக் கண்டீர்களா எனக் கேட்கிறார்.

‘என்மகள் ஒருத்தியும் பிறன்மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்
அன்னர் இருவரைக் காணீரோ பெரும”

எனக் கேட்கும் செவிலிக்கு அந்தப் பெரியவர் விடை சொல்கிறார் இப்படி.

‘ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங்கு அனையளே எனவாங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்
சிறந்தானை வழிபடீச் சென்றனள்
அறந்தலை பிரியா வாறுமற்று அதுவே”1

பலவுறு நறும்சாந்தமும் அதைப் பயன்படுத்துவோர்க்கே பயன்தரும். யாழில் பிறக்கும் இசை கேட்பவர்க்கே பயன்தரும். அதுபோல நும்மகள் சிறந்ததோர் காதலனைத் தேடிச் சென்றனள். அவர்க்கே அவள் உரிமை. எனவே அமைதிகொள் என்கிறார் அவ் ஆன்றோர்.

•Last Updated on ••Friday•, 17 •July• 2020 02:44•• •Read more...•
 

ஆய்வு: பாரதியார்கவிதைகளில் நாட்டுப்புற இசைக்கூறுகளும் தமிழ்ப்பண்களும்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -ஆதிகாலத்து மனிதன் நாகரிகம் அடைந்து நற்பண்பினைப் பெற்ற காலம் முதல் இசைக்கலை வளர்ந்து வருகிறது. உலகில் நெடுங்காலமாக வளர்ந்து வரும் கலைகளில் இசைக்கலையும் ஒன்று. மொழிக்கும் இசைக்கும் ஒலியே தாய். நம் தமிழ் மொழியில் இசைத்தமிழ், ஓர்அங்கம் ஆகும். தமிழ் இசைக்கு மிக நீண்ட பாரம்பரியம் உண்டு. சங்ககாலம் தொட்டு, 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் இயற்றப்பட்ட கவிதைகள் அனைத்துமே இசையோடு பாடக்கூடிய தன்மையுடையன என்பர் ஆய்வாளர்கள். யாப்பில் அமைந்த செய்யுட்களுக்கு இசையின் தாக்கம் உண்டு எனலாம். பாரதியார்பாடல்கள் பெரும்பகுதி இசையோடு பாடக்கூடியது. கர்நாடக இசை, இந்துஸ்தான் இசை, தமிழ் இசை போன்ற இசை வகைகளில் பாரதி பாடல்களை இயற்றியுள்ளார்.

இசைத் தமிழ்

கலைகளுள் இசை தலைமைச் சிறப்புடையது. பேசத் தொடங்கிய மனிதனின் ஆசைகள், அவலங்கள் பாட்டாக எழுந்தன. பாடுவோர்பண் அமைத்துப் பாடும் போது பாடல் தரும் இன்பம் எல்லையற்றது ஆகும். இசை என்ற சொல்லிற்கு இசைய வைப்பது என்பது பொருள். இசை மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்றன. பணிய வைக்கின்ற ஒரு அரும் பெரும் சாதனம் இசை ஆகும். விலங்கினங்கள், குழந்தைகள் கூட இசைகேட்டு மயங்குவர். இதனையே பாரதி,

“காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும்
பாட்டில் சுவைதனைப் பாம்பறியும்” (பாரதியார்கவிதைகள், ப - 81)

என்கிறார். இசை உருப்படிகளை உருவாக்கும் பாவலர்களுக்கு இயல் தமிழ் அறிவு நிறைந்து இரக்க வேண்டும் என்பர். பாரதி வீர உணர்ச்சியை, நாட்டின் துயரங்களை வேதாந்த தத்துவங்களை, சமூக சீர்திருத்தக் கருத்துக்களை இறைவழிபாபாட்டை, தேசிய விடுதலையை பண் அமைத்து இசையுடன் பாடும் அளவிற்கு இயற்றியிருப்பது உயர்வானதாகும்.

•Last Updated on ••Wednesday•, 01 •July• 2020 11:03•• •Read more...•
 

ஆய்வு: தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் அணிநலன்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு அறிமுகம்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?தமிழ் இலக்கியத்திற்கு இணையில்லா வளம் சேர்ப்பவை தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களாகும். அவற்றுள் பிற்காலத்தில் தோன்றி வளர்ந்த இலக்கிய வகைகளுள் பிள்ளைத்தமிழும் ஒன்று. இது தமிழ் இலக்கியத்திற்கே உரிய சிறப்பான இலக்கியமாகத் திகழ்கின்றது. “12-ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட ‘குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்’ என்ற நூலே முதலில் தோன்றிய பிள்ளைத்தமிழ் ஆகும்”1. “இன்று மக்கள் இயக்கத் தலைவர்களான காந்தியடிகள், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ம.பொ.சி. ஆகியோர் மீதும் பிள்ளைத்தமிழ் பாடப்பெற்றுள்ளது”2 என்று கூறுகிறார் கு.முத்துராசன் அவர்கள். இவர் கூற்றின்படி இன்றளவும் வாழ்ந்து வரும் ஓர் இலக்கியம் பிள்ளைத்தமிழ் என்பதை மறுக்க முடியாது. இத்தகைய சிறப்பு மிக்க பிள்ளைத்தமிழ் நூல்களுள் காலத்தால் முற்பட்ட நூல் ‘நல்லதுக்குடி கிருட்டிணையர் பாடிய தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்’ ஆகும். இப்பிள்ளைத்தமிழ் கற்பனைச் சிறப்பு, அணிநலன், பொருள்நலன், மொழிநடை முதலிய இலக்கியச் சிறப்புகளோடு புராணச் செய்திகள், இறையுணர்வு, தமிழுணர்வு, சைவசித்தாந்தக் கருத்துக்கள், தலவரலாற்றுக் குறிப்புகள் போன்ற பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய சிறந்த நூலாகும். என்றாலும் இந்நூலில் இடம்பெற்றுள்ள அணிச்சிறப்பினைப் புலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் - அறிமுகம்

பெரும்பாலும் பிள்ளைத்தமிழ் நூல்கள் பத்துப் பருவங்களையும், பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் என நூறு பாடல்களையும் கொண்டு அமையும். சில பிள்ளைத்தமிழ் நூல்கள் பருவத்திற்கு ஒரு பாடல், மூன்று பாடல்கள், ஐந்து பாடல்கள் என முப்பது பாடல்களைக் கொண்டோ, ஐம்பது பாடல்களைக் கொண்டோ அமைவதுண்டு. இது போலவே பாடல் எண்ணிக்கை, பருவஎண்ணிக்கை முதலியவற்றில் மிகுதியாகக் கொண்ட பிள்ளைத்தமிழ் நூல்களும் ஒரு சில உள்ளன. அவற்றுள் ஒன்று தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் நூலாகும். இதைப் பாடியவர் நல்லதுக்குடி கிருட்டிணையர் என்ற புலவராவார். இந்நூல் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், பந்தாடல், பொன்னூசல், குதலைமொழியாடல், பாவை விளையாடல், கழங்காடல், அம்மானை, புதிய நீராடல் என பதினைந்து பருவங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழில் இத்தனை பருவங்கள் அமைந்த பிள்ளைத்தமிழ் நூல் இதுவொன்றே ஆகும். இந்நூல் காப்புப் பருவத்தில் பதினோரு பாடல்களும் செங்கீரை தொடங்கி பொன்னூசல் மற்றும் நீராடல் வரை பத்துப் பாடல்களும் பாவை விளையாடலில் மூன்று பாடல்களும் குதலை மொழி, கலங்காடல், அம்மானை முறையே இரண்டு பாடல்களும் என மொத்தம் 120 பாடல்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் இந்நூல் அளவில் பெரியதாகவும், அமைப்பில் புதுமையானதாகவும் போற்றப்படுகிறது.

•Last Updated on ••Wednesday•, 01 •July• 2020 10:56•• •Read more...•
 

'பெண்' இதழ் வெளியீடும் சவால்களும்

•E-mail• •Print• •PDF•

சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் ஓர் அறிமுகம்

-  ஓசாநிதி சிவராசா, உதவி விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் -மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வருடங்களாக பெண்களது நலன், வளர்ச்சி அபிவிருத்தி என்பவற்றில் பங்கெடுக்கும் பல அரச அமைப்புக்களும், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் அமைப்புக்களும் இயங்கி வருகின்றன. சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையமானது அரச அங்கீகாரத்துடன் பதியப்பட்ட முற்று முழுதாக பெண்களால் நிருவகிக்கப்படும் ஒரு பெண்கள் அமைப்பாகும். இவ் அமைப்பானது பெண்களது உளநலம், வாழ்க்கைத்தரம், என்பவற்றை விருத்தி செய்யும் பொருட்டும் பாரபட்சமாக பெண்களை நடாத்தும் சமூகத்தில் சக மனிதர்களாய் பெண்களை உணரச் செய்யவும், வன்முறையற்ற ஒரு சமூகத்தினை உருவாக்கும் நோக்குடனும் இன்றுவரை பரந்ததும் விரிந்ததுமான பல்வேறு வேலைகளைச் செய்து வருகின்றது.

1990களில் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் பயங்கரவாத யுத்த சூழ்நிலை காரணமாக மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறினர். இதன் விளைவாக நாட்டின் பல பாகங்களிலும் நூற்றுக்கணக்கான அகதி முகாம்கள் உருவாகின. இம் முகாம்களில் குறிப்பாக பல நூற்றுக்கணக்கான பெண்கள் மிகவும் மோசமான நிலையில் பாதிப்புற்றவர்களாகக் காணப்பட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக 1990 செப்ரெம்பரில் நாட்டின் பல துறைகளிலும் அனுபவம் வாய்ந்த பல சமூகங்களையும் சேர்ந்த பெண்கள் கொழும்பில் ஒன்று கூடி கலந்துரையாடல் செய்தனர்.

இக் கலந்துரையாடலின்போது சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் பற்றியும் இப்பெண்களை பல வழிகளிலும் வலுவுள்ளவர்களாகவும், சுயமாக சிந்தித்துச் செயற்படக்கூடியவர்களாகவும், உருவாக்க வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. அத்துடன் இப்பெண்களுக்கான ஒரு அமைப்பினை உருவாக்க வேண்டியதன் அவசியமும் உணரப்பட்டது. இதன் விளைவாக உருவாகியதே சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்.

•Last Updated on ••Wednesday•, 01 •July• 2020 10:45•• •Read more...•
 

ஆய்வு: வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை (வள்ளுவரின் ஓழுக்கவியல் விழிப்புணர்வு)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுச்சாரம்- இவ்வாய்வின் முதன்மை நோக்கம் சமூகத்தில் ஒழுக்கம், கல்வி குறித்த விழிப்புணர்வுச் சிந்தனையைப் பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளில் காணப்படுவதை ஆராய்வதாகும். இவ்வாய்வு பண்புசார் அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் நூலாய்வு அடிப்படையில் விளக்கமுறை அணுகுமுறை கையளாப்பட்டுள்ளது. இவ்வாய்வில், திருக்குறள் போன்ற அற இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஒழுக்க நெறிகள் திணைச் சமூகத்திற்கு பின் தோன்றியதாகும். திருக்குறள் கட்டமைக்கும் ஒழுக்க நெறிகள் மக்கள் மத்தியில் மரபியல் சார்ந்த விழுமியங்களை ஏற்படுத்தியுள்ளன. திணை இலக்கிய சமூகத்தில் காணப்பட்ட ஒழுக்கம், கல்வி குறித்த விழிப்புணர்வும் திருக்குறள் கட்டமைக்கும் ஒழுக்கம், கல்வி குறித்த விழிப்புணர்வும் முரணானவை. வள்ளுவர் காலத்தில் தோன்றிய ஒழுகலாறுகள்  மக்களின் வாழ்வியல் முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. உதாரணமாக பெண்கள் குறித்த மதிப்பீடு, கல்வி, இல்லறம், நட்பு, பகை, மானம், சினம், போன்ற கருத்தியல்களைக் கட்டமைப்பதில் திணைச் சமூகமும் அற இலக்கியச் சமூகமும் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளன. செவ்வியல் இலக்கியமான திருக்குறள் ஒழுக்க மரபுகளைச் சமூகத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற கருத்தியல் வேட்கைக் கொண்டுள்ளது. உலகப் பொதுமுறை என்று போற்றப்படும் திருக்குறள் கல்வி குறித்தும் ஒழுக்கம் குறித்தும் அதீத அக்கரையுடன் விழுப்புணவைச் சமூகத்திற்கு ஏற்படுத்தியது. சமூக உற்பத்தி முறையில் திருக்குறள் கல்வி, ஒழுக்கம் குறித்த விழுப்புணர்வு கருத்தியலைக் கட்டமைப்பதில் வள்ளுவர் ஆழ்ந்த கவனம் செலுத்தியுள்ளார் என்பதினை ஆய்வாளர் உறுதிசெய்கின்றார்.

கருச்சொற்கள்: திருக்குறள், ஒழுக்கம், கல்வி, திணைச் சமூகம், நட்பு, பகை, இல்லறம், சமூக உற்பத்தி.

முன்னுரை

தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் வாழ்வியல் விழுமியங்களை எடுத்துரைக்கின்றன. ஒரு நாட்டின் இயற்கை வளங்களுக்கு ஏற்ப மக்களின் வாழ்வியல் விழுமியங்கள் பெற்றிருக்க வேண்டும். “ஒரு நாட்டில் இயற்கை வளங்கள் மிக்கயிருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தி நலம் பெற மக்களிடம் விழிப்புணர்வு என்ற கருத்துநிலைத் தேவைப்படுகிறது” (ம.திருமலை, ஒப்பிலக்கிய கொள்கைகளும் பயில் முறையும் பக்கம் - 212). இவ்விதக் கருத்தானது மனிதவள மேம்பாட்டுச் சிந்தனையில் இன்றியமையாதக் கூறாகக் கருதப்படுகின்றது. மனிதன் தன்னிடமுள்ள ஆற்றலை எவ்வாறு வளர்ப்பது? எவ்வாறு தனது ஆற்றலைப் பயன்படுத்துவது? எவ்வாறு தடைகளைக் கடந்து செயல்பட்டு பிறருக்குப் பயன்படும் முறையில் தன் ஆற்றலை வழிமுறைப்படுத்துவது? என்பனப் போன்ற வினாக்களை எழுப்பி, அவற்றுக்கு விடை காண்பது நடப்புலகில் தேவையானதாக உள்ளது. இவ்வித விழிப்புணர்வு தனிமனிதனிடம் ஏற்படும் போது சமூக மனிதனாக அவன் மாறுகிறான். அதாவது தனது அறிவாற்றலை, நுட்ப அறிவை, ஒரு மனிதன் தனக்கு மட்டுமல்லாமல் தான் சார்ந்து வாழும் இனத்திற்கே பயன்படுத்துவதாக அமைகின்றது. ஆகையால், மனிதனின் வாழ்க்கை என்பது சமுதாயத்துடன் இணைந்த அமைப்பாக விளங்குகின்றது. இவ்வித வாழ்க்கையை உணர்த்தும் வள்ளுவர்,

•Last Updated on ••Friday•, 26 •June• 2020 22:17•• •Read more...•
 

ஆய்வு: புலம்பெயர் சிறுகதைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பெண்களின் பிரச்சினைகள் (புது உலகம் எமை நோக்கி என்னும் சிறுகதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு)

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: புலம்பெயர் சிறுகதைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பெண்களின் பிரச்சினைகள் (புது உலகம் எமை நோக்கி என்னும் சிறுகதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு) ஈழத்தில் 1980களில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் பெரும்பாலானோர் மேற்கு ஐரோப்பாவிற்கும், வட அமெரிக்காவிற்கும், அவுஸ்திரேலியாவிற்கும் புலம்பெயர்ந்து சென்றுள்ளார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்து சென்றவர்களில் கணிசமானோர் தங்களுடைய துன்பங்கள் மற்றும் அனுபவங்களை எழுத்துக்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.  இதற்கு புலம்பெயர் நாட்டில் இருந்து வெளிவந்துள்ள சஞ்சிகைகள் களமமைத்துக் கொடுத்துள்ளன. அந்தவகையில் புலம்பெயர் எழுத்தாளர்கள் மத்தியில் இருந்து பல சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இச்சிறுகதைகளில் புலம்பெயர்ந்து சென்றுள்ள பெண்களின் பிரச்சினைகள்  வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு புலம்பெயர் பெண்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்ற ஒரு சிறுகதைத் தொகுப்பாக ‘புது உலகம் எமை நோக்கி’(1999) என்னும் சிறுகதைத் தெகுப்பு அமைந்துள்ளது. <br /><br />இத்தொகுப்பானது பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்துள்ள சக்தி என்னும் பெண்கள் சஞ்சிகையினால் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜேர்மனி, நோர்வே, இலண்டன், சுவிஸ், கனடா, என்னும் நாடுகளிலிருந்து உமா, தேவா,  சுகந்தி, காவேரி, நளாயினி இந்திரன், நிருபா, சந்திரா இரவீந்தன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சந்திரவதனா, சுகந்தி அமிர்தலிங்கம், விக்கினா பாக்கியநாதன், மல்லிகா, நந்தினி ஆகியோரின் இருபத்து மூன்று சிறுகதைகள் அடங்கியுள்ளன. ஈழத்து இலக்கிய வரலாற்றில் இத்தொகுப்பானது முக்கியமானதாகக் காணப்படுகின்றது. புலம்பெயர்ந்து வாழும் பெண்கள் பிரயாணங்களின்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள், அகதி வாழ்க்கை, பணிச்சுமை, கலாசார சீர்கேடுகளுக்கு முகம் கொடுத்தல், தனிமை, பாலியல் தொந்தரவை கணவனாலும் ஏனையவர்களாலும் எதிர்கொள்ளுதல், புரிதலற்ற கணவனுடனான வாழ்க்கை, கானல் நீராய்ப்போன தங்களின் எதிர்பார்ப்புக்கள், கண்ணுக்கு முன்னாலே பொய்த்துப் போகும் அவலங்கள், தனது கணவன் எதிர்பார்த்ததிற்கு மாறாக இருத்தல், போலி முகங்களுடன் பெண்களை அணுகும் ஆண்களின் குரூரங்கள், வேலைக்குப் போக முடியாமல் கணவனால் இயந்திரமாக்கப்பட்ட பெண்களின் துன்பங்கள், கணவனின் கொடுமைக்கு உட்டுபட்டு பெண்கள் தற்கொலை செய்தல், தாயகத்தில் மாத்திரமன்றி புலம்பெயர் நாட்டிலும் சீதனப் பிரச்சினைக்கு முகம் கொடுத்தல் போன்ற பிரச்சினைகளை பெண்கள் எதிர்நோக்கியுள்ளார்கள்; என்பதை இத்தொகுபை அடிப்படையாகக்கொண்டு  வெளிப்படுத்த முடிகின்றது.</p><hr id=

ஈழத்தில் ஏற்பட்டுள்ள யுத்தத்தினால் பெண்கள் ஐரோப்பா, வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு புலம்பெயரந்து செல்வதற்காக கொழும்பில் இருந்த ஏஜன்சியினருக்குப் பணத்தைச் செலுத்தி அவர்களின் மூலமாக புலம்பெயர் நாடுகளுக்குச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால் ஏஜென்சியினரோ பெண்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று அவர்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குவதோடு, தங்களுடைய வீட்டிற்கும் அழைத்துச் சென்று இவ்வாறான செயல்களில் ஈடுபடுத்துகின்றார்கள். அத்தோடு அவர்களுக்கு கடவுச்சீட்டையும் வழங்குவதில்லை. இதனால்  பெண்கள் புலம்பெயர் நாட்டிற்குச் செல்ல முடியாது வேதனையடைகின்றார்கள். இவ்வாறான துன்பங்களையும் அனுபவித்து புலம்பெயர் நாட்டிற்குச் சென்றாலும் அங்கு அவர்கள் அகதிகளாக வாழ்கின்றனர் என்பதை நிருபாவின் ‘தங்சம் தாருங்கோ’, சுமதி ரூபனின் “யாதுமாகி நின்றாள்” என்னும் சிறுகதைகள் வெளிப்படுத்தியுள்ளன. அத்தோடு ஒரு பெண்ணை சபலமுற வைப்பது அவளை அடைய நினைக்கும் வக்கிரம் என்பவற்றை காவேரியின் “நீயும் ஒரு சிமோன் தி போவுவா போல” என்னும் சிறுகதையில் காணலாம்.

அத்தோடு அகதிகளாக கணவன் ஒரு நாட்டில், மனைவி ஒரு நாட்டில் வாழும் நிலையையையும் சில சிறுகதைகள் வெளிப்படுத்தியுள்ளன. கணவன் சுவிஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்கின்றான். மனைவி சுவிஸ் நாட்டிற்குச் செல்ல முடியாமல் கனடாவில் தனது குழந்தையுடன் அகதியாக வாழ்கின்றதை றஞ்சியின் ‘அக்கரைப் பச்சை’ என்னும் சிறுகதையும், பெண்கள் தங்களுடைய அகதி விண்ணப்பம் மறுக்கப்பட்டு இடமில்லாது அலைந்து வாழ்ந்ததை தயாநிதியின் ‘சதுரங்கம்’ என்னும் சிறுகதையும் வெளிப்படுத்தியுள்ளன. இவ்வாறு பெண்கள் அகதிகளாக்கப்பட்டு வாழ்ந்துள்ளதை இச்சிறுகதைகள் வெளிப்படுத்தியுள்ளன.

புலம்பெயர்ந்து செல்கின்ற பெண்கள் அங்கு பணிப்பெண்களாகவே பணியாற்றுகின்றார்கள். இவ்வாறு பணியாற்றும்போது அக்குடும்பத்திலுள்ள அனைத்து வேலைகளையும் ஓய்வில்லாமல் செய்வதற்கு பணிக்கப்பட்டுள்ளதோடு, இரவிலும் நித்திரைக்குச் சென்றாலும் வீட்டிலுள்ள ஆண்களால் பாலியல்ரீதியான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளார்கள் என்பதை தேவாவின் ‘சுரண்டலின் கொடுக்குகள்’ என்னும் சிறுகதை வெளிப்படுத்தியுள்ளது. பணிக்கமர்த்தப்பட்டுள்ள பெண்களின் தொலைபேசி, அவர்களது ஊதியம் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு வெளியில் சென்று தனது நண்பிகளைக்கூட சந்திக்க முடியாத நிலையும் அவ்வாறு வெளியில் சென்று பாடசாலை சென்ற பிள்ளைகளை அழைத்து வரும்போது நண்பிகளோடு உரையாடுவதைக் கண்ணுற்ற பிள்ளைகள் தங்களது வீட்டில் அறிவித்ததனால் தண்டனைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளதையும் உதயபானு ‘வேலைக்காரிகள்’ என்றும் சிறுகதையில் பதிவு செய்துள்ளார். ஒரு பெண் பகலில் சமையல் தொடங்கி அனைத்து வேலைகளையும் நிறைவேற்றிவிட்டு, நித்திரைக்குச் செல்லும்போதும்கூட மறுநாளைக்கு செய்யப்போகும் வேலைகளை அட்டவணைப்படுத்துவதை நந்தினியன் ‘மூளைக்குள் சமயலறை’ என்னும் சிறுகதை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணின் மூளையில் தன்னைப்பற்றியோ, தன்னுடைய உறவுகளைப்பற்றியோ, தனது அபிலாசைகளைப்பற்றியோ சிந்திப்பதற்கு இடமில்லை. சமையல் மற்றும் ஏனைய வேலைகளளே மூளையில் எண்ணங்களாக சேமிக்கப்பட்டுள்ளன. அதாவது பெண்கள் புலம்பெயர் சமூகத்திலும் சமையல் தொடங்கி வீட்டு வேலைகளைச் செய்பவளாகவே காணப்படுவதை அறியமுடிகின்றது. மேலும் ஒரு பெண் ஆணுக்கான தயார்படுத்தலாகவே இருக்கிறாள் என்பதையும் இச்சிறுகதை வெளிப்படுத்தியுள்ளது.

•Last Updated on ••Sunday•, 07 •June• 2020 17:06•• •Read more...•
 

ஆய்வு: புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -உலகில் வழிபாடு இல்லாத மனித சமூகம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாகக் கணிக்கக்கூடிய குகை ஓவியங்களில் தொன்மையான வழிபாட்டு கூறுகள் காணப்படுவதாக அறிஞர்கள் கூறியுள்ளனர். இத்தகைய தொல் பழங்கால வழிபாட்டு முறைகள் பின்னர் சமயங்களாக வளர்ச்சி பெற்று வந்துள்ளன. மனித வாழ்க்கையில் வழிபாடு இன்றியமையாத இடத்தைப் பெறுகிறது. வழிபாட்டிற்குரிய தெய்வங்கள் எவ்வாறு தோற்றம் பெறுகின்றன ? அவை எவ்வாறு வழிபடப்படுகின்றன ? வழிபாட்டிடங்கள் எவ்வாறு கோயில்களாக வளர்ச்சி பெறுகின்றன ? வைதீகத் தெய்வங்களோடு எவ்வாறு ஒன்று கலக்கின்றன ? போன்ற வினாக்களுக்கு விடை தேடும் பொழுது 'நடுகல் வழிபாடு' முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. பண்டையகால தமிழ்மக்கள் பண்பாட்டுடனும் நாகரிகத்துடனும் வீரச்செயலுடனும் வாழ்ந்து வந்தமை புறநானூறு வெளிப்படுத்துகிறது. மேலும் மக்களின் வாழ்வியல் போர்முறை, வழிபாட்டு முறைகளைப் பற்றி விரிவான செய்திகளைச் சங்க நூல்களில் காணமுடிகின்றது. புறநானூற்றில் நடுகல் வழிபாட்டு முறைகளைப் பற்றிய செய்திகளை இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

தமிழர் பண்பாட்டில் நடுகல்

பண்டைத் தமிழ் மக்களிடம் வேரூன்றி இருந்த வழிபாடுகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது இறந்தார்க்கு நடப்பட்ட கற்களை வணங்கும் நெறியாகும். போரில் இறந்துபட்ட வீரர்களின் நினைவினைப் போற்றும் வண்ணம் அவர்களின் பெயரையும், பெற்ற வெற்றியையும் அவர்களின் பெருமைகளையும் பொறித்துக் கல்நட்டு வணங்கும் மரபு தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இருந்துள்ளது. வெட்சித்திணையின் ஒரு கூறாக இதனை அவர் குறித்துள்ளார்.

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று
இரு மூன்று மரபிற்கல்(தொல் : புறத்-5)


என்று ஆறு நிலைகளை தொல்காப்பியர் குறித்துள்ளமைக் காணலாம். இதனை ஒட்டியே சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் தமது வஞ்சிக் காண்டத்தை உருவாக்கியுள்ளமை கருத்தாகும். இறந்தார்க்குக் கல் நட்டு வழிபடும் முறை கி.பி. 11ஆம் நூற்றாண்டு வரை இருந்துள்ளது என அறிஞர்கள் கண்டுள்ளனர்.

•Last Updated on ••Wednesday•, 01 •July• 2020 11:02•• •Read more...•
 

ஆய்வு: படகர் இன மக்களின் தற்காப்பில் கண்ணேறு கழித்தல்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -மானுட சமூகத்தின் பரிணாம வளர்ச்சியில் தகவமைப்பும் தற்காப்பும் அடிப்படையான கூறுகளாகும். உயிரிகளின் உடலில் இயற்கையாக கட்டமைந்துள்ள தற்காப்புக் கூறுகளுள் நோய் எதிர்ப்பாற்றல் மிகவும் இன்றியமையானதாகும். இது மரபு மற்றும் தகவமைப்பு நிலையோடு நெருங்கிய தொடர்புடையது. தொடக்கத்தில் வீரியத்துடனும் வயது ஏற வீரியம் குறைந்தும் வரும் தன்மையுடைய நோய் எதிர்ப்பாற்றல் பல்வேறு கிருமிகளிலிருந்து உயிரை பாதுகாக்கும் தன்மைக் கொண்டதாகும். கொடிய கொரோனா கிருமி உலகை உலுக்கி நிற்கும் இன்றைய நிலையில் தற்காப்பின், நோய் எதிர்ப்பாற்றலின் இன்றியமையாமையை உலகம் உணரத் தொடங்கியுள்ளது குறிப்பிடத் தகுந்ததாகும்.

உடல் மூப்புறும்போது இயற்கையாக நலியும் உடல் எதிர்ப்பாற்றலின் தன்மையானது, இயற்கைக்கும் தகவமைப்பிற்கும் ஒவ்வாத சில, பல நடத்தைகளாலும் மனிதர்களுக்குக் குறையநேர்கின்றது. எனவே உணவு மற்றும் ஆரோக்கியமான நடத்தைக் கூறுகளே இந்தக் காப்பு அமைப்பிற்கு அடிப்படையாக விளங்குகின்றன. உடல்நலம் பேணும் இந்தக் கூறின் அவசியத்தை சான்றுரைத்து வருகின்றது "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" எனும் திரு மூலரின் வாக்கு. மனித சமூகம் கற்ற இயற்கை படிப்பினைகளில் பெரும்பான்மையானவைத் தற்காப்பு குறித்தவையே ஆகும். அக மற்றும் புற காரணிகளால் உடலின் சமச்சீர்மை குறையும் போதெல்லாம் உடல் உற்ற நோவினை போக்க இந்த எதிர்ப்பாற்றலின் வலுவூட்டம் தேவயானதாகும். தன்னைத்தானே வலுப்படுத்தும் ஆற்றலை உடலின் நோய் எதிர்பாற்றல் அமைப்பு பெற்றிருந்தாலும் அச் செயல்பாட்டிற்குத் துணைநல்க உருவானதுதான் மருத்துவம்.

•Last Updated on ••Wednesday•, 20 •May• 2020 08:33•• •Read more...•
 

நூல் அறிமுகம்: நீயே முளைப்பாய் – கரிசல்காரி - கவிதை நூல் விமர்சனம்

•E-mail• •Print• •PDF•

முனைவர்.சி.சங்கீதாநூல்: நீயே முளைப்பாய்!இராசபாளையம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் எனக்குப் பல இலக்கிய ஆளுமைகளை அறிமுகம் செய்திருக்கிறது. அந்த வகையில் நீயே முளைப்பாய் என்ற நூலினுடைய ஆசிரியரும் பட்டிமன்றப் பேச்சாளரும் கவிஞருமாகிய கரிசல்காரி, கவிதா ஜவஹர் எனக்கு அறிமுகம். அதுமட்டுமல்லாமல் நாங்கள் இருவரும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வழியாக எங்களுடைய முதல் கவிதை நூலை ஒரே நாளில்  வெளியிட்டோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.  நீயே முளைப்பாய் என்ற கவிதைத் தொகுதியில் பெரும்பான்மையான கவிதைகள் மழை பற்றியதாகவே இருக்கின்றன. குறிப்பாக மழை காதலினுடைய குறியீடாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அரசியல் சார்ந்த ஒரு குறியீடாகவும் அதிகாரத்தினுடைய குறியீடாகவும் ஆசிரியர் பயன்படுத்திருக்கிறார்.

ஏறத்தாழ பதினைந்து கவிதைகள் மழை பற்றிய கவிதைகளாகவே இருக்கின்றன. அந்த வகையில் ஆசிரியருக்கு மழை மீது கொண்டிருந்த அலாதிப் பிரியம் வெளிப்பட்டிருக்கிறது எனலாம். தன்னுடைய முதல் கவிதையே மழை பற்றிய கவிதை தான். அந்த கவிதை,

‘நீ என்னை சந்திக்க
இயலாமல் போனதற்கு
மழை ஒரு தடையெனச்
சொல்வாயாயின்
அவசரமில்லை
அடுத்ததொரு ஜென்மத்தில்
உன்னை சந்திக்கிறேன்
அதுவரை மழை போதும் எனக்கு’

இந்தக் கவிதையில் ஒரு தலைவனோ அல்லது தலைவியோ தன்னுடைய அன்பையே மழைக்காகத், துச்சமென தூக்கி எறியக் கூடிய ஒரு செய்தியைப் பார்க்க முடிகிறது. ஆனால் இதில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. நான் உன்னை இந்த ஜென்மத்தில் சந்திக்கவில்லை என்றாலும் அடுத்த ஜென்மத்திலாவது உன்னைச் சந்திக்கிறேன் என்ற வரிகள். எனவே இந்தக் காதல் என்பது பல ஜென்மங்களைக் கடந்து நிகழக் கூடிய ஒரு உணர்வு என்பதைப் பதிவு செய்திருக்கிறார் (பக்கம்.2).
அதிகாரம் என்பது உழைப்பையும் மனிதத்தையும் ஆக்கிரமிக்கும் என்பதையும் அடங்க வைக்கும் என்பதையும் அதிகாரம் எல்லா இடங்களிலும் கோலேச்சும் என்பதை ஒரு கவிதையில் பதிவு செய்திருக்கிறார்.

•Last Updated on ••Thursday•, 30 •April• 2020 00:06•• •Read more...•
 

சிலப்பதிகாரம் – சில தகவல்கள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

ஆய்வுச் சுருக்கம்
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் நகர நிர்மாணம், வாஸ்து அமைப்பு,மயன் கலை, சமயம், நீதி முறைமை, குன்றக் குரவர் முதல் கோவேந்தர் வரை கூடிய சமுதாய ஒற்றுமை என்கிற உறவு நலத்தைக் காட்டுவது போன்றவற்றை இளங்கோவடிகள் கையாண்டுள்ள விதத்தை அறிவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

கலைச் சொற்கள்

நிர்மாணம் - உருவாக்குதல்
வாஸ்து - கட்டடக் கலை வழிகாட்டி

முன்னுரை:
தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் வரிசையில் சிலப்பதிகாரத்திற்கு மிகுந்த ஏற்றமுண்டு. இரண்டாம் நூற்றாண்டு காப்பியமான இதில் இளங்கோவடிகள் அதன் பாத்திரங்கள் வழியாக பல்வேறு வாழ்க்கை நெறிகளை மிக விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். பாட்டுக்கொரு புலவன் பாரதி

“ நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு”1

என்று பாடியுள்ளதைப் போல் சிலப்பதிகாரம் வரலாற்றுக் களஞ்சியமாகவும் பண்பாட்டுப் பெட்டகமாகவும் விளங்குகிறது. அத்தகைய சிலப்பதிகாரம் பற்றிய சில தகவல்களை இங்கு சற்று காண்போம்.

வாஸ்து
ஒவ்வொரு வஸ்துவும் (வஸ்து = பொருள்) இப்படி இப்படி அமைந்திருந்தால்இன்னின்ன நலன்கள் ஏற்படும் என்பதே வாஸ்து ஆகும்.நம் பயன்பாட்டில் இருக்கும் எல்லா வஸ்துக்களையும் நான்கு வகைகளாகப் பிரித்துள்ளார்கள்.அவை

•Last Updated on ••Wednesday•, 29 •April• 2020 23:35•• •Read more...•
 

திருக்குறள் உணர்த்தும் ஒழுக்க நெறியும் நட்பின் இலக்கணமும் – ஓர்ஆய்வு

•E-mail• •Print• •PDF•

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -முன்னுரை
ஒழுக்கத்தின் நெறியில் நிற்றலால் மேன்மை அடைதல் உறுதி ஒழுக்கம் தவறினால் தாங்க முடியாத பழியைப் பெறுவதும் உறுதி என்கிறார் வள்ளுவர். மனிதன் தன் சுற்றத்தரோடு தொடர்பு கௌள்ளுதலில் தனிமனித ஒழுக்கம் அவசியமாகிறது. அவ்வொழுக்க முறையினை வகுத்தும் தொகுத்தும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் என்பதனையும், பண்டைத் தமிழரின் வாழ்க்கை அறத்தின் அடிப்படையில் அமைந்தது. அன்பு, பழிபாவங்களுக்கு நாணும் நாணம், எல்லோருக்கும் உதவும் தன்மை, வாய்மை தவறாமை, பழிபாவங்களுக்கு அஞ்சுதல், நடுவுநிலைமை, விருந்தோம்பல், கொடை போன்ற பல்வேறு பண்புகளில் பண்டைத் தமிழர்கள் சிறந்து விளங்கினர். இவை அனைத்தையும்விட நட்பு என்ற நிலையில் சிறந்த விளங்கினர் என்பதனையும், ஆயந்து கூறுவதாக இக்கட்டுரை அமைகிறது.

ஒழுக்கம் சொல் விளக்கம்
ஒழுக்கம் குறிக்கும் மாரல் என்னும். ஆங்கிலச் சொல் மோர்சு என்ற இலத்தின் மொழிச்சொல்லின் திரிபாகும். ஒரு சமுதாயத்தில் வாழும் மக்கள், வழக்கமாக கொள்ளும் முடிவை ஒழுக்கமாகக் கொண்டனர்.

ஒழுகு, ஒழுக்கு என்னும் சொற்கள் ஒழுக்கம் என்னும் சொல்லாக மலர்ந்த்து என்பதை, ”மனித இனத்திற்யேயுரிய தனிப்பண்புகள் பல, அவற்றுள் ஒழுக்கம் முதன்மையானதாகப் போற்றப்படுகிறது. ஒழுக்கம் என்னும் சொல் ஒழுகு வேர்ச்சொல்லடியாகப் பிறந்த்தாகும். ஒழுகு என்னும் சொல்லிற்கு இடையுறாது கடைப்பிடித்தல் என்பது பொருள். இடையறாது நீர் ஒழுகுவதை ஒழுக்கு என்று கூறுவதைப் போல வாழ்க்கையில் உயர்ந்தவையெனக் கருதப்படும் நெறிமுறைகளை எக்காலத்தும் எவ்விடத்தும் இடையறாது மேற்கொண்டொழுகுவதே ஒழுக்கமாகும்.”1 எனக் குறிப்பிடுவார் மு.வரதராசனார்.

ஒழுக்கம் என்னும் சொல் சீலம், நன்னடத்தை, ஆசாரம், உயர்ச்சி முறைத்தன்மை, உலக ஓம்பிய நெறி போன்றப் பல பொருள்களைத் தருகிறது. தனி மனித ஒழுக்க கூறுகள் சில,

•Last Updated on ••Wednesday•, 27 •May• 2020 18:47•• •Read more...•
 

ஆய்வு: ஈழத்துப் பாடநூல் உரைமரபு

•E-mail• •Print• •PDF•

* 2020 தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்புக் கட்டுரை

அறிமுகம்

- கலாநிதி சுதர்சன் செல்லத்துரை -ஈழத்தில் வெளிவந்த உரைநூல்கள் தொடர்பான ஆய்வுகளை மீள்நோக்கும்போது, ‘ஈழத்தில் பாடநூல்சார் உரைமரபு’ ஒன்று வளமிக்கதாக இருந்துள்ளமை புலனாகின்றது. ஆனால், இம்மரபுமீது, ஆய்வுப்புலத்தின் கவனம் இதுவரை செல்லவில்லை. இதனை, ஈழத்து உரைமரபு தொடர்பாக ஆராய்ந்த, எஸ்.சிவலிங்கராஜா “ஈழத்துத் தமிழ் உரைமரபிலே பாடநூல் உரைமரபு இதுவரை கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.” (2010:iv) எனக் குறிப்பிடுகிறார். ஈழத்து இலக்கியப் பரப்பில் வித்துவான் வேந்தனாரைக் கவிஞராக முன்னிறுத்தி வெளிவந்த எழுத்துக்கள் அதிகமானவை. அவரது நூற்றாண்டு நிறைவுற்ற இக்காலத்தில், அவரது தமிழ்ப் பணியைக் கௌரவிக்குமுகமாக, அவரின் புலமைத்துவம் அதிகம் வெளிப்படும் பாடநூல் உரைகளை மையப்படுத்தி, பாடநூல் உரைமரபுசார்ந்த, வரலாற்றுநிலைப்பட்ட ஆய்வுக் குறிப்பொன்றை எழுதுவது அவசியமானதெனத் தெரிகிறது.

ஈழத்தின் மரபார்ந்த தமிழ்க் கல்வி மரபில் பாட நூல்களாக, பழந்தமிழ் உரைநூல்களைக் கற்றல் மற்றும் பழந்தமிழ் நூலுக்கு உரை எழுதுதல் என்பனவும் முதன்மை பெற்றிருந்தன. பின்னர், காலனிய எதிர்ப்புக் காலத்திலும் தேசியவாத காலத்திலும் உருவான புதிய கல்வி முறைக்கேற்ற பாட விதானம் (curriculum), பாட நூல், பாட வேளை, பாடப் பரீட்சை, பாட வகுப்பறை முதலியவற்றை முன்னிறுத்தி உருவான பாட நூல் உரைகள், ஈழத்துப் புலமைச் சூழலில் முதன்மை பெறத் தொடங்கின. அந்த உரைகள் ஆழமானதும் விரிவானதுமான ஆய்வுக்குரியவை. அந்தவகையில், ஈழத்துத் தமிழ்க் கல்வி மரபில் பாட நூலின் முக்கியத்துவம், பாட நூலாக உரையைக் கொள்ளுதல், பாட நூல் உரையின் முக்கியமான வரலாற்றுக் கட்டங்கள் முதலாயவற்றைச் சுருக்கமாக நோக்கி, வேந்தனாரின் பாட நூல் உரைகள்பற்றியும் அவரின் உரைத்திறன்பற்றியும் விரிவாக ஆராய இக் கட்டுரை முயல்கிறது. ஈழத்துப் பாட நூல் உரைமரபுசார்ந்த இந்த ஆய்வுக் குறிப்பு, முன்னோடி முயற்சி என்பதால் அறிமுகமாகவும் சுருக்கமாகவும் விடுபடல்கள் கொண்டதாகவும்கூட இருக்கலாம். ஒரு முன்வரைபு எனும் நிலையில் இத்துறைசார்ந்து விரிவாக ஆராய்வதற்கு இச்சிந்திப்பு முயற்சி வழிகோலும்.

இலங்கையில் பாட விதானம் - வரலாற்றுச் சுருக்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான காலனியப் பொருளாதார முறைமை, காலனிய காலத்திலும் அதற்குப்பின்னான காலத்திலும் பாட விதான உருவாக்கத்தில் பெருஞ் செல்வாக்குச் செலுத்தியது. காலனியம் உருவாக்கிய ஆட்சி மற்றும் நிர்வாக அலுவல்களின் தேவையைப் பூர்த்தி செய்வது பாட விதானத்தின் முக்கிய நோக்கமாக அமைந்தது. நாட்டை நிர்வகிப்பவர்களை உருவாக்கம் செய்வதிலும் நாட்டை இயக்குவதில் அவர்களின் பாத்திரத்தைத் தீர்மானிப்பதிலும் பாட விதானம் முக்கிய அச்சாகத் தொழிற்பட்டது. இலங்கையின் இற்றைக் காலக் கல்விமுறையின் கால்கோள் காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டே ஆகும். 1900ஆம் ஆண்டில் இலங்கையில் பாட விதானம் ஒரு நியம அமைப்பைப் பெற்றதெனினும், காலனிய ஆட்சியின் நலன் பேணுதல் அதன் வெளித்தெரியா இலக்கு என்பது முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டிய ஒன்று. நிர்வாகம், பண்பாடு மற்றும் சமயத் துறைகளுடன் தொடர்பானதாகவும் ஆங்கிலேயச் சாயல் பெற்றதாகவும் நூற் படிப்புக் கல்வி மற்றும் இலக்கியம் முதலியவற்றோடு தொடர்பானதாகவும் நகர்வாழ் மக்கள் அல்லது மத்தியதர வர்க்கத்தினருக்குரியதாகவும் - மத்தியதர வர்க்கமே பாட அமைப்பில் செல்வாக்குச் செலுத்துவதாகவும் இலங்கைப் பாட விதான உருவாக்கத்தின் ஆரம்பம் இருந்தமை அவதானிக்கத்தக்கது.

•Last Updated on ••Monday•, 13 •April• 2020 15:27•• •Read more...•
 

மணிமேகலை உணர்த்தும் வாழ்வியல் நெறிப் பயணம்

•E-mail• •Print• •PDF•

காப்பியத் தலைவனின் பெயரையே இந்நுாலுக்கு ஆசிரியர் சூட்டியுள்ளார். ஆனால் அன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்ட இனத்தில் பிறந்தவரை காப்பியத் தலைவியாக அமைத்தது சாத்தனாரின் சிறப்பாகும். கணிகை மகளை காப்பியத் தலைவியாக்கியதுடன் திறன் அவருடைய பெயரையே நூலுக்கு சூட்டுவது என்பது ஒரு புரட்சி. மனிதனின் வாழ்வில் சிந்தனைகள் மணிமேகலையில் மிகுதியாக உள்ளன. அத்தகைய வாழ்வியல் சிந்தனைகளை விளக்குவதே கட்டுரையாகும்.
மனிதனுடைய அன்றாட தேவைகளான உணவு உடை இருப்பிடம் போன்றவற்றில் பூர்த்தி செய்து வாழ வேண்டும். அதனை நல்ல நெறியில் பெற வேண்டும் என்பதை மணிமேகலை வலியுறுத்துகிறது. அதுமட்டுமல்ல இத்தகைய மூன்றும் இல்லாதவர்களுக்கு அவர்களை கொடுத்த வாழ வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. அதனைத்தான்,

“அறமெனப் படுவது யாதுயெனக் கேட்பின்
மறவா திதுகேள் மண் உயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையும் அல்லது
கண்டது இல்” (மணி 25 – 228-231)


என்ற வரிகளின் மூலம் கூறுகிறார். அறத்தின் இலக்கணத்தை வள்ளுவர் வரையறுத்ததைப் போல சாத்தனாரும் கூறியுள்ளது சிறப்புக்குரியதாகும் அதுமட்டுமல்லாது,

“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
(மணி 11 – 95-96)

என்ற வரிகளின் மூலம் உணவு கொடுத்தவர்கள் பிறருக்கும் உயிர் கொடுத்தவர்கள் என்று கூறுகிறார். இந்நுாலில் மணிமேகலை அட்சய பாத்திரம் கொண்டு உணவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

•Last Updated on ••Thursday•, 09 •April• 2020 09:09•• •Read more...•
 

ஆய்வு: தற்காலக் கவிஞா்களின் பார்வைகளில் இயற்கை

•E-mail• •Print• •PDF•

 - பொ.ஜெயப்பிரகாசம்,  கோவை -உலக இயக்கமே இயற்கையை நோக்கிச் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த இயற்கையின் கொடையில்தான் உலக ஜீவராசிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய இயற்கையை காத்தலும் காத்த வகுத்தலும் நம் கடமை. உலக இயற்கை வளத்தில் நம் நாட்டின் பங்கு அளவிடற்கரியது. அத்தகைய இயற்கை வளத்தை நாம் பலவிதத்தில் அழித்து வருகிறோம். இயற்கை வளத்தின் இன்றியமையாமை பற்றி நம் வளரும் படைப்பாளர்கள் பல்வேறு விதங்களில் கூறியுள்ளனர். அவற்றை பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

ஐம்பூதங்கள் அனைத்தின் ஒட்டுமொத்த இயக்கமே இந்த உலகம். இவற்றில் ஏதேனும் ஒன்றின் இயக்கம் தடைபட்டாலும் இயற்கை பேரழிவுகள் நிச்சயம். அவற்றைப் போலவே ஒவ்வொரு பூதங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கின்றன. ஒன்றினுடைய பாதிப்பு மற்ற அனைத்தையும் முடக்குவதாகவே இயற்கை அமைந்துள்ளது. இத்தகைய இயற்கையில் இருந்து தோன்றியவை தான் பல உயிரினங்கள். அந்தந்த தட்பவெப்ப நிலைக்கேற்ப உயிரிகள் தாமாகவே தோன்றி மறைந்து வருகின்றன. அந்த இயற்கையின் படைப்பில் பகுத்தறியும் திறன் படைக்கப்பட்ட ஒரு உயிரினம் தான் மனித இனம். இவா்களிடம் சிக்கிக்கொண்ட இயற்கையானது படாதபாடுபடுகிறது. இதைத்தான் கவிஞர்,

இப்போது அடையாளங்களில்லை
அலங்காரங்களில்லை
அர்த்தங்களிலில்லை
(ந.ந ப 22)

என்ற கவிதையில் இயற்கையை அழிக்கும் மிகப் பெரிய சக்தி நம்மிடம் தான் இருக்கிறது என்பது தெரிய வருகிறது. இப்படி காடுகளையும் மரங்களையும் நாம் நாள்தோறும் அழித்து வந்தால் கடைசியில் இந்த உலகத்தில் எஞ்சி இருப்பது ஒன்றும் இல்லை. அவ்வாறு மரங்களை அழித்தால் ஏற்படும் பாதிப்பினை,

•Last Updated on ••Thursday•, 09 •April• 2020 09:04•• •Read more...•
 

ஆய்வு: பழங்குடிகளின் பண்பாட்டில் உணவுச்சொற்கள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

உலகத்து உயிர்கள் ஒவ்வொன்றும் உயிர்வாழ்வதற்கும், அதனூடே இவ்வுலகினில் இடையறாத தொடர்ச்சி நிலையை அடைவதற்கும் உணவென்பது அடிப்படையானதொன்றாகும். மானுட சமூகமானது தொடக்க காலம் முதலாக பல்வேறு முறைகளில் உணவினை சேகரித்து வருவதென்பது, அதன் படிநிலை வளர்ச்சி நிலையினையும், நாகரிக முறையினையும் வெளிப்படுத்துவதாகும். கூடலூர் வட்டாரத்தொல் பழங்குடிகளான பணியர்,காட்டுநாயக்கர்,குறும்பர் போன்றோர் எத்தகு உணவுசெகரிப்பு முறையினை மேற் கொண்டுள்ளனர்,திராவிடப் பழங்குடிகளான இவர்கள் அதற்கு வழங்கும் சொற்கள் என்ன,அச்சொற்கள் பழந்தமிழோடு கொண்டுள்ள உறவு நிலைகளென்ன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உணவுச் சொற்கள்

பசி என்பது அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கின்ற ஒரு உயிரியல் நிகழ்வாகும். உயிரினங்கள் உடல் ஆதாரங்களைச் செலவிட்டு இயங்குகையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அவ்வாதாரங்களின் இருப்பு நிலை மிகவும் குறையும்போது அது பசி எனும் உணர்வாக வெளிப்படுகிறது. உண்மையில் பசி என்பது உடலியல் இயக்கத்தின் போது அடிப்படை எரிபொருள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கீழ் குறைவதைச் சுட்டிக் காட்டும் ஓர் உயிரியல் அளவு மானியாகும். பழங்குடிகளின் பண்பாட்டில் உணவு என்பது காடுகளில் கிடைக்கும் காய், கனிகள், கொட்டைகள், தேன். மேலும், கீரைகள், நண்டுகள், நத்தைகள், மீன்கள், வேட்டையாடிக் கிடைக்கும் காட்டு விலங்குகள் முதலானவற்றை கொள்ளலாம். இவைதவிர, தற்கால உணவு முறைகளுக்கும் அவர்கள் ஆட்பட்டுள்ளது பிற சமூகத் தொடர்பால் ஏற்பட்டுள்ள மாற்றமாகும். அவ்வாறு உணவுத் தொடர்பான அவர்களின் வழக்கில் காணும் தனித்தன்மையான சொற்களை அதன் பொருண்மை நிலைகளையும் சான்றுகளுடன் காணலாம்.

•Last Updated on ••Wednesday•, 08 •April• 2020 23:58•• •Read more...•
 

பழங்குடிப் பண்பாடும் காடுபடுபொருள் சேகரிப்பும் (கூடலூர், நீலகிரி மாவட்டம்)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?பழங்குடிகளின் பண்பாட்டினையும்,வாழ்க்கை முறையினையும் இன அடையாளங்களையும் இனங்காணத் துணைபுரிவது, அவர்கள் மேற்கொண்டுள்ள மரபார்ந்த தொழில்களாகும். இத்தொழில்கள் அவர்தம் வாழ்நிலைக்கும் சூழலுக்கும் ஏற்ப மாறுபட்டாலும் இயற்கையோடு இயைந்த வாழ்வினையும்,பண்பாட்டினை அடிப்படையாக கொண்டுள்ள பழங்குடிகள் அனாதி காலம் தொட்டு இடையறாமல் மேற்கொண்டு வரும் தொழில் என்பது காடுபடு பொருட்கள் சேகரித்தல் என்பதாகும். வேட்டையாடித் தங்களது உணவுத் தேவையினைப் பூர்த்தி செய்த பழங்குடிகள், அதற்கடுத்த நிலையில் செய்யும் தொழிலானது காடுபடு பொருட்களைச் சேகரிப்பதாகும். ‘மீன்பிடித்தல், தேன் எடுத்தல் ,காட்டில் கிடைக்கும் காய்கனிகள், கொட்டை வகைகள், கிழங்குகள், கீரைகள்,முதலானப் பொருட்களைச் சேகரித்தல், மரப்பட்டைகள், நார், மரப்பொருட்கள் போன்றவற்றைச் சேகரித்து பிற மக்களுக்குக் கொடுத்து அவர்களிடம் இருந்து தேவையான பொருட்களைப் பெறுதல் ஆகியவை மூலம் உணவுத் தேவைகளை ஈட்டும் முறையை காடுபடு பொருட்களை சேகரிக்கும் முறையாகும்’. இவ்வாறு காடுபடு பொருட்களைச் சேகரித்து, தங்களது தேவைகளுக்கும், பண்டமாற்று முறையாகவும் பயன்படுத்தும் முறையானது பொதுவான ஒன்றாக பழங்குடிச் சமூகங்களிடையே இருந்து வருகிறது. இந்நிலையானது கூடலூரில் வாழும் தொல்பழங்குடிகளான குறும்பர், காட்டுநாயக்கர், பணியர் ஆகியோரிடம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராயும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.

மீன்பிடித்தல்

வனம் சார்ந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் மீன்களை பின்வரும் முறைகளில் பிடிக்கின்றனர். மடைமாற்றம் செய்தும், வலைபோட்டும், தூண்டில் வைத்தும், முறம் போன்ற கருவி கொண்டும் பழங்குடியினர் மீன்பிடிப்பதைக் இப்பகுதியில் காணமுடிகிறது. மீன் பிடிப்பதில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகின்றனர். இவற்றுள் பழங்குடிகளிடம் மேற்காணும் மீன்பிடி முறையானது பரவலாகக் காணப்படுவதை அறிய முடிகிறது.

•Last Updated on ••Wednesday•, 08 •April• 2020 23:59•• •Read more...•
 

ஆய்வு: தொல்காப்பியத்தில் களவுக்கால மெய்ப்பாடுகள் - ஓர் ஆய்வு

•E-mail• •Print• •PDF•

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -முன்னுரை

தொல்காப்பிய களவுக்கால மெய்ப்பாடுகளில், சந்திப்பு முதல் புணர்ச்சி வரையில் நடைபெறும்; பன்னிரண்டு மெய்ப்பாடுகளை மூன்று நிலைகளாக அடுக்கலாம். அவை, காட்சி முதல் நிலைக்கண் நிகழும் மெய்ப்பாடுகள், வேட்கை இரண்டாம் நிலைக்கண் நிகழும் மெய்ப்பாடுகள், புணர்ச்சி மூன்றாம் நிலைக்கண் நிகழும் மெய்ப்பாடுகள் என்பனவாகும். இவற்றைக் குறித்து இக்கட்டுரை ஆராயவுள்ளது.

காட்சி

முதலில் தலைவனும் தலைவியும் எதிர்ப்படும்போது தலைவியின் உள்ளத்தில் எழும் காதல் முதற்குறிகளை உணர்த்துவது இது. மேலும், இருவரும் புதிதாக எதிர்ப்பட்டதும் தலைவியின் உள்ள உணர்ச்சியால் தோன்றும் அம்மெய்ப்பாட்டுக் குறிப்பு (முதல்நிலை மெய்ப்பாடுகள்) நான்கினையும்,

“புதுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்
நகுநய மறைத்தல், சிதைவுபிறர்க் கின்மையொடு
தகுமுறை நான்கே ஒன்றென மொழிப” (மெய்.13)


என ஆசிரியர் கூறியுள்ளார். தலைவனும் தலைவியும் முதல் சந்திப்பில் அன்புறும் போது, தலைவியின் உள்ளத்துத் தோன்றும் காதலின் வெளிப்பாடு புதுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல், நகுநய மறைத்தல், சிதைவு பிறர்க்கின்மை என நான்கு மெய்ப்பாடுகளாக வெளிப்படுகின்றன.

புதுமுகம் புரிதல்

தலைமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது நேருக்கு நேர் காதல் உணர்ச்சி ததும்புமாறு காணுவது காதலர்கள் தனது மனக்குறிப்பை முகத்தில் வெளிப்படுத்துவது. தலைவனின் காதல் பார்வைக்கு தலைவி மனம் இசைந்து தனது மனமும் கொண்ட முடிவை, விருப்பத்தை முகமலர்ச்சி என்ற உடல் மொழியால் தெரிவிக்கின்றாள். இரு மனமும் ஈர்க்கப்பட்டு இரண்டறக் கலக்கின்றன. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவாக இது அமைகிறது. மன உணர்வுகளை முகத்தைப் போல் வெளிகாட்டும் திறமை வாய்ந்த கருவி வேறு எதுவும் இல்லை.

•Last Updated on ••Wednesday•, 29 •April• 2020 20:44•• •Read more...•
 

ஆய்வு: தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம் - (தமிழ்நேயம் இதழ் முன்வைத்து)

•E-mail• •Print• •PDF•

       முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர், நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 105.தொன்மைக்காலத்தில் தமிழர் நாகரிகம் தன்னளவில் சிறந்து விளங்கியது என்று நாம் பெருமையோடு பேசிக்கொண்டாலும் தற்காலச் சூழலில் உலகமயமாதல் முதலிய பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் தமிழ்நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம் உண்டு என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. இந்தச்சிக்கல் குறித்து கோவையிலிருந்து வெளிவரும் தமிழ்நேயம் என்ற இதழில் ஒரு விரிவான விவாதம் (தமிழ்நேயம் இதழ்-26 ஆகஸ்டு2006, இதழ்-27அக்டோபர் 2006) நடைபெற்றது. இந்த விவாதம் குறித்து இவ்ஆய்வு அமைகிறது.

நாகரிகமும் பண்பாடும் வேறு வேறு என்று கருதப்பட்டாலும் நாகரிகம் என்பதே பண்பாடு என்னும் பொருளில் இக்கட்டுரை அமைகிறது. 'பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்' (580) என்னும் குறள் இப்படிக் கருதுவதற்கு ஆதாரம்.

1.தமிழர் நாகரிகம் - தொன்மைக்காலம்:

சிந்துவெளி நாகரிகம் என்பது தமிழர் நாகரிகம் தான் என்ற கருத்து இன்று அழுத்தமாகக் கூறப்படுகிறது. சிந்துவெளி நாகரிகம் சுமேரிய நாகரிகம் போன்ற பிற நாகரிகங்களோடு தொடர்பு கொண்டிருந்தது. சங்ககால நாகரிகத்தினுள்ளும் சிந்துவெளி நாகரிகத்தின் பல்வேறு கூறுகள் காணப்படுகின்றன என்று மருதநாயகம் சுட்டிக்காட்டுவது ஈண்டு நோக்கத்தக்கது. ஆகவே சிந்துவெளி நாகரிகம் முற்றாக அழிந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை.

உலகின் மூத்த செவ்வியல் நாகரிகம் எனப்படும் கிரேக்கம், கீப்ரு, சீனம், சமற்கிருதம் என்று கூறப்படும் நாகரிகங்களை ஒத்த தன்மையும், கூடுதலாகத் தனித்தன்மையும் உடையது சங்ககால நாகரிகம். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற அற்புதமான படைப்புகளைத் தோற்றுவித்த நாகரிகம், உண்மையில் மிகச்சிறந்த நாகரிகமாகத்தான் இருக்கமுடியும்.

•Last Updated on ••Saturday•, 21 •March• 2020 20:17•• •Read more...•
 

ஆய்வு: திருவள்ளுவரின் எதிர்காலவியல் அணுகுமுறை

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?இலக்கியம் என்பது மனித வாழ்க்கைக்குரிய இலக்கை இயம்புவது. மனித குலத்தின் ஆசைகளையும் உணர்ச்சிகளையும் இலக்கியத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. நல்லவர்களையும் அவர்களுக்கு இடையூறு செய்யும் தீயவர்களையும் அன்பு, அறம் போன்ற நல்லுணர்வுகளையும் அவற்றைப் பகைக்கின்ற வன்பு, மறம் போன்ற அல்லுணர்வுகளையும் இலக்கியங்கள் வடிக்கின்றன. வாழ்க்கையைப் பற்றிப் பாடுவதால் இலக்கியங்கள் அனைவருக்கும் பொதுவாக விளங்குகின்றன.

இலக்கியம் என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த கோடான கோடி மக்களுடைய எண்ணங்களின் பேழையாகும். காலந்தோறும் அப்பேழை பெருகுகின்றது. ஏனைய கலைகளிலும் இலக்கியம் வாழ்வொடு பொருந்திய கலையாதலின் இலக்கியம் இயற்றிய புலவன் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள அனுபவங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு மனித சமுதாயம் எதிர்காலத்தில் எப்படி எல்லாம் இருக்க வேண்டும், எவ்வாறு வாழ்ந்தால் எத்தகைய பயன் கிடைக்கும் என்பது பற்றிய எதிர்கால அணுகுமுறையில் இலக்கியம் படைக்கின்றான். அவ்வாறான இலக்கியங்களுள் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.

தமிழ்நாடு செய்த தவப்பயனாய்த் தோன்றிய திருவள்ளுவர், உலகத்தோர்க்கு ஒழுக்கமுறை வகுத்த சான்றோர் வரிசையில் முதன்மையராய் வைத்து எண்ணப்படுகிறார். உலகம் போற்றும் திருக்குறளில் அவர் வகுத்துள்ள ஒழுக்கமுறை இன்னார் இனியார் என்ற வரையறையின்றி யாவரும் கையாளுவதற்குரியதாய், பொதுநோக்கப் பார்வையோடு இயற்றப்பட்டுள்ளது. ஒழுக்கமுடையோர் விழுப்பமடைவர் என்பதைத் தம் வாழ்க்கையிலேயே நடத்திக் காட்டியவர். தாம் பெற்ற இன்பத்தை மற்றையோரும் பெறவேண்டும் என்னும் உயரிய எண்ணத்தராய், அனைவரும் உய்யுமாறு ஒப்பற்ற ஒழுக்கமுறையை திருக்குறள் மூலமாக உணர்த்தியுள்ளார்.

•Last Updated on ••Saturday•, 21 •March• 2020 18:43•• •Read more...•
 

ஆய்வு: காப்பியங்களில் பெண்கள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?ஒரு பெண் தனக்குரிய உரிமைகளை அறிந்து உணர்ந்து அதன்வழி தன்னை நிலை நிறுத்திக் கொள்வதே பெண்ணியம் பேசுதல் ஆகும்.இப்பெண்ணியச் சிந்தனை தற்போதைய பெருவளர்ச்சி என்றாலும் ஒருபக்கம் பெண்கள் மீதான அடக்குமுறைகள் இருந்தகாலத்;திலும் பெண்மைக்குக் குரல் கொடுத்தவைகள் இலக்கியங்கள். இவ்விலக்கியங்கள் தான் தோன்றிய காலத்தைப் பதிவுசெய்வதற்காகவும், சமூகத்திற்கு ஏதேனும் ஒரு கருத்தைக் கூறுவதற்காகவும், இந்தச் சமூகம் எவ்வாறு விளங்கவேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் அமைந்தன. இதற்குப் பல இலக்கியச்சான்றுகளைச் சுட்டலாம். குறிப்பாகக் காப்பியங்கள் இங்கு ஆய்வுக்குரிய எல்லையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்என்ற முழக்கம் தோன்றும் முன்னர் கி.பி 100- லேயே இலக்கிய வரலாற்றில் சங்கம் மருவிய காலம் என்று குறிப்பிடப்படும் காலத்தே தோன்றிய முதல் தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரம் தொடங்கி அனைத்துக் காப்பியங்களிலும் பெண்களை மையப்படுத்துவதைக் காணமுடிகின்றது.

சங்கம் மருவிய காலத்தில் ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட குழப்பங்களுக்கிடையில் நீதி இலக்கியங்கள் தோன்றி அறவுரைகளை எடுத்தோதின. அக்கால இறுதிப்பகுதியில் தோன்றிய சிலப்பதிகாரம் தமிழ் இலக்கிய வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்தது எனக் கூறலாம். குறைந்த அடிகளில் தோன்றிய சங்கப்பாடல்கள் மற்றும் நீதி இலக்கியப்பாடல்கள் தாண்டி ஒரு முழு வரலாற்றைக் கூறும் தொடர்நிலைச் செய்யுளாக அமைந்த முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும்.

உலகமொழிகளில் தோன்றிய காவியங்கள் புகழ்பெற்ற அரசனை, ஆண்டவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருக்க குடிமக்கள் காப்பியமாகத் தோன்றியது சிலப்பதிகாரம். குறிப்பாக,

•Last Updated on ••Friday•, 06 •March• 2020 03:24•• •Read more...•
 

ஆய்வு: தமிழ் மொழியில் வேற்றுமையும் வேற்றுமைத்தொகையும்

•E-mail• •Print• •PDF•

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -முன்னுரை
மொழியில் பெயர்ச் சொற்களும், வினைச் சொற்களும் இன்றியமையாதவை. இவ்விரு சொற்களைக் கொண்டே பெரும்பாலான கருத்துகளை உணர்த்தலாம். எனினும், தெளிவாகவும் நுட்பமாகவும் கருத்துக்களை விளக்குவதற்கு ஒட்டுக்கள், இணைப்புச் சொற்கள், பெயரடைகள் போன்றவை மிகுதியாகப் பங்களிக்கின்றன எனலாம். ஒட்டுக்களில் வேற்றுமை பின்னொட்டாக அமைகின்றது. வேற்றுமை என்னும் சொல்லின் உருவாக்கத்தினையும், மரபிலக்கணத்தார், உரையாசிரியர், மொழியியலாளர் ஆகியோரின் வேற்றுமை பற்றிய வரையறைகளையும் வேற்றுமையின் எண்ணிக்கை பற்றியும் மெய்ப்பொருள் விளக்கத்தையும் வேற்றுமை ஆறு எனும் மொழியியலாளர் கருத்தையும் உருபுகளையும் சொல்லுருபுகளையும் இன்றியமையாமையையும் அவைத் தொகையாக வருவதையும் இவ்வியலுள் காண்போம்.

வேற்றுமை சொல்லாக்கம்
வேறு என்னும் குறிப்பு வினையடியாகப் பிறந்த மை ஈற்று உடன்பாட்டுத் தொழிற் பெயரே வேற்றுமை என்பதாகும். மாற்றம் அல்லது வேறுபாடு என்பது பொருளாகும். பெயர்க்கு வினையோடு உள்ள உறவில் நேரும் மாற்றத்தை வேறுபாட்டைக் குறிக்க இச்சொல்லை வழங்கியது மிகவும் பொருத்தமே. பல்வேறு மொழிகளிலும் வேற்றுமையைக் குறிக்கும் சொற்கள் இப்பொருளிலேயே வழங்குகின்றன.

வேற்றுமையின் விளக்கமும் வரையறையும்
வேற்றுமை பற்றி விளக்குவதிலும் வரையறுப்பதிலும் மரபிலக் கணத்தார்களும், உரையாசிரியர்களும், மொழியியலாளர்களும் சிற்சில வேற்றுமைகளைக் கொண்டுள்ளனர்.

மரபிலக்கணத்தார்

தமிழிலக்கண வரலாறு பதின் மூன்று இலக்கண வேற்றுமைகளைப் பேசுகின்றன. ஆயின், அவற்றுள் ஐந்து நூல்களே வேற்றுமையை வரையறுக்க முயல்கின்றன.

•Last Updated on ••Thursday•, 05 •March• 2020 09:51•• •Read more...•
 

ஆய்வு: பசிப்பிணித்தீர்த்தலில் மணிமேகலையின் பங்களிப்பு

•E-mail• •Print• •PDF•

         - முனைவர் சா.சதீஸ் குமார், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், 641 105, -இந்தியச் சமயங்கள் யாவும் மானுடம் தலைக்கவே தோற்றுவிக்கப்பட்டன. இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழ நெறிகளை வழிகாட்டுகின்றன. இதற்கு எந்தச் சமயமும் விதிவிலக்கல்ல… ”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற உயரிய சிந்தனையை வாழ்வில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறத்தை தான் மணிமேகலை காப்பியம் முழுவதும் வலியுறுத்துகிறது. இக்காப்பியம் தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம், பத்தினியின் சிறப்பைக்கூறும் காப்பியம், சீர்திருத்தக் கொள்கை உடையக் காப்பியம், பசிப்பிணியின் கொடுமையை எடுத்தியம்பும் காப்பியம், கற்பனை வளம் மிகுந்த காப்பியம் எனும் பெருமைகளெல்லாம் மணிமேகலைக்கு உண்டு. இக்காப்பியத்தில் உயிரினங்களுக்கு ஏற்படும் பசிக்கொடுமையை எங்ஙனம் நீக்குகிறது என்பதையும் நாமும் அதனை நம்முடைய வாழ்வில் எவ்வாறெல்லாம் கடைப்பிடிக்க இயலும் என்பதைப்பற்றி ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மணிமேகலையின் சிறப்பு :
மணிமேகலை பௌத்த சமயத்தைப் பரப்ப எழுந்த காப்பியம் தான் ஆயினும் சமயக்கோட்பாடுகள் மனித சமுதாயத்திற்குப் பொதுவானவை என்பதை மறுக்க இயலாது. உண்மையில் அனைத்து சமயக்கோட்பாடுகளும் இவற்றையே வலியுறுத்துகிறது. பசியின் கொடுமையை விளக்கும் பசிப்பிணித் தீர்ப்பதே விழுத்துணையான அறம் என்று அழுத்தமாக பேசுவது இக்காப்பியத்தின் அறக்கோட்பாடாகும். இதைப்போல் வேறெந்த இலக்கியமும் இப்படிப்பேசவில்லை. எல்லாச்சமயங்களும் அன்னதானத்தைப் போற்றுகின்றன. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை வலியுறுத்துகின்றன. ஏனென்றால் மக்களின் பசியைப் போக்கவில்லையென்றால் மக்கள் மக்களாக இருக்கமாட்டார்கள் இருக்கவும் முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தனர். அதனால் தான் அவர்கள் அன்னதானத்தை முதன்மைப்படுத்தினர். பாரதியார் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று குறிப்பிடுவதை

“ வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
இங்கு வாழும் மனிதர்களுக்கெல்லாம்….
(பாரதியார் கவிதைகள் -முரசு- 23)

என்று பசியைப் போக்குவதற்கு முதலிடம் தருகின்றார். பசித்திருப்பவனுக்கு உணவுதான் கடவுள். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோராவார்’ உயிர் வளர்க்க ஊன் வளர வேண்டும், இல்லையேல் பசிக்கொடுமைகள் இவ்வுலகில் தலைவிரித்தாடும் மனித இனத்திற்கு மட்டுமின்றி மற்ற அனைத்து உயிரினங்களும் உணவே முதல் தேவையாக அமைகிறது. பசிப்பிணி உலகில் இல்லாமல் இருந்தால் தான் மனிதன் சிந்தித்து அதன்படி செயலாற்ற முடியும் இல்லையேல் மனிதன் மிருகமாக மாறிவிடும் சூழல் ஏற்படக்கூடும்.

•Last Updated on ••Thursday•, 05 •March• 2020 09:00•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கியங்களில் உயிரி நேயம்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
ஆய்வுக்கட்டுரை படிப்போமா?                        - முனைவர் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக்கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி 635 752, திருப்பத்தூர் மாவட்டம் -இயற்கையின் எழில் காட்சியையும், இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழ்ந்த மாந்தரின் பெருமையையும், மனிதகுலத் தோற்றத்துக்கும், செழுமைக்கும், நிலைத்தன்மைக்கும் ஆணிவேரான அன்பையும் காதலையும், பல்லுயிர்க்கும் இரங்கும் பாச மனதையும், மனிதகுலம் போர்க்காயம் படாமல் பூவாசத்தை மட்டுமே நுகரவேண்டும் என்ற கவிஞர்களின் குரலையும் நமக்கு அறிவிக்கிற இலக்கிய வரலாற்று ஆவணமாகத் திகழ்வது சங்க இலக்கியமே. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இரு பிரிவுகளைக் கொண்டது சங்க இலக்கியம். காதலில் தொடங்கிக் கடிமணத்தில் தொடரும் குடும்ப வாழ்க்கையைப் படம்பிடிக்கும் அகப்பாடல்கள், வீரம், கல்வி, கொடை, புகழ், அரசியல் போன்ற பல வாழ்வியல் கூறுகளைக் கொண்ட புறப்பாடல்களை உள்ளடக்கியது சங்க இலக்கியம்.

சங்க இலக்கியங்கள் அக்கால மக்களின் பண்பியல் கூறுகளைப் படம்பிடித்த ஓவியங்கள் ஆகும். காதலும் வீரமும் இரண்டு கண்களாக எண்ணப்பட்ட காலம் அது. சங்கப் புலவர்கள் நாத்தழும்பேற அவற்றைப் பாடியுள்ளனர். அவர்கள் பாடல்களில் மிகுந்து காணப்படும் உயிரி நேயச் சிந்தனைகளை ஆய்வோம்.

சங்ககாலப் பெண்டிர்
மனமொத்த கிழவனும் கிழத்தியும் கருத்தொருமித்து ஆதரவுபட்ட இன்பத்தைப் பண்டைய தமிழர் ஊக்குவித்தனர். தலைவிக்குத் துணையாக இருக்கும் தோழி அவளுடைய காதலுக்குத் தூதாக மட்டுமின்றி, விரைவில் காதலர்களின் திருமணத்தை நடத்தச் செவிலியிடமோ தாய் தந்தையரிடமோ எடுத்துரைத்து முனைந்த காட்சிகளைச் சங்க இலக்கியம் பதிவு செய்திருக்கிறது. உடன்போக்கு செல்வதை வெறுக்காமல் வாழ்த்திய நெஞ்சங்களைக் காட்டும் வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது கலித்தொகை.

வீட்டைத் துறந்து தலைவனோடு சென்று விடுகிறாள் தலைவி. தேடி வருகிறாள் செவிலி. எதிர்வரும் அந்தணரிடம் என் மகள் பிற ஆடவன் ஒருவருடன் சென்றதைக் கண்டீர்களா எனக் கேட்கிறார்.

•Last Updated on ••Tuesday•, 03 •March• 2020 13:26•• •Read more...•
 

ஆய்வு: தமிழ் இலக்கியங்களில் “ஐயோ” ஒரு பார்வை

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை படிப்போமா?முனைவர் பெ.கி. கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி – 635 752  முன்னுரைமுன்னுரை
காடுகளில் வெகு தொலைவில் இருக்கும் இனத்தாரைக் கூக்குரலிட்டு அழைக்கும் போது ஓ… என்கிற சொல்லே அதீதப் பயனளித்தை அறிந்து உணர்ந்த ஆதித்தமிழன் உருவாக்கிய குறிப்பு மொழியே. ஐயோ. (Oh…My.. God) அசாதாரண  கொடூரமான மற்றும் துன்பகரமான சூழ்நிலையிலும். அபயம் வேண்டி ஆண்டவனை, தலைவனை, பெற்றோரை வியத்து அழைத்து முறையிடுவது தமிழர் தம் வழக்கம் மண்டையில் குட்டு பட்டாலும் உதடுகள் சொல் வார்த்தை ஐயோ.

ஐயோ – பொருள்
ஐயோ என்ற சொல் ஓலம் இக்கட்டான நிலையில் அபயம் வேண்டி எழுப்பட்ட கூக்குரலாகும். ஐயோ – அபாயகரமான சூழ்நிலயில் அபயம் வேண்டி ஒலிக்கப்பட்ட குறிப்பு மொழியாகும். இரக்கம், ஆக்கம், சோகம், வலி, துன்பம் முதலிய உணர்ச்சிக்களை தம்மால் கட்டுபடுத்த முடியாத நிலையில் ஓலமிடுவது ஆதிமனிதனில் காடுகளில் திரிந்த போதிலிருந்தே தொடரும் உள்ளுணர்வின் தாக்கம் ஆகும். இது அனைத்து கலாச்சரங்களிலும் இன்றைக்கும் தொடரும் வழமை. ஐயோ  என்பது எமனின் மனைவியின் பெயராகும்.

சங்ககாலம்
ஐயோ! ஐயமே! வேண்டாம்! சங்ககால தொட்டு ஐயோ! பல பொருளில் பயன்பட்டு வருகின்றது அதன் நீளமும் அகலமும் மிகப் பெரிது! ஐயோ என்ற சொல் தமிழ்மொழி   தோன்றியதிலிருந்து தொடங்கியிருக்கலாம். ஐயோ, இங்கே வாருங்களேன் என்ற ஓலம் இக்கட்டான நிலையில் அபயம் வேண்டி எழுப்பப்பட்டும் கூக்குரலாகும். வலியைக் குறிக்க சங்ககால ஐயோ! கையறு நிலை அடைந்து தவிக்கும் போது பயன்படுத்தும் சொல்லாகும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் புறநானூற்றுப் பாடல் 255ல் அவலத்தைக் குறிக்க எடுத்தாளப்பட்டுள்ளது.

•Last Updated on ••Tuesday•, 03 •March• 2020 08:31•• •Read more...•
 

ஆய்வு: கோவை மாவட்ட இருளா் பழங்குடி மக்களின் பண்பட்டுச் சிதைவுகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
இந்தியா ஒரு பன்மொழி பண்பாடு கொண்ட நாடு. ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு சில தனித்த பண்பாடு, கலாச்சாரம் உண்டு. குறிப்பாக தமிழ்நாட்டில் 36  வகையான‌ பழங்குடிமக்கள் வசித்து வருகின்றனா். பழங்குடி மக்களுக்கு அடையாளங்களாக விளங்கக்கூடியவை அவா்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவைதான். அவை அவ்வினத்தின் அடிப்படைப் பண்புகளாக விளங்குகின்றன. மொழி-பண்பாடு-சமூகம் இம்மூன்றையும் இணைத்து ஆய்வு செய்கின்ற போதுதான் அது ஓா் இனத்தின் முழுமையான ஆய்வாகக் கருதப்பெறும். பழங்குடி மக்களைப் பற்றியும் அவா்களது மொழி, கலாச்சாரம், பண்பாடு பற்றிய ஆய்வும் இன்று முக்கியமான ஆய்வாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் இன்று பழங்குடி மக்கள் தங்கள் தனித்த அடையாளங்களை இழந்து வருகின்றனா். குறிப்பாக கோவை மாவட்ட இருளா் பழங்குடியினா் சமீபகாலமாக தங்கள் பழங்குடியினத்துக்கே உரித்தான பண்பாட்டுக் கூறுகளை மெல்ல மெல்ல இழந்து வருகின்றனா். அந்த வகையில் இப்பழங்குடிமக்கள் இழந்த பண்பாட்டு கூறுகளை பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

இருளா் பழங்குடியினா்
இருளா் பழங்குடியினா் தமிழகத்தில் பல பகுதிகளில் வசித்து வருகின்றனா். குறிப்பாக நீலகிரி மலைத்தொடா், கூடலூர், கோவை மலைப்பகுதிகள், விழுப்புரம், சேலம், ஆகிய பகுதிகளில் அதிக அளவில் வசித்து வருகின்றனா். கா்நாடகத்தில் குடகு மலைப்பகுதி, தா்மபுரி, கிருஷ்ணகிரி, கா்நாடக எல்லைகளிலும், கேரளத்தில் பாலக்காடு, மூணாறு, அட்டப்பாடி, ஆணைக்கட்டி மற்றும் மலைசார்ந்த பகுதிகளிலும் பெருமளவு வசிக்கின்றனா். இருளா் என்ற பெயா் இவா்களுக்கு தொடக்கத்தில் இல்லை, சங்க காலத்தில் வேடா் என்றே இவா்கள் அழைக்கப்பட்டனா். காலப்போக்கில் வெவ்வேறு பெயா்கள் இவா்களுக்கு வழங்கப்பட்டன. அதன்படி வில்லியன், வெல்லியன், மலநாடு இருளா், மலைதேச இருளா், வேட்டக்கார இருளா், ஊராளி இருளா் என்றெல்லாம் இவா்கள் அழைக்கப்ட்டனா். இருளா் என்ற சொல்லுக்கு பல விளக்கங்கள் கூறப்படுகின்றன. இருளடா்ந்த காடுகளில் இவா்கள் வாழ்வதால் இருளா் என்ற பெயா் வந்திருக்கும் என்கிறார்கள் சிலா். இருளுக்கு ஒப்பான கருத்த மேனி நிறம் கொண்டதால் இவா்களுக்கு இந்த பெயா் வந்திருக்கும் என்கிறார்கள் வேறு சிலா். மேற்காணும் விளக்கத்தைத்தான் மானுடவியல் ஆய்வாளா் எட்கா் தா்ஸ்டனும் அளிக்கிறார்.

•Last Updated on ••Wednesday•, 26 •February• 2020 21:07•• •Read more...•
 

ஆய்வு: கொல்லர்களின் வாழ்வியலும் கருவிகளும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை படிப்போமா?

முன்னுரை
வேட்டையாடி வாழ்ந்த மக்கள் காலப்போக்கில் குழுக்களாக வாழத் தலைப்பட்டனர். அப்போது பிற குழுவிடமிருந்து தம் குழுவைக் காப்பாற்றச் சில கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இக்கருவிகளைக் கொல்லர்கள் வடிவமைத்துத் தந்துள்ளனர். அவ்வாறு கொல்லர்கள் கருவிகளை வடிவமைப்பதற்கும், தாம் வடிவமைத்தக் கருவிகளைக் கூர்மைப்படுத்துவதற்கும் பட்டைத் தீட்டுவதற்கும் சில கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றை எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானூற்றுப் பாடல்கள் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

கொல்லர்கள் – அறிமுகம்

கொல்லர்கள் பொற்கொல்லர், இரும்பு கொல்லர் என இருவகைப்படுவர். இவர்களில் இரும்பு கொல்லர்கள்,

“வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே”        புறம். 312.3

என்பதற்கு ஏற்ப மன்னன் மற்றும் வீரர்களுக்கு தேவையான இரும்பாலாகிய போர்க்கருவிகளைச் செய்து கொடுப்பது கடமையாகும். இக்கருவிகளைச் செய்தவர்கள் “கருங்கை வினைஞர்”, “கருங்கைக் கொல்லன்” என அழைக்கப்பட்டுள்ளனர்.

பெயர்க்காரணமும் வேறுபெயரும்
கொல்லன் தனது உலைக்களத்தில் தீ மூட்டும் போது கரியை அடுத்து உலையிலே போடுவதனால் அவன் கை எப்போதும் கரிய நிறம் உடையதாக இருக்கும். அதோடு இரும்பைக் காய்ச்சி அடுத்து சம்மட்டியால் அதனை ஓங்கி அடித்துக் கொண்டேயிருப்பதால் அவன் கைகள் காய்ந்து உரம்(வலிமை) ஏறியதாக சுரசுரப்பாகக் காணப்படும். இதனைக் கண்ட அக்காலப் புலவர், ”கருங்கைக் கொல்லன்” (புறம்.170.15) என்று குறிப்பிட்டுள்ளார்.

•Last Updated on ••Monday•, 24 •February• 2020 10:43•• •Read more...•
 

ஆய்வு: சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழிபாடாக நடுகல் அகநானூறு புறநானூறுஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு

•E-mail• •Print• •PDF•

கலாநிதி குணேஸ்வரன்ஆய்வுச் சுருக்கம் :
தொல்தமிழர் வாழ்வில் மூத்தோர் வழிபாடாக நடுகற் பண்பாடு அமைந்திருக்கின்றது. சங்கப் பனுவல்களின் தொகுப்பு முறையில் காலத்தால் முற்பட்டவையாகிய அகநானூறு புறநானூறு ஆகியவற்றில் பதுக்கை மற்றும் நடுகல் பற்றிய குறிப்புகள் அதிகம் உள்ளன. நடுகற்கள் எவ்வாறு வீரவழிபாடாகவும் சடங்குமுறையாகவும் மாற்றம் பெற்றன என்பதை இனங்காண்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும். பகுப்பாய்வு முறையியலை அடிப்படையாகக் கொண்டு சங்கப் பனுவல்களின் வைப்புமுறையில் இலக்கியங்களைப் பகுப்பாய்வு செய்து அவற்றில் நடுகல் குறித்த பாடல்களைத் தனியே வகையீடு செய்து விபரண முறையியல் அடிப்படையில் இந்த ஆய்வு முன்வைக்கப்பட்டுள்ளது. கடவுள்கோட்பாடுகள் உருவாகுவதற்கு முன்னரே தமக்கு முன்னர் வாழ்ந்து தம்குடிகளைக் காத்து மடிந்த வீரர்களை மூத்தோராகக் கருதித் தலைமுறையாகத் தொடர்ந்த மரபே நடுகல் வழிபாடு என அறிய முடிகிறது. இதுவே பிற்காலத்தில் வழிபாட்டுச் சடங்காகவும் கிராமியத் தெய்வ மரபாகவும் மாற்றமுற்றதெனக் கருதமுடிகிறது.

திறவுச் சொற்கள் : நடுகல், பதுக்கை, தொல்தமிழர் வழிபாடு, சங்கப் பனுவல்கள்

1. அறிமுகம்
தமிழ்ப்பண்பாட்டின் வேர்களை சங்கப்பனுவல்களில் கண்டு கொள்ளமுடியும். எழுத்து வடிவிலான ஆதாரங்களாகிய அவை, தமிழ்த் தொல்குடிகளின் பண்பாட்டை அறிந்துகொள்ள உதவுகின்றன. சங்கப் பனுவல்களினூடாக பலியிடுதல், வெறியாட்டு, நடுகல் ஆகிய தொன்மையான வழிபாட்டு முறைகளையும் அவற்றுக்கூடாக மக்களின் பண்பாட்டையும் கண்டடைய முடிகிறது. அகநானூறு மற்றும் புறநானூற்றுப் பாடல்களில் அதிகமும் நடுகல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அப்பாடல்கள் குறிக்கும் தொல்குடிப்பண்பாட்டை அறிவதன் ஊடாக மூத்தோர் வழிபாடாக நடுகற்கள் அமைக்கப்பட்டன என்ற உண்மையையும் கண்டடைய இயலும்.

2. சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழிபாடாக நடுகற்கள்
சங்க இலக்கியங்களில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, மலைபடுகடாம், பட்டினப்பாலை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகியவற்றில் முப்பதுக்கும் மேற்பட்ட பாடல்களில் நடுகல் வழிபாடு மற்றும் பதுக்கைகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றுள் அகநானூறு (16 பாடல்கள்) மற்றும் புறநானூற்றுப் (12 பாடல்கள்) பாடல்களிலேயே இவை அதிகம் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. இவ்விரு இலக்கியங்களின்வழி நடுகல் வழிபாடு பற்றி நுண்மையாக நோக்கமுடியும்.

•Last Updated on ••Monday•, 07 •September• 2020 22:15•• •Read more...•
 

ஆய்வு: அரிச்சந்திரன் யார்? (விழுப்புரம் மாவட்ட மக்கள் தொன்மக் கதையை இறப்பு நிகழ்வில் நிகழ்த்தும் பாடமாத்திச் சடங்குப் பாடலை முன்வைத்து)

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சு.குமார்  உதவிப் பேராசிரியர் தமிழ் உயராய்வுத் துறை  ஸ்ரீ வினாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி; உளுந்தூர்பேட்டை -ஒரு சமுதாயத்தின் அமைப்பு, ஒழுக்கமதிப்பு ஆகியவற்றின் அடித்தளமாய் அமைகின்ற முக்கியமான சமுதாய ஆற்றலே தொன்மம். இது நம்பிக்கைகளை ஒழுங்குபடுத்தித் தொகுத்தமைப்பதுடன் நடைமுறைச் செயற்பாட்டை வழிப்படுத்துவதாகவும் ஒழுகலாற்று விதிகளைப் பயிற்றுவிப்பதாகவும் அமைகின்றது. இது சடங்கு உள்ளிட்ட அனைத்து வாழ்வியற் கூறுகளிலும் ஊடுரு விநிற்கின்றது. (M.I.Steblin kamenskij,1982:30) என காமன்ஸ்கி கூறுவதைப் போன்று தொன்மம் இலக்கிய உருவாக்கத்திலும் முக்கிய இடம் பெறுகின்றது.

மாற்றத்தையே மாற்றியமைத்து வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற்று வருபவன் மனிதன். இயற்கையை வென்றதிலும் மாற்றியமைத்துக் கொண்டதிலும் அவனது பங்களிப்பை அறிய மதநூல்கள், புராண, இதிகாசங்கள், காவியங்களாகிய மரபுச் செல்வங்கள் நமக்கு உதவுகின்றன. அவற்றைக் கற்பது கடந்தகால மனிதனை அவன் வாழ்ந்த சு10ழலை அறிய உதவும் (டி.டி.கோசாம்பி,2005:பதிப்புக்குறிப்பு). எனக் குறிப்பிடப்படுவதைப் போல, தொன்மங்கள் வெறும் கற்பனையாக மட்டும் அல்லாமல், அவை சமுதாயம் சார்ந்தனவாய் வரலாறு சார்ந்தனவாய் சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பிரதிபலிப்பவனவாக, பண்பாட்டின் ஒரு கூறாக இருப்பனவானகவும் உள்ளன என்பதை மனதில் கொண்டே தொண்மங்கள் அணுகப்பட வேண்டியனவாக உள்ளன. அந்த வகையில் அரிச்சந்திரனின் நாட்டார் இறப்புப் பாடல்கள் வழி மெய்ப்பிக்க இப்பாடல் சான்றாக அமைந்து உள்ளன.

‘‘சாமிக் குருவே சாமிக் குருவே அடியேன் ஒரு விண்ணப்பம் சொல்கிறேன் திருமுடி, திருமுடி நோகாமல் தாழ்த்திக் கேலும். முந்திப் பிறந்தவன் நான்  முதல் பூணுல் அணிந்தவன் நான். சங்கும் பறையன் நான.; சாதிக்கெல்லாம் பெரிய ஜாம்பவன் நான்.  அறுநூல், பெறுநூல் அறுத்து எடுத்தவன் நான். ஆரியத் தெருவிலே தீவட்டிப் பெற்றவன் நான் என்றான் வீரவாகு.

•Last Updated on ••Tuesday•, 07 •January• 2020 12:14•• •Read more...•
 

ஆய்வு:படகர்களின் சாம்பல் (பூதி) வரையும் திருவிழா

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -நெருப்பின் கண்டறிவே மானுட வாழ்வில் சிறந்த பண்பாடு, பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நிலைக்கு வித்திட்டது எனலாம். அதே நிலையிலேயே வீடுகளில் நெருப்பிட்டு மிஞ்சும் சாம்பலுக்கும் பல்வேறு பயன்பாடு மற்றும் வழக்காற்று நிலைகள் நிலவுகின்றன. மலை மற்றும் காடுகளில் வாழ்ந்த சித்தர்கள் தம் உடலின் வெப்பநிலையினைத் தக்கவைத்துக் கொள்ளவும், உடம்பிலிருக்கும் நீர்கோர்வையினை வற்றச்செய்யவும், உடல் துர்நாற்றத்தைத் தவிர்க்கவும் உடல் முழுக்க சாம்பல்பூசி வாழ்ந்தது நாம் அறிந்தவொன்றே.

நெற்றியில் திருநீறு அணிவதும்கூட மருத்துவ நிலையில் தலையில் கோர்த்திருக்கும் நீரினை அகற்றுவதற்கான கூறினை உள்ளடக்கியதாக விளங்குகின்றது. நீலகிரியில் வாழ்கின்ற படகர் இன மக்களின் வாழ்வில் காணப்படும் சாம்பல் பற்றிய வழக்காறுகளை ஆய்வதாகவும், படகர் இன மக்களின் மரபுச் சடங்குகளுள் ஒன்றான சாம்பல் வரையும் சடங்கினை விளக்குவதாகவும் இக்கட்டுரை விளங்குகின்றது.

நீலகிரி படகர் இன மக்கள் சாம்பலை இன்று ‘பூதி’ என்று அழைக்கின்றனர். இது ‘விபூதி’ என்ற சொல்லின் முதற்குறையாக இருக்கலாம். ஆனால் சாம்பலினைத் ‘து’ என்ற ஓரெழுத்து ஒருமொழியில் குறிப்பதே படகர்களின் பழைய வழக்காகும். படர்கள் தம் வீடுகளில் பயன்படுத்தும் மூங்கில் முறவகையினை வீட்டின் சுவற்றில் ஆணியறைந்து அதில் தொங்கவிடுகின்றனர். பூச்சி அரிப்பிலிருந்து அம்முறங்களைப் பாதுகாக்க இம்முறையினைக் கையாளுகின்றனர். முறங்கள் பூச்சி அரிப்பினால் பாதிப்புறும்போது அதை ‘து’ ஆகிவிட்டது, அதாவது தூசியாகிவிட்டது, சாம்பல் போல் ஆகிவிட்டது என்று கூறுகின்றனர்.

•Last Updated on ••Monday•, 10 •February• 2020 02:48•• •Read more...•
 

ஆய்வு: பெரியாரியம் : மார்க்சியம் - ஒப்பீடு

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: பெரியாரின் சிந்தனை முறையியல்கார்ல் மார்க்ஸ்நவீனக்கோட்பாடுகளனைத்திற்கும் அடிப்படையாக விளங்கி நிற்கும் மார்க்சியத்துடன் அதன் நீட்சிகள் ஒன்றுபட்டும் முரண்பட்டும் நிற்கின்ற காலச்சூழலில், பெரியாரியச் சிந்தனை முறையியலை மார்க்சியத்துடன் ஒப்பீடு செய்வது கோட்பாட்டு விவாதங்களாக அமைவதுடன், இந்திய அளவில் தனித்தச் சிந்தனை மரபாகப் பெரியாரை உள்வாங்கிக்கொள்ளவும் துணைபுரியும் எனலாம். இந்தியளவில் மார்க்சியம் என்பது வறட்டுத்தனமான வடிவங்களில் பொருளியல் சார்ந்த அர்த்தப்பாடுடன் புரிந்துகொள்ளப்பட்டுள்ள நிலையில், பெரியாரியம் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கின்ற கருத்தியல்களையும் செயல்பாட்டினையும் கொண்டிருக்கிறது. பெரியாரிடம் மார்க்சியம் பற்றிய கருத்தியல்கள் மிகப் பரந்துப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது எனலாம். “கார்ல் மார்க்ஸ் படைப்புகள், லெனின் படைப்புகள் என இன்னும் சொல்லப்போனால் 1848 இல் மார்க்ஸ், ஏங்கெல்சால் எழுதப்பட்ட கம்யூனிஸ்ட்டுக் கட்சி அறிக்கை, பத்து வயதுவரை மட்டுமே பள்ளிக்கூடம் சென்று பயின்ற பெரியாரால் 1931 இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அது முழுமையாக அல்ல ஒரு சிறுபகுதி அளவில் மொழி பெயர்க்கப்பட்டது" (இரா. அறவேந்தன் (ப.ஆ.), இந்தியத் தத்துவ மரபில் பெரியாரியம், 2014, ப. 149) பெரியாரின் இத்தகைய செயல்பாடுகள் மார்க்சியத்தை இந்தியச் சமூகத்தில் பொருத்திப்பார்க்கும் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த்து எனலாம். ரஷ்யா, சீனப் பயணங்களுக்குப் பின்னால் பொதுவுடைமைச் சித்தாந்தங்களும் புரட்சிகளும் இந்தியச் சமூகங்களில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றனவா என்ற விவாதங்களை நிகழ்த்துகிறார். அதன்பின்னணியிலேயே பொதுவுடைமைச் சித்தாந்தங்களை மொழிப்பெயர்த்து வெளியிடுகிறார் என அறியமுடிகிறது.

மார்க்ஸின் இந்தியா பற்றிய கணிப்புகள் மிக தெளிவாக உள்வாங்கப்பட்டிருப்பினும் அதனைப் பற்றிய புரிந்துணர்வும் செயல்பாடுகளும் இந்தியளவியல் முன்னெடுக்கப்பட வில்லையென்பதே நிதர்சனமாகயிருக்கிறது. “தீர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ள பல்வேறு இனங்கள், குலமரபுகள், சாதிகள், சமயக் கோட்பாடுகள், அரசுகள் ஆகியவைகளை ஒன்று சேர்த்து, உருவாக்கப்பட்டிருக்கிற பூகோள ஒற்றுமையைத்தான் இந்தியா என்று அழைக்கிறோம்’’ (எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் பலர் (மொழி.), இந்தியாவைப் பற்றி, 1971, ப. 111) என்ற கருதுகோளைப் பெரியார் இந்திய மண்ணில் மிகச்சரியாகவே உள்வாங்கிக்கொண்டு செயலாற்றியவராக இருக்கிறார் என்பதே பெரியாரின் சிந்தனையை முக்கியத்துவமுள்ளதாக மாற்றியுள்ளது. பெரியாரின் பார்வை சமதர்மத்தை நோக்கியவையாக இருந்தாலும் பொதுவுடைமைச் சமூகம் தோன்றுவதற்கு முன்னால் பண்பாட்டளவிலான சமதர்மத்தையும் ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் உறுதி செய்யவேண்டும் என்ற கொள்கையுடையவராகப் பெரியார் செயலாற்றுகிறார். சாதி எதிர்ப்யைம் அதன் காரணியான மத எதிர்ப்பையும் பெரியார் அடிப்படை நோக்கமாக்க் கொண்டு செயலாற்றியுள்ளார். “அரசியல், பொருளாதார இயல் என்பவைகளைப் பிரதானமாகக் கருதாதீர்கள். அறிவியல், மனவியல், சரிப்பட்டுவிட்டால் அரசியல் கஷ்டம், பொருளாதார இயல் கஷ்டம் தலைக்காட்டவே காட்டாது" (ஈ.வெ.ரா. சி., ப. 1992) இங்குப் பொருளியல் காரணிகளைவிட பண்பாட்டுச் சமத்துவத்தினை முதன்மையாக்க் கருதுகிறார்.

•Last Updated on ••Thursday•, 02 •January• 2020 13:21•• •Read more...•
 

ஆய்வு: பெரியாரின் சிந்தனை முறையியல்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: பெரியாரின் சிந்தனை முறையியல்கலாச்சாரத்தை மையப்படுத்தல் என்ற அடிப்படையினைப் பெரியார் தனது சிந்தனை முதன்மையாகக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் நடைபெற வேண்டிய எழுச்சி கலாச்சாரக் கேள்விகளைக் கொண்ட எழுச்சிதான் என்பதனைத் தனது செயல்பாடுகளில் வகைப்படுத்தியிருக்கிறார். "ஒரு தாராளவாதியாக, தேசத்துரோகியாக, மொழிப்பற்றை விட்டவராக, சிலை உடைப்பாளராக, எதிர்க் கலாச்சார வாதியாக, எல்லா விதமான பற்றுகளுக்கும் எதிரியாக, சுய உறுதியாகத்தையே விடுதலை என்று உணர்ந்தவராய், மொழிந்தவராய்ப் பெரியாரை அணுகுதல் என்பது பெரியாரின் மறைக்கப்பட்ட பரிமாணங்களையும் மவுனமாக்கப்பட்ட சிந்தனைகளையும் மட்டுமின்றி இந்த நோக்கில் நிகழ்காலச் சூழலையும் விளங்கிக்கொள்ளப் பயன்படும்" (அ. மார்க்ஸ், பெரியாரின் கண்டுகொள்ளப்படாத சிந்தனைகள் மீதான ஒரு கவன ஈர்ப்பு, 2018, ப. 152) பண்பாட்டு அடிப்படையிலான நிகழ்காலச் சூழலின் மீது விமர்சனம் செய்த பெரியாரின் சிந்தனை மரபினைக் கடவுள் மறுப்பாளர் என்ற பொதுப் பின்னணியில் வைத்து குறுக்கிவிடுகின்றனர். பண்பாட்டு அடிப்படையிலான முன்னெடுப்புகள்தான் பெரியாரியச் சிந்தனையின் மையப்புள்ளி என்பதனைக் கிராம்சியின் அணுகுமுறைகளிலிருந்து உணர்ந்து கொள்ளமுடியும்.

கிராம்சி காந்தியின் போராட்ட வடிவங்களைப் பிற்பற்றியதோடு அதனைக்குறித்து நேர்மறையான எண்ணங்களையும் கொண்டிருக்கிறார். இத்தாலியின் அடக்குமுறைகளுக்கெதிராகப் பண்பாட்டு வடிவங்களை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையினைக் குறித்துப் பேசிய கிராம்சி பண்பாட்டுச் சமூகங்களில் அரசியல் முன்னெடுப்புகளைவிட பண்பாட்டு முன்னெடுப்பு வடிவிலான நடைமுறை செயல்பாட்டு விமர்சனங்கள் முக்கியமானது என வலியுறுத்துகிறார். இந்த வகையான சமூக நிலைப்பாடுகளைக் குறித்து மார்க்ஸின் கருத்துக்களும் நோக்கத்தக்கது. இந்தியச் சமூகம் நிலைப்படுத்தப்பட்ட வடிவிலானது. எத்தகைய அரசியல் மாற்றங்கள் வந்தாலும் பண்பாட்டு அடிப்படையிலான மாற்றங்கள் ஏற்படுவதில்லை. "ஆசியக் குழுமச் சமூகத்தில் முன்னுரிமை அரசனின் ஆளுகை உரிமையாகவோ, தெய்வமாகவோ குறிக்கப்படலாம். இவ்வகைச் சமுதாயங்களில், எந்தவொரு தனிநபரும் தனது குலம் அல்லது சமுதாயத்தின் தொப்புள் கொடியிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்வதில்லை" (ந. முத்துமோகன், மார்க்சியம் வர்க்கமும் அடையாளமும், 2013, ப. 19) இந்தியச் சமூகத்தின் பிணைப்பு மணமுறையுடன் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வரும் குழுவின் பிளவுகளில் தங்கியிருக்கிறது. இந்த வகையான சமூகங்களில் ஆதிக்கம் செலுத்துவது அரசியல் மட்டுமல்ல. தெய்வமும் பண்பாட்டு வழக்கங்களும் என்பதனையும் சிந்திக்க வேண்டியுள்ளது.

•Last Updated on ••Thursday•, 02 •January• 2020 12:54•• •Read more...•
 

ஆய்வு: முல்லைப் பாட்டில் பண்பாட்டுப்பதிவுகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள்


முன்னுரை

பொதுவாகப் பண்பாடெனப்படுவது ஒருவகையில் வாழ்வியல் முறைகளைக் குறிப்பதாக அமையும். மனிதர்களது நடத்தைகள். அவர்களது நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் தொகுப்பாக இது காணப்படுகின்றது. அவ்வாறே இலக்கியங்கள் என்பனவும் மனித சமுதாயத்தைப் பண்படுத்தும் நோக்கில் அமைந்தவையே. மனித இனத்தையும், மனத்தையும் பண்படுத்துவதில் முல்லைப்பாட்டு சிறப்பு பெறுகின்ற தெனலாம். இவ்விலக்கியம் பண்பாட்டு பதிவுகளை இனங்காண்பதற்கு ஆதாரமாக அமைவது குறிப்பிடத்தக்கது.

முல்லைப்பாட்டு
தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்பெற்ற சங்க காலத்துத் தமிழ் நூல்களாகக் கருப்பெறுவன பாட்டும் தொகையுமாகும். இவ்விருவகை நூல்களும், அளவாலும் திறத்தாலும் பொருளாலும் காலத்தாலும் வகைப்படுத்தப்பெற்றன என்பர். இவ்விருவகை நூல்களும் தமிழ்மக்களின், நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், சமய, சமுதாய நம்பிக்கைகள், அகம் புறம் ஆகிய வாழ்க்கை நெறிகள் ஆகிய எல்லாவற்றையும் பொதிந்து வைத்திருக்கின்ற பேழைகளாக விளங்குவன.

•Last Updated on ••Sunday•, 02 •February• 2020 12:02•• •Read more...•
 

ஆய்வு: பாலைக்கலியின் பண்பாட்டுப் பதிவுகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள்


முன்னுரை:
சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள பண்டைத் தமிழர் தம் வாழ்வில், மொழியின் வாயிலாக வாழ்க்கை முறையினை எடுத்துக்காட்டும் இலக்கியக் கலையைக் கொண்டுள்ளனர். அதனை, இன்றைய வரையில் நம் முன்னோர் எண்ணங்களாகவும் உயரிய நோக்கங்களாகவும் அழியா செல்வமாகவும் போற்றுகின்றனர்.

மனிதனின் செயல்பாடுகள் செயற்பாடுகளுக்கான சிறப்புத் தன்மைகள், அதன் முக்கியத் துவத்தை கொடுக்கும் குறியீடாக அமைகிறது. ஒரு தனி மனிதனைச் சார்ந்தும், மக்களைச் சார்ந்தும் அறிய வேண்டிய பண்பாடு என்பது கற்கப்படுவது. குறியீட்டு நடத்தை முறையாக அமைவதுதான்.  சமூகத்தின் ஒரு உறுப்பினராக இருந்து நாம் கற்கும் பிற திறமைகளிலும், பழக்கவழக்கங்களிலும் அடங்கி இருக்கும் தொகுதியாகதான் நம் பண்பாடு உள்ளது. 'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்' என்று கலித்தொகையும் கூறும்.  பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல்.  மேலும் பண்பாடு என்னும் அமைப்பு பல வடிவங்களில் மனித சமுதாயத்தில் செயல்டுகிறது.  சமூகத்தில் உயர்ந்த பண்புகளை நிலைநிறுத்தி, அதன்மூலம் மக்களை நல்வழிபடுத்தவும் செய்கிறது. அத்தகைய பண்பாட்டுக் கூறுகள் எங்ஙனம் பாலைக்கலிப் பாடல்களில் பதிவாகியுள்ளது என ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாக உள்ளது.

•Last Updated on ••Saturday•, 28 •December• 2019 01:53•• •Read more...•
 

ஆய்வு: அந்தோனியா கிராம்சியின் சமூகவியல் சிந்தனைகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?சமூகவியல் என்பது ஓர் ஆய்வுமுறை என்பது மட்டுமல்லாமல், அது சமூகத்தைப் பற்றியும், அதன் அமைப்பைப் பற்றியும், அதன் அசைவியக்கத்தினைப் பற்றியும், பௌதீக நெறி நின்று விளக்கும் அறிவியல் துறையுமாகும். மக்கள் குழும உணா்வுடன் தங்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும் தமக்கான ஒருவிதப் பாதுகாப்பைப் பெறவும் உருவாக்கிக் கொண்டதே சமூக அமைப்பாகும். இது பல்வேறு அலகுகளாலும் பற்பல அடுக்குகளாலும் கட்டமைக்கப்பட்டதாகும். இத்தகைய சமூகக் கட்டுமானங்களைப் பகுப்பாய்வு செய்வதுடன் அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி நிலைகளை அறுதியிடவுமான அறிவுத்துறையாகவும் சமூகவியல் விளங்குகிறது.

சமூக இருப்பை உணர்தல் என்பதான தத்துவார்த்த தேடல் வரலாற்றுக் காலந்தொட்டே மனித சாராம்சத்தின் ஒரு பகுதியாக இருந்துவந்த போதிலும்     கி.பி. 19-ம் நூற்றாண்டில்தான் சமூக வாழ்வு பற்றிய அறிதலும் வாழ்நிலை சார்ந்த புரிந்துணர்வும் விஞ்ஞானரீதியில் முழுவதுமாகத் துளக்கமுறத் தொடங்கின. சமூகத்தில் மனித இருத்தலைப் பற்றிய புதிர்கள் தெளிவுறுத்தப்பட்டன.

இச்சமூகவியல் என்னும் அறிவுத்துறையின் தோற்றத்திற்குக் காரணமானவா் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஆகஸ்ட் கோண்ட் ஆவார். இவரே சமூகவியல் என்ற பெயரோடு இந்த அறிவுப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.1 சமூகம் தொடர்பான இயற்கைவழி விஞ்ஞானம் ஒன்றினைக் காண்பதே கோண்டின் பிரதான இலக்காக இருந்தது. இது மனிதகுலத்தின் கடந்தகால வளர்ச்சியை விளக்குவதுடன் வருங்காலம் பற்றி மதிப்புரைப்பதாகவும் இருந்தது. ஆகஸ்ட் கோண்ட்டைத் தொடர்ந்து பல்வேறு அறிஞர்கள் சமூகவியல்சார் சிந்தனைகளை வளர்த்தெடுத்துள்ளனர்..

சமூக நடத்தை விதிகளை ஆராய்வதும் அதற்கான காரண-காரிய தொடர்பை விளக்குவதும் சமூகவியலின் சிறப்பம்சமாக விளங்குகிறது. இது பிற சமூக அறிவியல்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. சமூக அறிவியலாளர்கள் கண்டறிந்த மூலங்களிலிருந்தும் பல்வேறு  தரவுகளைச் சமூகவியல் பயன்படுத்திக் கொள்கிறது. வரலாற்றியல், மானுடவியல், மொழியியல், பொருளாதாரவியல், இனவரைவியல், அரசியல், அறவியல், உளவியல் போன்ற பல்வேறு அறிவாய்வுத் துறைகளும் சமூகவியலுக்குப் பங்களிப்பைச் செய்துள்ளன.

•Last Updated on ••Friday•, 27 •December• 2019 02:00•• •Read more...•
 

ஆய்வு: வேலூர் மாவட்ட இருபெரும் சிவன் திருத்தல வரலாறும் கட்டிட அமைப்பும் – ஓர் ஆய்வு

•E-mail• •Print• •PDF•

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -முன்னுரை
வேலூர் மாவட்டத்தில் வேலூர்க் கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயமும் விரிஞ்சிபுரம் ஸ்ரீ மார்க்கபந்தீசுவரர் ஆலயமும் வரலாற்று சிறப்பு மிக்கவைகளாகவும் சிறந்த கட்டிட அமைப்பினை உடையவையாகவும் திகழ்கின்றன. அவற்றின் அமைப்பும் இலக்கியங்களிலும் வரலாற்றிலும் அவைகள் பெறும் இடத்தைக் குறித்தும் இக்கட்டுரையில் காணலாம்.

விரிஞ்சிபுர மார்க்கபந்தீசுவரர் கோயில்

கரன் என்னும் சுராசுரனுக்கு அருள்பாலித்த வரலாற்றையும் தென்கயிலாயக் கிரிப்பிரதட்சிண விழாவில் கரிகாற் சோழ பூபதிக்குத் துக்கம் காட்டிய வரலாற்றையும் இக்கோயில் உணர்த்துகின்றது.

“பாலிமாநதித் தெய்வநீராடிய பலத்தா
லாலமாயவ னேயமாயவன் புரத் தடைந்தான்
சாலுமப்பதி யடைந்திடு மரும்பெருந் தவத்தாற்
சூலபாணியாம் வழித்துணை மருந்தரைத் தொழுதான்”1

இதன் வழி, அரசன் தெய்வத் தன்மையுள்ள அப்பாலாற்றின் நீரில் மூழ்கிய பலத்தினால் அன்புடன் திருமால் பூசை செய்ததாகிய விண்டுபுரியிற் சேர்ந்தான். இவனைத் தொடர்ந்து கௌரி, பிரமதேவர், திருமால் ஆகியோரும் முனிவர்கள் பலரும் பாலாற்றில் மூழ்கி நீராடி மார்க்கபந்தீசுவரரைப் பூசித்து மலையை வலம் வந்தனர். இவ்வகையில் இவ்வழி துணையம்பதி தென் கயிலாயங்கிரி போன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனையே,

“மன்னிய விமானந்தோன்று மிடமெல்லாம் வானோர்நாடா
மின்னிசை முரசங்கேட்டு மிடமெலா மயனா டென்பர்
சென்னியர் துதினோசை தெரிவிடந் திருமாலூரா
முன்னிய சிவன்வாழ் கோயி லுருத்திர னுலகமாமே”2

சிவலிங்க பெருமான் வீற்றிருக்கிற இடமெல்லாம் தேவருலகத்துக்குச் சமானம் என்றும் அங்கு முழங்கும் இனிதான ஓசையுள்ள முழவு கேட்குமிடமெல்லாம் திருமால் லோகமென்றும் பரமசிவம் வீற்றிருக்கும் திருக்கோயிலானது திருகண்டருத்திர லோகமாகிய கைலாசம் என்றும் அத்தலத்தின் முக்கியத்துவத்தை இப்பாடல் உணர்த்துகிறது.    கரிகாற் சோழ பூபதிக்கு மார்க்கபந்தீசுவரர் கிரிப் பிரதட்சண விழாவின் போது அருள்புரியும் காட்சி, மாசி மாதம் அருணாசலேசுவரர் திருவண்ணாமலை பள்ளிக் கொண்டாப்பட்டில் வல்லாள மாமன்னர் காலமானதற்குத் திருக்கருமம் செய்வதைப் போல் இருந்தது. தென் கயிலாயகிரி முகப்பில் இடபம் இருந்து வருவதும் அங்குள்ள மலையாள அன்பர் இடபக்கொடி பறக்கவிட்டு அதில் வேட்டு வெடித்துத் தென் கயிலாயகிரி பிரதட்சிண விழாவில் மார்க்கபந்துவை வணங்கி, திருவிழா கொண்டாடுவதும் அன்று முதல் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிற சிறப்பாகும்.

•Last Updated on ••Thursday•, 05 •March• 2020 09:49•• •Read more...•
 

ஆய்வு: சங்ககாலச்சடங்குகளும் பெண்களின் நிலைப்பாடும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமாய் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருப்பன சங்க இலக்கியங்கள். தமிழின் செழுமைக்கு மட்டும் சான்றாய் நிற்காது பன்முகப்பதிவுகளைத் தன்னகத்தே கொண்டன இவ்விலக்கியங்கள் என்பது கூடுதல் சிறப்பு. அவற்றிலும் ஒரு காலச் சமூகத்தை அடையாளம் காட்டும் அற்புத இலக்கியங்கள். இதில் காணக்கிடப்பன பல. அவற்றுள் ஒன்று அக்காலத்திய சடங்குமுறைகளும் அதில் பெண்களுக்கான பங்களிப்பும் குறித்தது. பெண்ணியக்கோட்பாடு வேரூன்றி மரமாகி நிற்கும் இக்காலச்சூழலில் ஒவ்வொரு காலத்திய பெண்கள் பற்றிய பதிவுகளை, அவர்களுக்கானச் சமூகச் சூழலை இலக்கியங்களே வெளிப்படுத்தி நிற்கின்றன. அவ்வகையில் சங்ககால இலக்கியங்களில் வழி அறியலாகும் சடங்குகள் குறித்தும் அவற்றுள் பெண்கள் குறித்த சமூகநிலைப்பாடும் இங்கு ஆய்வுக்கு உரியதாகிறது.

சங்ககாலச் சடங்குகள்
வழிபாடுகளும் சகுனங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் மக்களின் வாழ்வில் சங்ககாலம் தொட்டு இயைந்த ஒன்றாக உள்ளமையை இலக்கியங்கள் வழி அறிய முடிகின்றன.

‘அருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசையின் வண்டார்ப்ப நெல்லொடு
நாழிகொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெருமுதுபெண்டிர் விரிச்சி நிற்ப’(முல்லைப்பாட்டு 7-11)

என்று முல்லைப்பாட்டு மக்களின் வழிபாடு மற்றும் நம்பிக்கை குறித்துச் சுட்டுகிறது. நெல்லையும் மலரையும் தூவி வழிபட்ட முறைமைகளையும் எந்தவொரு நிகழ்வையும் நிகழ்த்தும் முன்னர் நற்சொல் கேட்டு நடத்தும் நம்பிக்கையையும் பண்டைய மக்கள் வாழ்வில் பின்பற்றியமை குறித்து இவ்வடிகளின் வழி அறியமுடிகின்றது.

•Last Updated on ••Tuesday•, 17 •December• 2019 08:48•• •Read more...•
 

ஆய்வு: குறுந்தொகை காட்டும் வேட்டைக் குடியினா்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?- பூபதி .கு பகுதிநேர முனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்   முனைவர் ஆறுச்சாமி .செ, நெறியாளர் இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோவை.21 -


நாடோடியாகச் சுற்றித்திரிந்த கற்கால மனிதன் ஒரு குடும்பமாக, இனக்குழுவாக, சமுதாயமாக வளா்ச்சியுற்றுப் பின்னா் நிலவுடைமை, அரசுடைமைச் சமுதாயமாக சங்ககாலத்தில் தொடங்கியோ தொடா்ந்தோ குடிகளுள் ஒருவனாக மாறினான். நில அடிப்படையில் பிரிக்கப்பட்ட மக்கள் வேட்டுவா்கள், ஆயா், கானவா், உழவா், பரதவா் என்னும் வகைகளாகப் பகுக்கப்பட்டதை தமிழ் இலக்கணங்கள் கூறுகின்றன. குடிவழியோடு குயவா், தச்சா், பாணா், பொற்கொல்லா் போன்ற தொழில்வழிச் சாதியினரும் தோற்றம் பெற்றனா், ஒத்த குடிவழியோ ஒத்த தொழில்வழியோ ஒன்றாகக் கூடி ஓரிடத்தில் வாழ்ந்ததால் ஓா்குடிமக்கள் எனப்பட்டனா். குடிவழியறியப்பட்ட வேட்டுவா்களைப் பற்றி குறுந்தொகைப் பாடல்கள் வழி அறியமுயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

குறவா் குடி :

ஆதிமனிதனின் முக்கியத் தொழிலாக இருந்தது வேட்டைத் தொழில். மலைநிலம் சார்ந்த நிலங்களில் உருப்பெற்றதால் வேட்டைத் தொழில் குறிஞ்சித் திணை சார்ந்து அறியப்பட்டது. குறிஞ்சியோடு முறைமை திரிந்து பாலையாகப் படிமங்கொள்ளும் போதும் வேட்டைத் தொழில் தொடா்ந்ததை தமிழிலக்கியவெளியில் காணமுடிகிறது.

•Last Updated on ••Friday•, 13 •December• 2019 02:06•• •Read more...•
 

ஆய்வு: நீலகிரி படகர் இன மக்களின் காப்புத் திருவிழாவும் இயற்கை வாழ்வும்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -உயிரிகளின் அறிவுநிலையானது ஒன்றன் படிநிலையிலிருந்து அடுத்தவொன்றின் வளர்ச்சியாக அமைந்திருப்பதை உணரவேண்டியது இன்றியமையானதகும். தம் சூழலைச்  சுற்றி வாழும் உயிரிகளை உற்றுநோக்கி, இணங்கி வாழும் நிலையானது மனிதனின் பகுத்தறிவின் நோக்கமென்று கூறுவதில் மிகையில்லை. மனிதனின் பகுத்தறிவின்  வளர்ச்சிக்கு இப்படிநிலையே மூலமாக இருந்திருக்கக்கூடும். அந்நிலையில் நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் பலநிலைகளில் அரிய தன்மைகளைக் கொண்டு விளங்குகின்றன.

தமிழர்களின் நிலவமைப்பிற்கும், புறத்திணைக்கும் பெயர்க்குறியீடாக  அதற்கேற்ற தாவரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது நாம் அறிந்தவொன்றாகும். இது தமிழர்களின் சூழலியல் அறிவிற்குத் தக்கச் சான்றுமாகும். நீலகிரியில் வாழ்கின்ற படகர் இன மக்கள் தம் மரபார்ந்த சடங்கான “சக்கலாத்தி” எனும் நிகழ்வில் பயன்படுத்தும் தாவரங்களையும் அதன் குறியீட்டு நிலையினையும் இக்கட்டுரையானது விளக்கி ஆய்கின்றது.

நீலகிரியில் வாழ்கின்ற படகர்களின் வாழ்வியலானது பல்வேறு கலாச்சார, பண்பாட்டுக்கூறுகளை உள்ளடக்கியது. முன்னோர் வழிபாட்டினைத் தமது ஆதி வழிபாட்டாகக் கடைப்பிடித்து வருகின்ற படகர்கள் தம் முன்னோர்களை நினைத்து, அவர்களின் வழியில் தாம் வாழ்வதனைக் காட்டும் விதமாக நிகழ்த்தப்படும் சடங்கே இந்தச் ‘சக்கலாத்தி’ எனும் நிகழ்வாகும். இது படகர்களின் புத்தாண்டாகவும் கொள்ளப்படுகின்றது.

•Last Updated on ••Thursday•, 12 •December• 2019 01:02•• •Read more...•
 

இணையத்தமிழ் இதழ்களில் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் – 1

•E-mail• •Print• •PDF•

வல்லமை.காம் இணைய இதழில் முனைவர் வே.மணிகண்டன் எழுதிய இணைய இதழ்கள் பற்றிய கட்டுரை. ஒரு பதிவுக்காக இங்கு பதிவாகின்றது. - ஆசிரியர் -


வல்லமை.காம் (நவம்பர் 10, 20170)

இணையத்தமிழ் இதழ்களில் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் – 1தமிழ் இலக்கிய உலகின் இன்னுமொரு பரிணாம விளைவு இணையத்தமிழ். தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னேற்றம் ஊடகங்களின் வளர்ச்சியினையும் அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. ஓலைச் சுவடிகள், பக்கங்களாக மாறி இன்று இணையத்தமிழ் வரை வளர்ச்சியடைந்துள்ளது. இணையத்தைப் பொறுத்தவரையில் உலகின் பல பாகங்களிலும் வாழும் இணையப் பயனாளர்களிடம் இணையத்தமிழ் இதழ்களை மிக எளிதாக எடுத்துச் செல்லும் சக்தி படைத்தது. தகவல்களின் சுரங்கமாக விளங்கும் இணையத்தில் வலையேற்றப்படும் இணையத்தமிழ் இதழ்களில் உடனுக்குடன் படைப்புகள் வெளியிடவும், இலக்கிய விவாதங்களையும், கருத்துப் பரிமாற்றங்களையும் நடத்த முடிகிறது. படைப்பிலங்கியங்களுக்கு பெரும்பான்மையான இணைய இதழ்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் இணையத்தமிழ் இதழ்களில் எந்தெந்த நிலைகளில் தொகுக்கப்படுகின்றன என்பதைத் திண்ணை, பதிவுகள், நிலாச்சாரல், வார்ப்பு ஆகிய இணைய இதழ்களின் வாயிலாக இவ்வியல் ஆராய்கிறது.

திண்ணை இதழ் அறிமுகம்

ஜனநாயக ரீதியாக அனைத்துத் தரப்பினரும் தம்முடைய கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பொது மேடையாகத் திண்ணை இதழ் திகழ்கின்றது. மாறுபட்ட, முரண்பட்ட பல கருத்துகளுக்கும் களம் அமைத்துத்தரும் பணியை செவ்வனே திண்ணை இதழானது செய்கின்றது.

திண்ணை ஓர் இலாப நோக்கற்ற இணைய இதழாகும். இவ்விதழ் வார இதழாக 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதியில் இருந்து இணையத்தில் தரவேற்றம் செய்யப்படுகின்றது. திண்ணை இதழின் ஆசிரியர் கோ.இராஜாராம். திண்ணையின் தொடக்க கால இதழ்கள் பெரும்பாலும் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டு காலம் முழுமை பெறாது வந்துள்ளன. திண்ணையின் முதல் இதழில் இலக்கியக் கட்டுரைகள் எனும் பிரிவில் மட்டும் பாவண்ணனின் ஒளிர்ந்த மறைந்த நிலா என்னும் கட்டுரை தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றைய பிரிவுகள் எந்தப் படைப்புகளும் இன்றிக் காணப்படுகின்றன.

•Last Updated on ••Wednesday•, 11 •December• 2019 10:43•• •Read more...•
 

ஆய்வு: “காயி” (காற்று) - நீலகிரி படகர் இன மக்களின் வழக்காற்றியல் பார்வை

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -இயற்கைகோடு இயைந்து வாழ்கின்ற நீலகிரி படகர் இன மக்களின் வாழ்வியல் வழக்காறுகள் அவர்தம் இயற்கைப்புரிதல், வாழ்வியல் விழுமியங்கள், பண்பாடு மற்றும் கலாச்சாரப் பரிமாண நிலை போன்றவற்றிற்கான சிறந்த ஆவணங்களாகும். பஞ்சபூதங்களையும், மரம், கல், ஞாயிறு, நிலவு, பிறை போன்ற பல்வேறு இயற்கைக்கூறுகளையும் வழிபடுகின்ற படகர்கள் காற்றினையும் வணங்குகின்றனர். காற்றினைக் “காயி” என்று அழைக்கும் இவர்கள் காற்று சார்ந்த பல வாழ்வியல் வழக்காறுகளைக் கட்டமைத்து அதனை இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.

குழந்தைவளர்ப்பு மீது அதீத அக்கறையுடையவர்களாக விளங்குகின்ற இம்மக்களின் மருத்துவத்தில் குழந்தை மருத்துவம் சிறப்பிடம் பெறுகின்றது. அதே நிலையில் கருப்பிணி பெண்களையும், குழந்தைகளையும் பேணுவதில் இவர்கள் கட்டமைத்துள்ள வழக்காறுகளுள் காற்றினையும் அதனால் உறும் பாதிப்புகளைக் கையாளும் விதமும் குறிப்பிடத்தகுந்ததாகும். காற்றினால் மனித உடலுறும் பாதிப்பையும், அதற்குரிய தற்காப்பு மற்றும் மருத்துவத்தையும் அடியொற்றியதாக இவ் ஆய்வுக் கட்டுரை விளங்குகின்றது.

பஞ்சபூதங்களில் வலிமையின் கூறாக காற்று கருதப்படுவதைப் புறநானூறு சுட்டுகிறது (புறம், பா. 2). உலகம் மற்றும் உயிர்களின் இயக்கத்திற்குக் காற்று மிகவும் இன்றியமையானது. காற்று மனிதனின் உடலில், சூழலில் ஏற்படுத்தும் விளைவின் அடிப்படையில் படகர்கள் காற்றினைக் “காயி” (காற்று), “தொட்ட காயி” (பெரிய காற்று) என்று இருவகைப்படுத்துகின்றனர்.

•Last Updated on ••Saturday•, 07 •December• 2019 10:01•• •Read more...•
 

தொல்காப்பியர் யார்?

•E-mail• •Print• •PDF•

தொல்காப்பியர் தொல்காப்பியத்தின் தொன்மையை அறிய முயல்வதிலிருந்து தொல்காப்பியர் யார் என்ற விடையத்தை தேட இக்கட்டுரையில் முயல்கிறோம். தொன்மை என்றதும் கி.பி ஒன்றா அல்லது கி.மு.இருபத்தொன்றா என்ற ஆய்விற்குள் செல்லவில்லை. மாறாக இலக்கிய அறிவியலில் விளக்கப்பட்டுள்ள மனித வரலாற்று படிநிலை எட்டினுள் தொல்காப்பியர் எந்தச் சமூகக் கட்டத்தில் உருவெடுத்த சிந்தனையாளர் என்பதை அறிய முயல்கிறோம்.

1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
2.வேட்டை நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
4.விவசாய நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
5.உற்பத்தியின் மீதான வணிக நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் (தந்தை அதிகார சமூகம்)
7.நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம்  செய்தல் (தந்தை அதிகார சமூகம்)
8.மக்கள் தலைமையின் கீழ் சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல் (ஏற்றத்தாழ்வு மதிப்பிழந்த சமூகம்)

வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் என்ற ஆறாம் கட்டச் சமூகத்தின் முதிர்ச்சியில் வாழ்ந்த சார்லஸ் டார்வின் உயிரினங்களின் பரிணாமக் கொள்கையை அறிவியல் பூர்வமாக விளக்கியவர். குரங்கு இனங்களிலிருந்து மனித இனம் உயிரியல் பரிணாமக் கொள்கை அடிப்படையில் எப்படி படிமலர்ந்தது என்பதை அவரது ஆய்வு விளக்குகின்றது. தொல்காப்பியரோ அறிவின் பரிணாமக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உணர்த்துகிறார்.

•Last Updated on ••Sunday•, 02 •February• 2020 12:02•• •Read more...•
 

ஆய்வு: குறுந்தொகைப் பாடல்களில் புழங்கு பொருள் பயன்பாடும், பண்பாடும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?காலந்தோறும் மக்கள் பயன்படுத்தி வந்த பொருட்கள் அதன் தேவை மற்றும் தனித்தன்மை கருதி அந்தந்த சூழலுக்கு ஏற்ப தனி வடிவமோ, பொது அமைப்பில் மாறுதலோ கொள்கின்றன. அப்புழங்கு பொருட்கள்வழி மேற்கொள்ளப்படும் ஆய்வு புழங்கு பொருள் அல்லது பருப்பொருள் பண்பாய்வு என அறிஞர்களால்  வகைப்படுத்தப்படுகிறது. வாய்மொழி வழக்காறுகள், ஏட்டுச்சுவடிகள், கல்வெட்டுக்கள், பாறை ஓவியங்கள் போல புழங்கு பொருட்களும் அந்தந்த நில மக்களின் பண்பாட்டுச் சூழல் செய்திகளை காலங்களின் ஊடாகக் கடத்தும் திறனுடையவை. குறுந்தொகைப் பாடல்களில் காணக்கிடைக்கும் புழங்கு பொருட்களையும், அதன்வழி பண்பாட்டுச் சூழலையும் இக்கட்டுரை ஆராய்கிறது.


பயன்பாடு:
புழங்கு பொருட்களை அவற்றின் பயன்பாடு மற்றும் பயன்பாட்டுக்களம் சார்ந்து, தொழில்சார் கருவிகள், வேட்டைக் கருவிகள், வேளாண்கருவிகள், அன்றாட வாழ்வில் புழங்கும் பொருட்கள் எனப் பாகுபடுத்தலாம்.பெரும்பாலான அறிஞர்கள் புழங்கு பொருட் பயன்பாட்டை கலை (Art) என்றும் கைவினை  (Craft) என்றும் இரு உட்பிரிவுகளாகக் காண்கின்றனர் என மானிடவியலாளர் ஹென்றி கிளாசி குறிப்பிடுகிறார். பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையானவை என்று கொள்ள முடியாது. அவை மற்ற பயன்பாடுகளிலிருந்து நாம் வேறுபட்டு நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்கும் அப்பண்பாட்டை காலங்கடந்து நிலைநிறுத்துவதற்கும் காரணிகளாக அமையலாம்.

•Last Updated on ••Friday•, 06 •December• 2019 08:39•• •Read more...•
 

ஆய்வு: காட்டுநாயக்கர் பழங்குடிகளின் சடங்கும்,வழக்கும் (கூடலூர், நீலகிரி மாவட்டம்)

•E-mail• •Print• •PDF•

தமிழகத்தின் மேற்கே,மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைமாவட்டம் நீலகிரியாகும். இம்மாவட்டம் பல்வேறு தனிச்சிறப்புகளை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. அவற்றுள் முதன்மையானது யுனெஸ்கோவால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் உயிர்க்கோள காப்பகமும் அவை உள்ளடங்கிய உயிர்க்கோள மண்டலமும்  நீலகிரியாகும். தவிரவும் இந்தியாவெங்கும் இனங்காணப்பட்ட அருகிவரும்  தொன்மையான 75 பழங்குடி குழுக்களில் ஆறுவகையான தொல் பழங்குடிகளின்  ஒருமித்த வசிப்பிடமாகவும், பழங்குடிகள் உள்ளிட்ட பல்வேறு இனக்குழுமக்கள் வாழும் பகுதியாகவும்,15 க்கும் மேற்பட்டதிராவிட மொழிகள் பேசப்படும்  திராவிட மொழிகளின் நுண்ணுலமாகவும், சமூகவியல் , மானுடவியல், மொழியியல்,புவியியல்,சூழலியல் முதலான பல்துறை சார்ந்த  ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வுக்களங்களின்  ஆவணப் பெட்டகமாகவும் நீலகிரி விளங்கிவருகிறது.

உயிர்சூழல் மண்டலம்
பூமியில் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றுள் மனித இனமும் ஒன்றாகும். உயிர்க்கோளத்தில் உயிர் வாழ தேவையான சூழலை உருவாக்கித்தரும் அரிய இயற்கை அமைப்புகள் சில இடங்களில் மட்டுமே இருக்கும். இந்த இடங்களே உயிர்க் கோளத்தில் தேவையான சூழலை உருவாக்கித்தரும் என்பதால், அத்தகைய இடங்கள் உயிர்க்கோள் காப்பகங்கள் என ‘யுனெஸ்கோ’ அமைப்பு இனங்கண்டு  வருகிறது . அவ்வாறு யுனெஸ்கோ அமைப்பால் 1986 இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் உயிர்க்கோள் காப்பகமும்  நீலகிரியாகும். இங்கு  இலையுதிர் மற்றும் முட்புதர் காடுகள் ,ஈரப்பதம் மிகுந்த  பசுமை மாறாக் காடுகள் , சோலை புல்வெளிகள் ,சவானா புல்வெளி காடுகள்  முதலானவை இங்குள்ளன.அவற்றுள் உலகில் உள்ள 3238 பூக்கும் இனத்தாவரங்களுள் சுமார் 135 இனங்களும்  தவிரவும் அரியவகை பூச்சியுண்ணும் தாவரமான, டொசீ இமயமலைக்கு அடுத்தப்படியாக இங்குதான் உள்ளது.

•Last Updated on ••Sunday•, 02 •February• 2020 12:03•• •Read more...•
 

ஆய்வு: நீலகிரி - தோடர் இன மக்களின் வாய்மொழி வழக்காறுகள்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -நீலகிரி மாவட்டம் ஒரு பன்மயக் கலாச்சார மையம். உலகத் தொல்குடிகளுள் குறிப்பிடத்தகுந்தவர்களின் வாழ்விடம் இது. இவர்களுள் தோடர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். இதுவரை நடைபெற்றுள்ள நீலகிரிசார்ந்த பழங்குடிகள் ஆய்வுகளுள் அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இனக்குழுச் சமூகமாக விளங்குகின்றது தோடர்கள் எனும் ஆயர்ச்சமூகம். சங்ககாலம் தொட்டு உற்பத்திப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கத்தினர் ஆயர்கள். முல்லை நிலத்தினை தம் வாழ்வியல் களமாகக் கொண்டு வாழ்ந்த ஆயர்கள் ‘இருத்தல்’ எனும் தம் நிலத்திற்குரிய உரிபொருள்சார் ஒழுக்கத்தினைத் தம் வாழ்வோடு உட்செறித்தவர்கள். ஆயன், ஆய்ச்சியர், இடையன், இடைச்சியர், கோவலர் என்ற பெயர்களை உடைய முல்லைநில மக்கள் தம் பெயரமைப்பினைக் கால்நடைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டவர்களாகத் திகழ்கின்றனர். அஃறிணை உயிரிகளின் முக்கியவத்துவத்தினை உணர்ந்து, அதன்மீது தன் அன்பினையும், பண்பினையும் கட்டமைத்து, வாழ்வியல் மற்றும் பொருளாதார நிறைவினை அடைந்தவர்கள் ஆயர்கள். நீலகிரியில் வாழ்கின்ற தோடர்களும் மிகச்சிறந்த ஆயர் சமூகம் என்று அறுதியிட்டுக் கூறலாம்.

நில அமைப்பிற்கேற்பவும், தம் தொழில் மற்றும் வாழ்முறைச் சார்ந்து தத்தம் வாழிடத்தினைத் தகவமைத்துக் கொண்ட நீலகிரி மாவட்ட மக்களுள் மலையின் உச்சியில் தோடர்கள் வாழ்கின்றனர். உலகிலேயே 5500 அடிகள் உயர மலைப்பகுதியில் சைவ உணவை உண்டுவாழும் ஆயர்குடி தொதவர்கள் மட்டுமே (பக்தவச்சல பாரதி, தமிழகப் பழங்குடிகள், ப – 141). தோடர்கள் நீலகிரியில் வாழ்கின்ற மக்களால் ‘தொதவர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். இந்தப் பெயர்க்காரணம் குறித்து நோக்கும்போது மூன்று வகையான விளக்கங்கள் நமக்கு நீலகிரி மாவட்டத்தில் கிடைக்கின்றன. இதில் முதன்மையானதாக ‘பண்டையில் மன்னர்களால் தூதுவராக இங்கு அனுப்பப் பட்டவர்கள் நாங்கள். எனவே தூதுவா என்பது தொதவா என்று மருவி இன்று வழங்கப்பட்டு வருகின்றது’ என்கிறார் கோடநாடு மந்துவினைச் சார்ந்த  தோடர் கொட்டாட குட்டன்.

•Last Updated on ••Thursday•, 28 •November• 2019 10:20•• •Read more...•
 

ஆய்வு: நீலகிரி படகர் இன மக்களின் வாழ்வியலில் "பாம்பெ உல்லு"

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -நீலகிரி எனும் உயிர்ச்சூழல் மண்டலம் உணவுச் சங்கிலிக்கும், உணர்வு சங்கிலிக்கும் ஒத்திசைத்து நிற்கும் அட்சயப்பாத்திரம்.  ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்ற தொல்காப்பி.யரின் கூற்று பொருட்களுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்களுக்கும் பொருந்தும். பொருட்களுக்கு இடப்படும் பெயர்கள் அப்பொருட்கொண்ட குணத்தின் அடிப்படையில் காரணமாகவோ, இடுகுறியாகவே அமையும். பெரும்பாலும் இயற்கைசார்ந்த பொருட்கள் இடுகுறிப்பெயராகவே அமைவன. வாழ்களத்தைச் சுற்றியுள்ள இயற்கையைப் புரிந்துக்கொண்டு, அதன் கொடைகளான செடி, கொடிகளைப் பயன்பாட்டு மற்றும் குறியீட்டு நோக்கில் அதற்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்கள் பொதுவாக காரணப்பெயராகவே விளங்குகின்றது.

நீலகிரியில் வாழ்கின்ற படகரின மக்கள் ‘பாம்பெ உல்லு’ என்று அழைக்கும் காரணப்பெயர் கொண்ட ஒரு புல்வகை சூழல், பண்பாடு, பயன்பாடு போன்ற பல்வேறு பரிமாணங்களில் தன்னை முன்னிறுத்தும் போக்கு சூழலியல் நோக்கில் காணத்தக்கதாகும். தேவை, தேர்வுக்கருதி இவர்களின் வழக்காறுடன் ஒன்றியப் பொருளாகவும், முடிமுதல் அடிவரை பயன்பாட்டு நிலைக்கொண்டதாகவும் இந்த ஓரறிவு உயிர் விளங்குகின்றது.

உயிரிகளின் தொகுப்பாக விளங்கும் இப்புவியில் ஆறறிவு உயிரியான மனிதனின் வாழ்வில் சடங்குகள் புரிதலாலும், பண்பாட்டாலும் கட்டமைக்கப்பட்டவை. சடங்குகள் சார்ந்த புழங்குபொருட்களும் காரணகாரிய அடிப்படையில் அமைக்கப்படுபவை. படகரின மக்களின் பெரும்பாலான சடங்குகளில் பல்வேறு பண்புகளைக்கொண்ட தாவரங்கள் இடம்பெறுகின்றன. அத்தாவரங்களுள் 'பாம்பெ உல்லுவும்' ஒன்று.

•Last Updated on ••Wednesday•, 27 •November• 2019 01:16•• •Read more...•
 

ஆய்வு: நீலகிரி படகர் இன மக்களின் உணவுமரபில் விலக்கு (tabo) - முனைவர் கோ.சுனில்ஜோகி, -

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -இந்த ஞாலம் பல்நிலை உயிர் திரட்சிகளின் தொகுப்பு. உயிரிகளின் மூலம் இயக்கம். இயங்குநிலையின் மூலம் தேவை. உயிரிகளின் அடிப்படைத்தேவை ஆற்றல். ஆற்றலுக்கு அடிப்படை உணவு.

மனித உடலில் இயற்கையாக அமைந்துள்ள ஆற்றலின் நிலைப்பாட்டிற்கு உணவின் மூலம் கிடைக்கும் ஆற்றல் அடிப்படையானது. உயிரிகள் தன் ஆற்றல் கொணர்விற்கு உட்கொள்ளும் இயற்கை மூலங்கள் காற்று, நீர், உணவு ஆகியவை (குறள் 941). இவற்றைத் தன்னைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலிலிருந்து உயிரிகள் தன்னிறைவுச் செய்துக் கொள்கின்றன.

மானுடர்களின் உணவுநிலை பண்பாட்டின் முக்கியக் கூறுகளுள் ஒன்றாகும். மனிதனின் மனப்பக்குவத்தை அறிந்துக் கொள்ளும் நிலைகளனாகவும் மனிதனின் உணவு வரலாறுத் திகழ்கின்றது. உணவினைப் பச்சையாக உண்ட ஆதிமனிதன், உணவினை வேகவைத்து உண்ட பழங்குடியின மனிதன், உணவினைப் பக்குவப்படுத்தி முறைவயின் உண்ட வேளாண்யுக மனிதன், உணவினைப் பதப்படுத்தி உண்ணும் தற்கால மனிதன் என்று மனிதனின் மனப்பக்குவத்தினை வெளிக்காட்டும் ஆதாரங்களாக உணவுமுறைகள் திகழ்கின்றன.

உணவுசார் செய்முறை காலந்தோறும் பல மாற்றங்களைக் கண்டிருந்தாலும் அதன் உறுபொருள் இயற்கையின் பாற்பட்டதேயாகும். மக்களின் உணவு முறையானது காலச்சூழல், இடச்சூழல், கலாச்சாரச்சூழல் என்ற பன்முகப் பரிமாணங்களை உட்செறித்தது. ஒவ்வொரு இனமக்களுக்கும் இம்மேற்காண் அடிப்படையில் உணவுமுறையானது வேறுபடுகின்றது.

இத்தகு உணவுமுறை படைக்கப்படுகின்ற இடத்தினைப் பொறுத்து பல்வேறு நம்பிக்கைகளையும், வழக்காறுகளயும் உட்கொண்டது. நாட்டுப்புறம் சார்ந்த கலாச்சார கூறுகளுள் ‘விலக்கு’ (tabo) என்பதும் ஒன்று. ‘விலக்கு என்ற சொல் புனிதம் புனிதமற்றது என்ற இரண்டு மாறுபட்ட பொருளைக் கொண்டது’ (தே.ஞானசேகரன்.2010).

•Last Updated on ••Wednesday•, 27 •November• 2019 01:16•• •Read more...•
 

ஆய்வு: தொல்குடியும் தொல்தமிழும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?தமிழ்மொழியில் கிடைத்த இலக்கண நூல்களுள் முதன்மையானதாக வைத்து போற்றத்தக்கது தொல்காப்பியமாகும். தமிழ் மொழிக்குரிய வரைவிலக்கணமாக அமைந்த இந்நூலானது இலக்கண மரபுகளாக எழுத்து, சொல், பொருள் மரபுகளையும் அதன் பயன்பாட்டு முறைகளையும் மிக விரிவாக எடுத்துக் கூறுகிறது. அதிலும் குறிப்பாக, பொருளதிகாரத்தில் அகப்புற மரபுகளையும், மரபியல் என்ற இயலில் தமிழ் மொழிக்குரிய வழக்கு மரபுகளையும் மிக விரிவாக எடுத்துக்கூறுகிறது. தமிழ்மொழியின் இருநிலை வழக்கு மரபையும் அதில், வழக்கு மரபாக வழங்கி வருவனவற்றைத் தமிழினம் இடையறாமல் பின்பற்றி வருகின்றது என்பதையும் மரபியலில் பல நூற்பாக்களில் மிகத் தெளிவாகக் காண முடிகிறது. அத்தகைய மரபுச் சொற்கள்  பன்னெடுங்காலமாக வழக்கிலிருந்து  ஈராயிரமாண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பிய மரபியலில் இடம்பெற்றுள்ளன. எழுத்து வழக்கற்று பேச்சுவழக்கினை மட்டுமே கொண்டுள்ள திராவிட தொல்பழங்குடிகளின் வழக்கில் அத்தகைய மரபுச்சொற்கள் வழங்கி வருவது வியப்புக்குரியதே. அத்தகு சொற்களைக் கண்டறிந்து இம்மொழிகளின் உறவு நிலைகளை வெளிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொல்பழங்குடிகள்
மனித குலமானது பல்வேறு இனங்களாகவும், தேசிய இனங்களாகவும், சமூகங்களாகவும் வேறுபட்டுக் காணப்படுகின்றது. இவற்றுள் மிகவும் தொன்மையாக விளங்குபவர்கள் பழங்குடிமக்களாவர். பழங்குடிகளே, மனிதகுலத்தின் தொன்மையான நிலையினையும் அதன்பிறகு ஏற்பட்டுள்ள பல்வேறு படிநிலை வளர்ச்சியினையும் அறிந்துகொள்ள சான்றாக உள்ளனர்.  இந்தியா முழுவதும் பல பழங்குடி சமூகங்கள் இருந்தபோதும் தென்னிந்திய அளவில் பழங்குடிகளை மதிப்பிடுவது என்ற நிலையில் சென்னை அரசு அருங்காட்சியகக்; கண்காணிப்பாளராக இருந்த எட்கர்தர்ஸ்டன் 1885ஆம் ஆண்டு முதல் தென்னிந்தியா முழுவதும் குலங்களையும் குடிகளையும் ஆராய்ந்து 2000க்கும் மேற்பட்ட பழங்குடிகள், சாதிகள், குலப்பிரிவுகள் இருப்பதாக இனங்கண்டார். அதன்பின்னர் இந்திய மானிடவியல் மதிப்பாய்வகம் 1985இல் இந்தியா முழுவதும் 4635 சமூகங்கள் உள்ளதெனவும் அவற்றுள் பழங்குடி சமூகங்கள் 461 என்றும் ஆய்வின் வழி வெளிக்கொணர்ந்தது. தமிழக அரசுpன் அட்டவணைச் சாதிகள் அமுலாக்கச் சட்டப்படி (1976) தமிழகத்தில் 36 பழங்குடிச் சமூகங்கள் உள்ளன எனவும் வரையறுத்தது. மற்றொரு நிலையில், இந்தியாவில் 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது நாட்டின் பல பகுதிகள் மறுசீரமைப்புக்குள்ளாகின. அதனால் எல்லைகள் மாற்றம் பெற்றன. இதனால் பழங்குடிகள் பல்வேறு பகுதிகளில் சிதறுண்டனர். இதில் மாநில அளவில் பழங்குடிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதன் பிறகு மைய அரசு பழங்குடிகளுள் மிகத் தொன்மையானவர்களை இனங்கண்டு அவர்களுக்கு அரசின் உதவிகளை தர எண்ணியது. இதனால் 1969ஆம் ஆண்டு ‘சிலுஆவோகுழு’ ஒன்றை அமைத்து இந்திய அளவில் தொன்மைப் பழங்குடிகளை இனங்காணுமாறு பணிக்கப்பட்டது. அவ்வாறு வரையறுப்பதற்குப் பின்வரும் காரணிகள் அடிப்படையாகக் கொண்டது அக்குழு. அவை.

•Last Updated on ••Wednesday•, 20 •November• 2019 08:55•• •Read more...•
 

ஆய்வு: புராதனம் முதல் பொதுவுடைமை வரை (சமூக விஞ்ஞானக் குறிப்புகள்)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?இக்கட்டுரை சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகளின் புதுப்பிக்கப்பட்ட வடிவமாகும். மார்க்சிய சமூகவிஞ்ஞானம் கண்டறிந்த சமூக முடிவுகள் மனிதகுல வரலாற்றில் முப்பெரும் பிரிவுகளாக அறியப்படுகின்றது.

1.    வர்க்கங்கள் தோன்றாத சமூகம்
2.    வர்க்கச் சமூகங்கள்
3.    எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்ற பொதுவுடைமை சமூகம்

1.வர்க்கங்கள் தோன்றாத சமூகம்
மனித மூதாதையர்கள் வாழ்ந்த வர்க்கங்கள் தோன்றாத சமூகம். அதாவது, தனிச்சொத்துடைமை தோன்றாத சமூகம். இதனை ஆதிப் பொதுவுடைமை சமூகம் அல்லது புராதன பொதுவுடைமைச் சமூகம் என்பர். இக்காலக்கட்டத்தில் மனிதர்களுக்குள் வர்க்கப்பிரிவு தோன்றியிருக்கவில்லை. அதாவது, உழைப்பவர்கள், பிறர் உழைப்பைச் சுரண்டுபவர்கள் என்கின்ற பிரிவு தோன்றியிருக்கவில்லை. தாய் தலைமையில் காடு சார்ந்த பொருட்களைச் சேகரித்து வாழ்ந்தார்கள். வேட்டை, கால்நடை வளர்ப்பு, விவசாயம் ஆகியன கரு வடிவில் தோன்றியிருந்தன. பல லட்சம் ஆண்டுகளாக மனிதர்கள் இத்தகைய வர்க்கமற்ற புராதன பொதுவுடைமை சமூகத்திலேயே வாழ்ந்தார்கள்.

•Last Updated on ••Sunday•, 03 •November• 2019 09:22•• •Read more...•
 

ஆய்வு: காதல் வரலாறு

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?காதல் ஒரு குழப்பமான வாழ்க்கை. காதல் பற்றிய குழப்பங்களால் மனநோயாளிகளாக வாழ்பவர்களை எண்ணி முடிக்க முடியாது. காதல் உணர்விற்கு இத்தகைய எதிர்மறை தனிச்சிறப்பும் இருக்கின்றது. இத்தகைய தனிச்சிறப்பை சுட்டிக்காட்டுவதால் எங்களைக் கோபிக்காதீர்கள் காதல் விரும்பிகளே!

சமூகவிஞ்ஞானக் களங்களில் காதலித்து இணைந்தவர்கள் ஏராளம். சமூக மேன்மைக்காக உழைப்பதே இவர்களின் காதலுக்கு இதயத்துடிப்பு. இத்தகைய இதயங்களைப் பற்றிக்கொண்டே காதலின் வரலாறை ஆராயப்போகின்றோம்!
காதலாகி கசிந்து உருகிய பின்பு திருமணம் செய்யாமல் விலகியவர்களும் ஏராளம். காதலித்துத் திருமணம் செய்த பின்பு விவாகரத்துக்கு விரைபவர்களும் ஏராளம்.

திருமணம் செய்த பின்பு காதலர்களாக மலர்பவர்களும் இருக்கிறார்கள். திருமணத்தால் அறிமுகமான பின்பு விவாகரத்துக்கு வழியின்றி சகிப்புத்தனமாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

பல்வேறு நபர்களிடம் காதல் உறவைக் தொடர்ந்தபின்பு அறிமுகம் இல்லாதவரை திருமணம் செய்பவர்களும் உண்டு. திருமண வாழ்வில் ஈடுபட்டபின்பு பல்வேறு காதலர்களுக்காக ஏங்குபவர்களும் உண்டு. காதலித்தால் கண்டிப்பாக திருமணம் செய்தாக வேண்டுமோ என்பர் நம்மில் சிலர். திருமணம் செய்தவர்கள் மனதார காதல் செய்ய வேண்டுமோ என்பர் இன்னும் சிலர்.

திருமணம் செய்யாவிட்டால் எதற்கு காதலாம் என்று வாதிடுபவர்கள் ஒருபுறம். காதலிக்காவிட்டால் திருமண வாழ்வில் என்ன பலனுண்டு என்று சலித்துக்கொள்பவர்கள் மறுபுறம்.

காதலர்களின் கலப்புத் திருமணம் சமூகவிடுதலையைச் சாதிக்கும் என்கிறார்கள் சமூகப் போராளிகள். காதல் திருமணம் செய்தவர்களை ஆணவப்படுகொலை செய்கிறார்கள் சாதி வெறியர்கள். இத்தனை பெரிய பதட்டங்களுக்கும் குழப்பங்களுக்கும் இடையில் நாம் பேசியாக வேண்டும் காதலர்களே!

காதல் வேறு திருமணம் வேறு என்பதை எப்படி புரிய வைப்பது என முயல்கிறோம். சம்பந்தம் இல்லாத இவற்றை சம்பந்தம் செய்வதற்கு என்ன அவசியம் என்பதை உணர்த்த முயல்கிறோம்.

•Last Updated on ••Monday•, 28 •October• 2019 09:34•• •Read more...•
 

ஆய்வு: காப்பியமாந்தர் படைப்பும் கருத்துருவாக்கங்களும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?தமிழின் பெருமையை உலகிற்குப் பறை சாற்றியவை தமிழ் இலக்கியங்கள். சங்க இலக்கியங்கள் அற இலக்கியங்கள் காப்பிய இலக்கியங்கள் பக்தி இலக்கியங்கள் எனத் தொடர்ந்து இன்றைய நவீன இலக்கியங்கள் வரை ஒவ்வொரு படைப்புகளும் தன்னளவில் தனித்துவம் பெற்றனவாக விளங்கி வருகின்றன. குறிப்பாக ஆய்வுக்குரிய காப்பிய இலக்கியங்கள்.

அகத்தையும் புறத்தையும் பாடுபொருளாகக் கொண்ட சங்க இலக்கியங்கள் குறுகிய அடிகளில் மக்களின் உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடாய் வாழ்வியல் பதிவுகளாய் அமைந்தன. அற இலக்கியங்கள் அம்மக்களுக்கு நல்வழியை எடுத்தோதின. பின்வந்த காப்பிய இலக்கியங்கள் அகம், புறம், அறம், பக்தி என்ற பல நிலைப்பாடுகளையும் ஒருங்கே தன்னகத்துக்; கொண்டு தோன்றியதுடன் அவை தோன்றிய சமூகப் பதிவாய் அமைந்ததும் தனிச் சிறப்பாகும். தாம் தோன்றிய சமூகக் கட்டமைப்புக்குக் உட்பட்டு அதே நேரத்தில் சமூக மேன்மைக்குக் காரணமான தங்களது உள்ளக்கிடக்கைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ தங்கள் படைப்புகளின் வழி பதிவு செய்து வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் காப்பியப்;பெருமக்கள். இது இவர்களுடைய ஆளுமைத்திறனாகும். இவ்வாளுமைப்பண்பை உணர இவர்கள் தம் படைப்புகளை ஆழ்ந்து நோக்கவேண்டும்.

படைப்புகளை ஆழ்ந்து நோக்கினால் மட்டுமே படைப்பின் நோக்கம் பற்றியும் அறியஇயலும். அவற்றின்வழி அப்படைப்பு தோன்றிய சமூகம் பற்றியும் உணரவியலும். சமுதாயத்திற்குத் தன் உருவாக்கத்தின் வழி ஏதோ ஒன்றைக் கூறவியலும் ஆசிரியனின் உள்ளக்கிடக்கையை உணரமுடியும். அவ்வாறில்லாமல் ஓர்காப்பியத்தைச் சுவைக்காகப் பொழுதுபோக்கிற்காகப் புத்திலக்கியம் என்ற நிலையில் மட்டும் காண்பது சரியானதல்ல. காப்பிய ஆசிரியனின் ஒவ்வொரு படைப்பும் நல்லகருத்து உருவாக்கத்திற்கே. அந்த சமூகநோக்குச் சிந்தனையைக், கருத்தினைத் தான் உருவாக்கிய மாந்தர் படைப்புளின் வழி அவ்வாசிரியன் வெளிக்கொணருகின்றான்.

•Last Updated on ••Saturday•, 26 •October• 2019 08:32•• •Read more...•
 

ஆய்வு: இலக்கிய அறிவியல் (இலக்கியத்தின் சமூக விஞ்ஞான வரைவியல்)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?இலக்கியம் என்பது ஒரு மொழியின் வெளிப்பாடாகும். மொழி என்பது ஒரு சமூகத்தின் முழுமையான வெளிப்பாடாகும். சமூகம் என்பது சகமனிதர்களின் வாழ்வியல் திரட்சி ஆகும். மனித வாழ்வியல் என்பது சமூகப் பொருளுற்பத்தியையும் சமூகப் பண்பாட்டு நிறுவனங்களையும் சார்ந்து இயங்குதல் ஆகும். சார்ந்து இயங்குதலை சமூகக் கருத்தியல்கள் நெறிப்படுத்துகின்றன. கருத்தியல்களின் ஆகச்சிறந்த களமாக இலக்கியம் திகழ்கிறது. எனவே இலக்கியம் என்பது சமூக வாழ்வியலின் அதி முக்கியக் களமாகச் செயலாற்றுகின்றது. இலக்கியங்களை அணுகுதல் என்பது சமூகப் பண்பாட்டு நிறுவனங்களை அணுகுதல் என்பதன் அங்கமாகும். இதனால் மனித குலத்தின் சமூக வாழ்வியலை மதிப்பிடுவதற்கு ஒரு பொருத்தமானக் களமாக இலக்கிய அறிவியலை உணரலாம்.

இலக்கிய அறிவியல் என்ற தலைப்பிற்குள் இரண்டு சிந்தனைகளை முதன்மைப்படுத்துகிறோம்.

1.  இலக்கியத்தை வரையறுத்து விளக்குதல்.
2.  இலக்கியங்களை அணுகுகின்ற சுற்றிவளைக்கும் பார்வைகள்

இலக்கியத்திற்கு வரையறை கொடுப்பதென்பது மொழித் துறையில் சமூகவிஞ்ஞானம் ஆற்ற வேண்டிய அதிமுக்கியக் கடமையாகும். எனவே இங்கு இலக்கியத்தை விளங்கிக்கொள்ள வரையறை செய்துகொள்வோம்.

இலக்கியத்தை வரையறுத்து விளக்குதல்

எது இலக்கியம்?

இலக்கியம் என்பது இலக்கினை இயம்புதல் ஆகும். இலக்கு என்பது கருத்தியல் வெளிப்பாடாகும். இயம்புதல் என்பது பேசுதல் ஆகும். எனவே கருத்துக்களைப் பேசக்கூடிய களமாக இலக்கியம் இயங்குகிறது. இலக்கியத்தைத் துல்லியமாக வரையறுக்க முயலலாம்.

இலக்கியம் என்பது

சகமனிதர்களது வாழ்வியல் மேம்பாட்டிற்கான
ஒரு மொழியின் படைப்புகளாகும்

•Last Updated on ••Thursday•, 24 •October• 2019 08:02•• •Read more...•
 

ஆய்வு: இந்தியாவில் சாதிகளின் சதி (சமூகவிஞ்ஞான ஆய்வு)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?உலகில் வேறெங்கும் இல்லாத சாதியப்படிநிலை இந்தியாவில் மட்டும் எப்படி தோன்றியது. இதற்கான விடைகளைத் தேடி ஏராளமான ஆய்வுகள் நிகழ்ந்து வருகின்றன. பிறப்பால் உயர்வு தாழ்வு போதிக்கின்ற கற்பிதத்தை கற்பனையில் ஏற்றுக்கொண்டால் ஒழிய ஐம்புலன்களால் உணர முடியாத சாதியப் பண்பாட்டை இந்திய மூளைகள் எப்படி சுமந்தன? சங்க இலக்கியங்களில் சாதிப்படிநிலைகள் இல்லை. தொல்காப்பியத்தின் மரபியல் உணர்த்தும் படிநிலைகள் இடைசெருகலோ என்ற ஐயம் தொடர்கிறது. அம்பேத்கர் விளக்கப்படி ஆரியத் தொல்குடிகளிடமிருந்து சாதிப்படிநிலை பண்பாடாகக் கிளர்ந்தது என உணர முடிகின்றது. ஆனால் ஆரியர்கள் தொல்குடிகள் என்ற கூற்று மட்டும் முரணாக அமைகின்றது. சிந்து வெளி நாகரிகம் முதல் பொருந்தல், கொடுமணல், கீழடி அகழாய்வு மற்றும் மரபணு ஆய்வுவரை அனைத்தும் இந்திய வாழ்வியலில் இடையில் நுழைந்தவர்களே ஆரியர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றன. ஆரியர்களின் சமஸ்கிருதம் இந்திய தாய்மொழிகளில் இடம்பெறாத அந்நிய மொழியென்பதும் மற்றொரு ஆதாரமாகும். எனினும் சாதியப்படிநிலையின் தோற்றம் ஆரியர்களால் உருவாக்கப்பட்ட பண்பாடு என்பதில் முரணில்லை. எனினும் இக்கட்டுரை விளக்க முயல்கின்ற பொருண்மை எதுவெனில் அந்நியராக நுழைந்த ஆரியர்களின் கற்பிதத்தை இந்திய மூளைகள் எதற்காக தங்களின் பண்பாடாக ஏற்றுக்கொண்டன? ஒரு அந்நியரின் கற்பிதம் எப்படி இந்தியர்களின் தனித்துவப் பண்பாடாக உருமாறியது? இவற்றிற்கான விடயங்களே இக்கட்டுரை. ஆரியர்கள் இந்திய மக்களை திராவிடர்கள் என்ற சொல்லில் குறிப்பிட்டதைப்போல இந்தக் கட்டுரையிலும் திராவிடர் என்ற சொல்லே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது.

சமூகவிஞ்ஞான விளக்கப்படி சமூகத்தில் எந்த ஒன்றைப் பற்றிய ஆய்விற்கும் உற்பத்திமுறை பற்றிய ஆய்வு அடிப்படையாகும். சாதியப் பண்பாடு பற்றிய ஆய்விற்கும் இந்த வழிமுறை அவசியமாகின்றது. மனிதகுல வரலாற்றில் சமூகப் பொருளுற்பத்தியின் வளர்ச்சி படிநிலைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

•Last Updated on ••Thursday•, 24 •October• 2019 08:04•• •Read more...•
 

ஆய்வு: சு.தமிழ்ச்செல்வி புதினங்களில் பழமொழிகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


புதினம் என்பது அடிப்படை வாழ்வில் காணப்படும் நிகழ்ச்சிகளையும், மனிதர்களையும் அடிப்படையாகக் கொண்டு அவற்றிற்கு உயிரும், உணர்ச்சியும் ஊட்டிக் கற்பனையாகப் புனையப் படும் இலக்கியமாகும். ‘கூடிய வரையில் ஆசிரியர் தமக்குத் தெரிந்த வாழ்க்கைப் பகுதிகளையும், இடங்களையும் அமைத்தே நாவல் எழுதுதல் நல்லது’ என்பார் டாக்டர் மு.வரதராசனார். அந்த வகையில் தமிழ்ப் புனைகதைத் தளத்தில் மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை, ஆறுகாட்டுத்துறை, கண்ணகி என்னும் நாவல்கள் மூலமாகப் பயணித்துத் தனக்கெனத் தனி இடத்தைத் தக்க வைத்து கொண்டிருப்பவர் சு.தமிழ்ச்செல்வி.

மக்கள் வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடுகளேயான பழமொழிகளைச் சுட்டுவதற்குத் தமிழில் முதுசொல், முதுமொழி, பழமொழி, பழஞ்சொல், சொலவடை போன்ற பல சொற்களால் வழங்கி வருகின்றோம். இவை காலங்காலமாக மக்களின் பேச்சுக்களால் பயின்று வருகின்றன. அனுபவம் வாய்ந்த முதியவர்கள் இன்றும் தங்களின் பேச்சுகளுக்கு இடையில் பழமொழிகளைப் பயன் படுத்துகின்றனர். அதன் மூலம் அவர்கள் பேச்சு பொருள் பொதிந்ததாகவும் செறிவாகவும் மாறுகின்றன.

•Last Updated on ••Saturday•, 19 •October• 2019 06:57•• •Read more...•
 

ஆய்வு: அறப்பளீசுவரர் சதகம் காட்டும் வாழ்வியல் நம்பிக்கைகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


முன்னுரை :-
நம்பிக்கைகள் மக்களின் வாழ்வியலோடு ஒன்றியதாகும். நம்பிக்கைகள் சமுதாயத்தின் தேவைகளின் அடிப்படையில் தோன்றியவை. அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நம்பிக்கைகள் என்பர். 'நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு அம்மக்கள் சமுதாயத்தால் பாதுகாக்கப்படுகின்றன. மனிதனின் தன்னல உணர்வும் சமுதாய உணர்வுமே நம்பிக்கைகளை வளர்த்து வருகின்றன'. தனிமனித நம்பிக்கை காலப்போக்கில் சமுதாய நம்பிக்கையாக மாற்றம் பெறுவதுண்டு. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த ஆசாரக் கோவையும் பண்டைத் தமிழரின் வாழ்வியல் நம்பிக்கைகளை வெளிப்படுத்துகின்றன. மேலும் 'சிலவற்றை மறுக்க முடியாத உண்மை என்று கருதி ஏற்றுக் கொள்வதே நம்பிக்கை' என்று வரையறைச் செய்யலாம். சதக நூல்களுள் முதன்மைப் பெற்று விளங்குகின்ற அறப்பளீசுர சதகத்தில் வாழ்வியல் நம்பிக்கைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. அதனை எடுத்துக் கூறுவதே ஆய்வின் நோக்கமாக அமைந்துள்ளது.

அறப்பளீசுவரர் சதகம் :-

சிற்றிலக்கியங்களில் நீதி நூல்களாகவும் வரலாற்றுக் கருவூலங்களாகவும் பக்தி பனுவல்களாகவும் விளங்கும் சதக இலக்கியங்கள் ஒருவகையாகும். கார் மண்டல சதகம், சோழ மண்டல சதகம், தொண்டை மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், செயங்கொண்டார் சதகம் போன்ற புகழ்ப்பெற்ற சதகங்கள் தவிர முப்பத்தியொரு வகையான சதக நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளதாக கூறுவர்.

•Last Updated on ••Saturday•, 19 •October• 2019 06:57•• •Read more...•
 

ஆய்வு: அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் அயலகப்பண்பாடுகள் (14)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


பண்பாடு என்பது மாந்தர்களுடன் தொடர்புடைய ஒரு சொல்லாகும். இச்சொல் ஆங்கிலத்தில் CULTURE என்னும் சொல்லுக்கு இணையானப் பொருளில் தமிழில் பயன்படுத்தப்படுகின்றது. பண்பாடு பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும், அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத்தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது. மேலும், அது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், வாழ்வின் வழிமுறைகள், சமூகக் கட்டமைப்புகள் என்பனவற்றைச் சுட்டி நிற்கிறது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில்கள், கருவிகள் போன்றவையும் இப்பண்பாட்டில் அடங்கும்.

பண்பாடு – பொருள் விளக்கம்
பண்பாடு என்பது மக்களால் ஆக்கப்பெற்ற கருவி. அந்த ஊடகத்தைக் கொண்டே மக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர். மக்கள் தலைமுறை தலைமுறையாக குழுவாகச் சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும், பழக்கங்களும், மரபுகளும் சேர்ந்த தொகுதியே பண்பாடு ஆகும்.

•Last Updated on ••Saturday•, 19 •October• 2019 06:57•• •Read more...•
 

ஆய்வு: பாவைப் பாடல்களில் மரபும் இசையும் (13)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


முன்னுரை:
கால வெள்ளத்தில் கரையாமல் நிலைத்து நிற்கின்ற செம்மொழிகளுள் நம் தமிழ் மொழியும் ஒன்று.பழமைக்கும் பழமையாய் இலக்கிய வளம் உடையதாய் இருப்பதோடு புதுமைக்கும் புதுமையாய் காலத்திற்கு ஏற்ற இலக்கிய வடிவத்தோடும் உள்ளடக்கத்தோடும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு பொலிவுடன் விளங்குவது தமிழ் மொழி ஆகும்.

நிழற்புலி கனிச்சி மணி நெற்றியுமிழ் செங்கண்
தழற்புழை சுழற்கடவுள் தான்தான்

என்று கம்பரும் 'ஆதிசிவன் பெற்றான் அகத்தியன் எனை வளர்த்தான் 'என்று பாரதியும் தமிழ் மொழியின் பிறப்பை அநாதியான இறைவனுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றனர். அத்தகு பேறு பெற்ற தமிழ் மொழியின் பக்திப் பனுவல்களான தேவார திருவாசக திவ்ய பிரபந்தப் பாடல்கள் தமிழோடு பக்தியும் மரபும் இசையும் ஒன்றுக்கொன்று விஞ்சும் அளவிற்குப் பாடப்பட்டுள்ளன.

•Last Updated on ••Saturday•, 12 •October• 2019 01:04•• •Read more...•
 

ஆய்வு: சிலப்பதிகாரத்தில் பத்தினி வழிபாடு (12)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்ளூ ஊழ்வினை உருத்து-வந்து தன் பயனை ஊட்டும்ளூ உரைசால் பத்தினியை உயர்ந்தோர் போற்றுவர். இவை மூன்றும் சிலப்பதிகாரம் உணர்த்தும் பாவிகம் அல்லது உள்ளுறை என்கிறது சிலப்பதிகாரப் பதிகம்.பதிகம் கூறிய பாவிகப் பொருள்கள் மூன்றனுள் எஞ்சி நிற்கும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துதலே காப்பியத்தின் பாடுபொருள் என்பது தெளிவாகின்றது.

பத்தினித் தெய்வம்:
காட்சி, கால்கோள், நீர்ப்படை முதலிய முறைகள்ளூ வீரனுக்கு நடுகல் நடுதற்குரியவை, அவற்றை ஒரு பெண்மணிக்குத் தெய்வத் திருவுரு அமைப்பதற்குப் பயன்படுத்திப் பத்தினி வணக்கத்தைத் தமிழ்நாட்டில் காவியம் மூலம் தோற்றுவித்தவர் இளங்கேர் கோயில் மூலம் தோற்றுவித்தவன் சேரன் செங்குட்டுவன். பத்தினி வழிபாடு காப்பியத்தின் பாடுபொருளா எனக்  காணுதல் வேண்டும். கண்ணகி தெய்வ நிலையை நோக்கி வளர்ந்து செல்லுகின்றவள் என்பதைக் காப்பியத் தொடக்கத்திலேயே குறிப்பாகக் காப்பியப் புலவர் காட்டுகின்றார்.

•Last Updated on ••Saturday•, 12 •October• 2019 01:03•• •Read more...•
 

ஆய்வு: மக்கள் பண்பாட்டுக் கூறுகள் : திருக்கோவையார் (10)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


காலங்காலமாகத் தமிழரின் பெருமையினைப் பல்வேறு இலக்கியங்கள் பதிவுசெய்து வரினும், தமிழ் இலக்கிய,மொழி வளர்ச்சிக்குப் பக்தி இலக்கியங்களின் பங்கு அளப்பரிது. பக்தியின் மொழி தமிழ் என்னும் சிறப்புப் பெயருக்கேற்றவாறு சமயமும், இலக்கியமும் ஒரு சேர வளர்ந்தன. இறைவன் மீது தாம் கொண்ட அன்பினையும் அதனால் பெற்ற இறையனுபவத்தையும் கொண்டு பக்தி இலக்கியங்களைப் படைத்தனர். அவ்விலக்கியங்கள் மக்களின் உள்ளத்து உணர்வுகளை எடுத்தியம்பியதோடு தமிழினத்தின் அடையாளங்களைப் பறைசாற்றும் சிறந்த கருவியாக விளங்கியது என்பதில் ஐயமில்லை.

பண்படுவது பண்பாடு. பண்படுதல், சீர்படுதல், திருந்துதல் என்ற பல பொருள்களில் வரும். பண்பாடு என்ற பொருளினைத் தரும் ஆங்கிலத்தில் (ஊரடவரசந) என்னும் பெயர்ச்சொல் நிலப் பண்பாட்டையும், உளப்பண்பாட்டையும் குறிக்கும். இவ்விருவகைப் பண்பாட்டுள்ளும் மக்களைத் தழுவிய உளப்பண்பாடு சிறப்பிற்குரியதாகும். பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கநெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும், மனித சமுதாயத்தின் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும், பழக்க வழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதியாகும் என்று பக்தவத்சலபாரதி கூறுகிறார்.

•Last Updated on ••Tuesday•, 08 •October• 2019 22:44•• •Read more...•
 

ஆய்வு: கு.சின்னப்ப பாரதி படைப்பில் கிராமச் சூழல் (9)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


ஒரு நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்வது கிராமங்களாகும். இக்கிராமங்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கும் மனிதனின் வாழ்வாதாரத்திற்கும் பெரும்பங்காற்றி வருகின்றது. அத்தகைய கிராமங்கள் மனிதனுடைய இயல்பான வாழ்வையும், வாழ்க்கையின் எதார்த்தத்தைப் பிரிதிபலிக்கின்ற காலக்கண்ணாடியாகத் திகழ்கின்றது. வாழ்க்கை நடைமுறையும், பேச்சு வழக்குகளும், பழமொழிகளும், விடுகதைகளும், வழிபாட்டு முறைகளும், நம்பிக்கைகளும் விதைப்பது கிராமங்களேயாகும். இத்தகைய கிராமத்துப் பதிவுகளைச் சர்க்கரை எனும் நாவலில் எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி; குறிப்பிட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

நாட்டுப்புறமும் இலக்கியமும்
'கிராமம்' என்பது வேளாண் தொழிலையும், கால்நடை வளர்ப்பையும் கொண்டு பொருளாதாரத்தைப் பெருக்கி வாழக்கூடிய இடமாகும். இங்கு குழுவினரோடு வாழ்வதும், உற்றார் உறவினர்களோடும், உடன் பிறந்தோர்களுடனும் என வாழ்கின்ற நிலையே கிராம வாழ்க்கையாகும். இத்தகைய கிராமம் அல்லது குழுவில் ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என்று பல்வேறு நிலைகளில் இருப்பதைக் காணலாம். மேலும், இவர்கள் பல்வேறு கலை இலக்கியங்களைப் படைக்கிறார்கள் என்பதையும் கிராம மக்களின் வாயிலாக அறியலாம். இப்படிப்பட்ட கிராம மக்களின் படைப்பிலக்கியங்கள் (folklore) நாட்டுப்புற இலக்கியங்களாக உருவெடுக்கின்றன என்பதை இதன் வழி அறிந்துகொள்ள முடிகின்றது. 'folklore'  என்ற சொல் 'மக்களுடைய அல்லது நாட்டினுடைய அல்லது ஒரு இனத்தினுடைய கற்றல் மற்றும் அறிவு-சிறப்பாகப் பழங்காலத்திலிருந்து வழி வழியாக வழங்கி வருகிறது' (ஆறு.இராமநாதன், நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகள், ப.8) என்ற பொருளினைக் கொண்டது என்று கூறப்படுவதை இதன் வாயிலாக அறியலாம்.

•Last Updated on ••Tuesday•, 08 •October• 2019 22:44•• •Read more...•
 

ஆய்வு: நற்றிணையில் பரதவர்களின் ஆடைகளும் அணிகலன்களும் (8)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனியான நாகரிகமும் பண்பாடும் சிறந்து விளங்குகின்றன. இவை அந்நாட்டு மக்களின் பழக்கவழக்கங்களை எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடியாகத் திகழ்கின்றன. சங்க காலத்தில் நில மக்கள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு  நிலத்திற்கும் தனித்தனியான பண்பாடும் பழக்கவழக்கங்களும் இருந்தன. ஒரு நிலத்தில் உள்ள ஆணோ, பெண்ணோ அடுத்த நிலத்தில் உள்ள ஆண், பெண்ணைத் திருமணம் செய்யும்போது பண்பாட்டுப் பரிமாற்றம் ஏற்பட்டது என்று சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. நெய்தல் நில மக்கள் ஆடை, அணிகலன்கள் அணியும் முறை பற்றிய செய்திகளை எடுத்துரைப்பது இக்கட்டுரையின் நோக்காகும்.

பரதவர்கள் ஆடையணிதல்
சங்ககாலத்துத் தமிழர்கள் அவரவரின் தகுதிகளுக்கேற்ப ஆடையினை அணிந்து கொண்டனர். வசதி படைத்தவர்கள் உயர் ரக ஆடையினையும், சற்று குறைந்தவர்கள் அவருக்கேற்ற ஆடையினையும் அணிந்திருந்தனர். எவ்வகையானும் ஆடையின் இடையில் ஒர் ஆடையினையும் மேலே ஒரு துண்டும் அணிந்தனர். இதனை,


'உண்பது நாழி உடுப்பது இரண்டே'                (புறம் - 189)

என்று புறநானூறு சுட்டுகின்றது. அதோடு, மேலாடையும், கச்சாடையும் அணிவது பற்றி மதுரைக் காஞ்சியும் குறிப்பிடுவதை,

'திண்டேர்ப் பிரம்பில் புரளும் தானைக்
கச்சத் தின்க கழல்தயங்கு திருந்தடி'       (மதுரை - 435 - 436)

என்ற வரிகள் காட்டுகின்றன. மேலும்,

புதுமணத் தம்பதிகள் தம் முகத்தையும் உடலையும் புத்தாடைகளால் மூடிக்கொண்டதாகக் குறிப்புண்டு. 'வெண்ணிறப் புடவைகளை அணிந்து பெண்கள் பந்தாடினர். செக்கர் வானைப் போன்ற செவ்வண்ணமூட்டிய பத்தொழில் செய்யப்பட்ட நுண்ணியப் புடவைகள் மதுரையில் விற்கப்பட்டன'1 என்று அ. தட்சிணாமூர்த்தி குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.

•Last Updated on ••Tuesday•, 08 •October• 2019 22:23•• •Read more...•
 

ஆய்வு: காந்தியப் பண்பும் 'வெண்முகில்' நாவலும் (7)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


மொழிபெயர்ப்பு நாவல்களில் முதன்மை இடத்தில் சிறப்புற்று விளங்குவது மராட்டிய நாவலாசிரியர் காண்டேகர் நாவல்களாகும். இவருடைய வெண்முகில் எனும் நாவலில் அரசியல் கூறுகள் உள்ளிட்ட பல கூறுகள் காணப்படுகின்றன. இக்கூறுகளில் முதன்மையிடத்தில் விளங்குவது காந்தியக் கொள்கைகள் என்பதாகும். ஏனெனில், குமரி முதல் இமயம் வரை மகாத்மா காந்தியடிகளைப் பற்றியும், அவருடைய கொள்கைகளைப் பற்றியும் அறியாதவர்கள் எவரும் இல்லை எனலாம். அதனால் தன்னுடைய நாவல்களில் குறிப்பிடத்தக்க இடங்களில் காந்தியக் கொள்கையினைப் பயன்படுத்தியுள்ளார். இதற்கான காரணம் தற்காலத்தில் காந்தியத்தை மறந்துபோகின்ற தருணத்தில் மக்கள் இருக்கின்றார்கள். இதனை வலியுறுத்தும் விதமாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது
.
காந்தியக் கொள்கை
இந்திய வரலாற்றில் திலகரின் ஆதிக்கத்திற்குப்பின் ஈடு இணையற்ற ஒரே மாபெரும் தலைவராக இருந்தவர் மகாத்மா காந்தியடிகள் ஆவார். அவரின் சமயம், அகிம்சை, சத்தியாக்கிரகம், சர்வோதயம் போன்ற பல்வேறு கொள்கைகளைப் பின்பற்றி பலரும் சிறை சென்றனர். அவ்வரலாற்று நிகழ்வுகளைத் தம் படைப்பில் பதிவு செய்தனர் எழுத்தாளர்கள். அவ்வகையில், சுதந்திரப் போராட்ட வரலாற்றுக் குறிப்பினைக் காண்டேகரும் தன் படைப்பினுள் குறிப்பிட்டு எழுதியுள்ளார். இவ்வகையில் காந்தியக் கொள்கையினைப் பிரதிபலிக்கும் விதமாக இவருடைய வெண்முகில் நாவல் அமைந்துள்ளது.

•Last Updated on ••Tuesday•, 08 •October• 2019 06:51•• •Read more...•
 

ஆய்வு: 'மானவர்மன்' வரலாற்று நாவலில் தமிழர் உணர்வு (6)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


நாவல் படைப்பதற்கென்று தனிப்பட்ட மரபு முறைகளை இலக்கிய உலகம் வகுத்தமைத்துள்ளது. வரலாற்று நாவலைப் படைக்கும்போது மொழிக்குரிய பற்றுணர்வும்  தேவைப்படுகின்றது. அதாவது இலக்கிய பெயர்கள், இலக்கிய வசன நடை அமைப்பு, அகம் மற்றும் புறம் குறித்த செய்திகள் ஆகியவற்றைக் கொண்டு வரலாற்று நாவலை பெரும்பாலான படைப்பாசிரியர்கள் படைக்கின்றனர். அதேபோல மானவர்மன் என்னும் இவ்வரலாற்று நாவலிலும் ஒற்றுமை, வெற்றி பெறுதல், எதிரியைக் கண்டு அஞ்சாது எதிர்த்து நின்றல் முதலான தமிழர்களின் உணர்வு குறித்த செய்திகளை ஆசிரியர் உதயணன் அமைத்துள்ள விதத்தைக் கண்டறிந்து கூறுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழர் உணர்வு

மனித இனம் மொழிவுணர்வு கொண்டவையாகத் திகழ வேண்டும் எனப் பல்வேறுபட்ட அறிஞர்கள் தங்கள் எண்ணத்தில் ஒரே போல எடுத்துக்கூறி நின்றதைக் கண்டுணர்ந்துள்ளோம். அவ்வாறு இருப்பதனால்தான் தத்தம் படைப்புகளில் கூட தமிழர் என்ற உணர்வு மேலோங்கி நிற்கின்றது. இன்றைய காலத்தில் மட்டுமல்லாமல் அன்றைய காலத்திலிருந்தே இந்நிலை தொடர்கிறது. கவிஞர்கள், கதையாசிரியர்கள் என அனைவரும் ஒரே பாதையில் பயணிக்கின்றனர். இத்தன்மையைப் பற்றி, 'தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவற்கோர் குணம் உண்டு, அமிழ்தம் அவனுடைய வழியாகும், அன்பே அவனுடைய மொழியாகும்' (நாமக்கல் வெ.இராமலிங்கம், நாமக்கல் கவிஞர் கவிதைகள், ப.71) மேலும், 'தமிழுக்கு அமுதென்று பேர்-அந்தத் தமிழ் எங்கள் உயிர்' (கல்பனாதாசன், பாரதிதாசன் பாடல்கள், ப.85) என்று கவிதைகளின் பாடியிருப்பதற்கேற்ற வகையில் படைப்பாளிகளும் திகழ்கின்றனர்.

•Last Updated on ••Tuesday•, 08 •October• 2019 06:40•• •Read more...•
 

ஆய்வு: கடவுள் வரலாறு

•E-mail• •Print• •PDF•

கடவுளைத் தேடுதல்
கடவுளால் உலகம் படைக்கப்பட்டது. உலக உயிரினங்களுக்கு வாழ்க்கை அருளப்படுவதும், காக்கப்படுவதும், அழிக்கப்படுவதும் கடவுள் செய்த விதி வழியாகவே நிகழ்கின்றன. கடவுள் ஒருவரே, அவரை அடைகின்ற வழிமுறைகள்தான் வெவ்வேறு. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கடவுள், பல்வேறு கடவுள்களுக்கு பல்வேறு வழிமுறைகள். ஒவ்வொரு நெறிமுறையும் ஒவ்வொரு மதமாகும். ஆண் கடவுளே  ஒவ்வொரு மதத்திற்கும் தலைமை கடவுளாக இருக்கிறார். பெண் கடவுள் ஒன்றுகூட மதத்தின் தலைமை கடவுளாக இருக்கவில்லையே ஏன்? ஆண் கடவுள்கள் மதத்தின் அடையாளங்களாக நீடித்தபோதும், இயற்கையில் அடையாளங்களை ஆண் கடவுள்களால் கைப்பற்ற முடியவில்லையே ஏன்? நிலம், கடல், வனம், நதிகளின் பெயர்கள் ஆகியன தாய்மையின் அடையாளங்களாகவே இன்றும் சுட்டப்படுகின்றன. இவைகளுக்கு ஆண்மையின் அடையாளங்கள் ஏன் பொருத்தப்படவில்லை.  கண்ணகி என்ற கற்புக் கடவுளை கொற்றவை, கானமர் செல்வி, காளி, துர்கை என்ற பல பெயர்களில் வழிபட்டார்கள் என்பதாக சில ஆய்வாளர்கள் கருதுகிறார்களே, அந்த பெண் கடவுளர்களுக்கு கணவன்மார்களாக யார் இருந்தார்கள்? பொதுவாக, உலகைப் படைத்ததாக சொல்லப்படுகின்ற கடவுள், இந்த உலகில் எப்போது, எதற்காக, எப்படி உருவானார்? கடவுள் பிறந்து வளர்ந்த கதைதான் என்ன? கடவுள் பற்றிய சுவாரசியமான, குழப்பமான, முரண்பாடான பல்வேறு கதைகளைக் கடந்து, பொதுவான சில உண்மைகளை உணர்வதற்காக இக்கட்டுரை முயல்கின்றது. அறிவியல் தத்துவம் விளக்கும் சமூக வரலாறிலிருந்து கடவுளின் ஜாதகத்தை எழுத முயற்சிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.     கடவுளைத்தேடி காலம் கடந்து பயணித்த, காதலிலிருந்து கடவுள்வரை என்ற கலை இலக்கிய அனுபவத்திலிருந்து இக்கட்டுரையின் விவரிப்புகளை அமைக்க முயல்கிறேன். சமூக வரலாற்றில் கடவுளின் வழிபாடுகள் நான்கு நிலையில் கட்டமைந்துள்ளன.

1.இயற்கை வழிபாடு
2.தாய் தெய்வ வழிபாடு
3.தந்தை தெய்வ வழிபாடு
4.பத்தினி வழிபாடு


இயற்கையை வழிபடுதல்
கடவுள் தோன்றாத பழைய உலகின் எல்லை, மனித சமூகம் தோன்றாத ஓர் உலகமாக இருந்தது. உண்பதற்கும் வாழ்வதற்கும் பாதுகாப்பிற்கும் எந்த வசதிகளும் செய்யப்படாத நிலைமைகளே சூழ்ந்திருந்தன. இயற்கை ஆடையின்றி இயங்கிக்கொண்டிருந்தது. திட்டமிட்டு செய்யப்பட்டவையாக எந்தப் பொருள்களும் இல்லை. செயற்கையின் அடையாளமாக சிறு கோமணம்கூட கிடையாது. செயற்கையற்ற அந்தப் பழங்கால உலகின் பிரமாண்டங்களாகப் பலவித உயிரினங்கள் திரிந்துகொண்டிருந்தன.

•Last Updated on ••Monday•, 07 •October• 2019 08:54•• •Read more...•
 

ஆய்வு: காலந்தோறும் உழவு

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
மனிதனுக்குப் பொருளாதார நோக்கினைக் கற்பித்து மேம்படுத்தி அவனை நாகரீக வளர்ச்சியை நோக்கி நடைபயிலச் செய்தவை உழவாகும். தமிழக வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் அவை ஒன்றினை ஒன்று மிஞ்சியும்,ஒன்றோடு ஒன்று இணைந்தும் வளர்ந்துள்ளன. உழவு என்பது நிலம் சார்ந்த உற்பத்தித் திறனாகும். உழைப்பு என்ற கருத்தின் அடிப்படையில் உழவு என்னும் சொல் பிறந்திருக்க வேண்டும். உழவர், சதுர்த்தர், வளமையர், களமர், மேழியர், வேளாளர், ஏரின் வாழ்நர், காரகளர், புனைஞர், பின்னவர், கடையர், தொழுவர், மள்ளர் என்று பல பெயர்களைச் சங்க இலக்கியங்களும், நிகண்டுகளும் உழவர்களுக்குத் தருகின்றனர்.தொடக்கத்தில் வேளாளர் என்ற சொல் பெருந்தகையாளர் என்ற பொருளில் பயன்பட்டுப் பிறகு உழவர்களைக் குறிக்கத் தொடங்கியது. இன்று விவசாயிகள் என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் இச்சொல் பயிலப்படவில்லை. எனவே இச்சொல்லைப் பின்னாளில் வழக்கிற்கு வந்ததாகவே கொள்ள முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த உழவினை காலந்தோறும் எவ்வாறு வளர்ந்தனர் என்பதைப் பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

உழவின் தொன்மை
உழவுத் தொழிலின் தொன்மைப் பற்றிப் புறநானூறு பாடல் பின்வருமாறு விளக்குகின்றது. அவை,
“உணவு எனப்படுவது
நிலத்தொடு நீரே நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு”
(புறம் பா.எண் 18)

என்ற இப்பாடலில் இவ்வுடல் நீரின்றி அமையாது உணவால் அமைவது உணவையே முதன்மையாகவும் உடையது, உணவு தந்தவர் உயிரைத் தந்தவர். எனவே உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும் என்று கூறுகின்றது. மனிதனுக்கு இன்றியமையாத தேவையான உணவு தொடக்க நிலையில் தேடப்பட்டுச் சேகரிக்கப்பட்டது. அடுத்த நிலையில் உற்பத்தி செய்யப்பட்டது. தொடக்கநிலையில் இயற்கையாக விளைந்த பழங்கள் ,கிழங்குகள், வரகு, மூங்கில் அரிசி முதலியவை உட்கொள்ளப்பட்டனர். உணவைச் சேமித்து வைத்திருந்து உண்ண வேண்டி வந்த போது உணவு தேடல் நிலையிலிருந்து உற்பத்தி நிலைக்கு மாறியது இந்நிலையில் கடினமான நிலம் கிளரப்பட்டு வித்திடப்பட்டது. மழைநீர் பயன்படுத்தப்பட்டது. உற்பத்தி அதிக அளவில் தேவைப்பட்ட போது ஆற்றோரப் பகுதிகளுக்குக் குடியேறி உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்த முறையில் தான் உற்பத்தி வளர்ந்தது என்பதை அறிய முடிகின்றது.

•Last Updated on ••Monday•, 07 •October• 2019 08:42•• •Read more...•
 

'சோளகர் தொட்டி' : திருமணங்கள் உணர்த்தும் பண்பாட்டின் எச்சம்

•E-mail• •Print• •PDF•

'சோளகர் தொட்டி' : திருமணங்கள் உணர்த்தும் பண்பாட்டின் எச்சம்'சோளகர் தொட்டி' புதினத்தில் இடம்பெற்றுள்ள சோளகர் பழங்குடி மக்களது வாழ்வியலில் வெளிப்படுகின்ற ஒருத்திக்கு ஒருவன் குடும்ப அமைப்பின் நிலை குறித்து  விளக்குவதாக இக்கட்டுரை அமையும். இத்தகைய விளக்கங்களின் இறுதியாக தாய் தலைமை சமூகத்தின் பண்பாட்டு எச்சம் யாதென உணர்த்தப்படும். தமிழகத்தின் கர்நாடக எல்லைப்புற மலை கிராமத்தில் வாழும் சோளகர் பழங்குடிகளைப் பற்றிய சோளகர் தொட்டி என்ற புதினத்தை ச.பாலமுருகன் படைத்துள்ளார். இந்தப் புதினத்தைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் இடம்பெறும். அறிமுகத்தைத் தொடர்ந்து புதினத்தில் வெளிப்படுகின்ற குடும்ப முறைகள் விவரிக்கப்படும். இறுதியாக பாலுறவு உரிமை வரலாற்றிலிருந்து ஒருத்திக்கு ஒருவன் என்ற குடும்ப வடிவம் சோளகர் பழங்குடிகளிடம் பெற்றுள்ள அங்கீகாரத்தின் நிலை பற்றி விளக்கப்பெறும்.

சிவண்ணா என்ற சோளகனை மையமாகக் கொண்டு சோளகர் தொட்டி என்ற புதினம் அமைக்கப்பட்டிருக்கிறது. சிவண்ணாவின் தந்தை பேதன் தாத்தனின் வேட்டைதொழிலை கைவிட்டு கடுமையாக உழைத்து காட்டைத் திருத்தி வளமான சீர்காட்டு விவசாய பூமியை உருவாக்கினான். புதிதாக உருவெடுத்துள்ள வனத்துறை என்ற அரசதிகாரத்தால் சோளகர்களின் வேட்டைத் தொழில் படிப்படியாக ஒடுக்கப்பட்டு வருகின்றது. பேதனின் சீர்காட்டை ஒட்டி கோல்காரனது விவசாய பூமியும் இருக்கின்றது. கோல்காரனது மகன் கரடியை வேட்டையாடியபோது வனத்துறையின் ஒடுக்குமுறையிலிருந்து மீட்பதற்காக ஐநூறு ரூபாய் கடன்படுகிறார்கள். கடன் கொடுத்தவனாகிய மணியகாரரின் கையாள் துரையன் கோல்காரனது இயலாமையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நிலத்தை அபகரித்துக்கொள்கிறான். கோல்காரனது பூமியை ஒட்டியுள்ள சீர்காட்டையும் அபகரிக்க முயல்கிறான். மணியகாரரின் உதவியுடன் சீர்காட்டின் மீதான பட்டா உரிமையை அரசிடமிருந்து வாங்கிக்கொண்டு பேதனின் குடும்பத்தை காவல்துறையின் அதிகார உதவியுடன் வெளியேற்றுகிறான். பேதன் இறந்த பிறகு மணிராசன் திருவிழாவில் ஆவியாக வெளிப்படுகிறான். சீர்காட்டை மீட்கும்படி சிவண்ணாவிற்கு அறிவுறுத்துகிறான். சிவண்ணா தீக்கங்காணியாக வேலை செய்தபோது   மாதி என்பவளை விரும்பி திருமணம் செய்துகொள்கிறான். மாதியின் மகள் சித்தியை தனது மகளாக ஏற்றுக்கொள்கிறான். மூத்த மனைவி சின்னத்தாயி கோபமுற்று மகனை அழைத்துக்கொண்டு தாய்வீடு சென்றுவிடுகிறாள். ஒருநாள் காலை பொழுதில் போலிஸ்காரர்கள் ஜீப்பில் வந்து மிரட்டலாக அறிவித்தனர். “வீரப்பனை பிடிப்பதற்காக தமிழ்நாடு கர்நாடக போலீஸ் கூட்டு அதிரடிப்படை அமைச்சிருக்கு. நாங்க சொல்றபடி நீங்க கேட்டு நடந்துக்கணும். வீரப்பன் பற்றிய தகவல் தெரிஞ்சா உடனே தெரியப்படுத்தனும். நீங்க அவனுக்கு உதவி செய்தால் உங்களையும் சுட்டுக்கொல்வோம். வனத்திற்குள் வீரப்பனைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.  நீங்க யாரும் இனிமே வனத்திற்குள் எந்தக் காரணத்திற்காகவும் போகக் கூடாது. மீறினால் சுடப்படுவீர்கள்.” வீரப்பனை தேடுவதாகச் சொல்லி தமிழ்நாடு கர்நாடக காவல்துறையினரின் முகாம்கள் உருவெடுத்தன. எல்லா முகாம்களிலும் வீரப்பனின் பேரைச்சொல்லி அப்பாவி மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அதிரடிப்படையினரின் சித்திரவதை முகாம்களுக்குள் சிக்கித்தவித்த சிவண்ணா தப்பித்து வனத்திற்குள் ஓடிவிடுகிறான். வனத்தில் வீரப்பன் சிவண்ணாவிற்கு அடைக்களம் தருகின்றான். அதிரடிப்படையினர் சிவண்ணாவின் மனைவி மாதியையும் அவளது மகள் சித்தியையும் சிறைபிடித்துச் சித்திரவதை செய்கிறார்கள். கடுமையான சித்திரவதைகளுக்குப் பிறகு உயிர் பிழைத்துத் தொட்டிக்கு திரும்புகிறார்கள். சிவண்ணா மாதியை இரகசியமாக சந்தித்துச் செல்கிறான். மாதியின் விருப்பப்படி வீரப்பனை விட்டு விலகிவருகிறான். தலமலை அதிரடிப்படை முகாமில் சிக்காமல் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்திற்குச் சென்று சரண்டர் ஆகிறான். தலமலை முகாமில் சிக்காமல் சிவண்ணா உயிர்தப்பிய செய்தியை நாளிதழ் மூலமாக அறிந்துகொண்ட  மாதி மகிழ்ச்சி அடைகிறாள் என்பதாக புதினத்தின் இறுதிப்பகுதி நிறைவடைகின்றது.

•Last Updated on ••Saturday•, 05 •October• 2019 03:38•• •Read more...•
 

ஆய்வு: நற்றிணை – வாழ்வியலின் நாகரிகம் (5)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


உலகியல் வழக்கினும் நாடக வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
(தொல்)

அறிமுகம்
சங்க இலக்கியம் மக்களின் மூச்சாக உள்ளது. பண்பாடுகள் - கருத்தின் நாகரீகங்களாகவும் அமைந்துள்ளது. போற்றுதல் மரபினதாகவும் திகழ்ந்துள்ளது. விருந்தினரை உறவுகளாக கொள்வதுதான் மேன்மைகளாகும். புகழுக்காக வாழ்வதுதான் உயிர்களின் நிலைகளாகும்.

இயற்கைகளாலான இவ்வுலகில் வாழ்வோ தனித்துவமானது. தன்னம்பிக்கைகளோ எதிர்விசைகளை மூழ்கடிப்பது. உண்மை – பொய்மைகளை வெல்வது. நீதிநெறி தழுவாமல், ஒழுக்க விதிமுறைப்படி வாழ்வதுதான் மக்களினம். வாழ்க்கை முறையினை காலங்களுக்கேற்றார் போன்று இயைவதுதான் நற்றிணையின் சிறப்பமைவாகும். இத்தகைய தகவலோடும் கருத்தமைவின் ஒழுங்கியலையும் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

•Last Updated on ••Tuesday•, 08 •October• 2019 06:28•• •Read more...•
 

ஆய்வு: குறுந்தொகையில் பண்பாடும் உவமையும்! (4)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


முன்னுரை:-
உலகில் வாழும் அனைவருக்கும் பண்பாடு என்பது உயர்ந்த ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு நாட்டினரும் அவர்களின் பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் போற்றி பாதுகாத்து வருகின்றனர். அவ்வகையில் தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்தவர்களாக விளங்கியுள்ளனர். தமிழ் பண்பாடு என்பது தனித்தன்மை வாய்ந்தது ஆகும். பண்பாடு என்பது சமுதாயத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள், கலை, நீதி, நம்பிக்கை, அறிவு, சட்டம் போன்றவற்றைக் குறிப்பிடுகிறது. சங்க இலக்கியம் என்பது பண்பாட்டு கருவூலமாகத் திகழ்கிறது. மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்ற அடிப்படைக் கலாச்சாரத்தை தமிழ் பண்பாடு எடுத்துரைத்துள்ளது. உவமை என்பது இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் சிறந்த இலக்கண உத்திமுறையாகும். உவமை குறித்து முதன்முதலில் விளக்கிய நூலாகிய தொல்காப்பியத்தில் ஒரு பொருளை விளக்குவதற்கு அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளைச் சுட்டிக்காட்டுதல் உவமை என்கிறார் தொல்காப்பியர். சங்க அக இலக்கியத்தில் ஒன்றான குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள பண்பாடு சார்ந்த உவமைகளைக் குறித்து ஆய்வு செய்வது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

•Last Updated on ••Monday•, 07 •October• 2019 08:57•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கியங்களில் பண்பாட்டு பதிவுகள் (3)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


முன்னுரை:
பண்படுவது பண்பாடாகும். பண்படுதல் என்பது சீர்படுத்துதல்,செம்மைப்படுத்துதல் எனப் பொருள்படும்.

'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்'1(கலி.பா.133.8)

என்று கலித்தொகை விளம்புகிறது.

பண்பாடு என்பது தனிமனித ஒழுக்கத்தையும், தனிமனிதன் என்ற வட்டம் கடந்து குழு வாழ்க்கையையும் ஒரு சமுதாயத்தின் அல்லது பெரும் பகுதியின் முதன்மைப் பண்பாடாகும். சங்ககால மக்கள் வரலாற்றுப் பெருமையும் பண்பாட்டுச் செழுமையும் கொண்டவர்கள் ஆவர். சங்க கால மக்களின் செயல்கள் அனைத்தும் இருபெரும் பிரிவுகளாக இருப்பவை. அகம் புறம் என்ற உணர்வு நிலைகள் ஆகும்.

விருந்தோம்பல் பண்பு:
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே இல்லறத்தில் தலையாய நெறியாகும். முன்பின் அறியாத புதிய மனிதர்களை வரவேற்று உபசரிப்பதே 'விருந்தோம்பல்'எனப்படும். நம்முடைய உறவினர்களைப் போற்றி உபசரிப்பது விருந்தோம்பல் அல்ல. விருந்து என்ற சொல்லிற்கு புதுமை என்று பொருள் கூறுகிறார் தொல்காப்பியர்.

•Last Updated on ••Monday•, 07 •October• 2019 08:56•• •Read more...•
 

ஆய்வு: தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல்! (2)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


உலகில் தோன்றிய முதல் இனமாம் தமிழ் இனத்தின் தனிப்பெரும் சிறப்பு பண்பாடாகும்.  அந்தப் பண்பாட்டில் முதன்மை இடம் பெற்று விளங்குவது விருந்தோம்பல் பண்பே ஆகும். தமிழரின் விருந்தோம்பல் பண்பை வெளிப்படுத்துவதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

பண்பாடு விளக்கம் :
பண்பாடு என்றச் சொல்லுக்கு பக்குவப்படுத்துதல் அல்லது பண்படுத்துதல் என்பது பொருளாகும்.  மனிதனை மனிதனாக பக்குவப்படுத்துவது பண்பாடாகும்.  அதனால் தான் கலித்தொகையில் நல்லந்துவனார் 'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்' என்று குறிப்பிட்டுள்ளார்.  மனிதன் உணவு, உடை, உறவினர்கள், விருந்தோம்பல், இல்லற வாழ்க்கை, பொது வாழ்க்கை என அனைத்திலும் அனைவரிடத்திலும் அன்பாக நடந்து கொள்வதே தலைச் சிறந்த பண்பாடாகும்.  அந்த பண்பாட்டின் ஓர் அங்கமாக விளங்குவதே விருந்தோம்பல் எனும் பண்பாகும்.

•Last Updated on ••Monday•, 07 •October• 2019 08:55•• •Read more...•
 

ஆய்வு: பழந்தமிழரின் இரும்புப் பயன்பாடு (1)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


முன்னுரை
சங்ககாலத்தில் நெருப்பு சக்கரம் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு மனிதகுலத்தைப் புரட்சிகரமாக மாற்றிய கண்டுபிடிப்பு இரும்பின் கண்டுபிடிப்பு எனலாம். மனித வளர்ச்சியில் உலோகங்களின் கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்க மாறுதலுக்கு அடிப்படையாக அமைந்தது எனலாம். உலோகக் கண்டுபிடிப்புகளில் இரும்பின் கண்டுபிடிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில், இரும்பு மிக உறுதியானது. எளிதில் அழியாதது. இதனால் இரும்பு என்றும் பயன்படும் உலோகமாக இருந்து வருகிறது. இரும்பைக் கரும்பொன் என்றும் இராஜ உலோகம் என்றும் கூறுவர். பண்டைக் காலந்தொட்டே இரும்பு, கருவிகள் செய்யப் பயன்பட்டு வந்துள்ளது. பொருள்களின் விலையை அறுதியிட்டு மதிப்பு அளவிடும் கருவியாக எடைக் கற்களாக இரும்பு பயன்பட்டு வந்துள்ளது. பொன்னைவிட இரும்பு ஒரு காலத்தில் மிகுந்த விலை மதிப்புள்ள பொருளாக இருந்துள்ளது.

இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட காலம்
உலக வரலாற்றில் இரும்பின் காலம் கி.மு. 1600 – கி.மு. 1000 வரை எனக் கூறப்படுகிறது. மனிதன் முதன்முதலில் இரும்பைக் கண்டறிந்த காலம் கி.மு. 3000-இல்ளூ ஆனால் பயன்படுத்தியதோ கி.மு.1500-இல்தான்.

•Last Updated on ••Monday•, 07 •October• 2019 08:55•• •Read more...•
 

ஆய்வு: தொல்காப்பியரின் துறைக்கோட்பாட்டுச் சிந்தனைகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
காலப் பழமை கொண்ட தொல்காப்பியம் தம் கால இலக்கியங்களைக் கொண்டு இலக்கணம் படைத்துள்ளது.இதன் பின்னர் தோன்றிய சங்க இலக்கியங்கள் பழந்தமிழரின் பண்பாடு நாகரிகத்தை வடித்துத்தந்தன. அதனால் அவற்றை இலக்கியங்களாகப் பார்ப்பதோடு வரலாற்று ஆவணங்களாகவும் நோக்க வேண்டியுள்ளது. அவ்விலக்கியங்களில் பொருள் மாறாத்தன்மை, அமைப்பு மாறாத்தன்மை ஆகியவை அதன் நிலைத்த தன்மைக்குக் காரணங்களாக அமைகின்றன. அவ்வகையில் நோக்கும் போது தொல்காப்பிய இலக்கண அமைப்பிற்கு ஏற்பச் சங்க இலக்கியங்கள் இமைந்துள்ளனவா, அதன் துறை பகுப்பு முறை பொருத்தம் உடையதுதானா என்பதை ஆராய்ந்து அறிவது இன்றைய ஆய்வுலகில் தேவையான ஒன்றாகிறது. அத்தகைய வழியில் தொல்காப்பியரின் துறை பற்றிய செய்திகளை விளக்கிக் கூறுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

துறை
சங்க அகப்புற இலக்கிய மரபாகத் துறை என்ற ஓர் அறிய வகை சுட்டப்படுகின்றது. இத்துறை நாடக மரபிற்கு ஒரு முருகியல் அமைப்பாகும். என்னையெனின் நாடக மாந்தரை அறிமுகப்படுத்தும் வகையில் ஓர் அங்கம், அரங்க நாடகத்தில் உண்டு. அவ்வாறே அகப்பொருள் நாடகத்தைக் காட்சிகளாக எளிய முறையில் தருவது துறை என்னும் செய்யுளுறுப்பாகும். தொல்காப்பியர் புறப்பொருள் துறைகளை விளக்கிக் கூறுமளவு அகப்பொருள் துறைகளை விளக்க முற்படவில்லை. ஆனால் கூற்றுக்களை வரை முறைப்படுத்தி விளக்குகின்றார். தொல்காப்பியர் துறையினை,

“அவ்வவ மாக்களும் விலங்கும் அன்றிப்
பிற அவன் வரினும் திறவதின் நாடித்
தத்தம் இயலான் மரபொடு முடியின்
அத்திறந்தானே துறை எனப்படுமே”
(தொல்.செய்.நூ.207)

என்கிறார். அதன் பயன் என்ன என்பதை,

“அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்” (தொல்.செய்.நூ.208)

மேற்காணும் இவற்றைக் காணும்போது ஒரு பாட்டுள் துறை என்பது அகமாந்தர், புறமாந்தர் போன்றவர்களின் செயல்களும், விலங்கினங்களின் செயல்களும் அவை அல்லாமல் பிற வந்தால் அவற்றையும் தெளிவாகக் கண்டு அவற்றின் செயல்களின் அடிப்படையிலும் பொருள் காண வேண்டும். அவ்வாறு கண்டதை அதனதற்கு ஏற்றாற் போல மரபொடு முடிக்கும் வெளிப்பாட்டுத் திறனே துறை என்பதைப் புலப்படுத்துகிறது. இது அந்தப்பாட்டுள் கிடக்கும் பரந்த பொருளையும் உணர்த்தும் தன்மையினையுடையது. பின் அந்தப்பாட்டைப் படிக்க முற்படும் முன் அதன் பொருளெல்லாம் அறிய ஒரு நுழைவாயிலாக அமைந்தது. இது பாடலின் பொருளைப் பிறருக்கு உணர்த்துதல் பொருட்டே அமைக்கப்படும் என்றும் அறியலாம். “துறை வகை என்பது முதலுங் கருவும் பிறழ வந்தாலும் இஃது இதன்பாற்படும் என்று ஒரு துறைப்படுத்தற்குரிய கருவி செய்யுட்கு உளதாகச் செய்தல்” என்ற மு.இராகவையங்கார்(தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, ப.169)விளக்கம் ஒப்புநோக்கற்குரியது. தொல்காப்பியர் கருத்துப்படி நோக்கின் துறை மரபு வழுவாமல் அவற்றிற்குரிய பண்பைச் சுருக்கமாகக் கூறுவது எனலாம்.

•Last Updated on ••Wednesday•, 11 •September• 2019 06:53•• •Read more...•
 

ஆய்வு: திருஞானசம்பந்தர் பாடல்களில் சிவனின் அட்டவீரட்டத் தொன்மங்கள் – III

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?காலனை உதைத்த தொன்மம்

திருஞானசம்பந்தா் பாடல்களில் சிவன் மார்க்கண்டேயரைப் பிடிக்க வந்த காலனை, உதைத்த தொன்மம் மிகுதியான இடங்களில் வருகிறது.

“காலற் செற்ற மறையவன்”1

“காலன் தன்னை ஒல்க உதைத்தருளி”2

“காலன் தறில் அறச் சாடிய கடவுள்”3
“காலன் மடியவே”4

“கூற்றமுதைத்த குழகன்”5
“கூற்றுதை செய்த”6

போன்றவை முதல்திருமுறையில் இடம்பெற்ற காலனை உதைத்த தொன்மக் குறிப்புகளில் சிலவாகும். இவை ஏன் திருஞானசம்பந்தரால் திரும்பத் திரும்பத் கூறப்படுகின்றன என்பதை ஆராய்ந்து பார்த்தால் சில விளக்கங்களைப் பெற முடியும்.

வடமொழியில் யமன் என்றும் தமிழகத்தில் கூற்றுவன் என்றும் கூறப்படும் தெய்வமே தொல்பழம் சமயத் தெய்வங்களில் ஒன்றாகச் சுடலை மாடன் என்ற பெயரில் வணங்கப்பட்டது. மக்களின் சமய வாழ்வின் தொடக்கம் மரணத்தைப் பற்றிய அச்சம் அதன் பிறகான வாழ்வு பற்றிய சிந்தனையை அடியொற்றியே இருந்திருக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரையில் நடுகல் வணக்கம் எனப்படும் நீத்தார் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வந்துள்ளது. அதனைத் தொடா்ந்து தமிழ்மக்கள் கூற்றுவனைக் கடவுளாக, வணக்கத்திற்குரியவனாகப் போற்றியிருக்கின்றனா்.

சுடுகாட்டுப் பகுதிகளில் மிகுதியாகக் காணப்படும் கள்ளி நிழலில் அமா்ந்துள்ள ஒரு கடவுள் பற்றிய குறிப்பு புறநானூற்றில் காணப்படுகிறது (புறம்.260). இது சுடலை மாடனைக் குறிப்பதாக இருக்கலாம்7 என்ற க. கோதண்டராமன் கூறுவார்.

•Last Updated on ••Friday•, 06 •September• 2019 07:08•• •Read more...•
 

ஆய்வு: திருஞானசம்பந்தர் பாடல்களில் சிவனின் அட்டவீரட்டத் தொன்மங்கள் – II

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?காமனை எரித்த தொன்மம்

திருஞானசம்பந்தா் பாடல்களில் காமனை எரித்த கதை பல பாடல்களில் இடம் பெறுகிறது. பல்லவா் கால பக்தி இயக்கம் சமண-பௌத்தத்தைக் கடுமையாக எதிர்த்தது. என்பதும் அச்சமயக் கொள்கைகளுக்கு நோ் எதிராகச் சில கருத்துக்களை முன்னிறுத்தின என்பதும் பக்தி இயக்க கால சமய வரலாற்றை ஆராயப் புலப்படுகிறது. சமணமும்-பௌத்தமும் இல்லறம் மறுத்துத் துறவறம் பேசும் கொள்கையுடையனவாக இருக்க வைதீகம் மணவாழ்க்கையை வலியுறுத்தி அதிலிருந்தே துறவறம் மேற்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. புத்தரும், மகாவீரரும் காமத்தைக் கடந்தவா்கள் என சமண-பௌத்தம் முன்வைக்க, காமத்தைக் கொன்றவன் என்ற தொன்மத்தைப் பக்தி இயக்கவாதிகள் முன்வைத்தனா். திருஞானசம்பந்தர் பாடல்களில் காமனைக் கொன்ற தொன்மம் பரவலாக எடுத்துச் சொல்லப்பட்டாலும் சிவன் உமையோடு இன்பம் காண்பதையும் பரவலாகக் கூறிச் செல்கிறார்.

“கண்ணிறைந்தவிழி யின்னழலால்;வரு
காமன்னுயிர் வீட்டிப்
பெண்ணிறைந்த வொரு பான் மகிழ்வெய்திய
பெம்மானுறை கோயில்”
1

காமனைத் தன் கண்ணால் எரித்துச் சாம்பலாக்கிய சிவபெருமான் உமையம்மையோடு மகிழ்ந்தும் இருக்கிறார் எனும் கருத்து மேற்கண்ட பாடலடிகளால் விளங்குகிறது.

மேற்கண்ட பாடலடிகளால் சிவன் உமையம்மையோடு காமத்தைத் துய்ப்பவனாகவும் அதே சமயத்தில் காமத்தைக் கொன்றவனாகவும் காட்சிப்படுத்தப்படுகிறார். வைதீக நெறியில் பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்ற படிநிலைகள் துறவறத்திற்கு வலியுறுத்தப்படுகின்றன. அதாவது ஒருவன் பிரம்மச்சரியனாக இருந்து அதன்பின் இல்லற வாழ்க்கையைத் துய்த்து அதன்பிறகு கானகம் சென்று தவம் புரிந்து இறுதியிலேயே துறவை மேற்கொள்ள முடியும். அதனையொட்டியே மனைவாழ்க்கையிலிருந்தே துறவறத்தைத் திருஞானசம்பந்தரும் போற்றுவதைக் காணமுடிகின்றது. அதனை வெளிப்படுத்தவே இத்தொன்மங்கள் இடம்பெறுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் காமத்தையும் காதலையும் கொண்டாடிய தமிழ்ச் சமூகத்தில் இல்லறத்தை வெறுக்கும் சமண பௌத்தக் கொள்கைகளைவிட இல்லறத்தை வலியுறுத்தும் சைவக் கொள்கைகள் உவப்பபூட்டுவனவாக இருந்திருக்கலாம். சிலம்பு நா. செல்வராசு பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

•Last Updated on ••Friday•, 06 •September• 2019 07:08•• •Read more...•
 

ஆய்வு: நற்றிணையில் மனிதநேய உணர்வுகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையுடையது சங்கச் செவ்வியல் காலம். பாட்டும் தொகையுமாகிய சங்க நூல்களுள் நற்றிணை முதலிடம் பெற்றுள்ளது. நற்றிணை நானூறு என வழங்கப்பெறும் நற்றிணைப் பாடல்களில் சங்கச் சான்றோர்களின் மனிதநேய உணர்வுகள் மேலோங்கி நிற்கின்றது. மனிதன் சகமனிதனிடத்து வெளிப்படுத்தும் மனிதநேயம் மனிதன் மனிதன் அல்லாத பிறஉயிர்களிடத்து காட்டும் மனிதநேயம் என்று மனித மனத்தில் பொதிந்து கிடக்கும் அன்பு, அருள், இரக்கம், அரவணைப்பின் மூலமாக வெளிப்படுகின்ற மனிதநேயம் நற்றிணை முழுவதும் பரந்து காணப்படுகிறது. நற்றிணை வழி வெளிப்பட்டுள்ள சங்கச் சான்றோர்களின் மனிதநேய உணர்வுகளை வெளிக்காண்பிப்பதாக இக்கட்டுரை அமைகிறது. 

அன்புடைமை
உலகம் நிலைபெற்று நீடுவாழ்வதற்கு அன்பு தலையாய ஒன்று. பிற உயிர்களிடத்து அன்பு செலுத்தி அரவைணைத்து வாழுகின்ற வாழ்க்கையில் அனைத்து உயிர்களும் இன்பம் எய்துகிறது. நற்றிணையில் தலைவி தன் சுற்றத்தாரிடத்தும் ஆயத்தாரிடத்தும் கொள்கின்ற அன்பின் மிகுதி அவளுக்கிருக்கின்ற மனிதநேயத்தை வெளிப்படுத்துகிறது. உடன்போக்கிற்காகத் துணிந்த தலைவி பிறர் அறிந்திடாதவாறு தம் கால்களிடத்து அணிந்திருந்த சிலம்பினைக் கழற்றி விளையாட்டுப் பொருட்கள் நிறைந்த கூடையில் வைப்பதற்குச் செல்கிறாள். அப்பொழுது அவளையும் அறியாமல் அவள் கண்கள் நீரைச் சொரிந்தன. விடியும்பொழுது தான் (உடன்போகிவிட்டால்) இல்லையென்பதை வரிகள் மேலிட்ட பந்தும் சிலம்பும் உணர்த்தும். அதனைக் காணும்போதெல்லாம் தன் சுற்றத்தினரும் ஆயத்தினரும் துன்பமுற்று வருந்துவர் என்று உடன்போவதைத் தவிர்த்தாள். இச்செய்தியை,

அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண் 
வரிப்புணை பந்தொடு வைஇய செல்வோள்
இவைகாண் டோறும் நோவர் மாதோ 
அளியரோ அளியர்என் ஆயத் தோர் (நற். பா. 12)

என்னும் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.

உள்ளத்தின் உணர்வுப் பெருக்காகத் திகழும் அன்பைக் கட்டுப்படுத்துவதற்கும் மறைப்பதற்கும் இயலாது என்பதை வள்ளுவரும்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கண்ணீர் புசல் தரும் (குறள். 71)


என்னும் குறட்பாவின் வழி அன்பின் மிகுதியைக் குறிப்பிடுகின்றார். தலைவி உடன்போகாமைக்குக் காரணம் அவள் சுற்றத்தினர் மீதும் ஆயத்தினர் மீதும் கொண்டிருந்த அன்பு போற்றுகின்ற மனிதநேயப் பண்பாகும்.

•Last Updated on ••Wednesday•, 02 •October• 2019 21:02•• •Read more...•
 

ஆய்வு: செவ்வியல், நாட்டார் சமயங்களில் மோகினித்தொன்மம்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?‘தன்னையறிதல்’ என்பது தத்துவத்தளத்தில் தொடர்ந்து விவாதத்திற்குள்ளாகி வருகின்ற கருத்தாகும். சுயத்தை அறிந்து கொள்வது, சுயத்தை வரையறை செய்வது என்பதெல்லாம் மற்றவைகளை (Others) அறிந்து கொள்வதோடும், மற்றவைகளை வரையறை செய்வதோடும் தொடர்புடைய செயல்பாடாகவே இருப்பதை இன்றைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே ஒவ்வொரு மனிதத்தன்னிலையும் தனது இருப்பை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு, மற்றவைகளைத் தனக்கு ஏற்றாற்போல் வரையறை செய்வதில் கவனமாக செயல்படுகின்றன.

மனித சமுதாய வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகவே இருந்துவந்துள்ளது என்பதை மார்க்ஸியர்கள் கண்டுணர்ந்த பிறகு, பெண்ணியம், தலித்தியம், பின்காலனியம் போன்ற சிந்தனைகளும் மானுட வரலாற்றில் நடைபெற்றிருக்கின்ற ஒடுக்குமுறைகளை, போராட்டங்களைப் பல்வேறு நிலைகளில் வெளிப்படுத்தியிருக்கின்றன. சமூக ஒடுக்குமுறைகள் ஆயுதப்போராட்டங்கள் மூலமாக மட்டுமல்லாமல், கருத்தியல் ரீதியாகவும் நடைபெறுவதை மேற்கண்ட சிந்தனைகள் சுட்டிக்காட்டியபிறகு மனித சமுதாயத்தின் கருத்தியல் சட்டங்களை ஐயத்துடனேயே அணுக வேண்டியிருக்கிறது என்பது உண்மையாகும்.

மேட்டிமைச்சக்திகளால், ஒடுக்கப்பட்டோர் மீது அதிகாரத்தை செலுத்துகின்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்ற கருத்தியல் சட்டகங்கள் ஆயுதப்போராட்டத்திற்கு மாற்றாக ‘பண்பாட்டு அரசியலை’ (Cultural Politics) நிகழ்த்துகின்றன என்று இத்தாலிய மார்க்ஸிய அறிஞர் அந்தோனியா கிராம்சி கூறும் கருத்துக்கள் இன்றைய நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

இந்தியச்சூழலில் பால் அடிப்படையிலும், மத அடிப்படையிலும், இன அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் ஒடுக்குமுறைகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த ஒடுக்குமுறைகளுக்கான கருத்தியல் சட்டங்களை வழங்குகின்ற பணியைச் செய்பவையாக இந்து மதத்தின் பல்வேறு புனிதப்பிரதிகள் திகழ்கின்றன. இந்தப் புனிதப்பிரதிகளின் கருத்தியல் மேலாண்மையை அம்பேத்கர், பெரியார் போன்ற அறிஞர்கள் பல்வேறு தளங்களில் விமர்சனப்படுத்தியுள்ள நிலையில், ஆண் எனும் தன்னிலை தன்னுடைய மற்றமையாகக் கருதும், பெண்ணின் உடலைப் பெறுதல் எனும் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் மோகினித்தொன்மத்தைச் செவ்வியல், நாட்டார் சமயங்களின் பின்புலத்தில் இக்கட்டுரை ஆராய்கிறது.

உடல்களின் மாற்றம் பற்றிய மீமானுடக்கதைகள் தொன்மங்களிலும் நாட்டார்வழக்காறுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன என்றாலும், இவைகளைப்பற்றிய ஆய்வுகள் குறைந்த அளவிலேயே நடைபெற்றிருக்கின்றன. அந்தவகையில் மேல்நாட்டு ஆய்வாளர் பிரந்தாபெக் மற்றும் ஏ.கே.ராமனுஜன் ஆகியோர் சாதிய அடிப்படையில் உடல்கள் பெறும் மாற்றத்தைப்பற்றி மேற்கொண்ட ஆய்வும், மானுடவியல் பேராசிரியர் பக்தவச்சல பாரதி நரசிம்ம அவதாரம், பாகம்பிரியாள் ஆகியவைப்பற்றி மேற்கொண்ட ஆய்வும், பேராசிரியர் அரங்க நலங்கிள்ளி உளப்பகுப்பாய்வு அடிப்படையில் பிள்ளையார் தொன்மத்தைப்பற்றி மேற்கொண்ட ஆய்வும் குறிப்பிடத்தக்க முயற்சிகளாகும்.

•Last Updated on ••Friday•, 06 •September• 2019 01:09•• •Read more...•
 

ஆய்வு: ஹிமானா சையத் சிறுகதைகளில் அயல்நாட்டில் பணிபுரிவோர் நிலை

•E-mail• •Print• •PDF•

- அ.அஸ்கா், உதவிப்பேராசிரியா், பகுதி நேர முனைவா் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி  - தாய் நாட்டிலிருந்து பொருள் ஈட்டுவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்பவா்களுக்கு வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக  குடும்பத்தை பிரிந்து வாழ்வதால் உறவினரின் சுக துக்கங்களில் பங்கு கொள்ள முடியாமல் தவிர்ப்பதையும் அதனால் ஏற்படும் இன்னல்கள் குறித்தும் வெளிநாட்டிற்குச் சென்று சரியான வேலையாக அமைந்து பொருளீட்டி மாதம் தவறாமல் வீட்டிற்கு பணம் அனுப்புவதால் வீடு வளம் பெறுவதைப் பற்றியும் ஹிமானா சையத் தம் சிறுகதைகளில்  உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளார். மேற்கண்டவற்றை விரிவாக ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஹிமானா சையத் சிறுகதைகளில் அதிகமாக வெளிநாட்டில் பணிபுரிவோரின் வாழ்வியல் சிக்கல்கள் கதைக்கருவாகக் காணப்படுகின்றன. இதற்கு அவரே பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்.

“ஒரு நூலை வெளியிடும் போது அந்த நூலின் வெற்றி விற்பனை சார்ந்ததாக இருக்கிறது. அப்படி பார்க்கும் போது இதுவரை  வெளிவந்த  என்  நூல்களில்  சுமார்  ஐம்பது சதவீதம் அரபுநாடுகள், புருனை, மலேசியா, சிங்கப்பூர்,  இலங்கை போன்ற நாடுகளில் உள்ள தமிழ் வாசகா்களால் வாங்கப்பட்டுள்ள உண்மை தெரிகிறது. எனவே என் சிறுகதைத் தொகுதிகளில் இந்தச் சகோதரா்களுக்காக அவா்களது வாழ்க்கையை மையமாகக் கொண்டு நான் எழுதிய கதைகளைச் சேர்ந்தாக வேண்டிய புரிந்துணா்வும் கடமை சார்ந்ததாகி      விடுகிறது ”1

என்பதாக “உங்களோடு ஒரு நிமிடம்…” என்னும் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பின் மீதான மோகம்
கல்வியின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, குறுகிய காலத்தில் அதிகமாகப் பொருளீட்ட வேண்டும் என்ற பேராசை ஆகியவை வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தூண்டுகின்றன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் பெரிதும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாய மக்களை இந்தச் சமூக அவலம் பெரிதும் வாட்டுகிறது. ‘பாதை’ என்னும் கதையில் கபீர் என்பவரின் மனம் வெளிநாட்டு வேலை வாய்ப்பினை வட்டமிடுவதை ஹிமானா சையத்,

“உள்நாட்டில் இருந்து கொண்டு இதைச் செய்வதை விட சில ஆண்டுகள் வெளிநாடு சென்று திரும்ப வேண்டும் என்பதைச் சுற்றியே மனம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது ”2
எனக் காட்டுகிறார்.

•Last Updated on ••Wednesday•, 28 •August• 2019 07:12•• •Read more...•
 

ஆய்வு: நற்றிணை – கூற்று வைப்புமுறையும் சிக்கல்களும் (தலைவன் கூற்று பாடல்களை முன்வைத்து )

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
தமிழின் செவ்வியல் தன்மைக்கு எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் முதன்மை ஆதாரங்களாக உள்ளன. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாகப் போற்றப்பெறும் நூல், நற்றிணை. எட்டுத்தொகை அகநூல்களுள் குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றிலுள்ள பாடல்களுக்கு, திணை, துறை கூற்று முதலான குறிப்புகள் முன்திட்டமிட்டு வரையறுக்கப்படவில்லை.

தனித்தனியாகக் கிடந்த தன்னுணர்ச்சிப்  பாடல்களை ஒரு நூலில் தொகுத்தளிக்கும்போது தொகுப்பாசிரியர் அல்லது பதிப்பாசிரியரால் தொகுக்கப்பட்டுள்ளன. அக்குறிப்புகள் பாடல்களைப் புரிந்து கொள்வதற்கு வாயிற்கதவுகளாக அமைந்துள்ளன. அவை புரிந்து கொள்வதற்கு உதவுவதைப் போன்றே பாடலின் பொருண்மையாக்கத்திற்கு முரண்பட்டு சிக்கலையும் எழுப்புகின்றன. இக்கருத்தைத்  “திணை, துறை, கூற்று, பா, அடி, என்பன சங்க இலக்கியப் பாடல்களின் பொருள் விளக்கத்திற்குப் பயன்படுத்தப்படுவதே மரபாக இருந்து வருகிறது. சங்கப் பாடல்களைப் பொருள்கொள்வதற்கான இத்தகைய இலக்கிய மரபு அல்லது வழிகாட்டுதல் உதவியாக இருப்பது போலவே இடர்ப்பாடாகவும் உள்ளது. அதனால் தான் உரையாசிரியர்கள் பலரும் ஒரு பாடலுக்கு வெவ்வேறு திணை, துறை, கூற்றுப் பிரிப்பையும் அவற்றின் அடிப்படையில் வேறுபட்ட பொருளையும் கொண்டு வருகின்றனர்”1 என்று விளக்குகின்றார். இக்கருத்து முற்றிலும் ஏற்புடையதாக இருக்கின்றது.

ஒரு பாடலுக்கு இரண்டு கூற்றுகள், மூன்று துறைக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்து பார்க்கின்றபோது பிரதியை ஒற்றைப் பொருண்மையிலிருந்து பல்வேறு பொருண்மை உருவாக்கத்திற்கு வழிவகுக்கின்ற தன்மையினை உணரமுடிகின்றது. எனவே துறை சூழல் அடிப்படையில் வேறுபட்ட பொருளை உருவாக்குவதற்கு ஏதுவாக இருப்பதை அறியமுடிகிறது. மேலும் இக்கருத்தை “துறை என்ற சூழலால் கட்டுப்படுத்தப்பட்டு அதன் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே துறை என்ற சட்டகம் நீங்கிய பின்னர் இருக்கும் பனுவல் வாசகனுக்கான பல்வேறு வகையான வாசிப்புகளையும், பல்வேறு சட்டகங்களுக்குள் பொருந்துவதையும் விளக்கலாம்”2என்ற மேற்கோள் இடம்பெறுகிறது.

நற்றிணையில் முழுவதுமாகக் கிடைக்கப்பெற்றுள்ள 398 பாடல்களுக்கும் தொகுப்பாசிரியரால் கூற்று, துறை வகுக்கப்பட்டுள்ளன. அவை ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை முதலானவற்றின் தொகுப்பு நெறிமுறைகளுடன் பொருந்திவரவில்லை. நற்றிணைப் பாடல்களுக்கு திணை, துறை, கூற்று வகுக்கப்பட்டிருப்பினும் அவை நூலில் ஒரு சீராகப் பின்பற்றப்படவில்லை. ஐந்திணைப் பாகுபாடும், துறைக்குறிப்புகளும் ஒரு பொது வகைமைக்குள் விரவிவராமல் ஆங்காங்கே வரிசை (வகைமை) முறையற்று இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலுக்கு இரண்டு கூற்றுகள் மூன்று துறைக்குறிப்புகள் வகுக்கப்பட்டிருப்பினும் அவ்வாறு வகுக்கப்பட்டதற்கான காரணம் சுட்டப்பெறவில்லை.

•Last Updated on ••Tuesday•, 20 •August• 2019 09:48•• •Read more...•
 

ஆய்வு: “குவளை உண்கண் குய்ப்புகை கமழ? கழும? - மூலபாட ஆய்வியல் நோக்கு”

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

ஆய்வுக்கட்டுரைதங்கள் உள்ளத்தில் எழும் உணர்வுகளைக் கவிதைகளாக வடித்தெடுப்பதில் சங்ககாலக் கவிஞர்கள் தனித்துவம் மிக்கவர்கள் என்பதற்குச் சங்கப்பாக்களே சான்று. ஏதேனும் ஒரு பாவகையில் அக்கருத்துகள் பாடல் வடிவில் வெளிப்படும் பொழுது தாங்கள் கூறவந்த கருத்துக்களுக்கேற்ற சொற்களைப் பயன்படுத்துவது புலவரின் மாண்பு. அப்பாடல்களுள் பெரும்பான்மை பலநூறு ஆண்டுகளைத் தாண்டி இன்றும் கிடைக்கின்றன என்றாலும் காலப்போக்கில் சிற்சில மாற்றங்களையும் அவை பெற்றுள்ளன என்பது இயற்கைத்தன்மைத்து.  இயற்கையான நிகழ்வு சிற்சமயம் செயற்கையாய் அமைவதும் உண்டு. அவற்றைப் பற்றி விரிவாக ஆராயும் ஆய்வே மூலபாட ஆய்வு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இதற்கு அடித்தளமிட்டவர்கள் உரையாசிரியர்கள். உரையாசிரியர்களுக்குப்  பின்  ஏடுகளில் இருந்த  இலக்கண, இலக்கியங்கள் அச்சேறத் தொடங்கிய பொழுது இத்திறனாய்வுப் பார்வை இன்னும் வலுப்பெற்றது. குறிப்பாக ஒரே நூல் பலரால் உரை மற்றும் பதிப்புக்கு உட்படுத்தப்பட்ட பொழுது பல்வேறுவகையான கருத்துக்கள் தோன்றின. பதிப்பாசிரியர் அல்லது உரையாசிரியர் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பெனப்பட்ட சொற்களை மூலபாடம், பாடம் என்றும், ஏற்பில்லாதவற்றைப் பாடபேதம், பிரதிபேதம் என்றும் கூறத்தொடங்கினர். ஆயினும் பதிப்பாசிரியர், உரையாசிரியர் ஆகியோரைத் தாண்டி அப்பிரதியை  வாசிக்கும் வாசகர்களுக்கு அது ஏற்புடையதாக இருக்கின்றதா என்பதை ஆராய்வது இன்றைய தேவையாக இருக்கின்றது. இந்நோக்கில் சங்கஇலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகையின் 167 ஆம் பாடல் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான்துழந்த அட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே”
- குறுந்.167

கூடலூர் கிழாரால் இயற்றப்பட்ட இப்பாடல் “கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது” எனும் துறையில் அமைந்துள்ளது. கற்புக் காலத்தில் தலைவி தலைவனுடன் இல்லறம் நடத்தி வந்த பொழுது அதைப் பார்த்துவிட்டு வந்த செவிலித்தாய், நற்றாயிடம் தலைவி குடும்பம் நடத்தும் பாங்கினை எடுத்துக்கூறும் சூழலில் இப்பாடல் இயற்றப்பட்டுள்ளது .    இப்பாடலின் மூன்றாம் அடியாக அமைந்துள்ள “குவளை உண்கண் குய்ப்புகை கமழ” எனும்அடி மட்டும் இங்கு ஆய்வுப் பொருளாகின்றது. இவ்வடியின் இறுதிச் சொல்லாக அமைந்த ‘கமழ’ எனும் சொல் ஆய்வின்  மையப்பொருளாக அமைகின்றது.

•Last Updated on ••Tuesday•, 13 •August• 2019 23:26•• •Read more...•
 

ஆய்வு: திருஞானசம்பந்தர் பாடல்களில் சிவனின் அட்டவீரட்டத் தொன்மங்கள் – I

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரைபக்தி இலக்கியங்களில் அதிகம் காணப்படுகின்ற புராண இதிகாசக் குறிப்புகளில் ஒரு பகுதி சிவனின் அட்டவீரச் செயல்களைப் பற்றியதாகும். தமிழ் பிற்சங்க இலக்கியங்களில் சிவன் பற்றிய புராணக் குறிப்புகள் பரவலாக அறியபட்டாலும் தேவார காலத்தில்தான் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இப்புராணங்களின் அடிப்படை வேதப்பொருளை எளிய மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்துள்ளது. வடஇந்தியப் பகுதிகளில் சமண பௌத்த செல்வாக்கினால் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து வைதீக சமயம் இப்புராண மரபை அடியொற்றியே தன்னைத் தற்காத்துக் கொண்டது. இந்த வெற்றி தமிழக பக்தி இயக்கக் கவிஞா்களுக்கு ஒரு புதிய ஊக்கத்தையும் தந்திருக்கிறது.

பக்தி இயக்க மதம் பௌராணீக மதமாக மாறியதற்கு இதுவே காரணங்களாகும். தமிழக பக்தி இயக்கத்தில் வடமொழி பௌராணிகக் கதைகளின் தாக்கம் அதிகம் இருப்பினும் அக்கதைகளைத் தமிழ்நாட்டில் நிலவிய கதைகளாகவே மக்களை நோக்கிய பிரச்சாரம் செய்யப்பட்டது. திருஞானசம்பந்தா் பாடல்களில் இடம்பெரும் அட்டவீரட்ட செயல்கள், விற்குடி, கடவூர், கோலூர், கண்டியூர் என்ற வெவ்வேறு தலங்களில் நடைபெற்றனவாகக் கொள்ளப்படுகின்றன. வடஇந்திய பௌராணீகக் கதைகளைத் தமிழ் நிலத்தோடு இயைபுறுத்துவதன் மூலம் தமிழர் சிவமதத்திற்கு ஒருவித தேசிய அங்கீகாரத்தைத் தேட முடிந்தது. சிவனின் இத்தகைய அட்டவீரட்ட புராணங்கள் சமண-பௌத்த மதத்தவர்களை அச்சுறுத்;தவும், விரட்டியடிக்கவும் பயன்பட்டிருக்கும். திருஞானசம்பந்தார் பாடல்களில் இடம்பெறும் அட்டவீரட்டச் செயல்களாகக் கீழ்வருவனவற்றைக் காணமுடிகின்றது.

1.    அந்தகாரசுரனைச் சங்கரித்தது (அந்தகாரி)
2.    காமனை எரித்தது (காமாந்தகன்)
3.    காலனை உதைத்தது (காலசங்காரன்)
4.    சலந்தரனைத் தடித்தது (ஜலந்தராரி)
5.    தக்கன் வேள்வி தகர்த்தது (தக்கச்சாரி)
6.    திரிபுரம் எரித்தது (திரிபுராந்தகன்)
7.    பிரம்மன் சிரத்தைச் சிவபிரான் அறுத்தது (பிரம்மரச் சதனன்)
8.    சிவபிரான் யானையை உரித்தது (கஜாபக கஜாந்தகன்)

இவை சிவப் பராக்கிரமத்தின் வெளிப்பாடுகளாகக் கொள்ளப்படுகின்றன. இப்புராணக் கதைகளின் வழி சிவன் அகோர ரூபங்களுடனும் அஸ்ட வக்ரங்களுடனும் தோற்றமளிக்கிறான். அச்சம் தரும் ஆயுதம் ஏந்திய இத்தொன்மங்கள் சமண பௌத்த எதிர்ப்பில் ஓர் உணர்ச்சிகரமான, ஆவேசமான உத்வேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கக்கூடும். எனவேதான் திருஞானசம்பந்தர் பாடல்களில் இவை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருபுறம் அடியார்க்கு அருளும் அன்பே வடிவான சிவனையும் மறுபுறம் ஆவேசங்கொள்ளும் ஆயுத பாணியான சிவனையும் படைத்து அதன் மூலம் தன் சமய மேலாண்மைக்கான ஒப்புதலைப் பெற முயற்சித்திருக்கிறார். அடியார்கள் அருளப்படுவா், அடியார் அல்லாதாரைச் சிவன் தண்டிக்கவும் தயங்கமாட்டார் எனும் போது அதிகாரத்ததைக் கைகொள்ள ஆளும் வா்க்கங்கள் பயன்படுத்தும்  இருவேறு தன்மைகளை இத்தொன்மங்கள் வெளிப்படையாகக் கொண்டிருப்பது தெரிகிறது. திருஞானசம்பந்தா் பாடல்கள் அட்டவீரட்டப் புராணக் குறிப்புகளை நோக்க திரிபுரம் எரித்த கதை மிகுதியான அளவில் இடம்பெறுகிறது.

•Last Updated on ••Saturday•, 10 •August• 2019 23:02•• •Read more...•
 

ஆய்வு: தொண்டைநாட்டுக் கச்சி மாநகர்

•E-mail• •Print• •PDF•

தொண்டைமான் இளந்திரையனின் குடிமரபினர் காஞ்சிமாநகரை முதன்மை இடமாகக் கொண்டு ஆண்டு வந்தனர் என்பதை இலக்கியங்கள் காட்டுகின்றன. பண்டைய இலக்கியங்களில் காஞ்சிமாநகரைக் கச்சி, கச்சப்பேடு, கச்சிப்பேடு, கச்சிமூதூர், கச்சிமுற்றம், என்று அழைத்துள்ளனர். இம்மாநகரை ஆண்ட மன்னர்களையும் வேந்தர்களையும் அரசர்களையும் தலைவர்களையும் வள்ளல்களையும் இலக்கியங்களில் கச்சியோன், கச்சியர், கச்சிவேந்தன், கச்சிக்காவலன், கச்சியர்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர். கச்சி என்ற சொல்லானது காஞ்சிமாநகரைக் குறிக்கும் சொல்லாகும். இது இன்றையக் காஞ்சிபுரப் பகுதியாகும் என்பதைத் தமிழ்மொழி அகராதி, மதுரைத் தமிழ்ப்பேரகராதி, அபிதான சிந்தாமணி, கழகத்தமிழ் அகராதி, சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி, வரலாற்றுமுறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி, தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி போன்ற அகராதிகள் குறிப்பிடுகின்றன. பெரும்பாணாற்றுப்படையில் கச்சிமூதூரின் சிறப்புகள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கச்சிமூதூருக்கு உள்ள நிலப்பரப்பு, மக்களின் பண்பாட்டுக்கூறுகள், வழக்காற்றுக்கூறுகள், பாணனின் வறுமை, பரிசில் பெற்றோரின் செல்வநிலை, தொண்டைமான் இளந்திரையனின் மாண்பு, ஆட்சியின் பெருமை, உப்புவணிகர் செல்லும்வழி, கழுதைச் சாத்தொடு செல்லும் காட்டுவழி, எழினர் குடிசை, புல்லரிசி எடுத்தல், எயிற்றியர் அளிக்கும் உணவு, பாலை நிலக் கானவர்களின் வேட்டை, எயினர் அரண்களில் பெறும் பொருள்கள், குறிஞ்சி நிலமக்களின் வாழ்க்கை, கோவலர் குடியிருப்பு, கோவலரின் குழலிசை, முல்லை நிலத்தில் கிடைக்கும் பொருள், மருதநிலம் சார்ந்த முல்லைநிலம், மருதநிலக் காட்சிகள், நெல்வயல்கள், நெல்லரிந்து கடாவிடுதல்,  மருதநிலத்து ஊர்களில் பெறும்உணவுகள், கருப்பம்சாறு, வலைஞர் குடியிருப்பு, வலைஞர் குடியில் பெறும்உணவு, தாமரைமலரை நீக்கி ஏனைய மலர்களைச்சூடுதல் அந்தணர்  குடியிருப்பும் அங்குப் பெறும்உணவும் , நீர்ப்பெயற்று என்னும் ஊர், அத்துறைமுகப் பட்டினத்தின் சிறப்பு, பட்டினத்து மக்களின் விருந்தோம்பல் பண்பு, ஒதுக்குப்புற நாடுகளின்வளம், திருவெஃகாவின் சிறப்பும் திருமால்வழிபாடும், கச்சிமூதூரின் சிறப்பு, இளந்திரையனின் போர்வெற்றி, அரசனது முற்றச்சிறப்பு, திரையன் மந்திரச்சுற்றமொடு அரசுவீற்றிருக்கும் காட்சி பாணன் அரசனைப் போற்றியவகை, பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல், பரிசுவழங்குதல், இளந்திரையனது மலையின் பெருமை முதலான செய்திகள் அதில்    கூறப்பட்டுள்ளது. சிறுபாணாற்றுப்படை, மலைபடுகாடாம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் கச்சிமாநகரின் குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

கச்சி என்ற சொல் மணிமேகலையில், பூங்கொடி கச்சிமாநகர் புக்கதும் (மணி.பதி.90), பூங்கொடி கச்சிமாநகர் ஆதலின் (மணி.28:152), கச்சிமுற் றத்து நின்உயிர் கடைகொள (மணி.21:174), பொன்எயில் காஞ்சி நகர்கவின் அழிய (மணி.21:148), பொன்எயில் காஞ்சி நாடுகவின் அழிந்து (மணி.28:156), செறிதொடி காஞ்சி மாநகர் சேர்குவை (மணி.21:154), என்றும் பெருபாணாற்றுப்படையில் கச்சியோனே கைவண் தோன்றல் (பெரும்பாண்.420) எனவும் காஞ்சி அல்லது கச்சிமாநகர் பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கின்றன. சங்ககாலத்திற்கு முன்பிருந்தே கச்சி என்ற காஞ்சிமாநகர் களப்பிரர்காலத்திலும் பல்லவர் காலத்திலும் பிற்காலச் சோழர்காலத்திலும் விசயநகரப் பேரரசுக்காலத்திலும் ஆங்கிலேயர்காலத்திலும் சிறந்து விளங்கியுள்ளது என்பது வரலற்று உண்மையாகும். கச்சிப்பேடு என்றிருந்த காஞ்சிபுரம் திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பிலும் திருநாவுக்கரசரின் தேவாரத்திலும் கச்சி என்றும் காஞ்சி என்றும் பாடப்பட்டுள்ளது. கி.பி.7-ஆம் நூற்றாண்டுத் தமிழ்நூல்களிலும் இது பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கிறது.

•Last Updated on ••Tuesday•, 30 •July• 2019 22:25•• •Read more...•
 

ஆய்வு: முல்லைக்கலியில், கொல்லேறு தழுவுதலும் கோவலர் மாண்பும்.

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: முல்லைக்கலியில், கொல்லேறு தழுவுதலும் கோவலர் மாண்பும்.ஏறு தழுவுதல் என்பது முல்லைநில மக்களின் மற மாண்பையும் குடிச் சால்பையும் பறைசாற்றி நிற்கும் வீர விளையாட்டாகும். முல்லை நிலத்து ஆடவா்களின் ஆண்மைத்திறப் புலப்பாடாக அமைந்த இந்த விளையாட்டைத் தமிழ்ச் சமுதாயத்திற்கு அந்நில மக்கள் வழங்கிய கொடையாகவே கருத வேண்டும். இந்த ஏறுதழுவுதல் விளையாட்டானது அன்றைய பதிவுகளின் நீட்சியாகவே தமிழகத்தின் சில பகுதிகளில் இன்றும் நிலவி வருவதைக் காணமுடிகின்றது. இந்நிகழ்வு ஏறுகோடல், ஏறு தழுவுதல், ஏறுகோள், ஏறு விடுதல் என்னும் பெயா்களில் முல்லைக் கலியிலும், இக்காலத்தில் சல்லிக் கட்டு, மஞ்சு விரட்டு, மாடுபிடித்தல், கூளிபிடித்தல், கூளியாடுதல் என்னும் பெயா்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது. இவ் ஏறுதழுலுதல் குறித்துக் கலித்தொகையில் முல்லைக்கலி பாடல்கள் புலப்படுத்துவனவற்றை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

முல்லைக் கலியில் ஏறு தழுவுதல்
ஏறு தழுவுதலாவது வலிமைமிக்க ஏற்றைத் தழுவியடக்குதல் எனும் பொருளைப் புலப்படுத்துகினறது. ஏறுகோடல், ஏறுகோள் என்பனவும் அதே பொருளை உணா்த்துகின்றன.1

ஆவினங்களையே அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள முல்லை நிலச் சமுதாயத்தில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து நிகழ்வுகளும் அவ் ஆவினங்களை முன்நிறுத்தியே மேற்கொள்ளப் பட்டுள்ளமை அறியற்பாலது. முல்லைக் கலியில் உள்ள பதினேழு பாடல்களில் முதல் ஏழு பாடல்கள் ஏறுதழுவுதலைப் பற்றியே பேசுகின்றன. ஆறாவது பாடல் தவிர மற்ற பாடல்கள் தொழுவத்தில் நிகழும் ஏறு தழுவுதலைப் பற்றியும் , ஆறாம் பாடல் வியன்புலம் என்று சொல்லப் படுகின்ற மேய்ச்சல் நிலத்தில் தற்செயலாக நிகழும் ஏறுதழுவுதல் பற்றியும் குறிப்பிடுகின்றது. இவ்வாறு இரண்டு வகையான ஏறுதழுவுதல்கள் குறித்த செய்திகள் முல்லைக் கலியில் இடம் பெற்றுள்ளன.

ஆயர்தம் குலமரபு
கொல்லும்  தன்மையுடைய ஏற்றினைத் தழுவியடக்கும் ஆயர்குல வீர மறவனே, அக்குலத்தில் பிறந்த கற்புடைய மங்கையை மணக்கத் தகுதியானவன் எனும் மரபார்ந்த வழக்கத்தையுடையவா்கள் ஆயர்கள். அவ்வழக்கப்படி ஆயர் குலத்தில் ஒரு பெண் பிறந்தவுடனேயே தம் தொழுவத்தில் ஒரு ஆனேற்றுக் கன்றையும் வளா்க்கத் தொடங்குவா். அவளுக்குரிய அவ்வேற்றினை அடக்கியே அவளை மணக்க விரும்புவோர் மணக்க முடியும்.

•Last Updated on ••Saturday•, 10 •August• 2019 22:56•• •Read more...•
 

ஆய்வு: சுந்தரரின் பதிகங்களில் இயற்கை இன்பம் சீபர்ப்பதப் பதிகத்தை அடிப்படையாகக்கொண்ட உசாவல்

•E-mail• •Print• •PDF•

அறிமுகம்

- கலாநிதி சு.குணேஸ்வரன் -பக்தி இலக்கிய வரலாற்றில் பல்லவர்காலம் மிக்குயர்ந்த இறைவழிபாட்டையும் தமிழர் பண்பாட்டையும் எடுத்துக்காட்டும் காலமாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் சைவசமயத்தின் எழுச்சிக்கும் அதன் வளர்ச்சிக்கும் நாயன்மார்களின் பங்களிப்பு மிக அதிகமாகவே இருந்துள்ளது. அவர்களில் சுந்தரின் திருப்பதிகங்கள் ஓசை நயமும் பொருள்வளமும் கொண்டவை. வாழ்வின் இன்பத்தை ஏற்றுக்கொண்டு குதூகல உணர்வுடன் இறைவனுடன் நட்புரிமை பூண்டவை. எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கையில் இறைவனைக் காணும் நிலையில் அவரது பாசுரங்கள் அமைந்துள்ளன. இவ்வகையில் ஸ்ரீசைலம் என்று அழைக்கப்பட்ட திருப்பருப்பதமலையில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடிப்பரவிய பதிகங்களில் சுந்தரர் பாடிய சீபர்ப்பதம் என்ற பதிகத்தில் அமைந்துள்ள இயற்கை இன்பத்தில் இறைவனைக் காணும் உத்தியை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பாடப்பட்ட சந்தர்ப்பம்

சீபர்ப்பதத்தின் பதிக வரலாறு பற்றிக் குறிப்பிடப்படும்போது சுந்தரமூர்த்தி நாயனார் திருக்காளத்தி மலைக்குச் சென்று இறைவனை வழிபட்ட பின்னர் அங்கிருந்தவாறே ஸ்ரீபர்வதத்துப் பெருமானை நெஞ்சில் நினைத்து அகக்கண்ணாற் கண்டு பாடிய திருப்பதிகமே சீபர்ப்பதமாகும். இத்தலம் ஸ்ரீசைலம் என அழைக்கப்படுகிறது. சம்பந்தரும் அப்பரும் சேக்கிழாரும் பர்வதம் என வடமொழியில் அழைக்கப்பட்டதை பருப்பதம் என தமிழில் வழங்கியுள்ளனர். ஆனால் சுந்தரரோ ஸ்ரீபர்வதம் என்பதனை சீபர்ப்பதம் என அழைக்கின்றார். இந்தியத்தேசத்தில் இருக்கக்கூடிய ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகச் சிறப்புடன் அழைக்கப்படும் ஸ்ரீசைலத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவனின் பொருமைகளையும் இயற்கை இன்பச்சூழல் நிறைந்த அழகையும் இப்பதிகத்தில் எடுத்துக்காட்டி மக்களை வழிப்படுத்தும் நோக்கில் இப்பதிகம் பாடப்பட்டுள்ளது.


இயற்கை வருணனைகள்

மலைச்சிறப்பு
விலங்குகள், பறவைகள் யாவும் சுதந்திரமாக உலாவித் திரிந்து வாழும் மலை சீபர்ப்பதமலை எனக் கூறப்படுகிறது. விருந்தோம்பும் பண்புடைய குறமாந்தர்கள் பண்பட்ட வாழ்க்கை வாழுகின்றவர்கள் என்பதற்கு உதாரணமாக யானைக்குலமே மனிதர்களுக்குரிய மானத்துடனும் பண்புகளுடனும் வாழும் மலையாக “பொலி சீபர்ப்பத மலையே” என்ற சொற்றொடரின் ஊடாக வளம்நிறைந்த மலைப்பிரதேசமாகச்  சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. முப்புரங்களை எரித்த சிவபெருமான் விரும்பி உறைந்துள்ள புராண வரலாற்றையும் இயற்கையில் இறைவனைக் காணும் அழகினையும்

“மானும்மரை இனமும்மயி லினமுங்கலந் தெங்கும்
தாமேமிக மேய்ந்துதடஞ் சுனைநீர்களைப் பருகிப்
பூமாமர முரிஞ்சிப் பொழி லூடேசென்று புக்குத்
தேமாம்பொழில் நீழற்றுயில் சீபர்ப்பத மலையே.”


என்ற பதிகத்தில் சுந்தரர் அழகாகக் காட்டுவார். மானினமும் மரையினமும் மயிலினமும் தாமாகத் திரிந்து மேய்ந்து சுனைகளில் உள்ள நீரைப்பருகி மரங்களிலே தம் உடலை உராய்ந்து பொழில்கள் ஊடாகச் சென்று இனிய தேமாமரங்கள் நிறைந்த சோலையிலே துயில் கொள்ளுகின்ற காட்சியை மேற்படி விபரிக்கிறார். இவ்வாறான இயற்கை அழகு நிறைந்த மலையிலே இறைவன் வீற்றிருந்து அருள் பொழிகின்ற அழகு சீபர்ப்பதத்தில் மிக எளிமைநிறைந்த இன்தமிழில் பாடப்பட்டுள்ளது.

•Last Updated on ••Thursday•, 18 •July• 2019 08:17•• •Read more...•
 

ஆய்வு: தமிழ்க் காப்பிய இலக்கணமும் படைப்பும் - ஒரு பார்வை

•E-mail• •Print• •PDF•

- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 600 113 -முன்னுரை: செவ்விலக்கியங்களின் தொகுப்பில் காப்பியங்கள் என்ற முக்கியப் பிரிவு உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை ‘காப்பியம்’ எனப்பட்டன. இந்த விதிமுறைகளில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. தமிழ் இலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத்தான் காப்பியக் காலம் தொடங்குகிறது. இக்காப்பிய எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோ அடிகள் ஆவார். சிலப்பதிகாரத்திற்கு முன் பல காப்பியங்கள் எழுந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தாலும் அவை அனைத்தும் ஊகங்களே ஆகும். தமிழில் கிடைத்த முதல் காப்பியமே சிலப்பதிகாரம்தான். இதனை அடியொற்றியே தமிழில் பல காப்பியங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்க் காப்பிய இலக்கணமும் காப்பியப் படைப்பும் என்னும் தலைப்பில் சுருக்கமாக ஆராய்வோம்.

காப்பியம் விளக்கம்
காப்பியம் என்பது ஓர் இலக்கிய வகை. வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று விரிந்து கொண்டே வந்த இலக்கிய வளர்ச்சி காப்பியத்தில் முழுமை எய்தியது எனலாம். காப்பியம், ஆங்கிலத்தில் EPIC எனப்படுகிறது. இச்சொல் EPOS என்ற கிரேக்கச் சொல்லின் அடிப்படையில் உருவானது என்பர்.

காப்பியம் என்பதில் 'இயம்பு' என்பது 'சொல்' எனப் பொருள்படும் ஒரு வினைச்சொல். இசைக் கருவிகளை இயம் என்பது பண்டைய வழக்கு.(இன் இசை இயத்தின் கறங்கும் கல்மிசை அருவிய-அகம்.225) பல இசைக் கருவிகளைப் பல்லியம் என்பர். சிறிய இசைக்கருவிகளை இயக்கிக்கொண்டு குன்றுதோறாடும் முருகன் 'குறும்பல்லியத்தன்' எனப் போற்றப்படுகிறான்.(குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன் -திருமுருகு.209) பல இசைக் கருவிகளை முழக்கிய சங்ககாலப் புலவர் நெடும்பல்லியத்தனார். இவை இயம்பும். இயம்பப் பயன்படுத்தப்படும். இசைக் கருவிகளால் இயம்புவோர் இயவர்.(கலித்த இயவர் இயம் தொட்டன்ன-மதுரைக்காஞ்சி 304) தொல்காப்பியம் என்னும் நூலின் பெயரில் 'காப்பியம்' என்னும் சொல் உள்ளது. தொல் காப்பு இயம் எனபது தொல்காப்பியம். இது தமிழில் இருக்கும் மொழியியல் வாழ்வியல் தொன்மையை இயம்பும் நூல். இவற்றால் 'காப்பியம்' என்பது தூய தமிழ்சொல் என்பது பெறப்படும்.

காப்பிய இலக்கணம்
தமிழில் தண்டியலங்காரம் வடமொழியில் தண்டி இயற்றிய காவ்யாதர்சம் என்னும் நூலைத் தமிழ்ப்படுத்தி அவரால் இயற்றப்பட்டது. காப்பிய இலக்கணத்தைத் தண்டியலங்காரம் விரிவாக எடுத்துரைக்கின்றது. காப்பியத்தைப் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்று இரு வகைப்படுத்தி, அவற்றின் இலக்கணத்தைத் தனித்தனியே எடுத்துச் சொல்கிறது.

பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்று
ஏற்புடைத் தாகி முன்வர வியன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகி…  (தண்டியலங்காரம், நூற்பா -8)

கூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும்
வேறுபாடு இன்றென விளம்பினர் புலவர் (தண்டியலங்காரம், நூற்பா -9)

•Last Updated on ••Wednesday•, 17 •July• 2019 08:03•• •Read more...•
 

ஆய்வு: கருத்தொற்றுமையில் பொய்யாமொழியும் பழமொழியும்

•E-mail• •Print• •PDF•

- ஷா. முஹம்மது அஸ்ரின்,  முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி-620020முன்னுரை:
குற்றங்கள் அதிகமாகும் காலத்திலேயே அறம் சார்ந்த கருத்துகளை போதிக்க நூல்கள் தோன்றுகின்றன. அவ்வாறு, களப்பிரர் தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தில் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் ஐந்தடிகளுக்கு மிகாத வெண்பாக்களால் அமைந்த பதினெட்டு நூல்கள் எடுத்தியம்பின. அவற்றை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் சங்கம் மருவிய நூல்கள் என்றும் பெயரிட்டு வழங்கினர். அவற்றுள் பொய்யாத மொழியாகிய திருக்குறளோடு கருத்தாலும் பொருளாலும் ஒன்றுபடும் உலக வசனம் என்ற சிறப்பிற்குரிய பழமொழி நூலின் பாடல்கள் ஆய்வு பொருளகின்றன.

கற்றவன் அடையும் சிறப்பு:
கல்வியின் சிறப்பை மனத்தில் கொண்ட மூன்றுரையரையரும் திருவள்ளுவரும் முறையே தாங்கள் இயற்றிய நூலான பழமொழியில் முதல் பத்து (1-10) பாடல்களாலும் திருக்குறளில் 40ஆம் அதிகாரத்தில் பத்து (391-400) குறட்பாக்களாலும் குறிப்பிட்டுள்ளனர்.

கல்வியை முறையாகக் கற்றுத்தேர்ந்தவன், தனது நாட்டை விட்டகன்று வேறு நாட்டுக்குச் சென்றாலும், அவனது அறிவுத்திறனைக் கண்டு யாவரும் சிறப்பு செய்து உண்வளிப்பதால் சொந்த நாட்டிலிருப்பதாகவே எண்ணுவான் என்பதை,

“ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை – அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.” (பழமொழி நானூறு. 04)


என்ற பாவரிகளால் கற்றவன் அடையும் சிறப்பைக் கூறுகிறார்.

சுருங்கக் கூறி விளங்க வைத்தலுக்கு சொந்தக்காரரான வள்ளுவர், கற்றவன் அடையும் சிறப்புகளை தனது தமிழ்மறையில்,

“யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு” (திருக்குறள். 397)


என்னும் குறட்பா வாயிலாக கல்வி கற்றவனுக்கு எல்லா நாடுகளுமே சொந்த நாடாகும் என்ற உயர்ந்த கருத்தை எடுத்தியம்புகிறார்.

•Last Updated on ••Saturday•, 13 •July• 2019 07:50•• •Read more...•
 

தொண்டைமண்டலத்தில் நடுகல் வழிபாடு

•E-mail• •Print• •PDF•

உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் வீரர்களைப் போற்றும் வழக்கம் இருந்துள்ளது. எல்லா நாடுகளிலும் வீரர்களுக்குத் தனிச்சிறப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் நாட்டில் வீரர்களுக்குத் தனிச்சிறப்பு இருந்ததைச் சங்ககாலப் புற இலக்கிய நூல்கள் மூலம் அறியமுடிகிறது. பழந்தமிழர் போர்புரிவதற்கென்று தனியொரு இலக்கணம் கண்டனர். தமிழ்மொழியில் போரைப் பற்றிய  தமிழ் இலக்கியங்கள் பல  இருக்கின்றன.  அவர்கள் அவற்றிற்குப் புறப்பொருள் என்று பெயரிட்டிருந்தனர். தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பா மாலை என்னும் இலக்கண நூல்கள் புறநானூறு போன்ற இலக்கிய நூல்களும் தமிழர்களின் வீரத்தைப் பற்றியும் வீரத்தைப்போற்றுவது பற்றியும் தெளிவாக எடுத் துரைக்கின்றன. போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடாமல் திறலோடு போர்செய்த வீரர்களைத் தமிழர் புகழ்ந்து பாராட்டினார்கள்; திறலோடு போர்செய்து களத்தில் வீழ்ந்து உயிர்விட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டு நினைவுச்சின்னம் அமைத்தனர். விறல் வீரர்களின் நினைவுக்காக நடப்பட்ட நடுகற்களைப் பற்றிச் சங்க நூல்கள் விரிவாக விவரிக்கின்றன. பண்டைக்காலத்தில் போர்க்களத்தில் பெருவீரங்காட்டிப் போர்புரிந்து வீரமரணம் அடைந்த வீரனுக்கு அவன் வீழ்ந்த இடத்தில் நடுகல்நட்டு வழிபடும் வழக்கம் இருந்தது. இதனைச் சங்ககால மக்கள் வீரக்கல் அல்லது நினைவுக்கல் என வழங்கினர். வெட்சிப்போர், கரந்தைப்போர், உழிஞைபோர், நொச்சிப்போர், தும்பைப்போர், வாகைப்போர் என்று போர் முறைகளைத் தமிழர் ஏழு வகைகளாகப் பிரித்திருந்தார்கள்; ஏழு வகையான போர்களிலே எந்தப் போரிலானாலும் ஒரு வீரன் திறலாகப் போர்செய்து உயிர் விட்டால் அந்த வீரனுக்கு நடுகல் நட்டு அவன் வீரத்தைப் பாராட்டினார்கள்; சிறப்புச் செய்தார்கள். தமிழகத்தில் வீரக்கல் நடுகிற வழக்கம் மிகப் பழங்காலம் தொட்டு இருந்து வந்துள்ளது. பழங்காலத்தில் நடப்பட்ட ஆயிரக்கணக்கான நட